#தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும்
Explore tagged Tumblr posts
universaltamilnews · 5 years ago
Text
சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித்- அதிர்ச்சியளித்த மருத்துவர்கள்
சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித்- அதிர்ச்சியளித்த மருத்துவர்கள் #Trichy #prayforsujith #sujith #மீட்கும்பணி #ut #utnews #tamilnews #utindiannews #universaltamil
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3-வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
திருசுச்சியில் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 3-வது நாளாக தொடர்கிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தற்போதுவரை இங்கேயே…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து கோர விபத்து; பழங்குடியினர் 22 பேர் பரிதாப பலி: இறந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பழங்குடியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்களில் சாலை போக்குவரத்து சரியில்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் தினமும் படகில் சென்றுதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் போலாவரம் பகுதியில் இருந்து ‘லட்சுமி வெங்கடேஸ்வரா சர்வீஸ்’ எனும் தனியார் படகில் கொண்டமொகுலு எனும் பகுதியில் உள்ள சந்தைக்கு 52 பேர் சென்றனர். அப்போது, அந்த படகில் சிமெண்ட் மூட்டைகள், பைக்குகளும் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் படகு ஓட்டுநர்கள் 5 பேர் இருந்தனர். ஆதலால், படகில் மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், திடீரென அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததது. இதனால், படகில் இருந்த கதவுகள் அடைக்கப்பட்டன. மேல் தளத்தில் சுமார் 15 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதில் படகு நிலை தடுமாறி மண்டூர் பகுதியில் கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, கதவு அடைக்கப்பட்டிருந்ததால், அனைவரும் படகில் சிக்கினர். படகின் மேல் தளத்தில் இருந்த 15 பேரும் குதித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். அப்பகுதியில் செல்போன் கோபுரம் வேலை செய்யாத காரணத்தால், இந்த தகவல் அன்றைய தினம் இரவுதான் தெரியவந்தது. அதன் பின்னர், போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், தேசிய மீட்புக் குழுவினரும் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு, படகு கவிழ்ந்த இடத்தில் தேடத் தொடங்கினர். மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்திகேய மிஸ்ரா, எஸ்.பி விஷால் குண்ணி ஆகியோர் தலைமையில் 22 மீட்பு படகுகளில் பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று அதிகாலை முதல் மூழ்கிய படகை தேடினர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டார். படகு விபத்து நிகழ்ந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கிரேன்கள் மூலம் கயிற்றின் உதவியோடு 60 அடி ஆழ���்தில் இருந்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகில் 22 பேரின் சடலங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் சடலங்களை மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால்,மேலும் 20 பேர் காணாமல் போயிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் முறையிட்டதால், தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருக��றது. இதனிடையே, படகு உரிமையாளர் காஜா மொய்தீன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலும், பெண்கள், சிறுவர்கள் ஆவர். ரூ. 10 லட்சம் நிதி உதவி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வேலை வாய்ப்பு, இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். உடனடியாக ரூ. 1 லட்சம் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். Source: The Hindu
0 notes
tamilsnow · 8 years ago
Photo
Tumblr media
ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலைய வீரர்கள்; தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே திட, திரவக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலையங்களின் வீரர்களும், 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் சிப்காட் பேஸ்-3 தொழிற்பேட்டை உள்ளது. இங்கு திட, திரவக் கழிவுகள் மறுசுழற்சி மேலாண்மை, மாற்று எரிபொருள் தயாரிப்புத் தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சிப்காட், அதன் சுற்று வட்டாரங்களில் இயங்கி வரும் ரசாயனம், பெயிண்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான நச்சுக் கழிவுகளைக் கொண்டு வந்து மறுசுழற்சி, அழித்தல், மாற்று எரிபொருள் தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டிருந்த திட, திரவ நச்சுக் கழிவுகள் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி, தொழிற்சாலை முழுவதும் எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள், சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரிகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தொழிற்சாலையின் உள்ளே இருந்த ரசாயன பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. காட்பாடி, பெல், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அழைக்கப்பட்டனர். உதவி கமாண்டண்ட் வினோத் பி ஜோசப் தலைமையில் 45 பேர் ராணிப்பேட்டைக்கு தனிப் பேருந்தில் ��ிரைந்து சென்றனர். தங்களுடன் ரசாயனத் தீயை அணைக்கும் கருவிகளையும், சாதனங்களையும் எடுத்துச் சென்றனர். இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு நாள்கள் ஆகும் என தீயணைப்புப் படை வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்த பெரும் தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. மேலும் நச்சுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் ரசாயன புகையால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், கோட்டாட்சியர் ப.முருகேசன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சுவாசக் கோளாறு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 காவலாளிகள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இந்தத் தொழிற்சாலைக்குள் பெயிண்ட், பழைய ஆயில், எளிதில் தீப்பற்றக்கூடிய திட மற்றும் திரவ நச்சுக் கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலையில் அதிகாலை நேரத்தில் மின் கசிவு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுக் கழிவுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தொழிற்சாலை வளாகம் முழுவதும் நவீன தீ அணைப்புக் கருவிகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே தீயை அணைக்க அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால், தொழிற்சாலை முழுவதும் தீயில் நாசமாகியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
0 notes