#ஹெல்த் டிப்ஸ்
Explore tagged Tumblr posts
dailyvision360 · 2 years ago
Text
0 notes
minnambalam · 6 months ago
Text
0 notes
xtamilnews · 2 years ago
Text
ஆண்களின் விந்தனுக்களை விரைவில் குறைக்கும் உணவு பொருள்கள் ..!!
ஆண்களின் விந்தனுக்களை விரைவில் குறைக்கும் உணவு பொருள்கள் ..!!
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய…
Tumblr media
View On WordPress
0 notes
tamildaily · 6 years ago
Link
உடல்நலம் டிப்ஸ்   ,  ஸ்டைல் டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ், ஆடை, அணிகலன் ,சன் கிளாஸ், ஃபேன்சி மெட்டல், ஹை ஹீல்ஸ், யுவி புரட்டக்ட்டிவ் கண்ணாடி, டைட் ஜீன்ஸ், டைட் பேன்ட், ஆரோக்கியம், ஷூஸ், Clothing, ornament, Health Tips, style Tips, Sun Glass, Fancy Metal, High Heals, UV Protective Glass, Tight Jeans, Tight Pants, Health, Shoes, dresses
0 notes
cbekarim74 · 8 years ago
Text
30 tips
*30 ஹெல்த் டிப்ஸ்:* *1*. தண்ணீர் நிறைய குடியுங்கள். *2*. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். *3*. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். *4*. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். *5*. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். *6*. நிறைய புத்தகம்…
View On WordPress
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/
திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்??
பெண்கள் தங்கள் அழகை பாது காப்பதில் அதிமாகவே மெனக்கெடுவார்கள். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் சொல்லவே வேண்டாம் இன்னும் பெருத்து விடுவார்கள்.
இது குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நட த்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார் கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர் கள் ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண் கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் கூறியதாவது :
ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிக மாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.
ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்த தாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்க���ல வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்க த்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடை த்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இத��ால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள்.
இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் முன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 notes
minnambalam · 6 months ago
Text
0 notes
minnambalam · 6 months ago
Text
0 notes
minnambalam · 6 months ago
Text
0 notes
minnambalam · 8 months ago
Text
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/
தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!
ஆங்கிலத்தில் ஆப்பிள் பழத்தின் மகிமையை பற்றி சொல்வதற்காக”An apple a day keeps the doctor away” ( தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்) என்ற ஒரு பழமொழி வெகு பிரசித்தம். அதே மாதிரிதான் “Have sex everyday to keep diseases away” தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் அண்டாது என்று மருத்துவர்கள் தற்போது சொல்ல தொடங்கி உள்ளனர்.
நாள்தோறும் அல்லது அடிக்கடி செக்ஸ் என்பது உங்களது மனதிற்கும், உடலுக்கும் இன்பத்தையும், உற்சாகத்தையும் தருவதோடு மட்டுமல்லாது, கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கிறது; மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது என அதன் பயனை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள். அவர்கள் பட்டியலிடும் அவ்வாறன பயன்கள் சில வருமாறு:
இருதயக்குழாய் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:
ஒரு வாரத்தில் இரண்டு தடவைக்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, மாதம் ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று ��ெரிவிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதியர்களுக்கு வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காதவாறு, ‘Immunoglobulin A’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது:
பலருக்கு அலுவலக பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை என்று ஏதாவது ஒரு பிரச்சனை வாட்டிக்கொண்டிருக்கும். இதனால் அவர்கள் அத்தகைய சமயங்களில் மிகுந்த மன அழுத்தத்துடனேயே காணப்படுவார்கள். இதனால் கோபப்படுவது, அருகில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவது என இவர்கள் தாமும் துன்பப்பட்டு, மற்றவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குவார்கள்.
சமயங்களில் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அது மன நல வியாதிக்கே கூட கொண்டுசென்று விடும். இத்தகைய நபர்கள் படுக்கை அறையினுள் நுழையும் முன்னர் பிரச்சனைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு, தமது ஜோடியுடன் அடிக்கடி ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொள்ளும் பட்சத்தில், மன அழுத்தம் அடியோடு குறைவதோடு,  பிரச்சனைகளுக்கான தீர்வை யோசிக்கவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்று அடித்துக் கூறுகின்றனர் இத்துறையின் மருத்துவ நிபுணர்கள்.
வலிகளிலிருந்தும் நிவாரணம்:
சிலருக்கு சமயங்களில் தலைவலி மண்டையை பிளக்கும். இத்தகைய நபர்களிடம் அவர்களது இணை, செக்ஸ் வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அணுகினால், “போப்பா! எனக்கே தலைவலி மண்டையை பிளக்குது; இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்…!” என்று எரிந்து விழுவார்கள். ஆனால் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க தலைவலியை ஒரு காரணமாக சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர் இத்துறை மருத்துவ நிபுணர்கள்.
தலைவலி இருக்கும்போது செக்ஸை தவிர்ப்பதற்கு பதிலாக, அதனை வைத்துக்கொண்டால், அப்போது ஏற்படும் உச்சக்கட்டம் எனப்படும் “ஆர்கஸம்” (Orgasm) உங்களது தலைவலியை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள். அதாவது ஆர்கஸத்தின்போது ஹார்மோன் ஆக்ஸ்டாசினின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், இது வலிகளை குறைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமா..?
இன்றைய காலத்தில் பெண்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள கெமிக்கல்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். முகத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், வீட்டில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இணை எதுவும் இருக்காது.
ஏனென்றால் சருமத்தை அழகாக்க பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் அதிக அளவில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி வரும் போது, திடீரென்று அதன் உபயோகத்தை நிறுத்தினால், தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும்.
ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. இதனால் சரும துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது.
இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம். சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும். முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது.
இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை ச��த்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வெளிவந்து, சருமம் சுத்தமாக இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம்  வந்துவிடும்.
மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும். ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%82%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d/
இந்த ஜூஸ் எல்லாம் குடிச்சா.. நோயே வராது
சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் அடிக்கடி உடல் நலமில்லாமல் போய்விடுகின்றது. கரண்ட் பில், பால் பில், மொபைல் பில் லிஸ்ட்டில் ஹாஸ்பிடல் பில்லும் இணைந்து விடுகிறது. அந்தளவிற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாகியுள்ளது, என்றே கூறலாம்.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஜூஸ்களைப் பற்றி காணலாம்.
க்ரீன் டீ:
தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கின்றது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் க்ரீன் டீ குடித்து வந்தால், புற்றுநோய் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிவி ஜூஸ்:
கிவி பழத்தை ஜூஸ் குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
கேரட் ஜூஸ்:
கேரட்டை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும். கேரட் உடலில் நோயேதிர்ப்பு தன்மையை அதிகரிக்கின்றது.
லைம் ஜூஸ்:
எலுமிச்சையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும். தினமும் எலுமிச்சை ஜூஸை குடித்து வருவது மிக நல்லது.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை தினம் தினம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குற��வதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/
முகப்பருவை போக்குவது எப்படி??
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகப்பரு பிரச்சனை. இது ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் வரும் ஒரு பிரச்சனை.
நம் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகபடியாக சுரக்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. எண்ணெய் வழியும் முகத்தில் தூசு படரும் போது, அது முகத்தில் உள்ள வியர்வை துளைகளை அடைத்து விடுகிறது. இதன் காரணமாக அந்த துளை வழி வெளிவர முடியாத எண்ணெய்யானது அதிகமாக சேர்ந்து சேர்ந்து நாளைடைவில் பருவாக மாறுகிறது.
ஏற்கனவே வந்த பருக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது. இதற்கு பல வழிகள் வந்துவிட்டது.
பரு வராமல் தடுக்க சில வழிகள் இங்கு காணலாம்…
முகத்தில் எந்த ஒரு க்ரீம் பூசினாலும் 20 நிமிடங்களுக்கு மேல் வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அதில் தூசு ஒட்டிக் கொள்ள நீங்களே வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
குறைந்தது மூன்று முறையாவது தினமும் சோப்பு போட்டு மிதமான சூடுடைய வெண்ணீரில் கழுவ வேண்டும். சந்தனம் உள்ள சோப்பு மிகவும் நல்லது. அதேபோல அடிக்கடி வேறு வேறு சோப்புகளுக்கு மாறக்கூடாது. முகம் துடைப்பதற்கு தனியாக டவல் பயன்படுத்தலாம்.
ஆயில் ஃபேஸ் உள்ளவர்கள் பவுடர், முகத்தில் அழகூட்டும் க்ரீம் பயன்படுத்துவது சிறந்த யோசனை அல்ல. அதுவும் முக பருவுக்கு காரணமாக அமையும்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5/
உங்களுக்கு கருத்தரிக்க வில்லையா.. பிரச்சனையின்று விரைவில் கருத்தரிப்பது எப்படி??
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அப்படிபட்ட குழந்தைகளை விரும்பாதார் இருக்கவே முடியாது. திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர்.ஆனால், இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றுதான் இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.
ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் நினைத்தபடி கிடைக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு மூலக் காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர்.
ஏனெனில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், சில ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் போதுமானது.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கருத்தரிப்பதற்கு எவ்வாறு தயாராகிக் கொள்வது என்பதைக் காணலாம்!!
சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாதவிலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வைட்டமின் டி, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன.
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின�� கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-burger-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f/
பர்கரை (Burger) விரும்பி சாப்பிட்டால் என்ன ஆகும்..? அதிர வைக்கும் வீடியோ!!
வேதியல் பற்றி ஆரய்ச்சி செய்து அது தொடர்பான வீடியோக்களை வெளியிடும் ஒரு குழுவுக்கு, திடீரென மக்களின் ஃபேவரட் உணவான சீஸ் பர்கரை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் மூழ்கச் செய்தால் என்ன? என்ற ஆர்வம் எழுந்தது.
இதனையடுத்து கிட்டதட்ட 3 மணி நேரம் இப்படி மூழ்கச் செய்ததில் அந்த அமிலம் அருவருக்கதக்க ஒரு திரவம் போல் மாறியது. இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஹைட்ரோ குளோரிக் அமிலமானது, மனிதனின் செரிமானச் செயலுக்கு காரணமான ஒன்றாகும். இதனுடன் சீஸ் பர்கரை சேர்ப்பதால் என்ன நிகழ்கிறது என்பதை நீங்களே இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!
அதன் பின்னர், உங்கள் வயிறு எந்த நிலைக்கு ஆளாகும் என்பதையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்…
https://youtu.be/NddZ5ftQb0Q
0 notes