#தமிழக அரசியல்
Explore tagged Tumblr posts
Text
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம்…
0 notes
Text
ஆளப்போறான் தமிழன் கச்சை கட்டும் விஜய்,சீமான், எடப்பாடி, அண்ணாமலை #vijay #tvkvijay #tvkleader
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்களின் பிரவேசம் ஒரு புதிய விடயம் அல்ல. எம்.ஜி.ஆர், ��ெயலலிதா போன்ற முன்னணி நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெற்று, மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நின்றனர். இன்றும் அந்த வழித்தோன்றலாக, நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் வைக்கிறார் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இது தமிழக மக்களிடத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை…
#tamilansankar#தமிழன்சங்கர்#Annamalai#Edappadi#seeman#Tamil Leaders#Tamil Leaders Building Future#Tamil Nadu Development#Tamil Nadu elections#tamil nadu politics#Vijay#அண்ணாமலை#ஆளப்போறான் தமிழன்#எடப்பாடி#சீமான்#தமிழக அரசியல்#தமிழக தேர்தல்#தமிழக வளர்ச்சி#தமிழன் கச்சை கட்டும்#தமிழ் தலைவர்கள்#விஜய்
0 notes
Text
அரசியலில் சோபிப்பாரா நடிகர் விஜய்?
நான் ரெடி தான் வரவா? 2026ல கப்பு முக்கியம் பிகிலு என தனது ரசிகர்களுக்கு கொம்பு சீவி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தனது கடைசி படமான லியோ வெற்றி விழாவில் தனது அரசியல் ஆசைகளை பூடகமாக வெளிப்படுத்தியதோடு தனது இலக்கு 2024 அல்ல 2026 தான் என தெளிவுபடுத்தியுள்ளார் "தளபதி".
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட திரைப்பட ஸ்டார் அந்தஸ்து மட்டும் போதாது என்ற வெகுஜனமக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டே இந்த கட்டுரை எழுதப்படுவதால் தரவுகள் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா வீழ்வாரா என்பதனை ஆராய்வோம்.
முதலில் 2024ல் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறித்து அலசுவோம். 2024ல் திமுகவுக்கு எதிராக பற்பல சக்திகள் உருவகம் பெறுவதை எளிதாக காண முடிகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021ல் பெற்ற 6.85% வாக்கில் இருந்து இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைய தீவிரம் காட்டுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக துணையின்றி தனது கட்சியை தமிழகத்தில் காலூன்ற செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு நடைபாதை செல்கிறார். அதிமுகவில் ���ரட்டை தலைமை குழப்பத்தை ஒரு வழியாக தீர்த்த வண்ணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் தான் மாற்று என்று நிறுவ கடுமையாக முயற்சிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை தவிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், 2026ல் தங்களை பெரிய சக்தி என்று நிறுவ முயற்சிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் என பலர் தலைவர் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கின்றனர்.
அப்படி இருக்க நடிகர் விஜய் 2026ல் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தகவமைக்க எண்ணினால் மேலே குறிப்பிட்ட அத்தனை தலைவர்களோடவும் மல்லுக்கட்ட நேரிடும். அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தான் ஒரு மக்கள் சக்தி என பிற அரசியல் கட்சிகளுக்கு காட்டிவிட்டால் 2026ல் கூட்டணி ஒன்றை உருவாக்கி விட முடியும்.
2026ல் பலத்தை நிரூபிக்காத நடிகர் விஜயை எ��்த அளவுகோல் கொண்டு பிற கட்சிகள் கூட்டணி அமைக்க வரும்? அரசியல் சக்தி என நிரூபிக்காமல் ஒருவரை சுற்றி பல கட்சிகள் வந்த வண்ணம் இருந்ததென்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே.
ஆனால் இன்றைய விஜயை அரசியல் சக்தி என மற்ற கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதன் காரணம் அப்படி அங்கீகரிப்பதன் மூலம் தங்களது வாக்குகளை எங்கே விஜய் கவர்ந்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கையில் 2024ல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 2026ல் அதை விட அதிக வாக்கு பலத்தை காட்ட முடியும் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணக்கிடுகிறார்.
SSN சர்வே சீனிவாசன் நடிகர் விஜய் இப்போது கட்சி தொடங்கினால் மொத்தமாக 3% சதவீத வாக்கு மட்டுமே பெற முடியும் என கணக்கிடுகிறார். அவர் கூறுகையில் நடிகர் விஜய்க்கு அவரது மதமான கிறிஸ்தவ வாக்குகளும் அவரது ஜாதியான பிள்ளை வாக்குகளும் பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்.
எங்களது கணக்கீட்டின் படி 2019ல் கமல்ஹாசன் பெற்ற 3.7% வாக்குக்கும் 2006ல் விஜயகாந்த் பெற்ற 8.5% வாக்குக்கும் இடையே விஜய் வாக்கு பலம் பெறுவார். காரணம் போட்டி கடுமையானதாக இருக்கிறது. மேலும் அரசியல் களம் இனியும் கருணாநிதி-ஜெயலலிதா என இரு துருவ போட்டி அல்ல. பல தலைவர்கள் உருவாகி விட்டனர். அவர்களுக்கிடையே, மக்கள் பிரச்னையை பேசி தனித்துவமாக முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது என்பது இயலாத காரியம்.
ஒரு வேளை 2024ல் அரசியல் களம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டால் விஜய் அரசியலுக்கு வராமலே குட்பை செல்லவும் நேரிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
2 notes
·
View notes
Text
அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி சீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்கொண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் குழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
கூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , பன்னிர்செல்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்தின் நிலையை கவனிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் . 15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது. ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', 'மக்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டும். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes
·
View notes
Text
லண்டனில் இருந்து நவ.28-ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்த திட்டங்கள் என்ன? | What are Annamalai next plans
சென்னை: லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்திட்டங்களை வகுத்திருப்பதாகவும், குறிப்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை மேற்கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை…
0 notes
Text
“கஜடா என்றழைக்கவா”
முருகா என்றழைக்கவா, முத்துக் குமரா என்றழைக்காவான்னு டி.எம்.எஸ் தன் கணீர் குரலில் பாடும் பாடல் வரிகளை ஏன் இங்கு சொல்றேன்னா எழுதப் போற விஷயம் அப்படி! நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுகள் மீதுள்ள காதல் உலகறிந்தது! நமது மரபணுவிலேயே உணவு ரசனை பின்னிப் பிணைந்துள்ளது! நம்ம உணவுக் கலாச்சாரத்தில் தான் எத்தனை விதவிதமான பலகாரங்கள்!
பலப் பல வகைகள் இருப்பதால் தான் இதுக்கு பலகாரம்னே பேரு வச்சிருப்பாங்க போல! அதிலேயும் தமிழக டீக்கடை பலகாரங்கள் என்றால் என்சைக்ளோபீடியா சைஸில் பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு வெரைட்டிகள் இருக்கு.ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மண்ணின் மணத்தையும் குணத்தையும் தன்வசம் கொண்ட சிறப்பான பலகாரங்கள் குவிந்துள்ளன! அதுல ஒண்ணு தான் இந்த கஜாடா!
இது இனிப்பு பலகாரம்! நல்ல மொறு மொறுன்னு அளவான இனிப்பா இருக்கும். சூடா சாப்பிட்டா ஒரு ருசி ஆறினா ஒரு ருசின்னு 2 வகை ருசிகள்! ரெண்டு ருசியுமே அட்டகாசமா இருக்கும்! அதிரசத்தை அளவான இனிப்போடு சாப்பிட்டா எப்படி இருக்குமோ கிட்டத்தட்ட அந்த ருசி தான். ஆனா இது கெட்டியா, கிறிஸ்பியா இருக்கும்! மேக்கப் போட்ட கன்னத்தில் ஜிகினா மினுக்குறா மாதிரி..
இதன் மீது ரவை துணுக்குகள் மின்னும்! இதன் வா��ம் ரொம்ப நல்லாயிருக்கும்! பல டீக்கடைகளில் இதான் தேசியப் பலகாரம்! டி.எம்.எஸ் எப்படி பல பெயர்களில் முருகனை அழைப்பாரோ அதுமாதிரி சென்னை, வட தமிழ்நாடு பக்கம் இதை கஜாடான்னும், தென் மாவட்டங்களில், வெடி கேக், வெட்டு கேக், முட்டைகோஸ், ஆட்டுக் கால் கேக், வெடி கோஸ்னு பல பெயர்களில் இதனை..
நம் மக்கள் அழைக்கிறார்கள்! செல்லூர் பக்கம் போனா காலை 7 மணிக்கே நூற்றுக்கணக்கில் இதை பொரிச்சு எடுத்து தட்டில் கொட்டுவார்கள். ஒவ்வொரு கேக்கும் கிரிக்கெட் பந்து சைஸில் நல்லா அகலமா மலர்ந்த ரோஜாப்பூ போல தெரியும். அந்தப் பிளவுகளை பிரிச்சு தான் சாப்பிடணும். வெளியே கிறிஸ்பி, உள்ளே மென்மையா இருக்கும்!2 வெடி கேக்கும் 1 டீயும் குடிச்சா..
அடுத்த 2 மணிநேரம் பசிக்காது! சிலர் 3 கேக் சாப்பிட்டுட்டு உள்ளூர் அரசியல் முதல் உலகரசியல் வரை பேசிட்டு போவாங்க! எங்க பெரியப்பா கிண்டலா எலே டீக் கடையில சூதானமா அரசியல் பேசுங்கய்யா அப்புறம் கோபம் வந்து வெடி கேக்கை வீசி அடிச்சிக்க போறிங்கன்னு சொல்வார்.அவர் சொல்றா மாதிரி சில கடைகளில் இந்த கேக் அப்படித்தான் கையெறி குண்டு போலவே இருக்கும்.
எடுத்து எறிஞ்சு மேல பட்டா நிச்சயம் வலிக்கும்! முட்டையும், பேக்கிங் சோடாவும் இதில் சரியா சம அளவு சேர்த்தால் கேக் வெடி கேக்கா இல்லாமல் ரசிச்சு “கடி கேக்” போல மாறிடும்! இதுக்கும் ஸ்பெஷல் கடைகள் இருக்கு! இந்த கேக் பொதுவா பிரவுன் அல்லது செக்கு எண்ணெய் கலரில் தான் இருக்கும்! விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பக்கம் இந்தக் கேக்கை..
டைமண்ட் ஷேப்பில் தருவார்கள்! நிறத்திலும் மஞ்சள், ஆரஞ்சு, ஏன் நடிகை தமன்னா நிறத்தில் வெள்ளாவி வெளுப்புடனும் கிடைக்கும்! வெடிகேக், பால்பன் சாப்பிட்டவர்களுக்கு இலவசமா கொஞ்சம் சேவு மிக்ஸர் கொடுத்த கடைகள் எல்லாம் விரைவாக மார்க்கெட்டை பிடித்திருக்கின்றன! ருசியான டீ, அற்புதமான கேக், இலவசமாக கொஞ்சம் காராசேவு, மிக்ஸர் இதற்கே அன்று ஆழ்வார்கள் போல..
இந்திரலோகமாளும் அப்பதவியே வேண்டாம் என்ற பரமானந்த நிலையை அடைந்தவர்கள் பலர்! வெடி கேக் என்னும் ரஜினிக்கு பால் பன் என்கிற கமல் தான் அப்ப மார்க்கெட் போட்டியாளர்! இது கெட்டின்னா, அது சாஃப்ட், இது அளவான இனிப்பு, அது அதிக இனிப்பு ஆனா வெடி கேக் சும்மா அப்படியே கையில் எடுத்து சாப்பிடலாம் பால் பன்னில் ஜீரா ஒழுகும் கை பிசுபிசுக்கும் ஆனா..
இந்த ரெண்டுக்கும் ரசிகர்கள் ��ராளம்! குமரி, நெல்லை, ராம்நாட், மதுரை, திருச்சி, சேலம், கோவை, தஞ்சை, வேலூர்னு ஒவ்வொரு ஊரு உணவுக்கும் பெரிய இதிகாசமே எழுதலாம்! ஒரு பாமர விறகு வெட்டி பெரும்புலவர் ஹேமநாதரையே பாட்டுப் போட்டியில் தோற்கடிச்சது போல, தமிழ்நாட்டு டீக்கடை உணவுகளே போதும் உலகின் எந்தப் பலகாரத்தோடும் போட்டியிட்டு வென்றுவிடும்!
1 note
·
View note
Text
"கோட்டகுப்பத்தில் பாமக கவுன்சிலர் மீது பொய்யான குற்றச்சாட்டு: அரசியல் பின்னணி?"
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் பாமக கவுன்சிலர் மக்கள் சிவா விடுதி கட்டி வருகிறார் அவரிடம் அப்பகுதியை சேர்த்த திமுக நிர்வாகிகள் தட்சண மூர்த்தி, இளங்கோவன் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், பாமக கவுன்சிலர் நீரோடைய ஆக்கிரமித்து விடுதி கட்டி வருவதாக பொய் செய்தியை பரப்பி வருவதாக கவுன்சிலர் மக்கள் சிவா குற்றம்…
0 notes
Text
0 notes
Text
திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன : பிரதமர் மோடி
ஓம் சாந்தி.
0 notes
Text
துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை... போலீஸ் விசாரணை !
திமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன் அரசியல் களத்தில் அனைத்து கட்சியின ரிடத்திலும் அன்போடு பழகக் கூடியவர்.
இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை த��குதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். துரைமுருகன் காட்பாடியில் வசித்து வரும் நிலையில், இவருடைய அண்ணன் துரை மகாலிங்கம் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.
0 notes
Text
தமிழ் மொழியில்தான் உரையாற்றுவோம் அதை இந்திய மொழிகளில் பெயர்த்து அவைக்கு தெரிவியுங்கள் என 55 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் கர்ஜித்து தமிழுக்காக குரல் கொடுத்த
தோழர் கே.ரமணி அவர்களின் 107வது பிறந்த நாள் இன்று (16 ஜூலை 1916 - 30 மே 2006).
சுதந்திர போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பு தலைவர்களில் ஒருவர் மேலும் தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது, வழிகாட்டக் கூடியது.
#CPIM #ComradeKRamani #சோசலிசமேமாற்று #CPIMPUDUCHERRY #Communist #workingclass #CommunistLeader #லால்_சலாம் #communist #சிபிஎம் #communistpartyofindiamarxist #CPM #india #மார்க்சிஸ்ட் #கம்யூனிஸ்ட்
0 notes
Text
அரசியல் கட்சிகள் நடத்தும் கிராம சபை கூட்டம் – தமிழக உள்ளாட்சித்துறை கடும் எச்சரிக்கை!!!
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில், பல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
Know More: https://due.im/short/3prd
#munravatuaniyakakalamkanumpalaaraciyalkatcikal
0 notes
Text
பச்சை குழந்தைகள் காலில் விழுந்த அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிறுவர்கள் காலில் விழுந்து வணங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் “தலைவர் வேத ஆசிர்வாதம்” வாங்கியதாக அண்ணாமலை சிறுவர்கள் காலில் விழும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கருத்து தெரிவித்து…
View On WordPress
0 notes
Text
கோவை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு அமைச்சரை கைது செய்வதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் பின்பற்றி தான் இந்த கைது…
youtube
View On WordPress
0 notes
Text
"உங்கள் மட்டமான அரசியலை நிறுத்துங்க" - பாஜகவை சாடும் காயத்ரி ரகுராம்
உங்கள் அரசியல் எவ்வளவு மலிவானது என்று பாஜகவை நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார். திமுகவை சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 30,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி இரண்டு ஆடியோக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார்.இந்த ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அமைச்சர் பிடிஆர் மறுப்பு…
View On WordPress
0 notes
Text
நடிகர் ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு - தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல் | Seeman meets Rajinikanth in Poes Garden
சென்னை: போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதியே ரஜினியை சந்திக்க…
0 notes