#வெண்ணை
Explore tagged Tumblr posts
Text
🪔 செல்வந்தர்களின் ரகசிய வழிபாடான "தன திரியோதசி" வழிபாடு எப்போது தெரியுமா?
ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே, "தன திரியோதசி"யாக கொண்டாடப்படுகிறது. "தன்வந்திரி திரியோதசி" எனவும் அழைக்கப்படுகிறது.
செல்வ வளத்தை பெருக்கும் தன திரியோதசி நாளை...
வழிபடும் முறைகளையும், அதன் சிறப்புகளையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
*தன திரியோதசி 2024*
வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாக இந்த தன திரியோதசி கொண்டாடப்படுகிறது .
இந்த தன திரியோதசியின் மூன்றாம் நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தன திரியோதசி தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது. தன என்றால் செல்வம். செல்வத்தை அள்ளித் தரும் திரியோதசி என்பது பொருளாகும்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
*தன திரியோதசியின் சிறப்புகள்*
அமுதத்தை ஒரு கையிலும், ஆயுர்வேத சுவடியை மற்றொரு கையிலும் வைத்திருக்கும், ஆரோக்கியத்தின் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரி பகவானை வணங்க வேண்டிய நாளாக, இந்த தன திரியோதசி கூறப்படுகிறது.
இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவபெருமானின் வழிபாடுகளை மேற்கொள்ளக் கூடிய சிறந்த நாளாக உள்ளது.
இந்த நாளில் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பூஜை பொருள்கள் வாங்கி வருவது, வீட்டில் செல்வ செழிப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வடநாட்டில் தன்வந்திரி ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பல செல்வந்தர்களின் முக்கிய வழிபாடாகவும் திகழ்கிறது.
*யார் இந்த தன்வந்திரி பகவான்?*
பாற்கடலை கடையும்போது முதலில் மகாலட்சுமி தாயாரும், தன்வந்திரி பகவானும் தோன்றியுள்ளனர். பிறகு காமதேனு, சங்கு, யானை போன்றவை வெளிவந்துள்ளன.
அப்போது மகாவிஷ்ணு தன்வந்திரி பகவானை நோக்கி “வைத்தியத்தின் அரசனாக பூலோகத்திற்கு சென்று மூலிகைகளின் பெருமைகளை அறிந்து, உன் சேவைகளை செய். தக்க சமயம் வரும்போது என்னுடைய அவதாரம் நீ என, இந்த உலகிற்கு அறியச் செய்வேன்" என்று கூறியுள்ளார், என புராண செய்திகளில் கூறப்படுகிறது.
தன்வந்திரி பகவான் எப்பேர்பட்ட நோய்களையும் மூலிகைகளால் குணப்படுத்த முடியும் என இந்த உலகிற்கு அறியச் செய்தவர்.
இவரே முதல் வைத்தியர் என்றும் கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களையும் கூறியுள்ளார்.
*ஆரோக்கியம் சிறக்க தன்வந்திரி பகவானே வழிபடும் முறை*
தன்வந்திரி பகவானின் திருவுருவப் படத்தை மணப்பலகையில் வைத்து, பச்சை நிற துணி விரித்து, படத்திற்கு துளசி மாலை அல்லது துளசி அணிவித்து நைவேத்தியமாக வெண்ணை மற்றும் சந்தனம் படைத்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தன்வந்திரி பகவானுக்கு என்று கோவில்கள் கிடையாது. ஆனால் ஒரு சில வைணவ தளத்தில் இவருக்கு என்று தனி சன்னதி உள்ளது.
குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் இவருக்கென்று தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதம் தன திரியோதசி அன்று தன்வந்திரி வழிபாடுகளை செய்வதோடு மட்டுமல்லாமல் மாதம் தோறும் வரும் திரியோதசி திதியிலும்,
புதன், வியாழன், சனி, ஞாயிறு போன்ற நாட்களிலும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்து வரலாம்.
தன்வந்திரி பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம்.
கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல்நல குறைபாட்டால் வாடுபவர்கள் இந்த தன்வந்திரி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணம் அடைவார்கள் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் இன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே வீட்டில் செல்வம் சேர லட்சுமி தேவியையும், ஆரோக்கியம் மேம்பட தன்வந்திரி பகவானையும் இந்த தன திரியோதசியில் வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுங்கள்.
-பகிர்வு: ஆர்.வி.ஜெ.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_October_28-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
🪔 செல்வந்தர்களின் ரகசிய வழிபாடான "தன திரியோதசி" வழிபாடு எப்போது தெரியுமா?
ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே, "தன திரியோதசி"யாக கொண்டாடப்படுகிறது. "தன்வந்திரி திரியோதசி" எனவும் அழைக்கப்படுகிறது.
செல்வ வளத்தை பெருக்கும் தன திரியோதசி நாளை...
வழிபடும் முறைகளையும், அதன் சிறப்புகளையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
*தன திர���யோதசி 2024*
வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாக இந்த தன திரியோதசி கொண்டாடப்படுகிறது .
இந்த தன திரியோதசியின் மூன்றாம் நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தன திரியோதசி தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது. தன என்றால் செல்வம். செல்வத்தை அள்ளித் தரும் திரியோதசி என்பது பொருளாகும்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
*தன திரியோதசியின் சிறப்புகள்*
அமுதத்தை ஒரு கையிலும், ஆயுர்வேத சுவடியை மற்றொரு கையிலும் வைத்திருக்கும், ஆரோக்கியத்தின் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரி பகவானை வணங்க வேண்டிய நாளாக, இந்த தன திரியோதசி கூறப்படுகிறது.
இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவபெருமானின் வழிபாடுகளை மேற்கொள்ளக் கூடிய சிறந்த நாளாக உள்ளது.
இந்த நாளில் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பூஜை பொருள்கள் வாங்கி வருவது, வீட்டில் செல்வ செழிப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வடநாட்டில் தன்வந்திரி ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பல செல்வந்தர்களின் முக்கிய வழிபாடாகவும் திகழ்கிறது.
*யார் இந்த தன்வந்திரி பகவான்?*
பாற்கடலை கடையும்போது முதலில் மகாலட்சுமி தாயாரும், தன்வந்திரி பகவானும் தோன்றியுள்ளனர். பிறகு காமதேனு, சங்கு, யானை போன்றவை வெளிவந்துள்ளன.
அப்போது மகாவிஷ்ணு தன்வந்திரி பகவானை நோக்கி “வைத்தியத்தின் அரசனாக பூலோகத்திற்கு சென்று மூலிகைகளின் பெருமைகளை அறிந்து, உன் சேவைகளை செய். தக்க சமயம் வரும்போது என்னுடைய அவதாரம் நீ என, இந்த உலகிற்கு அறியச் செய்வேன்" என்று கூறியுள்ளார், என புராண செய்திகளில் கூறப்படுகிறது.
தன்வந்திரி பகவான் எப்பேர்பட்ட நோய்களையும் மூலிகைகளால் குணப்படுத்த முடியும் என இந்த உலகிற்கு அறியச் செய்தவர்.
இவரே முதல் வைத்தியர் என்றும் கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களையும் கூறியுள்ளார்.
*ஆரோக்கியம் சிறக்க தன்வந்திரி பகவானே வழிபடும் முறை*
தன்வந்திரி பகவானின் திருவுருவப் படத்தை மணப்பலகையில் வைத்து, பச்சை நிற துணி விரித்து, படத்திற்கு துளசி மாலை அல்லது துளசி அணிவித்து நைவேத்தியமாக வெண்ணை மற்றும் சந்தனம் படைத்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தன்வந்திரி பகவானுக்கு என்று கோவில்கள் கிடையாது. ஆனால் ஒரு சில வைணவ தளத்தில் இவருக்கு என்று தனி சன்னதி உள்ளது.
குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் இவருக்கென்று தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதம் தன திரியோதசி அன்று தன்வந்திரி வழிபாடுகளை செய்வதோடு மட்டுமல்லாமல் மாதம் தோறும் வரும் திரியோதசி திதியிலும்,
புதன், வியாழன், சனி, ஞாயிறு போன்ற நாட்களிலும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்து வரலாம்.
தன்வந்திரி பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம்.
கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல்நல குறைபாட்டால் வாடுபவர்கள் இந்த தன்வந்திரி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணம் அடைவார்கள் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் இன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே வீட்டில் செல்வம் சேர லட்சுமி தேவியையும், ஆரோக்கியம் மேம்பட தன்வந்திரி பகவானையும் இந்த தன திரியோதசியில் வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுங்கள்.
-பகிர்வு: ஆர்.வி.ஜெ.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_October_28-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
yogammedia · 3 months ago
Video
youtube
உடலில் அனைத்து புண்களையும் முற்றிலும் சரி செய்யும் வெண்ணை | வைத்தியர் Ka...
0 notes
pristine24 · 10 months ago
Text
இறந்த நாயின் பற்கள், எலுமிச்சை சாறு மற்றும் பசு-வெண்ணை இவை அனைத்தையும் கல்வத்தில் இடித்து பொடி செய்து உபயோகித்தால் பௌத்திரம் என்கிற மூல நோய் குணமாகும் என்று சித்தர்கள் அந்த காலத்திலேயே சொன்னது.
0 notes
venkatesharumugam · 1 year ago
Text
“சைவத்தை இழந்த மதுரை”
சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க! அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பினா மாதிரி! விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டா கடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ் பெற்ற ஊரு தான்! கறி தோசை, நண்டு ஆம்லெட்..
அயிரைமீன் குழம்பு, வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை! சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறி ட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை வித விதமான சைவ உணவுகளிலும் ஒருகாலத்தில் மதுரை தான் டாப்!
உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது! ஆம் புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போது மதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடு என்று அழைக்கப்படும் நேதாஜி ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும் சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல அத்தெருவெங்கும் மணக்கும்!
அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லி போன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும், தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும், வெங்காயச் சட்னியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும் ஆனியன் ரவா தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற கிழங்கு மசாலாவும்..
பொன்னார் மேனியன் போல உளுந்தை அரக்கிசை��்த உளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில் மீனாட்சியம்மனை தரிசிக்க நிற்கும் அதே கூட்டம் தரிசனம் முடிந்து மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து விதவிதமான சைவ உணவுகளை தரிசிக்க நிற்கும்! மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தை விரும்பாதவர்கள் மேலமாசி வீதி..
உடுப்பி ஓட்டலுக்கு படை எடுப்பார்கள். அதிகாலையிலேயே நெய் ஒழுக, வறுத்த முந்திரிகள், திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சு நிறத்தில் தரும் கேசரி இருக்கிறதே, அதுவே பாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டென நம்பிவிடலாம்! ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி இது மூன்றை மட்டுமே..
காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் மதுரையில் தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவில் அதை ருசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன! உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும்! சாம்பாரைக் கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன!
எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர்.! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது உடன் இருந்த ஷேவாக் போல அதிரடி காட்டியது! கோபு அய்யங்காரின் நெய் மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி, வெள்ளை யப்பம், மிளகாய் சட்னி இதெல்லாம் தனித்துவம் மிக்கவை.
இந்த உணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா, காரக்கறி கிழங்க���, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்பு அப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், போண்டா இப்படி மதுரையின் புகழ் சொல்லும் சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்!
சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல், மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும் மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள் துவங்கி அதில் சில இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன இத்தனை உணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில்..
சத்தமே இல்லாமல் மேலகோபுரத் தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான சப்பாத்தி சப்ஜி, மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடு��்து தன் வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலா ஸ்வீட்ஸ்! பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும் உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில் வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த..
ஆரியபவன் உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லி வாலா! ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரை மக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர் பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது! இட்லி, பொங்கல், தோசை என்று இல்லாது..
ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, முள்ளங்கி சப்பாத்தி என சப்பாத்திகளில் பல வகை, பாலிலேயே அரிசியை வேக விட்டு செய்யும் பால் பொங்கல், அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் & செட் தோசைகள், பாண்டிய நாட்டில் சோளாப்பூரி & சென்னாஎன்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பல உணவுகளை அறிமுகப்படுத்தியது! இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில்..
உடுப்பியின் கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள் இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு ஆதரவு தந்து தமிழருவியானார்கள். ஆரிய பவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள் என விரிவடைந்து பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும்..
பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர் வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவா தோசையும், பெசரட்டும், உப்புமாவும், கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தன! மதிய சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும் 1989இல் ஒரு அன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்!
நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரை அப்படி அத்தனை மெனுக்கள்! இடையில் இதே உடுப்பி தங்கள் கடையை ஆரியபவனிடம் தந்துவிட்டு தங்கள் கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர்! அந்த இடத்தில் ஆரியபவன் தங்கள்மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள் வெற்றிக் கொடியை பறக்கவிட்டனர்! மதுரையில் ஆரியபவன் எனும்..
கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கே.பி.எஸ், அசோக் பவன், வசந்த பவன், பரசுராம் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவக்கடைகள் மினுக்கிட்டன!உடுப்பி போல ஆரியபவனின் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கி அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை!
மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது! கோபு அய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்கள���டம் சரணடைய மனோரமாவும் இப்போது கைமாறிவிட்டது! இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர் பரோட்டா சூரியின் அம்மன் போன்ற உணவங்கள் இருந்தாலும், அந்த காலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது சுனாமியாய் வந்த ஆரியபவன் போல..
உயர் தரமான சைவ ஓட்டல்களோ அல்லது விதவிதமான ருசி மிகுந்த சைவ மெனுக்களோ மதுரையில் அருகிவிட்டது! பாரம்பரியம் மிக்க சிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல கடை மதுரையில் தற்போது இல்லை என்பதே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்!
{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள் இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்}
Tumblr media
0 notes
csaspirant1 · 7 years ago
Photo
Tumblr media
பால்! அது அவசியமா? தாய்ப்பாலூட்டுதல், பால் பவுடர் மற்றும் பால் விளைவுகளின் விவரமான பகுப்பாய்வு
கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, அவரது மற்றொரு படைப்பான சிவகாமியின் சபதம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் சென்னையில் நடந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் அப்படி என்ன தான் சிவகாமி சபதம் செய்தால் என்று தெரிந்து கொள்ளும் என் ஆர்வம், அந்த புத்தகத்தில் மற்றும் இல்லாது மற்ற சமூக ஆர்வ புத்தகத்திலும் சென்றது. கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்கள் அதே இதழில் எடுத்த நான், கட்டாயம் இதன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த புத்தகம் தான் “பால் அரசியல்”.��
உங்களுக்கு பால் புடிக்குமா? அப்படி என்றால் மனதை திடப்படுத்திக்கொண்டு இந்த பதிவை தொடரவும். பாலை பற்றிய பல உண்மைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. நமக்கு கூறப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் பல தெரியாத உண்மைகளை தெளிவு படுத்தவே இந்த பதிவை நான் மிகவும் ஆராய்ந்து எழுதியுள்ளேன்.
பால் புசித்தலுக்கு எதிராக பேசுவதற்கு முன் சில உண்மைகளை உங்களுக்கு விரிவு படுத்த விரும்புகிறேன். நாம் ஏன் பால் குடிக்கிறோம்?
பாலில் அதிகம் சுண்ணச்சத்து இருப்பதால், எலும்புகளுக்கு அது ஆரோக்யம் தரும்.
பால் அருந்தினால், ஊட்டச்சத்து குறைபாடுகளும் நீங்கும். 
அதனால், மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகளை நாம் ஆராய்ந்து, நம்மை மேம்படுத்துவது இங்கு அவசியமாக உள்ளது.
அதற்கு முன்னாள் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய பகுப்பாய்வும், அதன் முக்கியத்துவமும், பால் மாவு எப்படி சந்தையில் நுழைகிறது என்பது பற்றியும், பாலில் கலந்த அரசியலும் பற்றி தெரிந்து கொள்வது வாசகர்களுக்கு இந்த பதிவை நன்கு புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
தாய்ப்பாலை ஒடுக்குதல் 
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிந்த பின், அதற்கு மாற்றான ஓர் உணவை உருவாக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுநர்களின் நெடுநாள் கனவாக இருந்து வந்தது. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கிடைக்காமல் போகும்?
குழந்தையின் தாய் தவறிவிட்டால் 
குழந்தை உறுஞ்சுவதற்கு சிரமப்பட்டாள் 
குழந்தைக்கு செரிமான கோளாறு இருந்தால் 
அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இந்த சூழ்நிலையில் தான் கால்நடைகளின் பால் அல்லது அதிலிருந்து தயாராகும் பால் மாவு கொடுக்கப்படுகிறது. இதை ட்ரய் நர்சிங் (Dry Nursing) என்று அழைப்பர். இந்த முறையில், ஆடு, மாடு, குதிரை, அல்லது கழுதை போன்ற கால்நடைகளின் பால் கொடுக்கப்படுகிறது. இதில் கழுதையின் பால் மிகவும் சக்தியானது என்றாலும் அது குறைந்த அளவே கிடைத்ததால் மாட்டின் பாலே சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.
இருந்தும், பெரும்பாலான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாடகைத் தாயின் மூலமே பாலூட்டினர். இந்த முறையையே வெட் நர்சிங் (Wet Nursing) என்று கூறுவர். 
நிறுவனங்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை உபயோகிக்க மக்களை எப்படி சமாதானப்படுத்தினார்கள்?  
19ஆம் நூற்றாண்டில் நெஸ்டில் போன்ற நிறுவனங்கள், பால் மாவு சந்தையில் தங்கள் நிலையை நிறுத்திய பின் மக்கள் அன்றாட வாழ்வில் பால் மாவு உபயோகத்தை அதிகப்படுத்தியது.
மேலும் இயற்கைக்கு மாறான சில உண்மைகளையும் நம்பவைத்தனர். அவற்றில் சில,
அது மலிவானது.
எளிமையாக தயாரிக்க கூடியது. 
தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் இதை ஏற்ற���க்கொண்டனர்.
அதுவே ஊட்டச்சத்தின் மூல பொருள். 
இது வெட் நர்சிங்கை ஒடுக்குவதற்கே கையாளப்பட்டது.
நிறுவனங்கள் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே புட்டிப்பாலை ஊட்ட ஆரம்பித்தனர். மருத்துவ உலகமும் இதை தங்களுக்கு தெரியாமலேயே ஆதரிக்க, தொழில்மயமான நாடுகளில், முக்கியமாக படிப்பறிவுள்ள மக்களிடையே தாய்ப்பாலூட்டுதல் குறைந்தது. 
செயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு சோகமான வரலாறு இது.
தாய்ப்பாலை ஒடுக்கி, பால் பவுடர் ஊக்குவிப்பதை எவ்வாறு அவர்கள் ஆரம்பித்தார்கள்?
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை, குழந்தைப்பேரு ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. பின்வரும் காலங்களில் அது மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டது. தினமும் மருத்துவமனைகளை நடத்துவதற்கு, நோயாளிகள் தேவை என்பதால் அவர்களை மருத்துவமனையில் அதிக நாள் தங்கவைத்து, கர்ப காலத்தை நீடித்து அவர்களால் தாங்கமுடியாத வலியை அனுபவிக்க செய்தனர்.  ஹார்மோன் மேலும் உட்செலுத்தப்பட்டு அறுவைசிகிச்சைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தின. அது தாய்மார்களுக்கு வலி மற்றும் பதற்றத்தையே பரிசாக தந்தன.
ஏற்கனவே பேறுகாலத்தில் வழங்கப்பட்ட வலிநீக்கிகளான பெத்தடின் போன்றவையும் டிரான்குவிலிசர் போன்ற அமைதிப் படுத்தும் மருந்துகளும் குழந்தைகளின் உறிஞ்சும் தன்மையில் தலையிட்டுச் சிரமத்தை உண்டாக்கியிருக்க, பேறுக்குப் பின் வழங்கப்பெறும் வலிநீக்கிகளும் தாய்ப்பாலின் வழி ஊடுருவி குழந்தைகளிடத்து தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தைக் குறைத்தன . இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டமுடியாமல் போக, அவர்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை தங்கள் குழந்தைகள் உயிர்வாழ நாடவேண்டியிருந்தது.   
பால்சுரப்பு உடல் திறனை சார்ந்தது மட்டுமல்லாது மனம் சார்ந்ததும் கூட. மனமும் உடலும் சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு தாய்க்கு பாலூட்டும் நம்பகத்தன்மையில் போதுமான அளவு கவலைப்பட்டாலே பாதித் தோல்விதான். இது சில தாய்மார்களைத் தமக்குப் பால் சுரக்கவில்லை என்று நம்பும் அளவுக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதனால் பால்சுரப்பு நின்றும் போகிறது. இச்சூழலை பயன்படுத்தித்தான் ‘ஊட்டச்சத்துமிக்க முழுமையான தீர்வாக’வும், ‘நவீனமாக’வும், ‘சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக’வும் புட்டிப்பால் உள் நுழைக���றது.
2015ல் நடத்தப்பட்ட யுனெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பு படி, 5ல் ஒரு தாய்மார்கள் தான் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர். 
சீம்பால் 
பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் கர்ப்பகாலத்தில், சீம்பால் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போகிறது.
பெரும்பாலான தாய்மார்களுக்குச் சீம்பால் பற்றித் தெரிவதில்லை. குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு இது குறைந்த அளவுக்குச் சுரக்கும்போது அவர்கள் தனக்கு��் தாய்ப்பால் சுரக்கவில்லையோ எனக் கவலைகொள்ளத் தொடங்க, அதுவே புட்டிப்பாலை நோக்கி நெருங்கச் செய்கிறது. இது குறைந்தளவே சுரந்தாலும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புத் திறனை முழுவதும் வழங்கக்கூடியது. 
இந்த அச்சத்தைதான் பால்மாவு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
பீடியாஷோர் (Pediasure)  & சிமிலாக்  (Similac)
ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 200 தாய் சேய் நலவிடுதிகளை வடிவமைக்க உதவுகிறது அப்போட் லேபரட்டரி எனும் நிறுவனம். இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை, பாலூட்ட இயலாத தாய்மார்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து வைக்கும் வகையில்தான் இக்கட்டிடத்தின் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் தாய்ப்பால் புகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் தாயும் சேயும் ஒரே அறையில் இருப்பதற்கு மாறாகப் பிரித்து வைக்கப்பட்டு இருந்ததால் தாய்ப்பால் புகட்ட குழந்தைகளை வெகு தொலைவு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பது தாதிமார்களுக்கு எரிச்சலேற்படுத்தும் பணியாக அமைந்தது. எனவே புட்டிகளில் தயாராக இருந்த ஏற்கனவே நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த பால்மாவை இத்தாதிமார்கள் குழந்தைகளுக்கு எதுவாகவும் விரைவாகவும் வழங்கினர். 
மறைமுகமாக பால் மாவின் விற்பனையை பெருக்கும் இவர்கள், மிகவும் பிரபலமான பீடியாஷோர் (Pediasure) மற்றும் சிமிலாக் (Similac) பொருட்களை தயாரித்தது வருகின்றனர்.
இன்றளவும், சீனாவில் வாழும் மக்கள் தங்கள் தேநீரில் பால் சேர்ப்பதில்லை. அதையே சீனா டீ (China Tea) என்று நாம் அழைக்கிறோம். 
பெண்களை அவமதிக்கும் விளம்பரங்கள்
விளம்பரங்கள் மூலம் புட்டிபால் உபயோகத்தை அதிகரிக்க செய்த நிறுவனங்கள், புட்டிபால் பெண்மையின் ஓர் அங்கம் என்று கூறி பெண்மையை அவமதிக்கவே செய்தனர். அவற்றில் சில,
பெண்கள் தாய் பால் கொடுத்தால், அவர்களால் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. வீட்டிலேயே தங்க நேரிடும். (அச்சுறுத்துதல்)
தாய்ப்பால் மட்டும் குழந்தைகளுக்கு போதாது. குழந்தைகள் பசியால் வாடும். (மிரட்டல்)
உழவுக்குடி மக்கள் மற்றுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவர். நவீன மற்றும் நாகரிக பெண்களின் வேலை அல்ல. (அவமதிப்பு)
வெள்ளை இன பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டமாட்டார்கள். அது கருப்பு இன பெண்களின் வேலை. (இனவெறி)  
புட்டிபால் ஒரு முறை கொடுத்தாயினும், அந்த தாய்க்கு தன் பால் சுரப்பு சுழற்சியில் குறைபாடுகள் ஏற்படுவதோடு, குழந்தையும் தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தை இழக்கிறது.
குழந்தை இறக்கப் போகிறது
ஏனெனில் தாய்ப்பால் முடிந்துவிட்டது 
அம்மா ... ஓ  அம்மா ... குழந்தை அழுகிறதே ...
க்ளிம் பால் கொடுங்கள் 
1950களில் ஆப்ரிக்காவின் அன்றைய பெல்ஜியன் காங்கோவில் KLIM நிறுவனம் பால்மாவை இப்படித்தான் விளம்பரம் செய்தனர். தாய்மார்களின் உணர்வுகளை உளவியல் ரீதியாகத் தூண்டும் வகையில் இவ்விளம்பரப் பாடல் அமைந்திருப்பதைக் கவனிக்கவும்.
வைட்டமின் டி (Vitamin D) குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்று சில விளம்பரங்கள் கூறுகின்றன. அனால் வெயிலில் சற்று நேரம் நின்றாலே நாம் வைட்டமின் டி பெறலாம். பால்தூளை விற்க விளம்பரங்களின் முயற்சியை கவனியுங்கள்.
ஒவ்வொரு சிசுவின் மூளையும் 75% மட்டுமே கருவறையில் இருக்கும்போது வளரும். மீதி 25% வளர்ச்சியை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும். இதை புட்டிப்பாலால் கொடுக்கமுடியுமா? 
புட்டிப்பாலின் குறைபாடுகள் 
யுனெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பை கருதி, புட்டிப்பாலினால் ஏற்படும் குறைபாடுகளை இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்.
முன்னைவிட நுரையீரல் காய்ச்சலை குழந்தைகளிடத்தில் அதிகப்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் அதிகப்படுத்தியது.  
இப்போது வரை, பால் பவுடர் தயாரிக்க எந்த ஒரு நிலையான முறைப்படுத்துதலும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டே நிறுவனங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளல் (Trial and Error) முறையை பயன்படுத்தி, பால் மாவை தயாரிக்கின்றனர்.
இதை உண்ணும்போது, குடல் வீக்கம், நீரிழிவு, நிணநீர் புற்றுநோய், சீவு வடிதல், சிறுநீர் மூல நோய் தொற்று போன்ற நோயிகளின் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.
தாய்ப்பால் ஊட்டுதலுக்கு மாற்று 
தாய்ப்பால் ஊட்டுதல், நம் நோய் மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்க்கும் சக்தியை தந்து தாய்ப்பால் நம் வாழ்நாளில் ஒரு அடித்தளமாக அமைகிறது. அதனால் தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்களுக்கு, தாய்ப்பாலுக்கு மாற்றாக சில முறைகைளை விவரிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 
தாய்ப்பாலை எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டலாம். மிக பழமையான முறையும் இதுவே.
வெட் நர்சிங் (வாடகை தாய்) மூலம் தாய்ப்பாலூட்டலாம்.
அண்மையில் அறிமுகமான breast pump நுட்பங்கள் மூலம் தாய்ப்பாலை சேகரித்து, குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
பாலை 8 மணி நேரம் அரை வெப்பநிலையிலும், 24 மணி நேரம் குளிர்பெட்டியிலும், 3 மாதம் வரை 20 டிகிரி செல்சியஸ்யிலும் வைத்தும் பதப்படுத்தலாம். 
உலக நல அமைப்பும் (World Welfare Organisation) மேற்கண்ட முறைகளையே புட்டிப்பால் கொடுப்பதற்கு முன் பரிந்துரை செய்கிறது. நானும் அதே கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.
மாட்டுப்  பால்
தாய்ப்பால் ஊட்டுதலை படிப்படியாக குறைத்து புட்டிப்பாலை நிலைநிறுத்தியவுடன் மாட்டுப்பால��க்கான தேவை அதிகமானது. அதன் விளைவாக, தொழில்முறை பால் பண்ணைகள் வளர்ந்து உபரி பால் உற்பத்தி அதிகமான பின் அதை பாலாடைக்கட்டி, பனி கூழ், மற்றும் சாக்லேட் போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தினர். பால் இப்போது ஒரு இயற்கையான பொருள் அல்ல, அது தொழிற்சாலையில் உருவாக்கப்படும் செயற்கை பொருள். இந்த பாலை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுகர்ந்து வருகின்றனர். அதனால் இப்பலினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக மாற்றங்களை இப்போது நாம் பார்ப்போம். 
நாம் ஏன் பால் குடிக்கிறோம்?
சுண்ணாம்பு (கால்சியம்) வ���ிமையை பெற நாம் பால் குடிக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு. நம் மீது விளம்பரங்களால் திணிக்கப்பட்ட கட்டுக்கதை தான் அது.
ஏன் சுண்ணாம்பு சத்து தேவை?  
நம் உடம்பில் சுண்ணாம்பு சத்து குறைந்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புரை) என்னும் நோய் நம் எலும்புகளை பலவீனமாக்கிவிடும். இந்த நோயால் அவதிப்படும் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர்பதற்கே சுன்னச்சத்து தேவைப்படுகிறது. பாலில் அதிக சுண்ணாம்பு சத்து இருப்பதால், அது  தினசரி உணவிற்கு அவசியம் என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர்.
அனால் அதுவும் உண்மை அல்ல, நான் விளக்கம் தருகிறேன்.
புரதத்தை அதிகமாக நுகரும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோயிகளுக்கு அது மூல காரணமாக அமைகிறது. அதிக புரதத்தை நுகர்வது ஒரு அமில மழை போல, அது எலும்பு மீது பெய்து, அதிலிருக்கும் கால்சியத்தைக் கரைத்து, சிறுநீரில் கலக்க செய்கிறது.
பால் அதிக புரதத்தைக் கொண்டிருப்பதால், நம்மைவிட சிறிதளவு பால் நுகரும் சில ஆசிய நாடுகள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் குறைந்தளவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
rBGH (ரெக்கோம்பினண்ட் போவின் க்ரோத் ஹார்மோன்)
பால் சுரப்பு அதிகரிக்கும்படி மாட்டுக்கு உட்செலுத்தப்படும் ஒரு செயற்கை ஹார்மோன்
ஏன் rBGH செலுத்தப்படுகிறது? 
பால் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மாடுகளை அதிக பால் சுரக்கவைக்க தேவைப்படுகின்றது.
பசுவில் அதிக பால் சுரக்கும் என்றாலும், அது பல அம்சங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது.
IGF (இன்சுலின்-போன்ற வளர்ச்சி காரணி) 1 என்ற புரதமானது நமக்கும் மாட்டிற்கும் ஒரே அளவில் காணப்படுகிறது. விரிவாக கூறினால், பசுவின் பாலை நாம் உட்கொள்ளும்போது, மாட்டின் IGF 1 நிலை நமக்கு கிடைக்கிறது.
IGF 1 நிலை தற்போது மனித உடலில் இயற்கையான அளவைவிட அதிகமாக இருப்பதால், மார்பக, குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
rGBH செயற்கை ஹார்மோன் உருவாக்கப்பட்ட 1993 இல் 1,57,000 பால் பண்ணைகள் இருந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் அதே எண்��ிக்கை 71000 ஆக குறைந்துள்ளது. அதாவது 55 விழுக்காடு வீழ்ச்சி. மாடுகளின் எண்ணிக்கையும் 95 இலட்சத்திலிருந்து 91 இலட்சமாக குறைந்தது.
இதிலிருந்து, பால் உற்பத்தியும் குறைந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த காலகட்டத்தில் rBGH உபயோகத்தால், பால் உற்பத்தி 15 கோடி காலனிலிருந்து 17 கோடி காலனாகப் பெருகியிருந்தது. 
மாடு உடனடியாக கர்ப்பம்தரிக்க மற்றும் அதிக பால் சுரக்க, இந்த ஊசி போடப்படுகிறது. 
பால் மாவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொள்வோம். அதை உலர்த்தி, துண்டுகளாக உடைத்து, அரைத்து, தூளாக்கி, பல மாதங்களுக்கு ஒரு பெட்டியில் சேமித்து வைத்த பிறகு, மீண்டும் அதில் ரசாயன பொருட்களை கலந்து, தண்ணீர் சேர்த்து ஒரு புது மாம்பழமாக கொடுத்தால் நீங்கள் அதை உண்ணுவீர்களா? இது தான் பால் மாவு உற்பத்தியில் நடக்கிறது.   
FSSAI (இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகாரசபை)
2011 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்களைப் பற்றி FSSAI ஆய்வு செய்தபோது, தில்லியில் சுமார் 70% கலப்பு பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
SNF (Solids-Not-Fat) சாலிட்ஸ்-நாட்-பாட் அளவு அதிகமாக இருந்தால், அது தரமான பால் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள், கனிம, மற்றும் புரதங்கள் இந்த SNF அளவைக் குறிக்கின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் (2006) படி, இந்த அளவு 8.5 ஐ விட குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் 46% பாலில் இந்த அளவு குறைவாகவே இருந்தன. 
SNF அளவை பெற மற்றும் பாலின் தேவையை பூர்த்தி செய்ய, பாலில் சேர்க்கப்பட்ட பதனச்சரக்குகள் 
மேலும், பால் உற்பத்தியின் விலையை குறைத்து SNF அளவை அடைய, பின்வருபவை சேர்க்கப்பட்டன. அதாவது,
யூரியா (புரதம் அதிகரிக்க)
ஸ்டார்ச் (தடிமன் மற்றும் அதன் புளிப்பு காலம் நீட்டிக்க)
குளுக்கோஸ்
உப்பு
சோப்பு
நடுநிலைப்படுத்தும் பொருட்கள்  
பிஹார்மலின் (Pharmaline)
நீர் வண்ணம்
இது அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு உட்கொண்டிருந்த பொருட்கள் இவையே. இப்பொருட்களை பாலில் சேர்க்க பல காரணங்கள் இருந்தாலும், பாலின் தேவையே முக்கிய காரணமாக இருந்தது.
நம் தினசரி நுகர்வுக்கு போதுமான அளவு பால் கிடைக்கும்போதும், பாலின் தேவை ஏன் இன்னும் நிறைவேறவில்லை?
பால் பவுடர் நிறுவனங்கள், ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் மற்றும் காட்பரி (Cadbury) போன்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு போதிய அளவு பால் வழங்குவதால், தினசரி நுகர்வுக்கு பால் ஒரு குறைபாடாகவே உள்ளது. 
வெண்மை புரட்சி
இந்திய வேளாண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பசுமைப் ப���ரட்சி பெரும் பண்ணையாளர்கள��க்கே பயன்பட்டது, இதனால் சிறு விவசாயிகளுக்கு உதவ முடியவில்லை. எனவே, சிறு விவசாயிகளுக்கு உதவ, நமது ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை புரட்சி என்று அழைக்கப்படும் ஒரு தனியான புரட்சி ஒன்றை கொண்டுவந்தார்.
ஆனால், இந்த புரட்சிக்கு முன் இந்தியாவில் பால் உற்பத்தி முதன்மை உற்பத்தியாக இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அது விவசாயத்தின் உபரி உற்பத்தியாகும். இங்கு கால்நடைகள் மனிதர்களுக்கு பயனில்லாத தாவரங்களை சாப்பிட்டு வளர்கின்றன. ஆனால் மேற்கத்திய கால்நடை வளர்ச்சி முறை வேறுபட்டது. அவர்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி அவற்றிற்கு உணவாக பயிர்களை அந்நிலத்தில் பயிரிடுவார்கள். எளிதாக சொல்வதெனில், ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நிலங்கள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டன.
நான் ஏன் இப்போது வெண்மை புரட்சியை பற்றி கூறினேன்?
 மீண்டும் பால் தேவையை பூர்த்திசெய்யவே. மேற்கத்திய நாடுகளில் உள்ள கால்நடைகள் அதிக பால் கொடுப்பதால் அதை இங்கு கொண்டு வருவதன் மூலம் இங்குள்ள பால் தேவையை பூர்த்தி செய்வதோடு பாலின் விளையும் குறையும் என்று கருதினர். அதேபோல் கால்நடைகளை இங்கு கொண்டு வந்தனர் ஆனால் அதில் மீண்டும் சிக்கல் உருவானது. 
விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட சில கால்நடைகள் இறந்தன. இரண்டாம் வகுப்பு கால்நடைகள் பிறகு அனுப்பப்பட்டது.
மேற்கத்திய கால்நடைகளுக்கு உணவுப்பொருட்களை வளர்ப்பதற்கு தனி இடங்கள் தேவைப்பட்டன.
பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது.
இது மீண்டும் பாலின் விலையை உயர்த்தியது மட்டுமில்லாமல் குறு விவசாயிகளால் அந்த கால்நடைகளை பராமரிக்க முடியாமற்போனது. பாலின் விலை ஏழை மக்களால் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது. வெண்மை புரட்சியும் குறு நில விவசாயிகள��க்கு அவ்வளவாக உதவவில்லை.
முடிவுரை 
முன்னதாக நகரங்களில் உள்ள மக்களுக்கு பாலை நேரடியாக உட்கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. அவர்கள் பாலை கடைந்து தயிராக்கி, அதை மீண்டும் கடைந்து நெய் மற்றும் வெண்ணையை எடுத்து உண்பது மட்டுமில்லாமல் விற்றும் வந்தனர். இந்த முறை அவர்களை இருமுறை பயனடையச் செய்தன. நெய்யில் இருந்து பெறப்படும் மோரையும் விற்று குறுநில விவசாயிகள் இந்த முறையால் சிறப்பாக சம்பாதித்தனர். அதிக லாக்டிக் (Lactic) அமிலம் இருக்கும் மோர், அந்த நேரத்தில் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிற்றூர் காலநிலைக்கு ஏற்ற பொருளாக விளங்கிய நெய், நீண்ட நாட்கள் கெடாது என்பதால் மழைக்காலங்களில் ஊர்ப்புறங்களுக்கு ஏற்றவொரு உணவாக இருந்தது. 
இவை அனைத்தையும் விடச் சிறப்பு இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்தது என்பதுதான். எளிய பெண்களிடம் இருந்த இவ்வணிகப் பொருளாதாரம் வென்மைப் புரட்சி என்கிற பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டு இன்று பெரும் வணிக நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டது.
வெண்ணெய்யில் ஒரு முருங்கைக் கொழ���ந்தை கிள்ளிப்போட்டு நெய் காய்ச்சிய காலம் மறைந்து கொண்டிருக்கிறது. நெய் போன்று உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் இன்று எளிய மக்கள் கைக்குக் கிடைக்கும் விலையிலும் இல்லை.
பால் என்பது இன்று பங்குச் சந்தை வணிகம். நெஸ்டில் போன்ற பால்மாவு நிறுவனங்கள், வாலஸ் போன்ற பனிக்கூழ் நிறுவனங்கள், காட்பரீஸ் போன்ற சாக்லேட் நிறுவனங்கள் முதலியவனவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் எகிறக் கொண்டிருக்க ...
ஊர்ச்சந்தையில் மோர் விற்றுக்கொண்டிருந்த நம் கிழவிகளைக் காணோம்.  
நான் பால் குடிக்க வேண்டுமா வேண்டாமா?
Tumblr media
கடினமான கேள்வி. இப்பொழுது பால் என்பது ஒரு இயற்கை பொருள். இது உங்கள் விருப்பம்.  இந்த பதிவு, இன்று நாம் கலப்பட பாலை நுகர்கிறோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் "கால்சியம் மற்றும் வைட்டமின்கள் பெற பால் அவசியம்" என்கிறக் கட்டுக்கதைகளை அகற்றுவதற்கும் தான். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து விலகி இருக்க பல இயற்கையான வழிகள் உண்டு. நீங்கள் இன்னும் குழம்பி இருந்தால்,
வரத்தேனீர் 
கடுங்காப்பி 
போன்று பால் இல்லாமல் தயாரிக்கப்படுகின்ற பானங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி. 
இதனுடைய ஆங்கில பதிவு (English Version)
http://bit.ly/milkanalysis
1 note · View note
slsathish1306 · 2 years ago
Text
சிக்கல் சிங்காரவேலர்
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் வரலாற்றுக் கதையில் காணப்படுகிறது. ஸ்ரீ வாமனப் பெருமாள் கதையின்படி தேவர்களை துன்புறுத்தி வந்த மகாபலி சக்கரவர்த்தி என்பவற்றின் கொடுமைகளை தேவர்கள் திருமாலிடம் சென்று கூறினார்கள் . ஆகவே திருமாலும் வாமனாக அவதாரம் எடுத்துக் கொண்டு சிக்கலை…
View On WordPress
0 notes
Photo
Tumblr media
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்! கிருஷ்ண ஜெயந்தியில் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? சுபகிருது வருடம் ஆவணி மாதம் 19/8/2022-இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். கோகுலத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி ஆகிய திதிகளில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பதைத்தான் இந்தப் பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி என்றாலே அசுப திதிகள் ஆக கருதப்படுகிறது. ஆனால் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்து 'கோகுலாஷ்டமி' என்கிற நல்ல நாளை வழங்கியதும், அதே மாதிரி ராமர், நவமி திதியில் பிறந்து 'ஸ்ரீராமநவமி' என்கிற நல்ல நாளை வழங்கியதும், இந்த திதிகள் மற்ற திதிகளைப் போலவே சுப திதிகளாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். தென்னிந்திய மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக ஆங்காங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பல்வேறு பெயர்களில், பல்வேறு விழாக்களாக அவரவரின் சாஸ்திரங்களின்படி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து, வழிபட்டு வந்தால் கிருஷ்ணரே வந்து அந்த வீட்டில் பிறப்பதாக ஐதீகம் உண்டு. குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த கோகுலாஷ்டமி சிறந்த பலன்களை நல்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால், கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானதாக இருந்து வருகிறது. அன்றைய நாளில் பகவத் கீதை வாசிப்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பகவத் கீதை கலியுகத்திற்கு இறைவன் கொடுத்த கொடையாகும். பகவத் கீதையின்படி ஒரு மனிதன் வாழ்ந்து வந்தால் அவனுக்கு தோல்வி என்பதே இருக்காது. ஸ்ரீ கிருஷ்ணரை விக்ரஹமாகவோ, படமாகவோ வைத்து அலங்காரங்கள் சிறப்பாக செய்து கொள்ள வேண்டும். புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாகத் திறமை, அறிவாற்றல் அனைத்திலும் சிறந்து விளங்க, கோகுலாஷ்டமியில் கிருஷ்ணருக்குப் பிடித்தமான வெண்ணை, பால், நெய், திரட்டு பால், பழங்கள், முறுக்கு, சீடை, அப்பம், தட்டை, அ��ல், லட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை படைப்பார்கள். கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக அன்றைய நாளில் வீடு முழுவதும் மாவிலை தோரணங்களா (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/Chcie6APErZ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
siragukal · 3 years ago
Text
குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் அஸ்வின் ஏன் கதறுகிறார்? வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல: ரவி சாஸ்திரி பதிலடி
குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் அஸ்வின் ஏன் கதறுகிறார்? வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல: ரவி சாஸ்திரி பதிலடி
புதுடெல்லி: குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் கதறுகிறார். ஒவ்வொருவரின் வேதனைக்கும் வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத���தில் அளித்த பேட்டியில், “கடந்த 2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
ரவி சாஸ்திரி வேலை வெண்ணை தடவிப் பேசுவது அல்ல; அஸ்வின் தவறாகப் புரிந்து கொண்டார்: தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் ஆதரவு | I was also there on the tour: Former India selector reacts to R Ashwins crushed remarks, says Shastri is right
ரவி சாஸ்திரி வேலை வெண்ணை தடவிப் பேசுவது அல்ல; அஸ்வின் தவறாகப் புரிந்து கொண்டார்: தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் ஆதரவு | I was also there on the tour: Former India selector reacts to R Ashwins crushed remarks, says Shastri is right
புதுடெல்லி : ரவி சாஸ்திரியின் வேலை வெண்ணை தடவிப் பேசுவது இல்லை. ரவி சாஸ்திரி பேசியதை அஸ்வின்தான் தவறாகப் புரிந்து கொண்டார் என்று தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் “ கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை புகழ்ந்து, வெளிநாடுகளில்…
Tumblr media
View On WordPress
0 notes
upanishads-tamil · 3 years ago
Text
நம்ம உடம்பு நமக்கு பாரமா?
உணர்வது எப்போது :
🍁
எப்ப வெளியே போனாலும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கிலோ மூட்டையை தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கல்யாண வீட்டுக்குப் போனாலும், காய் கறி வாங்கப் போனாலும், அலுவலகம் போனாலும், கோவிலுக்குப் போனாலும் அந்த மூட்டையை சுமந்து கொண்டுதான் போக வேண்டும்.
முடியுமா?
ஆனால் , செய்கிறோமே. இந்த உடம்பை தூக்கிக் கொண்ண்டுதானே போகிறோம். எங்கு போனாலும், இந்த உடம்பை தூக்கிக் கொண்டு தான் போக வேண்டி இருக்கிறது. விட்டு விட்டுப் போக முடியுமா?
நம்ம உடம்பு நமக்கு பாரமா? என்று கேட்கலாம்.
நாம் வெகு தூரம் நடப்பது இல்லை. எனவே தெரிவது இல்லை. பத்து கிலோ மீட்டர் நடந்து பாருங்கள் தெரியும், இந்த உடம்பு பாரமா இல்லையா என்று. பத்து மாடி ஏறிப் பாருங்கள் தெரியும். இந்த உடம்பை தூக்கிக் கொண்டு ஏற முடியாது என்று. மூச்சு வாங்கும். நின்று விடுவோம்.
இந்த உடம்பு ஒரு நாள் படுத்து விடும். இதை வைத்து எதாவது நல்லது செய்யலாம். நல்லவற்றை அறிந்து கொள்ளலாம். அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நாலு நல்ல வார்த்தை பேசலாம். ஏதாவது உருப்படியாக செய்யலாம். அதை விடுத்து சும்மா இந்த உடம்பை தூக்கிக் கொண்டு அங்���ும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம்.
ஒரு நாள், இந்த உடம்பை தீ கொள்ளும், அல்லது நிலம் கொள்ளும்.
சுந்தரர் பெருமான் சொல்கிறார்
“இந்த உடம்பை சுமந்து கொண்டு திரிந்து துன்பப் படுகிறீர்கள். ஒரு நாள், இந்த உடம்பை புதைத்து விடுவார்கள். புதைத்த உடம்பை ��ரி தோண்டி எடுத்து கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள் வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை செய்திருந்தால் வரும் பலன் கிட்டாமல் போய் விடும். இருக்கிற போதே, வாழ் நாளின் குறைவை எண்ணி நல்லதை செய்யுங்கள். பசித்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்ல நீரோடு, உணவு அளித்து, அவர்கள் மனம் மகிழும் படி பேசி இருப்பவர்கள் வணங்கும் கேதாரம் என்ற திருத் தலத்தில் உள்ள ஈசனை வழி படுங்கள் “
பாடல்
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே
பொருள்
பறியேசுமந் துழல்வீர் = பறி என்றால் உடம்பு. உடம்பை சுமந்து கொண்டு துன்பப் படுவீர்கள்
பறி = இந்த உடம்பை
நரிகீறுவ தறியீர் = நரி தனது கூரிய நகங்களால் கீறுவதை அரிய மாட்டீர்கள்
குறி = குறித்த நாளில்
கூவிய = கூவிக் கொண்டு வந்து
கூற்றங்கொளு நாளால் = கூற்றுவன் உங்கள் உயிரை கொண்டும் செல்லும் நாளில்
அறம் உளவே = அறம் உங்களுக்கு உளவாகுமா ? ஆகாது. செய்தால் தானே பலன் கிட்டும்.
அறிவானிலும் அறிவான் = அறிந்து கொள்ளக் கூடியவர்களில் ஒருவராக
நல நறுநீரொடு சோறு = நல்ல நறுமணம் மிக்க நீரோடு, சோறும் தந்து
கிறிபேசி = அவர்கள் மனம் மகிழும் படி பேசி
நின் றிடுவார் = இருப்பவர்கள்
தொழு = தொழும் , வணங்கும்
கேதாரமெ னீரே = கேதாரம் என்று சொல்லுங்கள்.
திருவாசகத்தில், திரு அம்மாணையில் , மணிவாசகர் பாடுவார்
கேட்டாயோ தோழி “கிறி” செய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் ..
கிறி செய்தவாறு ஒருவன் = மனதை மயக்கும் படி பேசி ஒருவன். சிற்றின்பத்தின் உச்சம் தொட்டுக் காட்டிய பாடல் இது. ஒரு பெண் முதன் முதலாக ஒரு ஆடவனின் அருகாமை உணரும் பாடல்.
மாவலியிடம், அவன் மனம் மயங்கும் படி பேசி மூன்றடி நிலம் பெற்ற அந்தத் திருமாலை அல்லால் என் மனம் வேறு ஒன்றையும் போற்றாதே என்கிறது பிரபந்தம்.
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இ��ையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்”கிறி” யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
இதில் உள்ள இறுதி இரண்டு சொற்கள் “நெஞ்சம் பேணலதே” . நெஞ்சம் பேணாது. நெஞ்சம் போற்றாது என்று பொருள்.
பேணுதல், போற்றுதல்.
தந்தை தாய் பேண். தாய் தந்தையரை போற்று.
பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லில் இருந்து பிறந்தது.
போற்றப் படுபவள், போற்றப் பட வேண்டியவள் என்ற அர்த்தத்தில்.
சுந்தரர் பிரான் நாமம் வளர்க
Tumblr media
0 notes
healthyfoodchef · 3 years ago
Text
Watch "Homemade Butter ,Ghee Recipe in Tamil / சுலபமான முறையில் வெண்ணை ,நெய் /how to make Butter,ghee" on YouTube
youtube
0 notes
anewsbuddy · 4 years ago
Text
ராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்!
ராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்!
<!–
–>
Tumblr media
பாடகியாகவும்
ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ராஷி கண்ணா அதை தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வந்த நிலையில் தன்னை ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
<!–
–>
Tumblr media
இமைக்கா நொடிகள்
உருட்டி வைத்த வெண்ணை போல பளபளவென இருக்கும் ராஷி கண்ணாவை தமிழ் ரசிகர்கள் திரைப்படங்களில்…
View On WordPress
0 notes
venkatesharumugam · 1 year ago
Text
#மசால்தோசை_புராணம்
மசால் தோசையா? ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை வார்த்து அதன் நடுவுல மசால் வச்சு மடிச்சா அது மசால் தோசை இதுக்கா இவ்வளவு பில்டப்புன்னு யாராவது கேட்டா, இந்த உலகில் உணவு ரசனையில்லாத மனிதர்களின் குரூப்புக்கு தலைவராகும் முழுத் தகுதியும் அவர்களுக்கு உண்டு என சத்தியம் செய்வேன்.!
அப்படிப்பட்ட “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” கோஷ்டிகளை நம்ம ஊர் எல்லையிலேயே நிறுத்தி விட்டு என்னுடன் கிச்சனுக்குள் வாங்க! இந்த மசால் தோசைக்கு முக்கியமே பூரிக்கு வைக்கும் அதே மசால் தான் ஆனா அதில் கொஞ்சம் வித்யாசம், ஆப்பிரிக்கா யானைக்கும் இந்திய யானைக்கும் உள்ளது போல! இனி அந்த செய்முறை!
இந்த தோசை மசாலுக்கு முதலில் உருளைக்கிழங்கை நல்லா வெண்ணை போல மசிக்கணும். பச்சை மிளகாயை கீறி போடாமல் குட்டிக் குட்டியாக வெட்டிப் போடணும். வெங்காயத்தையும் அப்படியே! காரம் கொஞ்சம் மிதமான தூக்கலில் இருக்கலாம். பூரி மசாலில் போடும் அளவில் பாதி பட்டாணி சேர்க்கணும்.
பட்டாணியும் மசியும் பதத்தில் இருப்பது சாலச் சிறந்தது.. இந்த மசால் நடிகை ஜெனிலியா போல இல்லாமல் நல்லா கெட்டியா க்ரீம் போல இருக்கணும் அப்போ தான் தோசையில் தடவ முடியும்.! முக்கியக் குறிப்பு.. தோசை வார்த்து அதன் மேலே மசாலாவை அள்ளி வைத்து மடித்து எடுப்பது ஒரு பெரும் பாவச் செயல்.
அதுக்கு பேரு மசால் தோசைன்னா ”இதுக்கு மசாலாவை தனியா வாங்கி என்னையே சாப்பிட்டு இருக்கலாமேன்னு” உங்களை சாதா தோசை கிண்டல் அடிக்கும். மசால் தோசை வார்ப்பது காதலியைக் கையாள்வது போல! அவள் கன்னத்தை வருடுவது போல மென்மையாகச் செய்யவேண்டும். காதலி இல்லாதவர்கள் ஒரு..
கன்று��்குட்டியின் முதுகை தடவுவது போல செய்யணும். தோசையை வார்த்து ஒரு புறம் வெந்த பின்பு திருப்பிப் போடாமல் இட்லிப் பொடியை தோசை மீது பரவலாகத் தூவி 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மசாலாவை ஒரு மீடியம் அளவிலான கரண்டியில் எடுங்கள் (சிமெண்ட் அப்புவது போல அள்ளி அள்ளி அப்பக்கூடாது)
தோசை மீது அதை வைத்து தோசையின் முழு வட்டத்திலும் அது பரவும்படி நன்கு தடவுங்கள் (காதலி/கன்றுக்குட்டி உதாரணம்) இப்போ இன்னும் கொஞ்சம் மசால் தேவை என்றாலும், எடுத்துக் கொள்ளுங்கள், தோசை நடுவே ஒரு கரண்டி மசாலா வைத்து ஏனோ தானோன்னு தடவாமல் தோசையின் வட்டம் முழுவதும்..
மசால் சரியான அளவு இட ஒதுக்கீட்டில் நிரப்பப் படவேண்டும் என்பதே முக்கியம். இவ்வாறாக வார்த்த தோசையை ஒரு பக்கமாக வேக வைத்து எடுப்பதே சாலச்சிறந்தது. தயவு செய்து அதைக் குப்புறக் கவிழ்த்து கெடுத்து அத்தோசையின் மாண்பை கெடுத்து விடாதீர்கள். மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு..
இட்லி பொடி தூவி தோசையை மடித்து இறக்கினால் சட்னி சாம்பார் ஏதுமின்றி அப்படியே சுவைக்கலாம். இந்த தோசையை மடித்து அதன் மீது மகுடம் வைத்தார் போல ஒரு கடலை மிட்டாய் சைசில் வெண்ணெய் கட்டி ஒன்றை வைத்து விட்டால் தோசையின் சூட்டில் அந்தக் கட்டி நீச்சலுடையில் சர்ரென சறுக்கி வந்து..
நீச்சல் குளத்தில் விழும் தமிழ் சினிமா ஹீரோயின் போல தோசை மீது சறுக்கிக் கொண்டே வரும் அந்த உருகிய வெண்ணெய்யை தோசையின் விளிம்பு எல்லைக்கு��்ளேயே போர் வீரன் போல தடுத்து நிறுத்தி ஒரு விள்ளல் எடுத்து உண்பது, ஆஹா போதை மதுவில் மட்டுமில்லை மசால் தோசையிலும் உள்ளது என்பீர்கள்.!
ஒரு ஆகச் சிறந்த மசால் தோசையின் சாமுத்ரிகா இலட்சணம் எதுவென்றால் நீங்கள் வார்த்த தோசை கருகாமல் நல்ல பழுப்பு கலந்த பொன்னிறத்தில் முறுகலாக வந்து இருந்தால் போன ஜென்மத்தில் நீங்கள் மாபெரும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என மசால் தோசை புராணத்தில் எழுதியுள்ளார் வெங்கிழார்!
Tumblr media
0 notes
tamilnewstamil · 5 years ago
Photo
Tumblr media
கச்சை அணியாமல் வந்த ராதிகா ஆப்தே 10/3/2019 5:31:54 PM ஒரு கண்ணுக்கு வெண்ணை ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பதுபோல் ராதிகா ஆப்தே டபுள் பாலிசி கடைபிடிக்கிறார். தமிழ் படங்களில் நடிக்கும் போது கவர்ச்சிக்கு இடம் தராமல் சேலை அணிந்து நடிக்கிறார்.
0 notes
brindhavinennangal · 7 years ago
Text
வாசனைச் சந்தேகம் !
Tumblr media Tumblr media
பல வருஷங்களா எனக்கு ஒரு சந்தேகம். அமெரிக்காவிலும்  சரி, கனடாவிலும் சரி, பழங்களோ, பூவோ, காய்கறிகளோ எந்த வித வாசனையும் இல்லாமயே இருக்கு.  ஆனா கை அலம்பற சோப்பு,(hand wash soap) உடம்புக்குப் போட்டுக்கற உடல் அலம்பி( body wash) மற்றும் களிம்பு (body lotion)  இதெல்லாம் ஒண்ணு  பழ வாசனை, இல்ல பூ வாசனை, இல்ல இரண்டும் கலந்த வாசனை, வெள்ளரி வாசனை, போதாக் குறைக்கு தேங்காய், மற்றும் ஏதேனும் கொட்டைகள் மற்றும் அவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணை மற்றும் வெண்ணை வகைகள் வாசனை அப்படின்னு விதம் விதமாய் இருக்கு.இன்னும் சில வினோதமான  வாசனைக் கலவைகள் , ஏண்டா வாங்கினோம், ஏண்டா முகர்ந்து பார்த்தோம்னு தெறிச்சு ஓடற மாதிரி இருக்கு. 
பரிசு வந்ததெல்லாம் சும்மா வந்திருக்கே, நல்ல பொருள்தானே , உபயோகிக்கலாமே என்று தோணும் . ஆனா இதெல்லாம் தீர்ந்து போறதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துடும். எப்படின்னு கேக்குறீங்களா? நம்பதான் தேங்காய் எண்ணையைத்தானே  தினமும் தடவிக் குளிக்கிறோம், நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து. உண்மைதாங்க. குறிப்பா குளிர் பிரதேசங்கள்ள இருக்கிறவங்க தினமும் உடலில் தேங்காய் எண்ணெய்  தடவிப் பிறகு இலேசாக சோப்புப் போட்டுக் குளியுங்க. அதிகமா ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கிற களிம்புகள்(lotion) தேவைப் படாது. உடம்பு மிகவும் மென்மையா பட்டுப் போல இருக்கும். வெளியிடத்தில யா��ானும் தவறுதலா உங்க மேல உரசி, உங்க சொரசொர மேனியினால அவங்க பிறாண்டப்படுகிற  வாய்ப்புகள் குறையும்..ஹி ஹி !
எண்ணெய்  தேய்த்துக் குளித்தால் என்று மட்டும் அல்ல, பொதுவாகவே குளியலறை நீர் செல்லும் ஓட்டையில் வாரா வாரம், ஒரு குவளை சமையல் சோடாவைப் போட்டு, கொதிக்கும் நீரை விடவும். அழுக்கினால் குறுகிப் போய்  குழாய் அடைத்துக் கொள்ளாது.
பின் குறிப்பு: வாழைப்பழம் ,ஆப்பிள் மற்றும் ஓரமா இருக்கே Sweet Pea பூ வாசனைல கை அலம்பற  சோப்பு இது மூணும்தான் நான் வாங்கினது. மற்றதெல்லாம், பரிசாக வந்ததுதான். தானம் பிடிச்ச மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கறியே பிருந்தா இது உனக்கு அடுக்குமான்னு  கேக்குறீங்கதானே, அதுவும் நியாயம்தான்.பின் பின் குறிப்பு: Sweet Peaக்குத் தமிழ் வார்த்தை என்னன்னு பார்த்தா இனிப்புப் பட்டாணி அப்பிடின்னு இணையம் சொல்லுது. பார்க்க காசித்தும்பைச் பூக்கள்  போல இருக்கு. இந்தப் பூக்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை தெரிஞ்சாச் சொல்லுங்க.
வணக்கம்……வான்கூவரில் இருந்து!
1 note · View note
Photo
Tumblr media
ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும், அதன் பலன்களும்: நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம். *வடைமாலை* அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி, தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனாலேயே சிலர் ஆஞ்சநேயருக்கு வடைமாலையை அணிவிப்பர். *வெற்றிலை மாலை* சீதையைத் தேடி அனுமான் அசோகவனத்தில் அவரை சந்தித்தபோது, சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். *வெண்ணெய் சாத்துதல்* வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே, நாம் நினைத்த காரியம் நடந்துவிடும் என்பது உறுதியான நம்பிக்கை. அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. *சிந்தூரக் காப்பு* ராமரை மனதில் நிறுத்தி, உச்சியில் குங்குமம் செந்தூரம் வைத்து, சீதை நெகிழ்ந்தார். சீதையின் மகிழ்ச்சி கண்டு, அனுமன் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம். இதனா��், சிந்தூரக் காப்பு அனுமனுக்கு பிடித்த ஒரு பொருள் ஆ��ும். *'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மாலையாக அணிவித்தல்* 'ராம் ராம்' என்று எழுதி மாலையாக அணிவித்தால், நமக்கு எல்லா க்ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது. *வாலில் பொட்டு வைப்பது* அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில்தான். வாலிலிருந்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்று முடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது. ****** For more clarification and Horoscope, Prasannam Consultation with Famous-Business-Development-Astrologer-GURUJI_Dr_ARUN_RAGHAVENDAR, Cell: 8939466099 Visit: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #Best-Astrologer-in-Chennai #Black-Magic-Removal-Specialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai * #2022-JULY-24_Panchangam-and-Planetary-position ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CgVm73tvqAD/?igshid=NGJjMDIxMWI=
0 notes