#பள்ளி மாணவிகள் போராட்டம்
Explore tagged Tumblr posts
Text
ஆசிரியர்கள் கண்டிப்புக்கு எதிராக செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவிகள் போராட்டம் | Sengottai Govt School Girl students protest
தென்காசி: செங்கோட்டையில் ஆசிரியர்கள் கண்டிப்பை எதிர்த்து செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட் பாட்டிலை வகுப்பறைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, சென்ட் பாட்டில் கீழே விழுந்து…
0 notes
Text
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; குன்னூரில் பள்ளி மாணவிகள் சாலை மறியல்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; குன்னூரில் பள்ளி மாணவிகள் சாலை மறியல்
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதன்படி ம���தல்கட்டமாக குன்னூர் நகர பகுதியில் கேஸ் பஜார், மவுண்ட் ரோடு ஆகிய இடங்களிலுள்ள 2 கடை மூடப்பட்டது. இதனையடுத்து டி.டி.கே சாலையிலுள்ள தனியார் பாரும் மூடப்பட்டது. இந்நிலையில் குன்னூர் வி.பி தெருவில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை திடீரென மவுண்ட்ரோடு சாலையிலுள்ள யோகேஸ் கார்னர்…
View On WordPress
0 notes
Text
கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடின- பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம்
கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடின- பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம்
��ீலகிரி மாவட்டத்தில் நேற்று 76 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டனர். கோவை: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று பெரும்பாலான அரசு பேருந்துகள்…
View On WordPress
0 notes
Photo
கரூர் அருகே முற்றுகை போராட்டம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓட்டை, உடைசல் லேப்டாப்கள் கடவூர்: பழைய லேப்டாப்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள கொசூர் செங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2016-17ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 படித்த 154 மாணவ, மாணவிகளுக்கு கடந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த விழாவில் அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டது. இதை வீட்டிற்கு கொண்டு சென்று பிரித்து பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த லேப்டாப்கள் அனைத்தும் கீறல் விழுந்தும், சேதமடைந்தும் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.லேப்டாப்களை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `மற்ற பள்ளிகளில் வழங்கிய லேப்டாப்பில் கேமரா, ஜிபிஎஸ் உள்ளிட்டவை ��ருந்தது. எங்களுக்கு வழங்கியவை அனைத்தும் சேதமடைந்த பழையவையாக இருக்கிறது’ என்றனர். போராட்டம் குறித்து அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று வேறு லேப்டாப்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Source: Dinakaran
1 note
·
View note
Text
அசாதாரண சூழ்நிலை - கர்நாடகத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை |
அசாதாரண சூழ்நிலை – கர்நாடகத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை |
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கல��த்தனர். பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை…
View On WordPress
0 notes
Text
பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கைக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டம்: அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் | Kovai: Govt school teacher suspended due on sexual abuse charges
பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கைக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டம்: அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் | Kovai: Govt school teacher suspended due on sexual abuse charges
கோவை: கோவையில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் இன்று (டிச.24) போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை வெள்ளலூரில், பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி…
View On WordPress
0 notes
Photo
சேத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் : மாணவர்கள் போராட்டம் விருதுநகர் : ராஜபாளையம் சேத்தூரில் மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தி வருவதால், தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் மாணவிகளை தாக்கிய மற்ற மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran
0 notes
Photo
47 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர் சரக்கு அடிப்பதில் தமிழ்நாடு நம்பர் 1: ஐகோர்ட்டில் பகீர் தகவல் மதுரை: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை 46.7 சதவீதமாக அதிகரித்துள்ளது, மாணவ, மாணவிகளும் குடிக்கின்றனர். எனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு: தமிழகத்தில் கடந்தாண்டில் ரூ.31,244 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 36 சதவீதமாகவும், தமிழகத்தில் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்துவோர் எண்ணிக்கை விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 ம��ி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகள், உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விலைக்கு மது விற்றால் புகார் அளிக்கவும் உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும் உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மதுக்கடைகளின் நேரத்தை மாற்ற ���த்தரவிட வேண்டுமென கோரப்பட்டது.அப்போது நீதிபதிகள், ‘24 மணிநேரமும் மது கிடைக்கும்போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றுவதால் என்ன பயன்’ என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகள், அரசாணைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை நீதிபதிகள் வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வருவாய்க்கு டாஸ்மாக்கா?நீதிபதிகள் வேதனைடாஸ்மாக் மது விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: ‘‘மது விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்தாதது ஏன்? டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? பல்வேறு பிரச்னைகளுக்கும் மதுவே காரணம். சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும். வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை நம்பக்கூடாது. வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. கிராம சபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகளை வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காக்க வேண்டும்,’’ எனக் கூறி, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். Source: Dinakaran
0 notes
Photo
செங்கத்தில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: கல்வி அலுவலர் காலில் விழுந்து பள்ளி மாணவிகள் கதறல் செங்கம்: செங்கத்தில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள், முதன்மைக் கல்வி அலுவலர் காலில் விழுந்து கதறினர்.தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தர், அசோக்குமார், கருணாகரன், கோபி ஆகியோரும் கலந்து கொண்டனர். டிச. 30க்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீத��� நடடிவக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்நிலையில், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1ம் தேதி செயல்முறை தேர்வு நடந்தது. அப்போது தர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் வரவில்லை. அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், செயல்முறை தேர்வை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை மீரா மற்றும் போலீசார் சமரசத்தை ஏற்று 2 மணி நேரத்துக்குப்பின் மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். தொடர்ந்து 2ம் தேதி செய்முறை தேர்வுக்கு மாணவிகள் வந்தனர். அப்போது, புதிய ஆசிரியை வரவே மாணவிகள் மதியம் 12 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமையாசிரியை மீரா, செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை மாணவிகள் ஏற்காததால், முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார் போன் மூலம் மாணவிகளிடம் பேசினார். அதிலும் சமரசம் ஏற்படவில்லை. திடீரென ஒரு மாணவி மயங்கி விழுந்தார். கல்வி அலுவலர் அறிவுரைப்படி மாற்றப்பட்ட ஆசிரியர்கள் 4 பேரையும் அங்கு வரவழைத்தனர். அவர்கள் மாணவிகளிடம், போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மிரட்டியும் மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேரில் வந்தார். அப்போது மாணவிகள், அவரது காலில் விழுந்து கதறி அழுது, 4 ஆசிரியர்களையும் இதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றனர். அவர், ‘யாராவது தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களா, அரசு உத்தரவுப்படிதான் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், அரசுக்கு அனுப்புகிறோம், போராட்டத்தை கைவிட்டு தேர்வுக்கு செல்லுங்கள்’’ என்றார். மேலும், யாருக்கும் டிசி வழங்கக்கூடாது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாணவிகள் ஆசிரியர்களை மாற்றம் செய்யக்கூடாது என மனு எழுதி கொடுத்து விட்டு ேதர்வுக்கு சென்றனர். திருப்பூரில் ஆசிரியரை தடுத்து மாணவர்கள் கண்ணீர்: திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரியராக இருந்தவர் சுரேஷ் (34). ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற இவரை, அருகில் உள்ள பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கான ஆணை கடந்த 1ம் தேதி, ஆசிரியர் சுரேசுக்கு கிடைத்தது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு சுரேஷ் நேற்று, வெள்ளியங்காடு பள்ளிக்கு நேற்று காலை வந்தார். இந்த தகவல், மாணவர்களுக்கு தெரியவே, அவரை சூழ்ந்து கொண்டு, வேறு பள்ளிக்கு செல்ல விடமாட்டோம் எனக்கூறிக் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ஆசிரியர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் சமா��ானம் அடையவில்லை. இந்நிலையில், அங்கு வந்த மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். மேலும் பல பள்ளிகளில் போராட்டம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கரிசல்காளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆதிநாராயணன் கணித ஆசிரியர் ஆறுமுகம், இடைநிலை ஆசிரியர் வாசுவேதன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், காரையூர் ஊராட்சி, சோழம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் மாற்றப்பட்டதை எதிர்த்து பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் மணிகண்டன், 10ம் வகுப்பு தமிழாசிரியர் ராஜரத்தினம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இதேபோல தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் ஆசிரியர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடந்தது. Source: Dinakaran
0 notes
Text
வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts
திருவள்ளூர்: மதுக்கடையை மூடக்கோரி அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், பெண்கள் உட்பட எல்லோரும் பலவித போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தற்போது திருவள்ளூர் பள்ளி மாணவிகளும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோஷமிட்டு கேட்டு பெறும்…
View On WordPress
0 notes
Text
திருவாரூர், அறந்தாங்கியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மறியல்
தஞ்சை: பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மாணவர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைவதால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நேற்று முதல் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி, திருச்சி ஈவெரா அரசினர் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 500 பேர்…
View On WordPress
0 notes
Photo
சேலத்தில் 4-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை – மற்றொரு மாணவி உயிருக்கு போராட்டம் சேலத்தில் இன்று விடுதியின் 4-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடன் சேர்ந்து குதித்த மற்றொரு மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம்: சேலம் சங்கர் நகரை அடுத்த ராம்நகரைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சக்திவேல். இவரது மகள் கவிஸ்ரீ. செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார்கோவுல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெயராணி. மாணவிகள் கவிஸ்ரீ, ஜெயராணி ஆகியோர் சேலம் அரிசிப்பாளையத்தில் சென்மேரீஸ் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தனர். நேற்று 2 மாணவிகளும் பள்ளி வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தனர். இதை ஆசிரியை கண்டித்தார். இதனால் 2 மாணவிகளும் பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பள்ளிக்கு திரும்பி வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் பள்ளிக்கு வந்து எங்கள் குழந்தைகளை காணவில்லை என்று தெரிவித்தனர். இதன்பிறகு பள்ளப்பட்டி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசாரும் மாணவிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 2 மாணவிகளும் சேலம் டவுன் ராஜகணபதி கோவில் அருகே உள்ள அப்சரா விடுதியில் 4-வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் மாணவி ஜெயராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய கவிஸ்ரீயை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் சம்பவம் நடந்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று மாணவிகளின் பெற்றோர் ம��்றும் உறவினர்களி��ம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் பள்ளி முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவி கவிஸ்ரீயின் தாயார் விஜி கூறியதாவது:- என்னுடைய மகளும், ஜெயராணியும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். இதற்கு முன்பு இருவரும் ஒரே பெஞ்சில் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதாக எங்களி டம் ஆசிரியை தகவல் தெரிவித்தார். நாங்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையை சந்தித்தோம். பின்னர் 2 மாணவிகளையும் வேறு வேறு பெஞ்சில் அமர வைத்தனர். நேற்று 2 பேரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறி அவர்களை ஆசிரியை கண்டித்திருக்கிறார். பெற்றோரை அழைத்து வருமாறும் கூறி உள்ளார். இதனால் 2 மாணவிகளும் பள்ளியை விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற விவரம் எங்களுக்கு தெரியாது. மாலையில் வீட்டிற்கு வராததால் நேரில் சென்று பள்ளிக்கு சென்று விசாரித்த போதுதான் அவர்கள் 2 பேரும் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது. இன்று காலை பள்ளிக்கு சென்று கேட்டபோது அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் 2 மாணவிகளும் 4-வது மாடியில் இருந்து குதித்ததாக போலீசார் மூலம் தகவல் கிடைத்தது. நேரில் சென்று பார்த்த போது என் மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் விவரமும் இன்னொரு மாணவி இறந்துவிட்டதும் எனக்கு தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார். மாடியில் இருந்து குதித்து இறந்த மாணவி ஜெயராணிக்கு தாயார் கிடையாது. அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் அவரை அவரது சித்தி செல்வராணி வளர்த்து வந்தார். ஜெயராணி இறந்த தகவலை அறிந்த அவரது தந்தை சக்திவேல், சித்தி செல்வராணி மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மாணவிகள் குறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது:- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவி கவிஸ்ரீ வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் மற்ற மாணவிகளை வெளியில் அழைத்து செல்வார். இதை ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். மாணவியின் தந்தையை அழைத்தும் இது குறித்து கூறினோம். அதன்பிறகு மற்ற மாணவிகளுடன் பழகுவதை நிறுத்திய கவிஸ்ரீ ஜெயராணியுடன் மட்டும் நெருங்கி பழகினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராணியை கவிஸ்ரீ ஏற்காடு அழைத்து சென்றுள்ளார். நேற்று அவரிடம் கவிஸ்ரீ பேசிக் கொண்டிருந்தார். எனவே மீண்டும் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதால் அவர்கள் 2 பேரும் பள்ளியை விட்டு சென்று விட்டனர். இன்று காலை ஜெயராணி இறந்த தகவலும் கவிஸ்ரீ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவலும் எங்களுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார். மாணவி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். முன்னதாக இன்று காலை மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அநத சமயத்தில் மாணவி இறந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயராணியின் உறவினர்கள் நேரில் சென்று இறந்தது ஜெயராணி என்பதை உறுதிப்படுத்தினர். மாணவிகள் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு 2 பேரும் சாமி கும்பிட்டு விட்டு கை��ோர்த்து நின்று ஒரே நேரத்தில் 2 பேரும் மாடியில் இருந்து குதித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். சீருடையில் திரிந்த அவர்களிடம் அந்த பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 35) என்ற பெண் விசாரித்தார். அப்போது பெற்றோர் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றிருப்பதாகவும் அவர்கள் வரும் வரை காத்திருப்பதாகவும் கூறி உள்ளனர். ��ற்கனவே பள்ளியில் ஆசிரியை திட்டியதாலும் வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என்பதாலும், பள்ளியை விட்டு வெளியேறி சுற்றித் திரிந்ததாலும் மன உளைச்சலில் இருந்த அவர்கள் திடீரென்று தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் விடுதியின் படிக்கட்டு திறந்து இருந்ததால் அந்த படிக்கட்டு வழியாக ஏறி மாடியில் இருந்து குதித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் தற்கொலையை தடுக்க அவர்களுக்கு மனநல மருத்துவர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source: Maalaimalar
0 notes
Text
நாகையில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்
நாகை: நாகை மாவட்டம் தர்மகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் பழமையான கட்டடத்தை இடித்து அகற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய வகுப்பறைகள் கட்டும் வரை தற்காலிக இடவசதி கோரி பெற்றோருடன் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். Source: Dinakaran
View On WordPress
0 notes
Text
தாம்பரம் அருகே குடியிருப்புகளில் மழை நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
தாம்பரத்தை அடுத்த திருவஞ்ச��ரியில் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் அருகே திருவஞ்சேரி ஊராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சியில் சீரடி சாய் நகர், ஈஎஸ்ஐ, வளர் நகர், காமராஜ் நகர் என பல பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சுற்றி கடந்த ஒரு மாதமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள்,…
View On WordPress
0 notes
Photo
பண்ருட்டி-சென்னை சாலையில் மந்த நிலையில் நடந்து வரும் மேம்பால பணி : விரைந்து முடிக்க வலியுறுத்தல் பண்ருட்டி: பண்ருட்டிசென்னை சாலையில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பண்ருட்டி-சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசு சார்பில் சுமார் ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் இப்பணி மந்தமாக நடந்து வருகிறது. மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மேம்பால பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஒரு சில மாதங்கள் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் வழக்கம்போல் மந்தமாகவே நடந்து வருகிறது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல்வேறு வியாபார கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பால பணிகளை விரைந்து முடிக்க கோரி பாலத்தின் அருகே போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த வியாபார சங்கத்தினரிடம் சார் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என கூறி சென்றார். ஆனால் பாலப் பணிகள் மட்டும் நடைபெறவில்லை. கடந்த மாதம் பெய்த மழையால் பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. ஒருசில நாட்களில் சோப்பு நுரைகள் சாலை பகுதியில் ஓடியது. கடந்த ஒரு வாரகாலமாக மழை இல்லாததால், பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வந்தது. பாலத்தின் மையப்பகுதியில் சிமெண்ட் கலவைகள் போடப்பட்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. மிக நீண்ட காலமாக நடந்து வரும் இந்த பாலப்பணிகள் முடிவடையாத காரணத்தால் விழுப்புரம், சென்னை, திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் எனில் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் எரிபொருள் விரயமாகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர், பாலப் பணிகளை ஆய்வு செய்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் பாலத்தை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், வணிகர்கள், மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். Source: Dinakaran
0 notes