#பெருமாள்
Explore tagged Tumblr posts
Text
திருப்பாற்கடல்
வைணவக் கட்டுரைகளின் சங்கமம்
1 note
·
View note
Text
PARIYERUM PERUMAL (2018) — dir. Mari Selvaraj
#பரியேறும் பெருமாள்#Pariyerum Perumal#mari selvaraj#kathir#anandhi#yogi babu#indian cinema#kollywood#tamil film#rewatch#caps#*
8 notes
·
View notes
Text
சிவ லிங்கம் நிறம் மாறும் கோயில்
சிவன் நிறம் மாறுதல்,
கருவறையில் உள்ள சிலையை சூரியனின் கதிர்கள் எவ்வாறு எப்பொழுதும் தொடுகின்றன, சிலையின் நிழல் நாள் முழுவதும் இருத்தல், இத்தகைய ஆச்சரியமிக்க கோயில்கள் பட்டியல் நீண்டது. இவற்றில் பல கோயில்கள் பற்றி எனது ஆங்கில வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
மயிலாடுதுறை அருகே ஒரு பழங்கால கோயில் உள்ளது, அங்கு சிவலிங்கம் ஒரு நாளைக்கு ஐந்து முறை அதன் வண்ணங்களை மாற்றுகிறது, இது கால பூஜையுடன் ஒத்துப்போகிறது.
மாயூரம் அருகே இத்தலம் வலங்கைமான்/பாபநாசம் அருகே அமைந்துள்ளது,
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்.
பஞ்ச வர்ணேஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படும் சிவபெருமானின் சுயம்பு மூர்த்தி பகலில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தன் வண்ணங்களை மாற்றிக் கொள்கிறது.
மற்றொரு தனித்துவமான அம்சம், கருவறையில் இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன.
சிவபெருமான் துறவி திருநாவுக்கரசர் இறைவனின் பாதங்களை தரிசனம் செய்த இடம் இது என்பதால் வைணவ நடைமுறையான 'சடாரி' யால் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுகின்றனர்.
மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர்
உற்சவர். கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்மன் / தாயார்: கல்யாணசுந்தரி
தல விருட்சம்: வில்வ
தீர்த்தம்: சப்தசாகரம்.
பழைய ஆண்டு : 1000-2000 ஆண்டுகள் பழமையானது
வரலாற்றுப் பெயர்: திருநல்லூர், நல்லூர்
மாவட்டம்: தஞ்சாவூர்.
தஞ்சாவூர்
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மார்கழி திருவாதிரை ஆகியவை கோயிலின் திருவிழாக்கள்.
அன்னை திருப்புரசுந்தரி தனி சன்னதியில் இருந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். காசி விஸ்வநாதர், அகஸ்தியர், கணநாதர் மற்றும் மூன்று சைவ ஞானிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருடன் நடனமாடும் தோரணையில்( 8 கைகளுடன்) நடராஜருக்கு சன்னதி உள்ளது.
முகவரி மற்றும் கோயில் நேரங்கள்.
ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) கோயில், திருநல்லூர்-614 208, வலங்கைமான் தாலுகா, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
அய்யாசாமி குருக்கள் திருநல்லூர்.094868 13059.
திருநல்லூர் கோயில் கடை வினோத் .094436 68306
கோயில் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நன்றி: தினமலர்
Ramanisblog
#நிறம் மாறும் சிவன் கோவில்#religion and spirituality#திரு நல்லூர்#கும்பகோணம் கோயில்கள்#சுவாமிமலை#சுந்தர பெருமாள் கோயில்#கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்#பஞ்சவர்நேஸ்வரர் கோயில்#சிவத்தலங்கள்
0 notes
Text
6. புள்ளும் சிலம்பின காண்..
#மார்கழியின்_மறை
பெருமாளுக்கு சங்கும் ஓர் ஆயுதம்! அவரது அடையாளம் ! நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்! இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.!
பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை. கண்ணனின் பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை படித்திருப்போம்! அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா? எனக் கேட்டு ஆரம்பிக்கிறார்.
அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்ற��� எண்ணுகிறேன். ஒரு விஷயத்தில் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஆண்டாள் முன்னோடி அவர்களுக்கு அவங்க கட்சித் தலைவர்களின் புகழ் ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் புகழ்!
அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது! பறவைகள் சிலம்ப, சங்கதிரும் ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா, உங்களுக்கு தெரியுமா? நம் கண்ணன் பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என அவர் காலத்து மாண்பு மிகு, இதய தெய்வம் போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...
மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம்! அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார்! வைணவர்கள் அதிகாலையில் அரி என உச்சரிப்பது வாழ்வில் நலம் விளைவிக்கும் என்பார்கள்.
ஆனால் அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார் கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!
மார்கழி 6ம் நாள் பாடல்...
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
1 note
·
View note
Text
சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒ...
youtube
0 notes
Text
இராமேஸ்வரம் கோவிலில் அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்...!
ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல், பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி
பிடிக்கப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்
கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்.
மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.
இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்னவென்றால், பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக இருந்த
மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது.
இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.
இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராரப்தம் இருந்தால்தான் தரிசிக்க முடியும்.
மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம்
உப்புக் கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.
பல வருடங்களாக அந்த உப்புக் கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக் கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயமாகும்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு சம்பவம் கூறப்படுகிறது.
ஒருமுறை சிலர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம், கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கேட்டார்.
அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத "சேதுமாதவர்" சன்னதி ஒன்று உள்ளது.
காலில் சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதியில் உள்ளார்.
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம்
இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.
அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை ச���றையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.
பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.
அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து, சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக
அருளுகிறார்.
அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
கடுமையான பிதுர் தோஷம் உள்ளவர்கள், இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால், கடுமையான பிதுர் தோஷம் நீங்கும் என்பது தேவ ரகசியமாகும்.
ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது.
அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார்.
பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி
தோஷம் (கொலை செய்த பாவம்) வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம், உப்புக் கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசித்து பயன் பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
பித்ரு பூஜைகளை முறைப்படி சிறப்பாக செய்ய தொடர்பு கொள்ள 8939466099.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் ��க்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_13-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
Text
மதுரையில் இந்தப் பெருமழைக்கும் சொட்டு தண்ணீர் கூட வராத கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்! | Madurai Heavy Rain: even a drop of water came from Kudalazhagar Perumal Temple Theppakulam
மதுரை: பெருமழைக்கு கடந்த ஒரு வாரமாக மதுரை மாநரின் குடியிருப்புகளையும், சாலைகளையும் மழைத் தண்ணீர் சூழ்ந்த நிலையில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால், அங்கு கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்க���ம் அவலம் 70 ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த சில நாட்களாக மதுரை நகர் பகுதியில் பெய்த மழையால் செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஊமச்சிக்குளம்…
0 notes
Video
youtube
Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக...
@aazhkadalvedan #perumaltemple #aanmeegam #story #UlagalanthaPerumal #Thirukovilur #Ulagalanthaperumalthirukovilur #Poonkovalnachiyar #perumaltemple #perumalkoil #perumalkovil #panchakrishnaranya #divyadesam #HinduTemples #Hinduism #PlacetoWorship #temple #thiruvizha #tamil #story #puranam #aanmeegam #devotional Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக்கிரம சுவாமி) திருக்கோவிலூர் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ் அடியார்களுக்கு சேவை சாதிக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டைச் சேர்ந்த 43வது திவ்ய தேசமாகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர். thirukovilur ulagalantha perumal temple Ulagalantha Perumal Temple History in Tamil உலகளந்த பெருமாள் கோவில் உருவான வரலாறு மகாபலி சக்ரவர்த்தி அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று எண்ணினர். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார். அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோவில் கருவறையில் மூலவராக வடிக்கப்பெற்றிருக்கிறது. திருக்கோவிலூர் கோவில் அமைப்பு மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார். இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதனால் ஏற்படும் நற்பலன்கள் நல்ல பதவிகளை அடைய விரும்புவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும். Other Deities in Ulagalantha Perumal Temple இத்திருத்தலத்தில் சேவைசாதிக்கும் இதர தெய்வங்களின் விவரங்கள்: இந்த திருக்கோவிலில் ஶ்ரீவேணுகோபால பெருமாள், தாயார் லட்சுமி, ஶ்ரீநாராயணன், வீர ஆஞ்சநேயர், ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மர், ஶ்ரீராமர், ஆண்டாள் நாச்சியார், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகியவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாமன மூர்த்தியும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார். Tirukoilur Ulagalantha Perumal Temple Timings தரிசன நேரம்: உலகளந்த பெருமாள் கோவில் காலை 06.30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். Thirukovilur Series Kabilar Kundru :https://youtu.be/hUeFKDeTH50 Map location : https://maps.app.goo.gl/E9cHCssPF1vQ5i9F8 Please do Like, Comment and Subscribe to our channel Facebook Link: https://www.facebook.com/aazh.kadalvedab/ Twitter Link : https://twitter.com/aazhkadalvedan Instagram Link: https://www.instagram.com/aazhkadalvedan/ Please support our other channel THE ROYAL ROUND YOUTUBE CHANNEL LINK - food Review, Hotel stay & travel guide https://youtu.be/CumtrQzxyY4
0 notes
Text
THURAIYUR PERUMAL MALAI ADIVARAM THEN TIRUPPATHI PRASANNA VENKADAJALAPATHY TIRUKOVIL ELEVENTH DAY BRAMMOTSAVAM AALUM PALLAKKU - TAMILNADU - INDIA - 25 MAY 2024 - துறையூர் பெருமாள் மலை அடிவாரம் தென்திருப்பதி பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் பதினோரோம் நாள் பிரம்மோற்சவம் ஆளும்பல்லக்கு - தமிழ்நாடு - இந்தியா - 25 மே 2024.
0 notes
Text
இறப்பதற்கு முன் சிவாஜி அனுபவித்த கொடுமைகள்.. கதறி அழுத பிரபல நடிகை !
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
0 notes
Text
#மெராமெக் (பார்ட் - 3)
70 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்தப் பாறை பல வண்ண வண்ண விளக்குகளால் நிறம் மாறிக் கொண்டே இருந்தது முதலில் இதை ஒரு லைட் ஷோ என்று தான் நினைத்தோம், சட்டென அங்கே திரைப்படம் ஒளிபரப்பானது! ஆம் அந்தப் பாறைதான் திரையே.! மெராமெக் குகையின் பெருமைகளைப் பற்றி 10 நிமிடப் படம்!
இறுதியில் அமெரிக்க தேசியக் கொடியசைய பார்வையாளர்களின் கரவொலிக்க நிறைந்தது. உடல் முழுவதும் சிலிர்ப்பு மனம் முழுவதும் பரவசம் என அந்தப் பயணம் நிறைவடைந்தது. இந்த குகைப்பயணம் ஆரம்பிக்கும் பொழுதே எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக் கூடாது என அவர்களின் நிபந்தனைகளை சொல்லிவிடுகிறார்கள்.
எதையும் தொட��்கூடாது ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும்! கைடு முன்னால் நடக்க நாம் பின்னால் வரவேண்டும் வழி மாறிவிடக் கூடாது பத்திரமாக வழுக்காமல் நடக்கவேண்டும் இப்படி! இதே குகையில் 1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரபல தொலைக் காட்சித் தொடரான நம்ம ஊரு சவால் நிகழ்ச்சி போன்ற People are funny என்னும் நிகழ்ச்சியில் இந்த குகையின் இரண்டாவது..
நிலையில் கணவன் மனைவி இருவரும் தனியாக 5 நாட்கள் தங்கவேண்டும் என்பது சவால். அந்த சவாலில் ஒரு ஜோடியினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்களாம். அந்த இடம் இப்போது ஹனிமூன் ரூம் என அழைக்கப்படுகிறது. குகையில் ஜெஸ்ஸி ஜேம்ஸ் பயன்படுத்திய பாத்திரங்கள் துப்பாக்கிகள் போன்ற பொருட்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா முழுவதும்..
இதுபோல மொத்தம் 18 குகைகள் இருக்கிறது. அந்தக் குகைகளைப் பற்றி இலவச கையேடுகள் அங்கு இருந்தன. இருப்பினும் மெராமெக் குகை தனித்துவம் வாய்ந்தது! எத்தனை பெருமாள் கோவில் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையானுக்கு நிகர் இல்லை அல்லவா! இதேபோல இந்தியாவில் மேகாலயாவிலும் விசாகப்பட்டினத்திலும் நீண்ட குகைகள் இருக்கின்றனவாம். இந்த விஷயம் இங்கு போய்..
வந்த பின்பு தான் எனக்குத் தெரியும். இதுபோல வசதிகள் செய்து அதை சுற்றுலா தலம் ஆக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். ஆனால் நம்ம ஆட்கள் குகையின் சுவர்களில் விஜி ஐலவ் யூ.. சுரேஷ் & மாலினி என ஹாட்டின் குறி வரைவார்களே என்பது நினைவில் வர அவ்வெண்ணத்தை கைவிட்டேன். மெராமெக் குகையிலிருந்து வெளியே வரும் இடத்தில் மெராமெக் மெமரி..
கிஃப்ட் ஷாப் உள்ளது. அந்தக் கடையில் மெராமெக் குகையை நினைவு படுத்தும் பலவித டி சர்ட்டுகள், தொப்பிகள், துப்பாக்கிகள், குகைப் பாறை படிமத்தின் மினியேச்சர்கள் விற்கிறார்கள். அதன் விலைகளைக் கேட்டோம்.. நாமும் ஜெஸ்ஸி ஜேம்ஸ் போல கொள்ளையடித்தால் தான் அதையெல்லாம் வாங்க முடியும் எனத் தெரிய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
அமெரிக்காவில் மிசெளரி போக வாய்ப்புள்ளவர்களுக்கு மெராமெக் குகை அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம்! நம்ம இமான் அண்ணாச்சி பாணியில் சொன்னால்.. ஏ.. மிஸ் பண்ணிராதிக…அப்புறம் வருத்தப்படுவீக..!
நிறைந்தது.
0 notes
Text
சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒ...
0 notes
Text
இராமேஸ்வரம் கோவிலில் அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்...!
ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல், பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி
பிடிக்கப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்
கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்.
மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.
இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்னவென்றால், பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக இருந்த
மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது.
இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.
இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராரப்தம் இருந்தால்தான் தரிசிக்க முடியும்.
மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம்
உப்புக் கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.
பல வருடங்களாக அந்த உப்புக் கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக் கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயமாகும்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு சம்பவம் கூறப்படுகிறது.
ஒருமுறை சிலர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம், கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கேட்டார்.
அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத "சேதுமாதவர்" சன்னதி ஒன்று உள்ளது.
காலில் சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதியில் உள்ளார்.
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம்
இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.
அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.
பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.
அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து, சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக
அருளுகிறார்.
அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
கடுமையான பிதுர் தோஷம் உள்ளவர்கள், இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால், கடுமையான பிதுர் தோஷம் நீங்கும் என்பது தேவ ரகசியமாகும்.
ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது.
அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார்.
பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி
தோஷம் (கொலை செய்த பாவம்) வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம், உப்புக் கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசித்து பயன் பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
பித்ரு பூஜைகளை முறைப்படி சிறப்பாக செய்ய தொடர்பு கொள்ள 8939466099.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_13-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
Text
கொடைக்கானலில் நெரிசலை தவிர்க்க விரைவில் மாற்றுப்பாதை திட்டம்: அமைச்சர் தகவல் | Kodaikanal detour plan soon to avoid congestion
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி, கோவில்பட்டி, புலியூர் வழிய��க பெருமாள் மலை அருகே பழநி சாலையை சென்றடையும் வகையில் இந்த சாலை அமையவுள்ளது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானலில் ஏற்படும்…
0 notes
Text
🙏ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ரதசப்தமி மற்றும் பெருமாள் புறப்பாட...
youtube
0 notes