#ஜூஸ் வகைகள்
Explore tagged Tumblr posts
Text
#இராமேஸ்வரம்_கஃபே
இராமேஸ்வரம் கஃபே என்னும் உணவகம் துவங்கியதே 2021 ஆம் ஆண்டில் தான்! துவங்கிய வெறும் 3 ஆண்டுகளில் இதன் பெரிய வணிகத்தைப் பற்றியும் இந்தக் கடையின் ருசியான உணவுகளைப் பற்றியும் பொது மக்களிடையே ஏன் பரபரப்பான பேச்சுகள் எழுகின்றன? யார் இவர்கள்? இராமேஸ்வரம் கஃபே என்ற பெயருக்கு என்ன காரணம்? வாங்க அந்த வெற்றிக் கதையை தெரிஞ்சுக்கலாம்!
இராமேஸ்வரம் கஃபே துவக்கிய இருவரில் முதன்மையானவர் திரு. ராகவேந்திர ராவ் இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டதாரி! 20க்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்! தற்போது இராமேஸ்வரம் கஃபேவின் ஐடிசி கிச்சன் ஹெட்ஸ் ஆபரேஷனாக இருப்பவர்! இன்னொருவர் ராகவேந்திராவின் மனைவியான திவ்யா ராகவேந்திர ராவ்! திவ்யா ஐஐஎம்மில்..
நிதி & மேலாண்மை முதுகலை பட்டதாரி! ICAI தென்னிந்திய கவுன்சிலின் பெங்களூரு கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்! ஆடிட்டிங் துறையில் 12 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்றவர்! ப்ரிமியம் சிக்மெண்ட்டில் தரமும் ருசியும் மிகுந்த உணவுகளை விற்பனை செய்யும் 100% பாரம்பரிய சைவ உணவகங்களை தென்னிந்தியாவில் செயின் ஸ்டோர்களாக தொடங்குவதே இவர்களின் கனவாகும்!
அக்கனவானது 2021 இல் பெங்களுரூவில் இரண்டு கடைகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் நனவாகியது. 15 அடிக்கு 15 அடியில் துவங்கப்பட்ட முதல் கடை தினமும் 7500 பில்கள் போடும் அளவிற்கு பெரும் கூட்டத்தைக் கூட்டி, தோசையை டர்ன் செய்தது போல ஒரே மாதத்தில் 4.5 கோடிகளை டர்ன் ஓவராக ஈட்டி இந்திய மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது!
ஆமா அது ஏன் இராமேஸ்வரம் கஃபேன்னு பேரு! டாக்டர். அப்துல் கலாம் மேல் இவர்கள் வைத்திருக்கும் மரியாதையால் அவர் பிறந்த ஊரான இராமேஸ்வரத்தை தங்கள் உணவகத்தின் பெயராக வைத்துள்ளனர்! இராமேஸ்வரம் கஃபேவை ஒரு உணவகமாக இன்றி ஒரு பிராண்டாக பார்க்கிறார்கள்! உணவு தயாரிப்பு, தரம், ருசி, விதவிதமான உணவு வகைகளின் தயாரிப்பு, அதன் சப்ளை..
குறிப்பிட்ட உணவுகளுக்கான டிமாண்ட் எல்லாம் துல்லியமாக திட்டமிடுகின்றனர்! உணவகத்தின் பிராண்டட் தோற்றம், நவீன கிச்சன் அமைத்தல், உணவுகளை வீணாக்கமல் தயாரித்தல், சுத்தமான குடிநீர், சிறந்த சமையல் கலைஞர்கள், பணிபுரியும் அனைவருக்கும் உரிய பயிற்சி, அவர்களின் நலன்/ நல்ல ஊதியம்/ காப்பீடு என சகலத்தையும் திறம்பட கண்காணிக்கின்றனர்!
பெங்களுரூவைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் இப்போது தனது அறுசுவைக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்! அடுத்து புனே, கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் என தேசமெங்கும் இராமேஸ்வரம் கஃபே துவங்கவிருக்கிறது! தரமான பாரம்பரியமிக்க தென்னிந்திய உணவுகளை தேசமெங்கும் தருவதே இவர்களது நோக்கம் என்கின்றனர்! இங்கு விற்பனையாகும்..
உணவு வகைகளின் விலை அதிகம் தான் என்றாலும் அது ஒர்த்! தட்டு இட்லி, பொடி இட்லி, சாம்பார் இட்லி என இட்லி வகைகள் தங்கத்தகடு போன்ற தோசை, மசால் தோசை, பொடி தோசை வகைகள்.. சாம்பார்/ தக்காளி/ தேங்காய்/ எலுமிச்சை/ தயிர் சாத வகைகள் தென்னிந்திய மதிய சாப்பாடு, பூரி, சப்பாத்தி, பட்டூரா போன்ற ரொட்டி வகைகள், குருமாக்கள், மசாலாக்கள், சட்னிகள்..
சாம்பார், சொதி, பச்சடி, ஊறுகாய் வகைகள், ஜூஸ் வகைகள் எல்லாமே இங்கு தனித்துவமான ருசியில் இருக்கின்றன! உணவுத் துறையில் தரமான ருசியான உணவுகளை ஒருவர் தந்துவிட்டால் ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் மந்திரவாதியின் உயிரைத் தேடி வருவது போல அந்தக் கடையை மக்கள் தேடி வருவார்கள்! என் தந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தை இது! அதற்கு சரியான உதாரணம்..
இந்த இராமேஸ்வரம் கஃபே! கருப்பும் செம்பும் கலந்த நிறத்தில் இவர்களது கடையின் தெய்வீக அலங்காரம் கற்கோவில் போல ஒரு பாரம்பரிய அடையாளத்தைத் தருகின்றது! சமரசம் செய்து கொள்ளாமல் தரமான பொ��ுட்களை மக்களுக்கு தரும் நிறுவனம் எந்தத் துறையிலும் திட்டமிட்டு கால்பதித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இராமேஸ்வரம் கஃபே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!
0 notes
Link
Fresh Fruit Juices in Different Flavours
#recipes#recipe#fruits#fruit juice#health#healthy#healthy food#healthy diet#fitnes#good food#good health#fitness life#positivity#momsqna
0 notes
Text
கோடை காலத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ்..! Child Health Drinks..!
கோடை காலத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ்..! Child Health Drinks..!
குழந்தைகளுக்கு முக்கியமாக தர வேண்டிய ஜூஸ் வகைகள்..! Health Drinks For Babies..! ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் குழந்தைக்கு (childrens health energy drinks) என்ன மாதிரியான குளிர்பானங்களை கொடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் வரும். இவற்றை எல்லாம் கோடை காலத்தில் தவிர்க்க எளிமையான ஜூஸ் வகைகளை கொடுத்து…
View On WordPress
0 notes
Text
மலச்சிக்கலால் அவதியா? இதை ட்ரைப் பண்ணி பாருங்கள்
மலச்சிக்கலால் அவதியா? இதை ட்ரைப் பண்ணி பாருங்கள் #lemon #mango #blood #ut #utlifestyle #tamilnews #universaltamil
இன்றைய தலைமுறையினர் சரியான உணவு பழக்கம் இல்லாததால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் ஒன்று மலச்சிக்கல். அதற்கு என்ன தீர்வு என இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு கீரைகளை சாப்பிட கூடாது. இது ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஜூஸ் வகைகள் நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும். ஜூஸ்…
View On WordPress
#blood#lemon#mango#இரத்தம்#உலர்ந்த திராட்சை#எலுமிச்சை சாறு#குடல்#கொய்யாப் பழம்#நார்ச்சத்து#பச்சைக் காய்கறிகள்#மலச்சிக்கல்#மாம்பழம்
0 notes
Photo
Nature 💗 medicines…do maximum share Shared :Nature 💗 medicine 💕 group சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! 1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்க��னாலும் உடனடி பலன் தெரியும் 2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். 7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும். 8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும். 9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும். நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும். தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது. ஆர��ரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டு���ே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவ���ும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும். தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை. கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும். காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும். பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும். வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும். பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும். அசத்தல் டிப்ஸ் ............................ 1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். ப��தினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும் 2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் 3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம் 4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும். 5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது. எதுக்கு எது நிவாரணம்? மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும். கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம். அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம். தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும். குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும், விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும். காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும். உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும். வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம். உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம். வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும் Shared :Nature 💗 medicine 💕 group
0 notes
Text
#லீமெரிடியன்_பஃபே
“தப்பித் தவறி 5 ஸ்டார் ஓட்டலுக்கு யாரும் சாப்பிடப் போகாதிங்க உங்க காசைக் கறந்துடுவாங்க” என்பது, வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கையை போன்றது! வெஜ் - நான் வெஜ் எதுவா இருந்தாலும் நான் நல்லா சாப்பிடுவேங்க! எனக்கு ஏகப்பட்ட உணவு வெரைட்டிகள் ஒரே நேரத்தில் வேணும்!
நான் எப்படிங்க 5 ஸ்டார் ஓட்டல் போறது? நம்மூர்ல நல்ல அசைவ கடையில் மூன்று வெரைட்டியோடு சோறோ பிரியாணியோ சாப்பிட்டாலே கிட்டத்தட்ட 1000 ரூபாய் ஆகிடுது! நான் எப்படி 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவது? உங்கக் கேள்வி நியாமானது தான்! ஆனா உங்களுக்கேற்ற பெஸ்ட் ஓட்டல் 5 ஸ்டார் ஓட்டல்கள் தான்!
ஆச்சரியமா இருக்குல்ல! அப்போ வாங்க என் கூட கோவை லீ மெரியன் ஓட்டல் பஃபே லஞ்சுக்கு! ஆத்தி!! அந்த ஓட்டலா!! ஒரு சாப்பாடு 4 ஆயிரம் 5 ஆயிரம் வருமே ��ன்கிறீர்களா? இல்ல நீங்க ஒரு நல்ல அசைவ ஓட்டலில் சாப்பிடும் அதே ஆயிரம் ரூபாயுடன் ��திக பட்சம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் தந்தால் போதும்!
சில மாதக் கடைசி வாரங்களின் வார நாட்களில் 2 நபர்களுக்கு சேர்த்தே ₹1500 (+tax) விலை ஃபிக்ஸ் செய்து இருப்பார்கள்! அதை நீங்கள் இணையம் வாயிலாக செக் செய்து கொள்ளலாம்! அப்படி இருந்தா தயவு செய்து உடனே இங்கு போய் சாப்பிட்டு விடுங்கள்! சரி அப்படி இங்க என்னென்ன எல்லாம் ஸ்பெஷல்?!
60 வகைக்கும் மேற்பட்ட உணவு வகைகள்! ஹாட் சூப் துவங்கி, ஸ்டார்ட்டர் வகைகள், சைவ / அசைவ, தென் இந்திய / வட இந்திய / சீன / இத்தாலி / ஸ்பானிஷ் வகை உணவுகள், ஜூஸ், ஸ்வீட்ஸ், கேஸ், டெஸர்ட்ஸ், வித விதமான ஐஸ்க்ரீம்கள் என நூற்றுக் கணக்கான உணவுகளை அன்லிமிடெட்டாக வாங்கலாம்!
வாழைத் தண்டு, டொமேட்டோ, பச்சை காய்கறிச் சாறுன்னு சைவத்தில் 3 வகை சூப், மட்டன் போன், சிக்கன், எக் க்ளியர், என அசைவத்தில் 3வகை சூப் (இது நான் சென்ற அன்று) நீங்கள் அன்றைய சூப் வகைகள் எதுவென்று கேட்டு தேர்ந்தெடுங்கள்! இங்கு நண்பகல் 12 மணிக்கு பஃபே துவங்கும்! நீங்கள் காலை..
உணவை லைட்டாக சாப்பிட்டுவிட்டு 12:15க்கு இங்கு வருவது சிறந்த நேரமாகும்! சூடான சூப்பை உங்கள் நட்புடன் சிரித்துப் பேசிக் கொண்டே ரசித்து குடிக்கவும்! இந்த பஃபே ஹாலே அரண்மனை போல அழகாக இருக்கும்! அந்தப் பின்னணியில் இங்கு செல்ஃபிகள் இன்ஸ்டா ரீல்கள் எடுத்துக் கொள்ளலாம்!
ஒரு 12:45க்கு ப்ளேட் எடுத்துக் கொண்டு பஃபே கவுண்டருக்கு போனால், ஸ்டார்ட்டர்களாக டிராகன் சிக்கன், சில்லி ஷிரிம்ப், மட்டன் மர்க், போன்லெஸ் நண்டு, ஃபிஷ் டிக்கா, சிக்கன் 65 என ஏராளமானவை இருக்கும்! மங்கோலியன், சீனா, ஸ்பானிஷ் வகை சிக்கன் & மட்டன் வகைகளும் இங்கு உண்டு! ஆகவே பிடித்ததை..
வேட்டையாடலாம்! வெஜ் பல்ஸ், பனீர் டிக்கா, பிந்தி ஃப்ரை, ஆனியன் பக்கோடா, வெஜ் கெபாப், கோஃப்தா என சைவத்திலும் பட்டையை கிளப்பும் ஸ்டார்டர்கள்! இதையும் நீங்க மெதுவா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுட்டு ஒரு 15 நிமிடம் கழித்து மெயின் கோர்ஸ் வந்து முதலில் அவாதி தம் மட்டன் பிரியாணியை..
ஆவி பறக்க நாலு பெரிய பீஸுடன் எடுத்து தட்டில் போட்டு, தயிர் வெங்காயம், தால்ஸா அல்லது மட்டன் குழம்புடன் சேர்த்து டக்குன்னு சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு விடுங்கள்! நீங்கள் கொடுத்த காசு இதுக்கே சரியாகிவிடும்! பிரியாணி அனுபவத்தை நிறைவு செய்து பிறகு சிறிது நேரம் கழித்து பிற உணவுகளை..
எடுங்கள்! 12:15 மணிக்கு உள்ளே வந்த நீங்கள் 2 :15 மணி வரை இங்கு பொறுமையாக சாப்பிடும்படி வரவும்! அடித்துப் பிடித்து அரக்கப் பரக்க இங்கு சாப்பிட வராதீர்கள்! பிறகு அருமையான அரிசிச் சோறு, வெஜ் பிரியாணி, கத்திரிக்காய் வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், அவரைக்காய் ஃப்ரை, பால் கூட்டு..
உள்ளித் தீயல், அவியல், உருளை ஃப்ரை, ரசவாங்கி என சைவ வகைகளிலும்.. மட்டன் குழம்பு, சுக்கா வருவல், ஆந்திரா மீன் குழம்பு, செட்டி நாடு நாட்டுக் கோழிக் குழம்பு என அசைவ வகைகளிலும்.. தால், தால் மக்னி, கடாய் பனீர், பிந்தி மசாலா போன்ற வட இந்திய வகைகளையும் இஷ்டம் போல வெட்டலாம்!
முட்டைக்கு என்றே ஒரு தனி கவுன் டர் இருக்கு! ஆம்லெட், ஆப்பாயில், பொடி மாஸ், கலக்கின்னு கேட்டு வாங்கிக்கலாம்! தோசை வகைகளும் கிடைக்கும்! பீட்ஸா கிடைக்கும்! நான், சப்பாத்தி, ரொட்டி வகைகளும் உண்டு! பிறகு டெஸர்ட்ஸ் பக்கம் போனா 10 வகைகள் ஐஸ்க்ரீம் 10 வகைகள் என இங்கு உண்டு!
குழந்தைகளுக்கு கட்டணம் குறைவு! அன்றைய தேதியில் என்ன விலை என்பதை தெரிந்து கொண்டு போகவும்! ஃபேமிலி காம்போ ஆஃபர்களும் உண்டு! நீங்கள் நன்கு சாப்பிடும் நபர்களோடு இங்கு செல்வது சிறந்தது! நீங்கள் வெளியில் சாப்பிடும் உயர்தர ஓட்டல்களை விட இங்கு உணவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும்!
ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் தரக்கட்டுப்பாடு கொள்கைபடி மிகுந்த தரமான உணவுப்பொருட்களில் , தலை சிறந்த செஃப்கள் சமைப்பதால் எல்லா உணவுகளும் நன்றாக இருக்கும்! மேலும் அழகிய அரண்மனை போன்ற அலங்கார சூழல், Ac ஹால் என இங்கு மிகச்சிறந்த ஒரு உணவு அனுபவம் உங்களுக்கு கிட்டும்!
வார இறுதிகளில் கூட்டம் அதிகம் இருக்கும்! காம்போ உட்பட எந்த விலைச் சலுகைகளும் கிடைக்காது! மதியம் மட்டுமின்றி இரவு டின்னர் பஃபேவும் உண்டு அதற்கான கட்டணம் தனி! மது வகைகளுடன் பஃபே சாப்பிட இன்னொரு ஹால் உள்ளது! உங்கள் வருகையை முன்பதிவு செய்துவிட்டு செல்வது சிறந்தது!
0 notes
Text
#திருச்சூர்_பாரத்
கேரளாவில் அசைவ உணவுகள் படு ஃபேமஸ்! சிக்கன், மட்டன், பீஃப், ��ன் போத்து எனும் எருமைக்கறி கூட அங்கு பிரமாதமான ருசியில் பக்குவமாக சமைக்கப்பட்டு பல கடைகளில் கிடைக்கும்! ஆனால் நம்ம தமிழ்நாடு போல நல்ல சைவ ஓட்டல்களை இங்கே காண்பதரிது! அதிலும் சேட்டன்களின் இட்லி, தோசை எல்லாம் தமிழர்கள் பேசுகின்ற மலையாளம் போல ஒட்டாது இருக்கும்!
நல்ல சாம்பார், சட்னி வகைகள், மசாலா, குருமா எல்லாம் இங்கு ருசியில் தனித்துத் தெரியும்! நீங்கள் கொலப்பசியில் இருந்தாலும் இங்கு 4 இட்லிக்கு மேலே கையைக் கழுவி எழுந்துவிடுவீர்கள்! அந்தளவுக்குத்தான் இங்கு தமிழக சைவ உணவுகள் கிடைக்கும்! இங்கும் நமது ஆர்யாஸ், ஆனந்தபவன் போன்ற ஓட்டல்கள் தான் ஓரளவுக்கு நல்ல சைவ உணவுகளை நமக்கு அளிக்கின்றன!
கேரள மண்ணின் மைந்தர்களால் துவக்கப்பட்ட சிறந்த சைவ உணவகங்களை எண்ணுவது மிகவும் எளிது! அப்படி ஒரு ஓட்டல் தான் திருச்சூர் பாரத் ஓட்டல்! திருச்சூரின் மையத்தில் அமைந்திருக்கும் வடக்குநாதன் கோவில் ஒரு பிரம்மாண்டமான வட்டவடிவத்தில் அமைந்திருக்கும்! மிகப் பெரிய மைதானமும் இங்குண்டு! திருச்சூர் பூரம் திருவிழா இங்கு தான் நடைபெறும்!
இந்த மைதானம் தேக்கின்காடு மைதானம் அல்லது பூரப்பரம்பு என்று அழைக்கப்படுகிறது! திருச்சூரின் புகழ் பெற்ற வணிக ஸ்தலங்கள் அனைத்துமே இதைச் சுற்றியே உள்ளன! அங்கே செம்போட்டில் லேன் என்னும் இடத்தில் (ராகம் தியேட்டர் பின்புறம்) அமைந்துள்ளது பாரத் ஓட்டல்! ஒரு டெம்போ டிராவலர் வண்டி சென்றால் எதிரில் எந்த வண்டியும் வரமுடியாத குறுகலான..
தெரு! ஆனால் அத்தெருவின் போக்குவரத்தே பாரத் ஓட்டலுக்கு மட்டும் தான்! ஒரு நாளின் எந்த நேரத்தில் இங்கு சென்றாலும் போனதும் உட்கார இடம் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! ஓட்டல் அவ்வளவு சுத்தம்! நல்ல லைட்டிங்! அழகிய சூழல்! 100 பேர் சாப்பிடக்கூடிய பரந்து விரிந்த ஹால்! ஆனால் குறைந்தது 20 பேராவது ஆங்காங்கே நின்று காத்திருப்பார்கள்!
எங்களுக்கு 15 நிமிட காத்திருப்புக்கு பின் டேபிள் கிடைத்தது! முதலில் இட்லி, வடை சொன்னோம்! சும்மா சொல்லக் கூடாது தமிழகத்து மரபு மாறாத இட்லியின் நற்குணங்களோடு ஆவி பறக்க இட்லி வந்தது! 3 இட்லிகள் என்பது இங்கு 1 செட்! (2 இட்லிக்கு ஒரு ஸ்டெப்னி) தேங்காய் சட்னி, காரச் சட்னி, வெங்காய சாம்பார் கூடவே 1 சூடான உளுந்துவடை முதலியவற்றை வைத்திருந்தனர்!
சாம்பாரின் நிறமே அற்புதம்! காரட், சின்ன வெங்காயம் மிதக்க சிவப்பும் மஞ்சளும் கலந்த கலவையான நிறத்தில் கொத்து மல்லியின் மணம் வீசியது! ��ரு விள்ளல் இட்லியை சாம்பாரில் தோய்த்து சாப்பிட்… அட என்னய்யா இனிக்குது! அத்தனையும் நடிப்பா கோப்பால் என்பது போல திடுக்கிட்டேன்! ஆனால் இந்த கடைக்கு இந்த இனிப்பு சாம்பார் ஒன்று தான் திருஷ்டியே!
காரச்சட்னி எல்லாம் யூடியூபர்ஸ் லாங்வேஜில் “வேற லெவலில்” இருந்தது! அந்த லாங்வேஜிலேயே சொன்னால் இங்கு மஸ்ட் டிரை மெனுக்கள் புட்டு & கடலைக்கறி, இடியாப்பம் & வெள்ளை குருமா நம்ம தமிழ்நாடு உணவில் மசாலா தோசை, நெய் ரோஸ்ட், வட இந்திய உணவில் சோளாப்பூரி, பனீர் மசாலா எல்லாமே அற்புதம்! மெதுவடை இன்னொரு பர்ஃபெக்ட் தயாரிப்பு! தயிர்வடையும்..
இங்கு கொஞ்சம் இனிக்கிறது! ஃபில்டர் காஃபி தரமாக இருந்தது! அதே போல ஆரஞ்சு ஜூஸ் இங்கு ஒன்ஸ் மோர் கேட்க வைத்தது! மதியம் அவியல், பப்படம், பிரதமனோடு இவர்கள் தரும் சிவப்பரிசி சாப்பாட்டுக்கும் ஏராளமான ரசிகர்கள் இங்கு உண்டு! நான் இங்கு 2 நாட்கள் தங்கியிருந்தேன்! என் பணி சூழல் காரணமாக இங்கு மதிய உணவை சாப்பிடும் வாய்ப்பு 2 நாட்களிலுமே கிட்டவில்லை!
மேற்கூறிய வகைகள் இங்கு இரண்டு நாளில் 4வேளைகள் நாங்கள் சாப்பிட்ட உணவுகளாகும்! மேலும் உணவின் விலையும் நியாயமாக இருந்தது நாங்கள் 5 பேர் 4 வேளை சாப்பிட்ட உணவுகளின் மொத்த பில் தொகையே ₹2191 தான் வந்தது நிச்சயம் நமது ஊரில் 4 ஆயிரத்தை தாண்டியிருக்கும்! இங்கு அடை என்பது லாங்சைஸ் இலை கொழுக்கட்டை ஆகும்!
இது போன்ற சில பெயர் குழப்பங்களையும், அந்த இனிப்பு சாம்பார் + தயிர் வடையையும் மன்னித்துவிட்டால் திருச்சூரில் நாம் ரசித்து ருசித்திட ஒரு அருமையான சைவ உணவகம் இந்த ஓட்டல் பாரத் என்று சத்தியம் செய்யலாம்! இந்த ஆண்டோடு பாரத் ஓட்டல் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவாகிறது! இங்கே அவர்களது பணியாளர்களின் அன்பான உபசரிப்பிலும் மனம் நிறைவானது!
1 note
·
View note
Text
#கைலாஷ்_பர்பத்
பெங்களூரு, மைசூரூ, சென்னை, கோவை, ஊட்டி, திருப்பூர், சேலம், வேலூர் இந்த எல்லா ஊர்களிலும் தேடித் தேடி சாப்பிட்டு இருக்கேன்! இந்த எல்லா ஊர்களிலும் எனக்கு நிறைய நட்புகள் உண்டு! ஆனா யாருமே என்னிடம் கைலாஷ் பர்பத் எங்க ஊரில் இருக்குன்னு சொன்னதேயில்லை! நிறைய பேருக்குத் தெரியலை! ஏன் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் கூட ரிவ்யூ பார்த்ததி��்லை!
முதன் முதலா என் பார்ட்னர் ஶ்ரீசைலம் 2021 இல் கோவை ப்ரூக் ஃபீல்டு மாலின் கீழ்ப் புறத்தில் இருக்கும் இந்தக் கடைக்கு அழைத்து போனார்! மாலின் கார் பார்க்கிங் நுழையும் இடத்தில் இடது புறம் இந்தக்கடை இருக்கு! மாலுக்குள்ளேயே நாம் போக வேண்டாம்! அப்படி இங்கு என்ன ஸ்பெஷல்? நல்ல தரமான பொருட்கள் பயன்படுத்தி செய்யும் சமையல், சிறந்த செஃப்கள்..
அதியற்புதமான ருசி, சிறந்த சர்வீஸ், ரசனை மிகுந்த உணவுகள் இங்கு ஒரு முறை போனால் மீண்டும் மீண்டும் செல்வீர்கள்! இங்கே தனியாக சென்று சாப்பிடுவதை விட நான்கைந்து பேராக போய் சாப்பிடுவது சிறந்த பொருளாதார சேமிப்புச் செயலாகும்! ஒன்லி சைவம் தான், சவுத் / நார்த் இண்டியன் உணவு வகைகள், சாட் வகைகள், காண்டினெண்டல் உணவுகள், ஜூஸ், ஐஸ்க்ரீம்..
ஸ்வீட்ஸ் எல்லாம் இருக்கு! எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 400 வகையான உணவு வகைகள் இருக்கு! இங்கு ரொம்பப் ஸ்பெஷல் சாட் ஐட்டங்கள் தான்! பானி பூரி, பேல் பூரி, தாஹி வடா, தாஹி பூரி என அனைத்துமே ருசியில் பட்டையைக் கிளப்பும்! இது போல நீங்கள் நிச்சயம் வேறெங்கும் ருசித்து இருக்க முடியாது! பானி பூரியை இவர்கள் பரிமாறுவதே ஒரு குட்டி டிரை சைக்கிளில்..
பானிபூரியும், டெஸ்ட் டியூப் போன்ற குடுவைகளை சைக்கிளின் பில்லியனில் செருகி அதில் கட்டா மிட்டா ஊற்றி கொண்டு வந்து ரசனையோடு பரிமாறுவார்கள்! பானிபூரி பிரியர்கள் பானிபூரி வெறியர்களாகி 4 வண்டி பானிபூரியை விழுங்குவார்கள் என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்துச் சொல்வேன்! பேல்/தாஹி பூரிகளும் இப்படித்தான்! இங்கு பாவ் பாஜி, வடா பாவ், ரொட்டி..
சப்பாத்தி சென்னா பட்டூரா, பராத்தா வகைகள், நான், தந்தூரி, ரொட்டி, மெமூஸ், வெஜ்/காளான் பிரியாணி, சவுத்/நார்த் இண்டியன் தாலி எல்லாமே பட்டையை கிளப்பும்! தால்மக்னி, பிந்தி ஃப்ரை, வெஜ்/ ஆலு/ கோபி மஞ்சூரியன், பனீர் வகை குருமாக்கள், புலாவ்கள் என அனைத்து வட இந்திய உணவுகளும் அட்டகாசமான ருசியில் சூடாகவே இங்கே கிடைக்கும்!
நம்ம உணவான இட்லி,தோசை, புரோட்டா, பூரி, பொங்கல், கூட பிரமாதமாக இருக்கும்! சில்லி இட்லி, மஷ்ரூம் இட்லி, பொடி இட்லின்னு மினி இட்லிகளில் 6 வகையும் 25 வகைகளுக்கும் மேலே தோசை வெரைட்டிகளும் கிடைக்கும்! ஸ்பகாட்டி, பாஸ்தா, மக்ரோன்ஸ், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் எல்லாம் பலப்பல வகைகளில் கிடைக்கும்! ஸ்பானிஷ் & சைனீஸ் வகைகளும்..
இங்கு ஏராளம்! சூப், டெஸர்ட், ஐஸ்க்ரீம், ஸ்வீட் வகைகளும் உண்டு! ஃப்ரெஷ் ஜூஸ் எல்லாமே பெஸ்ட்டா இருக்கும்! ��ங்கே தனித் தனியா உணவு வாங்கினா அது காஸ்ட்லி! நம்ம வடிவேலு சொன்னா மாதிரி ப்ப்ளான் பண்ணி மினிமம் 4 பேராவது போய் சாப்பிட்டா நீங்க நிறையா வெரைட்டீஸ் சாப்பிடலாம்! இங்கு வெஜ் பிளாட்டர்னு ஒரு காம்போ இருக்கு! அதில் பானி, பேல்..
தாஹி வடா எல்லாம் வந்துடும்! நிச்சயம் இதை ஒரு குடும்பத்தில் 4 பேரு சாப்பிடலாம்! பானிபூரி மட்டும் தனியா 2 சொல்லுங்க! ஒரு வெஜ் மஞ்சூரியன் பால்ஸ், 1 பனீர் டிக்கா, 1 ஷெஸ்வான் ஃப்ரைடு ரைஸ், 1 க��ளான் பிரியாணி, 8 மெமோஸ், 2 செட் ரொட்டி ஒரு பனீர் வெரைட்டி குருமா, தேவைன்னா 1 ஃப்ரைடு இட்லி இப்படி ஆர்டர் பண்ணி ஷேர் பண்ணிக்கோங்க! (இது எங்கள் மெனு)
இங்கே சூப் வகைகள் எல்லாமே சூப்பரா இருக்கும்! ஒன் பை டூ போயிடுங்க நிறைய தருவாங்க! மல்லி & எலுமிச்சை சூப் இங்க ஸ்பெஷல்! சூப்பில் இங்கே என்னோட சாய்ஸ் அதுதான்! சால்ட் & ஸ்வீட் லஸ்ஸியும் இங்கு பிரமாதமா இருக்கும்! மிண்ட் லெமன் ஜூஸ் என்னோட ஃபேவரிட்! ஐஸ்க்ரீம் உங்க குழந்தைங்க விருப்பம்! வீக் எண்டுகளில் கூட்டம் அதிகம் இருக்கும்!
நான் சொன்னது போல ஒரு வெரைட்டி வாங்கி நாலு பேரு ஷேர் பண்ணிகிட்டா ஒரு நபருக்கு ₹500 ஆகும்! தனித்தனியா சொன்னா 1000 கூட ஆகும்! இந்தக் கடை எந்தெந்த ஊர்களில் இருக்குன்னு அட்ரஸை போட்டோவில் போட்டு இருக்கேன்! நிச்சயம் நீங்க கொடுக்கிற காசுக்கு ஒர்த்! டேஸ்ட்டும் புதுவித அனுபவத்தை கொடுக்கும்! பர்பத்னா மலை என்று அர்த்தம்!
ஆம் இந்த பர்பத்தில் உங்களை மலைக்க வைக்கும் உணவுகள் மலை போல குவிந்துள்ளது! மேலே நான் குறிப்பிட்டது அனைத்தும் கோவைக் கிளையில் ருசித்ததே! பிற கிளைகளில் அடுத்து ஒரு ரவுண்ட் அடிக்கலாமுன்னு இருக்கேன்! நல்ல உணவு கிடைக்கிறது என்றால் இமயமலையே ஏறுவோம் இல்லையா! அட இதுவும் கைலாஷ் பர்பத் (இமயமலை) தானே ஏறிட்டா போச்சு!
0 notes