#மன��ன
Explore tagged Tumblr posts
Photo
கொரானா ன அழுத்தம் குறைய நகைச்சுவை நிகழ்ச்சி இன்று நெல்லைக்கு வந்து, கொரானா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களின் மன அழுத்தம் குறைய, நகைச்சுவை நிகழ்ச்சி நடத்திய திரைப்பட நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் சரவணன்
0 notes
Photo
அள்ளித் தந்த ஆண்டு புதிய ஆண்டின் துவக்கத்தில், முதலீட்டாளர்கள் மனதில் புதிய உற்சாகமும், உத்வேகமும் தோன்றுவது வாடிக்கை. அதிக லாபம் ஈட்டிய ஆண்டுகளின் நிறைவில், அதிக எதிர்ப்பார்ப்பும், வேகமும் மிக இயல்பாக தோன்றிவிடும். அப்படிப்பட்ட தோற்றத்தோடு, 2017 முடிந்து, இந்த புதிய ஆண்டு துவங்குகிறது.என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தால், 2018ல் நம் முதலீடுகளை வெற்றி நோக்கி செலுத்த முடியும்? கடந்த ஆண்டு பார்த்த லாப குறியீடுகள் இந்த ஆண்டிலும் தொடருமா? நம் முதலீட்டு சிந்தனையில் என்னென்ன மாற்றங்களை உள்ளடக்க வேண்டும்? 2017 போல ஓர் ஆண்டு, முதலீட்டு வரலாறு காணாதது! அத்தகைய ஆண்டின் தொடர் ஆண்டு அதைவிட சிறப்பாக அமைய பல சிரமங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார வளர்ச்சி விரைந்து வேகம் பிடிக்க வேண்டும். அரசின் வருவாய் பெருக்கம் கூடி , நிதி பற்றாக்குறைகள் குறைய வேண்டும். பணவீக்கம் குறைவாக தொடர வேண்டும். உலக வட்டி விகிதங்கள் அதிகம் உயரக் கூடாது. கச்சா எண்ணெய் விலை விரைவில் வீழ்ச்சி அடைய வேண்டும். பங்கு லாபம் தொடர்ந்து வரிச் சலுகைகள் பெற வேண்டும்.இத்தனையும் ஒருங்கேற நடக்காது என்பது நாம் அறிந்ததே. 2017ம் ஆண்டிலும் இதை நம் நன்கு அறிந்து இருந்தோம். இருந்தும், சந்தைக்குள் அதிக பணம் புழங்கி, இந்த உயர்வு ஏற்பட நாமே காரணம் ஆனோம். இந்த புத்தாண்டிலும், இதே போல அடிப்படை பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லாமல் போனாலும், நம்மால் இது போன்ற முதலீடுகளை வெற்றி பெற செய்ய முடியுமா? அதில் வெற்றி காண்போமா?முதலீட்டில், வருங்காலத்தை பற்றிய ஆருடங்கள் பெரும்பாலும் பலிப்பதில்லை என்பதை மனதில் கொண்டு என் பதிவை தொடருகிறேன். சென்ற ஆண்டு துவக்கத்தில், பங்குகள் சார்ந்து உள்நாட்டு முதலீடுகளின் அபரிமித நகர்வு அமையும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மாறாக, பலரும் சற்று எச்சரிக்கையான அறிவுரைகளைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால், நடந்ததோ வரலாறு காணாத முதலீட்டு மாற்றமும், பங்குகளில் பணவரத்தும். இப்போது நிலைமை அதற்கு நேர் எதிர்மறை. எல்லோரும், 2018ல் எந்தெந்த பங்குகள் பன்மடங்கு உயரும் என்று ஆளுக்கொரு பத்து நிறுவன பெயர்களை எடுத்து நம்மை நோக்கி எறிகின்றனர். இதுவே நமக்கு சற்று சுதாரித்துக்கொள்ள ஓர் சிறந்த அறிகுறி என்றே தோன்றுகிறது.சந்தையில், அடுத்த ஆண்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று யாராலும் முன்கூட்டியே சொல்ல இயலாது. அதுவும், லாபத்தை அள்ளித்தந்த ஆண்டிற்கு பின் வரும் காலங்களை கடப்பதில் அதிக கவனம் அவசியம். கவனச் சிதறல்கள் நாம் எடுக்கும் முடிவுகளை பாதி��்து, நஷ்டத்தில் முடியும் அபாயம் அதிகம். ஆகவே, லாப ஆருடங்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு, சற்று நிதானித்துக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.சில ஆண்டுகள் பங்கு லாபத்தை அள்ளி தரும் காலகட்டங்கள்... சில ஆண்டுகள் தேக்கநிலை காலங்கள். பொருளாதாரத்தின் வேகம் சார்ந்து மட்டுமே இவை தொடர்வதும் மாறுவதும். ‘அடுத்த ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சி பெருக்கம் காணும்’ என்ற எதிர்பார்ப்பு, 2017ல் சந்தை பெருக உதவியது. இப்போது, அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டிய ஆண்டாகவே, 2018 துவங்கி உள்ளது. பொருளாதாரம் எங்கு போகிறது என்பதில் முழு கவனம் செலுத்துவோம். முதலீடுகளை நிதானமாக முடிவெடுத்து முன்நடத்துவோம். வாருங்கள் பயணிப்போம்; ஒரு வரலாறு காணாத பொருளாதார காலகட்டத்தில். Source: dinamalar
0 notes