#சிக்கன் பிரியாணி
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 3 months ago
Text
#அதிகாலை_அசைவம் {“தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ்”}
மைசூரில் அதிகாலை பிரியாணி சாப்பிட்ட பின்பு கர்நாடகாவில் எந்த ஊருக்குப் போனாலும் ருசி கண்ட யானையாய் ஏங்க இந்த ஊரில் அதிகாலை பிரியாணி கிடைக்குமான்னு கேட்கத் தவறியது இல்லை! போத்தீஸ் பெங்களுரூவில் துவங்கிய போது 76 நாட்கள் பெங்களுரூவில் தங்கியிருந்தேன். மாண்டியா, சிக்பெளாபூர்..
தாவண்கரே, கோலார், ஓசூர் என பெங்களூரின் 200 கி.மீ சுற்றளவில் அனைத்துப் பகுதிகளிலும் போத்தீஸ் திறப்புவிழா நிகழ்வுக்காக எங்கள் நிறுவனம் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் விநியோகிக்கும் பணியில் இருந்தோம்! அந்த வேலை முடியும் வரை சரியான நேரத்தில் உணவோ நல்ல ஓய்வோ கிடைப்பது மிக அரிதாக இருந்தது!
ஆனால் நாம் தொலைத்த இடத்தில் தான் அதை தேடணும் என்ற வார்த்தையை உண்மையாக்க.. திறப்புவிழா முடிந்து 4 நாட்கள் ஓய்வுக்காக அதே பெங்களுரூவில் தங்கினேன்! நல்ல ஓய்வு எடுத்த பின்பு நாக்கு நல்ல உணவைத்தான் கேட்டது! அந்த புகழ் பெற்ற அதிகாலை அசைவம் இங்கிருக்கா கேள்வியைக் கேட்டேன்!
நண்பர் ஆம் என்றார்! நாங்கள் தங்கியிருந்த கெம்பே கவுடா சர்க்கிளில் இருந்து விஜயநகரம் என்னும் இடத்தில் MANDIPETE PALAV என்னும் அசைவக் கடை உள்ளது! அங்க அதிகாலை 4 மணிக்கே பிரியாணி மட்டுமல்ல மட்டன் சூப், தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ் எல்லாம் இருக்கு என எனது காதிலே கறியை வார்த்தார்!
அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை எழுப்பிவிட 3:40க்கே எழுந்த���னை பார்த்து இருக்கிங்களா! அது நானே தான்! 3 : 55க்கு குளித்து ரெடியாகி அந்தக் கடை வாசலில் 4:10 க்கு போய் நின்றோம்! எங்களுக்கு முன்பே ஒரு டஜன் பேர் அங்கிருந்தனர்! பிரியாணி அண்டா மூடி மீது கங்குகள் எரிந்தன!
இன்னும் பிரியாணி தம் உடைக்கவில்லை எனத் தெரிந்தது! தட்டே இட்லி அப்போது தான் தட்டில் ஊற்றிக் கொண்டிருந்தனர்! சூப் ரெடியாக இருந்தது! அட்டகாசமாக ஒரு சிக்கன் லெக் பீஸ் அளவுக்கு மட்டன் பீஸோடு கமகமன்னு கொத்துமல்லி மணக்க மட்டன் சூப்! சீரகமும் மிளகும் உப்பும் தூவி அதை ஊதி ஊதி குடித்தேன்!
ஆஹா! ருசியில் அது படித்’தேன்’ அதை ரசித்துக் குடித்’தேன்’ உடல் சிலிர்த்’தேன்’ அடுத்த 12வது நிமிடத்தில் பிரியாணி அண்டா திறப்புவிழா கண்டது! மூடியை திறந்ததும் மதகு தாண்டிப் பாயும் காவேரி நீரைப் போல பிரியாணியின் மணம் அங்கே பரவியது! அத்தனை பிரியாணியும் பார்சலாம்! 4பேர்தான் சாப்பிட முடிந்தது!
பிரியாணியைக் கிளறும் போதே ரோஜா நிறத்தில் வெந்த மட்டன் துண்டுகள் நம் கண்களைப் பறித்தன! அடுத்த அண்டாவும் ஓபன் ஆனா கடையில் இருந்த அனைவருக்கும் பிரியாணி தரலாம்! ஆனால் கூட்டம் மெல்ல மெல்ல கூடிக்கொண்டிருந்தது! அங்கிருந்த ஒரு டஜன் கூட்டம் இப்போது 4 டஜன்களாக பெருகியிருந்தது!
புதிய திரைப்படத்தின் ரிலீஸன்று இரண்டாவது ஷோ பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள் போல 2வது அண்டா பிரியாணிக்கு நாங்கள் அனைவரும் காத்திருந்த போது, இட்லிப் பானையில் வெந்த தட்டே இட்லியை தட்டில் கவிழ்த்து ஒரு பவுர்ணமி நிலவாய் ஆவி பறக்க அங்கே எடுத்து வைத்த கண் கொள்ளாக் காட்சியைக் கண்டேன்!
திரிஷா இல்லாட்டி திவ்யான்னு வாழும் மறத்தமிழன் அல்லவா! அந்த இட்லியின் டெக்ஸ்ச்சரே மனதை ரப்ச்சர் செய்ய பிரியாணி சாப்பிட வந்துட்டு மனசு மாறி இட்லியும் மட்டன் சாப்சும் வாங்கினேன்! அதைத் தாங்கினேன்னு கூட சொல்லலாம்! அபார சூட்டில் தட்டே இட்லி அதற்கு கொதிக்கும் மட்டன் சாப்ஸ் குழம்பு ஆஹா! அடடடடா!
இட்லியும் கறிக்குழம்பும் இணைந்து வெண்ணெய்யாய் கையில் குழைந்தது அசால்டாக மூன்றாவது இட்லியும் சொல்லி சாப்பிட்டேன்! இப்போது பிரியாணி ரெடின்னு சொன்னாங்க இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னன்னு நினைச்சுகிட்டேன்! நிச்சயம் பெங்களுரூவில் ருசிக்க வேண்டிய இட்லி மட்டன் குழம்பு இது!
இந்த விஜயநகரமும் மைசூர் செல்லும் சாலையில் தான் இருக்கு! இந்த வழிநெடுக நிறைய சைவ தட்டே இட்லிக் கடைகளும் அதிகம்! அந்தக் கடைகளில் இட்லிக்கு சட்னிகள் தான் தருவாங்க! தவறிப் போய் நீங்க சைவ இட்லி கடைகளுக்கு போய்விட வேண்டாம்! அசைவத்திற்கும் சில கடைகள் இங்கே இருக்கின்ற��! ஆனால்..
அதன் தரம் பற்றி எனக்குத் தெரியாது! இந்தக் கடையில் நான் சாப்பிட்டது 2019இல் தற்போது இங்கு இதுபோல பல கடைகள் வந்துவிட்டதாம்! இந்தக் கடையும் இப்போ இருக்கு! ஆனா முன்பு போல இல்லை என்கிறார் நண்பர்! இருந்தாலும் அன்றைக்கு நான் சாப்பிட்ட அந்த தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ் குழம்பு அபாரம்!
அக்குழம்பில் சேர்த்த மசாலா, இட்லியின் மென்மை, அந்த சூடு எல்லாம் அனுபவிக்க காலை 5 மணிக்கே போகவேண்டும்! காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்ததால் மறுநாள் காலை இங்கு மறுபடியும் வந்து பிரியாணியை ருசித்தது தனிக் கதை! அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அந்த மட்டன் சூப் ருசிக்க மறக்காதிங்க!
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
Menu : Mutton Palav: Rs 280/- Chicken Palav: Rs 170/- Mutton Chops: Rs 270/- Chicken Chops: Rs 160/- 2 Dose: Rs 60/- 2 Idli: Rs 40/- Plain Soup: Rs 50/- Leg Soup: Rs 120/-
(தற்போதைய விலைன்னு நண்பர் சொல்லி 6 மாதங்கள் ஆச்சு இப்போ சிறிது மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்)
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
minnambalam · 7 months ago
Text
0 notes
ashokonline · 7 months ago
Video
youtube
சிக்கன் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | CHICKEN BIRIYANI - Madurai...
0 notes
tamilnewspro · 2 years ago
Text
அமெரிக்கப் பெண் இந்திய உணவை முயற்சித்து, தனது உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவில்லை
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 04, 2023, 11:16 IST சிக்கன் டிக்கா பிரியாணி மற்றும் சமோசா சாட்டை முயற்சித்த பெண். வாயில் கரைந்த பிறகு அந்தச் சுவைகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியாத அளவுக்கு அந்தப் பெண்ணின் உற்சாகம் அதிகம். ஒவ்வொரு இடமும் தனித்தனியான உணவுகள் மற்றும் அவற்றைச் செய்யும் விதம். இருப்பினும், இந்தியாவில் இருக்கும் உணவு வகைகள் உலகில் வேறு எந்த இடத்திலும் இல்லை.…
Tumblr media
View On WordPress
0 notes
haseenart · 2 years ago
Text
0 notes
lakshmitha-rajesh-kitchen · 2 years ago
Photo
Tumblr media
சிக்கன் தம் பிரியாணி சுவையாகவும், உதிரி உதிரியாக வரவும், சரியான அளவுகளோட செய்வது எப்படினும், இந்த விடியோல சொல்லிருக்கேன். Video link :https://youtu.be/unGnid27xMw https://www.instagram.com/p/Cp6_9l4Bu9z/?igshid=NGJjMDIxMWI=
0 notes
topskynews · 2 years ago
Text
தஞ்சை பெரியக்கோவிலுக்குள் அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்! வைரல் வீடியோ
தஞ்சை பெரியக்கோயிலுக்குள் அமர்ந்து இஸ்லாமிய குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிடும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சித்திரை பெருவிழாவின் கொடியேற்றம் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இ���்நிலையில் சித்திரை…
Tumblr media
View On WordPress
0 notes
mykovai · 2 years ago
Text
தமிழகம் முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில்  எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும்… அதற்குக் காரணம் அளவில்லாத பிரியாணி குறைந்த விலைக்கு வழங்குவது… ஒரு கிலோ சிக்கன் 200 ரூபாய்க்கு விற்கும் நிலையில் இவர்கள் எப்படி அளவில்லாத சிக்கன் பீஸ்களுடன் வழங்க முடியும் என்ற…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years ago
Text
உணவு விஷம்: குஜராத் திருமண விழாவில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை அகமதாபாத்: பாவ்நகர் மாவட்டம் பாலிதானாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 100 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் உணவு விஷம் கலந்ததாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்களில் 100 பேர் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டனர்,…
View On WordPress
0 notes
tntamilnews · 2 years ago
Text
ஒரு சுவையான இரவு உணவிற்கு லக்னோவி-ஸ்டைல் ​​சிக்கன் மசாலா செய்வது எப்படி
ஒரு சுவையான இரவு உணவிற்கு லக்னோவி-ஸ்டைல் ​​சிக்கன் மசாலா செய்வது எப்படி
லக்னோ, ஒவ்வொரு தெருக்களும், சந்துகளும் ருசியான உணவுகளை மணக்கும் வாயில் நீர் ஊற்றும் சுவையான உணவுகளின் தேசம். கபாப்ஸ் முதல் பிரியாணி, ஹலீம் மற்றும் பல, லக்னோவி உணவுகள் அங்குள்ள அனைத்து உணவுப் பிரியர்களுக்கும் ஒரு உண்மையான ஒப்பந்தம். இப்போது, ​​​​இது கேள்வியைக் கொண்டுவருகிறது, லக்னோவி உணவு என்றால் என்ன? பல நூற்றாண்டுகளாக லக்னோவின் தெருக்களில் ஆட்சி செய்து வரும் இந்த உணவு வகைகளில் முதன்மையாக இறைச்சி…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
“KVஆனந்தின் விடியும் முன்னே பிரியாணி”
மைசூர்! அதிகாலை 4:09 மணி ஒரு விளம்பர ஷுட்டிங்கிற்காக வந்திருந்தோம்! சீக்கிரம் விழிப்பு வந்துவிட்டது தங்கியிருந்த ஓட்டலில் போன் செய்து ஒரு காபி கேட்டால் ஐந்தரை மணிக்கு மேல் தான் என்றனர்! சரி நம் புரொடக்‌ஷனில் சொன்னால் வாங்கி வருவார்களே என புரொடக்‌ஷன் இன்சார்ஜ் ரவியை அழைத்தேன்!
ரவி குட்மார்னிங் எனக்கு.. என்று தான் ஆரம்பித்தேன்! சொல்ங்கோ சார்க்கு ஃபுல்லா? ஆஃபா? என்றான் தெலுங்குத் தமிழில் ரவி! அடேய் விடியற்காலையிலேயே குடிக்க ஆரம்பிச்சா ஷுட்டிங் விளங்குனா மாதிரி தான் என்றதும் அதில்லே சாரு நேனு ஹனுமந்து பிரியாணி வாங்கப் போறேன் அதான் கேட்டேன்!
என்னது ஹனுமந்து பிரியாணியா? விடியற்காலை 4 மணிக்கா? இருந்த கொஞ்ச நஞ்ச தூ��்கமும் பஞ்சாய் பறக்க மைசூர் குளிரில் பைப்பில் இருந்து வந்த ஐஸ்வாட்டரில் ஜிலீரென்று முகம் கழுவி அறைக்கு வெளியே வந்தால் கிட்டத்தட்ட புரொடக்‌ஷனில் உள்ள 4 அடுக்கு கேரியர் ஸ்டைல் ஹாட்பேகுகளோடு நின்றான் ரவி!
என்ன ரவி கிட்டத்தட்ட 12 டிபன் பாக்ஸோடு கிளம்பிட்டே என்றேன்! ஆமா சாரு கேமிரா மேன் ஆனந்த் காரு செப்பி அல்லாத்துக்கும் பிரியாணி வாங்கப் போறேன் என்றான்! மறைந்த கே.வி.ஆனந்த் தான் அந்த ஒளிப்பதிவாளர்! மனுஷன் அபாரமான உணவு ரசனை உடையவர்! அவர் ஒரு நடமாடும் உணவுப் பல்கலைக்கழகம்!
எந்த ஊரில்.. எந்த உணவு.. எந்தக் கடையில்.. எந்த நேரத்தில்.. என அத்தனை விவரங்களையும் நாக்கின் நுனியில் வைத்திருப்பார்! காமிராவுக்கு அடுத்து அவர் நேசித்தது விதவிதமான உணவுகளை! அப்படி என்னய்யா இந்த பிரியாணி ஸ்பெஷல் அவரிடமே கேட்க முடிவு செய்து, அவர் எவ்வளவு பிரியாணி வாங்க சொன்னாருப்பா?
என்று ரவியிடம் கேட்க.. ஒரு ஃபுல் மட்டன் பிரியாணி சார் என்றான் எனக்கும் அதையே ஆர்டர் செய்துவிட்டு ஆனந்த் சார் எழுந்தாச்சா என்று கேட்க, காலை மூன்றரைக்கே லொகேஷன் போயிட்டார்னு சொன்னாங்க (ஷுட்டிங் மறுநாள் தான்) காலை சூரிய ஒளி எப்படி அங்கு விழுகிறது என்றறிய சூரிய உதயத்திற்கு முன்பே செல்வது..
கேமிராமேன்களின் வழக்கம்! சரி நாமும் அங்கே போவோம்னு டிரைவரை எழுப்பி ரெடியாகச் சொல்லி சாலைக்கு வந்தேன்! வெளியே இருந்த கடையில் ஒரு அற்புதமான காபி கிடைக்க 2வது காபியின் கடைசி மிடறை விழுங்கும் போது டிரைவர் காரோடு வந்தார்! சோம்நாத்புரா கோவில் தான் எங்கள் லொகேஷன்!
அதாண்டா இதாண்டான்னு ரஜினி அருணாச்சலம் படத்தில் ஆடுவாரே அதே கோவில் தான்! மைசூரில் இருந்து போக்குவரத்து வெறிச்சிட்ட அதிகாலைச் சாலையில் 1 மணி நேர பிரயாணம்! நாங்கள் கோவிலில் இறங்கும் போது வானத்தில் சாம்பல் மற்றும் ஆரஞ்சு காம்போவில் மேகங்கள் ஆடை அணிந்திருந்தன!
மைசூரின் குளிரில் சூரியன் சோம்பலாய் கண் விழிக்க மிச்ச இருள் அங்கு படர்ந்திருந்ததூ! உள்ளே இருக்கும் பெரிய கோபுரத்தின் கீழே டிராலி ஷாட் வைப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார் ஆன���்த்! உள்ளே நுழைந்த என்னை ஒரு சிறு தலையசைப்பில் “வாங்க” என்றுவிட்டு இயக்குநரோடு தனது டிஸ்கஷனை தொடர்ந்தார்!
ஆறரைக்கு பளிச்சென விடிந்துவிட்டது! ஆனந்திடம் லெமன் டீ வேணுமா என்ற புரொடக்‌ஷன் ஆளை ��ார்த்து பிரியாணி எங்கப்பா? என்றார்! வந்துடும் சார் என்றான் அவன்! என்னைப் பார்த்து புன்னகைத்தார்! இந்த ஹனுமந்த் பிரியாணி சாப்பிட்டு இருக்கிங்களா வெங்கட் என்றார்! கும்பிடப் போன தெய்வம்..
குறுக்கே வராமல் குடியிருக்கவே வந்தா! ஆமா ஆனந்த் சார் இந்த பிரியாணிக்கு என்ன சிறப்பு என்றேன்! வெங்கட் இந்த ஹனுமந்து பிரியாணி மைசூர் ஃபேமஸ்! அதிகாலை 7 மணிக்குள் தீர்ந்திடும்! இதை பயில்வான் பிரியாணின்னும் சொல்வாங்க! அதிகாலை உடற்பயிற்சி செய்யறவங்க பயிற்சி முடிஞ்சதும் சாப்பிடுவாங்க!
நாம இதை பிரியாணின்னு சொன்னாலும் இவங்க இதை புலாவ்னு சொல்றாங்க! என்ன பேரு வச்சி கூப்பிட்டாலும் ஐஸ்வர்யாராய் ஐஸ்வர்யாராய் தானே! நம்ம நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா போல இங்கும் ஏகப்பட்ட ஹனுமந்து பிரியாணி கடை இருக்கு ஆனா அக்பர் ரோட்டில் இருக்க பிரியாணி கடைதான் ஒரிஜினல் கடை!
இங்கே மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமல்ல மட்டன் சாப்ஸ், மட்டன் பால், எல்லாம் க்ரேவியோடு கிடைக்கும்! என்ற போது ரவி வந்துவிட அவனை ஆனந்த் தனது காதலியைப் போல பார்த்தார்! காலை 7:20 தான் ஆகியிருந்தது! கோவிலின் வெளியே ஒரு மரத்தடியில் அனைவரும் கை கழுவிவிட்டு நாற்காலிகளில் அமர்ந்தோம்!
புரொடக்‌ஷன் லட்சணப்படி இலை விரித்த தட்டில் கையில் நீர் ஊற்ற இலையைத் துடைத்தோம்! இலையில் சிறு இனிப்பும், தயிர்பச்சடியும் வைத்தனர்! ஹாட்பேகை திறந்ததும் அந்த இடமே மசாலா மணத்தில் நிறைந்தது! ஆவி பறக்க வெண்ணிற பிரியாணி ஆம்! நான் முதன் முதலில் பிரியாணியில் ஒரு வெள்ளைக் காரனைக் கண்டேன்!
கறிகள் பூவாய் வெந்திருக்க மட்டன்சாப்ஸ் குழம்பும், மட்டன் பால்ஸ் க்ரேவியும் தயிர் பச்சடியும் அந்த பிரியாணிக்கு சிறப்பாக இருந்தன! பிரியாணி கொஞ்சமும் திகட்டவில்லை! அனைவரும் திருப்தியாகச் சாப்பிட எல்லா ஹாட் பேகுகளும் காலியாகின! என் வாழ்நாளில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட்டது அன்று தான்!
அதன் பின்னர் எப்போது மைசூர் சென்றாலும் இந்த பிரியாணி உண்ணாமல் திரும்பியதில்லை! இங்கு சாப்பிட்ட அனுபவத்தால் ஒரு முறை நான் பெங்களூர் போகும் போது மைசூர் போல அதிகாலை பிரியாணி இங்கும் இருக்கான்னு கேட்டேன்! ஓ இருக்கே என்றனர்!
பெங்களூர் பிரியாணி அனுபவங்கள் நாளை..
சிறந்த உணவுப் பிரியரான ஆனந்த் சார் இன்று நம்மிடையே இல்லை! அவரிடம் இருந்து தான் நான் உணவகங்கள் பற்றிய டேட்டாக்களை சேகரிக்கும் வழக்கத்தைக் கற்றுக் கொண்டேன்! இன்றும் என் நண்பர்கள் எந்த ஊரா இருந்தாலும் என்னிடம் நல்ல உணவகங்களை பற்றிக் கேட்பது வழக்கம்! உங்களுக்க��� என் நன்றிகள் ஆனந்த் சார்!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
esamayal · 3 years ago
Text
சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?
தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.
27 புரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
0 notes
ashokonline · 7 months ago
Video
youtube
சிக்கன் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | CHICKEN BIRIYANI - Madurai...
0 notes
vijisfeast · 3 years ago
Text
Kaima rice chicken Biryani /
கைமா அரிசி சிக்கன் பிரியாணி #ChickenRecipes #Biryani #chickenbiryani
Watch the full recipe at
https://youtu.be/vQATd3MeKgA
Tumblr media Tumblr media
youtube
1 note · View note
newbieposts · 4 years ago
Link
Hi everyone ,watch this video completely this is a homemade chicken biriyani recipe .It will help you to cook chicken biriyani easily . And will meet more easy cooking recipe soon 😊 .Thank you. Watch and subscribe the channel for notification.
1 note · View note
tamilnadufoodcourtspecial · 4 years ago
Text
Watch "AMBUR CHICKEN BIRIYANI- ஆம்பூர் சிக்கன் பிரியாணி | cook from AMBUR people |Original recipe" on YouTube
youtube
1 note · View note