#Edapaddi palanisamy
Explore tagged Tumblr posts
Text
'பரோலில் சசிகலா.. அ.தி.மு.க.வில் அடுத்த அதிரடிக்குத் தயாராகும் தினகரன்!'
சிறையிலிருந்து சசிகலா, பரோலில் வருவது உறுதியாகியுள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் அடுத்த அதிரடி நடவடிக்கை குறித்து தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்துவருகிறார். அதற்கு 'செக்' வைக்கும் வேலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சிறை விதிமுறைகள் மீறி சசிகலாவுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதாக பெங்களூரு சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, பகிரங்க குற்றம் சாட்டினார். இதையடுத்து, சிறையில் சசிகலாவுக்கு சோதனை என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
இதனால், சிறையிலிருந்து பரோலில் வெளியேற சசிகலா முயற்சி செய்தார். சசிகலாவின் அண்ணி சந்தான லெட்சுமி, மரணமடைந்தபோது பரோலில் செல்ல முயற்சி நடந்தன. ஆனால், பரோல் மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவின் குடும்பத்தை ஓரம்கட்டினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர்கள் இருவரும் நடத்திய பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இது, சசிகலாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் மூலம் அ.தி.மு.க.வில் சசிகலா நடத்திய ஆடுபுலி ஆட்டம் அவருக்கே பாதகமாக அமைந்துள்ளது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பாடம்புகட்டும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார் சசிகலா.
சசிகலா, தினகரனுக்கு விசுவாசமாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சி கவிழ்ப்பைத் தற்காலிகமாக தள்ளிப்போட்டுள்ளனர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க.வை பிளவுப்படுத்தி, அதை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றுவிட்டனர் தற்போதைய அ.தி.மு.க. நிர்வாகிகள்.
சசிகலா, தினகரனுக்கு எதிராக தினமும் ஒரு பேட்டி கொடுத்துவருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு தினகரனும் பதிலளித்துவருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராசன், சென்னையில் உள்ள த��ியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவல் சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியதும் பரோல் கேட்டு மனு செய்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை சசிகலா வழக்கறிஞர்கள் செய்தனர். நடராஜனின் மருத்துவ ரிப்போர்ட்கள், சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். சசிகலாவுக்கு பரோல் வழங்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சசிகலாவுக்கு பரோல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையிலிருந்து வெளியில்வரும் சசிகலாவால் அ.தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தினகரனுக்கு செக் வைத்துவிட்டால் அவரது ஆதரவாளர்கள் அமைதியாகிவிடுகின்றனர் என்று கணக்குப் போட்டுள்ளனர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுக்கு எதிராக தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் உள்பட சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸாரின் அடுத்த இலக்கு தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரனை கைது செய்தால் அடுத்து நடக்கும் சம்பவங்கள் குறித்தும் ஆலோசனை நடந்துவருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் அலுவலகத்திலிருந்து கிரீன் சிக்னல் போலீஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தினகரன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினகரனின் ஒவ்வொரு அசைவுகளையும் உளவுத்துறை போலீஸார் கண்காணித்து உடனுக்குடன் ரிப்போர்ட் கொடுத்துவருகின்றனர். சசிகலாவுக்கு பரோல் கிடைத்தவுடன் தினகரன் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் போலீஸ் வட்டாரத்திலிருந்து வெளிவருகிறது. பெங்களூருவிலிருந்து வரும் சசிகலா, நடராசனைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
தினகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். "சசிகலா, பரோலில் வெளியில்வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. இந்த வேலைகளை பெங்களூருவிலிருக்கும் ஒரு டீம் செய்துவருகிறது. சசிகலா, வெளியில் வந்தப்பிறகு அ.தி.மு.க.வில் மாற்றம் ஏற்படும். சசிகலாவைச் சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் வருவார்கள்.
அவர்கள்தான் எங்களது ஸ்லீப்பர் செல்கள். தினகரனை கைது செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. டெல்லி போலீஸுக்கே தினகரன் பயப்படவில்லை. தமிழக போலீஸுக்கு பயந்து அவர் தலைமறைவாக மாட்டார். அன்றாட பணிகளை எப்போதும் போல செய்துவருகிறார். அரஸ்ட் வாரன்ட்டுடன் போலீஸார் வந்தால், நிச்சயம் ஒத்துழைப்போம். அந்த வழக்கையும் சட்ட��்படி எதிர்கொள்ளோம். நாளை நடைபெறவுள்ள எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தினகரனை கைது செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. மேலிடத்திலிருந்து வரும் சிக்னலுக்காக காத்திருக்கிறோம்"என்றார்.
0 notes
Text
3,000 Dalits to Convert to Islam Citing Discrimination, Govt Inaction in TN Wall Collapse Case
3,000 Dalits to Convert to Islam Citing Discrimination, Govt Inaction in TN Wall Collapse Case
[ad_1]
Tamil Puligal outfit cited the injustice meted out to Dalits of Nadur, where 17 people were killed on December 2 in a wall collapse incident.
Tamil Nadu CM Edapaddi K Palanisami and other ministers at the site of the wall collapse in Nadur village on Tuesday. (PTI) Thousands of Dalits in Tamil Nadu’s Mettupalayam have said they will convert to Islam over the ill-treatment meted out to…
View On WordPress
0 notes
Text
TN cabinet sworn in with Edapaddi Palanisami as CM
TN cabinet sworn in with Edapaddi Palanisami as CM
Edapaddi Palanisami took over as the 13th chief minister of Tamil Nadu on Thursday. He was administered the oath of office by Governor of Tamil Nadu (and Maharashtra) Vidyasagar Rao.
The Raj Bhavan which was packed with AIADMK supporters chanting long live Amma and long live Chinamma.
Read more
View On WordPress
0 notes
Link
Mega projects for water conservation at Rs 1,000 crore: TN CM Edapaddi K Palanisamy
0 notes
Text
Edapaddi K Palanisami: A die-hard Amma loyalist who steadily rose through party ranks over 40 years - The Indian Express
http://dlvr.it/NP6YBQ
0 notes