Tumgik
#ஜெகன்னாதர்
dinavaasal · 2 years
Text
0 notes
venkatesharumugam · 4 years
Text
“போஸ்ட் செய்யப்படாத ஒரு தேசபக்தனின் கடிதம்”
நமஸ்தே ஜி,
நீங்க நலமா இருப்பிங்கன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும்.! ஆனா நாங்களும் நல்லாவே இருக்கோம்னு சொல்லத்தான் இந்தக் கடிதமே! உங்க ஆட்சிமீது யாராச்சும் நாக்கு மேல பல்லைப்போட்டு குறை சொல்ல முடியுமா? இந்தப்பிரச்சனை எல்லாத்துக்கும் 60வருஷம் இந்தியாவையும் 50வருஷம் தமிழகத்தையும் ஆண்ட இரண்டு ஊழல் சக்திகளே காரணம்,
அப்படின்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் ஜி! அவங்களை எதிர்த்து நீங்க ஒத்த ஆளா 6 வருஷமா நின்னு போராடுவதை பார்க்க பெருமையா இருக்குஜி! இந்த கொரோனா மட்டும் வரலைன்னா சித்திரை மூணாம் தேதியே இந்தியப் பொருளாதாரம் உசந்து.. ஆடி போய் ஆவணியில் நம்ம நாடு டாப்புக்கு வந்திருக்கும்! ஆனா இந்த சப்பமூக்கன் சீனாவால,
அது நடக்கலை! நம்ம நாடு மட்டுமில்லாம உலகமே திகைச்சு நிக்கும் போது.. நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம இந்தியா நாடே வியக்கும்படி பல பொருளாதார திட்டங்களை அறிவிச்சு, 6வருசமாக நீங்க சிறுவாடு சேர்த்து வச்ச காசை வீசியெறிஞ்சப்போ கதறி அழுதுட்டோம்ஜி! நீங்க நாட்டுக்காக அறிவிச்சிங்களே அந்தப்பணம்..
அந்த 20இலட்சம் கோடிகளை எண்ணி முடிச்சிட்டிங்களா ஜி? அப்புறம் இந்த சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு 3 இலட்சம் கோடி வங்கிக் கடன்கள் எல்லாம் இந்நேரம் கொடுத்து இருப்பிங்களே! வீட்டு வாசலில் ஓடும் பாலாற்றில் பாலை எடுத்து காய்ச்சி குடிக்கிறோம் என்ன இந்தப்பக்கமா ஓடும் தேனாற்றில் தான் கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்கு.
அதை மட்டும் சரி செய்யவும்! உங்க கொண்டையை மறைக்க என எதிரிகள் சொல்லிய 1கிலோ கொண்டைக்கடலையை 2மாதமாக நாங்க வைத்து சாப்பிட்டு வருகிறோம்! இன்னும் 3 மாசத்துக்கு அதுவே போதும்! 1கிலோ கொ.கடலை எப்படி 5 மாசத்துக்கு வருமுன்னு பெரிய ‘பப்பு’ மாதிரி கேப்பாங்க அவங்களுக்கு ஒண்ணும் அவ்வளவா வெவரம் பத்தாது.!
டெய்லி ஆளுக்கு ஒரே ஒரு கடலையை மட்டும் சாப்பிட்டா அது 5மாசம் வருமுன்னு அவங்களுக்குத் தெரியாது.! அப்புறம் எங்க வூட்ல இருக்குற சீனா பொருட்களை எல்லாம் உடைச்சு எறிஞ்சிட்டோம்ஜி! சீனா மேல இருக்க கடுப்பை விட கரண்ட்பில் அதிகம் வந்த கடுப்புல தான் உடைச்சோம் ஆனா உங்க ராசதந்திரம் இப்பத்தான் தெரியுது.
வீட்டில் இதெல்லாம் இருந்தாதானே கரண்ட்பில்லு அதிகமாகும் உடைச்சிட்டா வராதுன்னு நம்ம ஆளுங்க போட்ட திட்டம் சூப்பர்ஜி! ஆனா இப்போ உங்களுக்காக உடைச்சதால் வீட்ல டிவி இல்ல! பூரி ஜெகன்னாதர் தேரோட்டம் பார்க்க ஆசையா இருக்கு, ஆனா டிவி, மொபைல் எதுவும் இல்லாததால் தேரோட்டத்தை.,
எப்படி பார்க்குறதுன்னு தெரியலை! பரவாயில்லை நீங்க நம்ம எல்லையை காத்து நிக்குற சாமி உங்களை தொந்தரவு பண்ணுவோமா? அப்புறம் இங்க ஊரடங்கு எல்லாம் சிறப்பா போய்கிட்டு இருக்கு! 2020 இல் நாம வல்லரசாக ஒரே வழி கொரோனாவுக்கு நாம மருந்து கண்டுபிடிக்கிறது தான்! அதுக்கு தான் நீங்களும் பாபாஜியும் உழைக்கிறிங்கன்னு தெரியும்.
நாங்க எல்லாரும் இங்கு சுகம்! எய்ம்ஸ் எல்லாம் அப்புறம் கட்டிக்கலாம்ஜி! முதலில் சீக்கிரம் நம்ம ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைக்கவும்! நாங்க எல்லாம் பொழைச்சி கிடந்தா அதில் வந்து கலந்துக்குறோம். அப்புறம் வேற ஒண்ணுமில்லிங்க ஜி ! பாரத் மாதா கீ ஜே! கரெக்டா சொல்லிட்டமா! எல்லாம் உங்க கைராசி ஜி! ப்ரணாம் ஜி!
இப்படிக்குஜி உங்கள்
அன்பு இந்தியன்ஜி
ஒரு தாழ்மையான வேண்டுகோள்ஜி : கொரோனாவை விரட்ட நீங்க கைத்தட்டி, வெளக்கு ஏத்தி, பூத்தூவச் சொன்னதை நாங்க அப்படியே செஞ்சோம்ஜி! ஆனா அந்த முட்டாள் கொரோனா அதை,
அதுக்கு கொடுத்த வரவேற்புன்னு தப்பா நினைச்சுகிட்டு நம்ம நாட்டுக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குஜி! அதுக்கு புரியுறா மாதிரி வேற ஒரு எதிர்ப்பை கண்டுபிடிச்சு சொன்னிங்கன்னா அதையும் செய்யத்தயாரா இருக்கோம்ஜி!
Tumblr media
0 notes
tamilnewstamil · 6 years
Text
புரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம் நிலைமையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம் நிலைமையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஒடிசா மாநிலத்திலுள்ள பிரபல புரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம் தொடர்பாக நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புரி ஜெகன்னாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில்சேவகர்கள் தொந்தரவு கொடுப்பதாகவும், ஏமாற்றுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. மேலும் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு முறையான வரிசை முறை இல்லை. இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years
Photo
Tumblr media
மேற்கு வங்காளம் v ஒரிசா: ஒரு வழியாக முடிவுக்கு வந்தது ‘ரசகுல்லா’ பஞ்சாயத்து இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கிடையே போட்டி இருந்த நிலையில், ரசகுல்லாவின் புவிசார் குறியீடு மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா: புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். 1999-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டு சட்டம் இயற்றப்பட்டது. உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்க்கவும், காப்புரிமை சட்டத்தையும், புவிசார் குறியீட்டையும் அளிக்கிறது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மாம்பழம் உள்ளிட்ட 193 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.. இதனால், வேறு பகுதியில் மேற்கண்ட உணவுப் பொருட்களை அதே பெயரில் பிரபலப்படுத்த முடியாது. குறிப்பிட்ட பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது அப்பொருள் அந்த இடத்தில் உருவானதற்கான வரலாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கேற்ப புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி ஒடிசா மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒடிசாவின் கோரிக்கையை ஏற்க கூடாது ரசகுல்லா எங்களுக்குதான் சொந்தம் என்று மேற்கு வங்காளம் மாநிலமும் காப்புரிமை கோரியிருந்தது. ஒடிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்துக்கும் கட்டாக் நகருக்கும் இடையே உள்ள பஹாலா எனும் கிராமத்தில்தான் தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்டது என்று ஒடிசா தனது வாதத்தில் கூறியிருந்தது. மேலும், பூரி ஜெகன்னாதர் கோவிலின் தேர் திருவிழா முடிவில் கடவுளுக்கு நைவேத்ய பண்டம் ரசகுல்லாதான். இந்த ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஒடிசா அரசு கூறியது. ஒடிசா கதை இப்படியிருக்க, ரசகுல்லா என்றால் அது பெங்காளி ஸ்வீட்தான் என்று எடுத்த எடுப்பிலேயே உரிமை கொண்டாடினர் கொல்கத்தாவாசிகள். 1866-ம் ஆண்டு வடக்கு கொல்கத்தாவில் பாக்பஜார் என்னுமிடத்தில் நோபின் சந்திரதாஸ் முதன் முதலில் ரசகுல்லாவை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக வரலாற்று ஆதாரம் காட்டினர் வங்காளிகள். கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான கே சி தாஸ் இனிப்பகத்தில் தயாராகும் ஆரஞ்சு, மாம்பழ ரசகுல்லா மற்றும் வெல்லத்தில் தயாராகும் ரசகுல்லா இனிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம். ஒடிசா ரசகுல்லா வேறு எங்கள் ரசகுல்லா வேறு. எங்கள் ரசகுல்லா தான் ஒரிஜினல் அயிட்டம். எனவே, மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு அளிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்காளம் மாநிலம் ஒற்றைக்காலில் நின்றது. ரசகுல்லாவுக்கான காப்புரிமை யாருக்கு கிடைக்குமோ? என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் தற்போது உடைந்துள்ளது. ரசகுல்லாவின் பூர்விகம் மேற்கு வங்காளம்தான் என புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு வென்ற பூரிப்பில் அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி, ‘இனிப்பான செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது. ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்திருக்கிறது’ என மகிழ்ச்சி பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Source: Maalaimalar
0 notes