#சரிநிகர்
Explore tagged Tumblr posts
Text
யார் முதலில் சாப்பிட வேண்டும்
“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச் செய்து சாப்பிட வைக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனில் குறைந்த பட்சம் ஒரிருகவளமாவது அவரது தட்டில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த உணவை தயாரிப்பதற்காக அவர் தான் நெருப்பின் சூட்டில் வெப்பத்தில் கஷ்டப்பட்டார்.” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு :…
0 notes
Text
விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)
நூலின் பெயர்: விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி) ஆசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன் வெளியீடு: விவேகா பிரசுராலயம், கொழும்பு முதற் பதிப்பு: கார்த்திகை 1995 http://www.sirukathaigal.com/2021/07/11/ 1. விபசாரம் செய்யாது இருப்பாயாக 2. சமுதாய வீதி 3. அந்தோனியும் விசேந்தியும் 4. மாரியாயி ஒரு மாடு தானே? 5. பட்டத்துக்குரிய இளவரசன் 6. ஒரு பாவத்தின் பலி! 7. கீழைக்காற்று 8. இப்படி எத்தனை காலம்? 9. ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள் 10. பட்டம் விடுவோம் 11. கரையேறும் மீன்கள் 12. லூக்கஸ் மாஸ்ரர் 13. சபிக்கப்பட்டவனா? 14. ஓர் அக்கினிக்குஞ்சு 15. உனக்கு இது போதும் 16. கைதேர்ந்தவர்கள் 17. கவரிமான்கள் 18. தேயிலைப் பூ என்னுரை... நான் யாழ்ப்பாணத்திலே ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும், அவலங்களையும் பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஒரு அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள் அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இச் சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக, சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்னிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது, மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன். அத்தகைய நோக்குடன் எழுதப்பட்ட சிறு கதைகளில் சிலவே இத் தொகுதியில் அடங்கியுள்ளன. இச்சிறு கதைத் தொகுதிக்கு வழமை போல் விமர்சகர் ஒருவரின் முகவுரையை நான் பெற விரும்பவில்லை. இலங்கையிலே தமிழ் இலக்கிய விமர்சகர்கள் தம்மிடம் அளிக்கப்படுகின்ற நூல்களுக்கு முகவுரையை மனமுவந்து அளிக்கின்றபோது நூலாசிரியருக்கு மதிப்பளித்தே முகவுரை எழுதுகின்றனர். அங்கே உண்மை மாசுபட்டு விடுகின்றது. அதிகமான கலை இலக்கிய விமர்ச கர்கள் பல்கலைக்கழகங்களிலே தமிழ் விரிவுரையாளராக இருப்போர். அவர்களுக்கு விமர்சனம் செய்வது அவர்களது தொழிலின் ஒரு கூறு. பெரும்பாலோர் யதார்த்த நிலையைக் கருத்திற் கொண்டன்றி, வரைவிலக் கணங்களிலிருந்து கலை இலக்கியப் படைப்புகளை நோக்குபவராவர். அதனால் ஒரு சிருட்டிகர்த்தாவின் படைப்பைப் பற்றி உண்மையான மதிப்பீடு நிகழ்வ தில்லை. அக் காரணத்தால் எனது இக்கதைத் தொகுதியைப் படித்து மதிப்பீடு செய்யுமாறு வாசகர்களிடமே ஒப்படைக்கின்றேன். எனது இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள் இதைப் படிக்கின்ற மக்களின் அறிவிலும், உணர்விலும் ஒரு சிறு பொறியைத் தட்டி விடுமென்ற நம்பிக்கை எனக்குண்டு. என் சிறுகதைகளைப் பிரசுரித்து உதவிய வீரகேசரி வார மஞ்சரி ஆசிரியர், இராஜகோபாலனுக்கும், தினகரன் ஆசிரியர் குழுவுக்கும், சிந்தாமணி, ஈழநாடு, முரசொலி, தாயகம், வசந்தம், குமரன் முதலிய பத்திகைகளுக்கும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் எனது நன்றிகள்! இச் சிறுகதைத் தொகுதி வெளிவர ஒத்துழைப்பு நல்கிய எல்லோருக்கும் குறிப்பாக ஓவியர் தம்மிக்கா அக்மீமனவுக்கும், சிவகுருநாதனுக்கும் என்னன்றிகள் உரித்தாகும். யோ. பெனடிக்ற் பாலன் 134, எலிஹவுஸ் வீதி, ல முகத்துவாரம் கொழும்பு 15.
0 notes
Photo
#KadhalKanKattuthe #காதல்_கண்_கட்டுதே A simple love story. எளிமையாக பல்வேறு உண்மைகளை கடத்திச் சென்ற ஒரு சின்ன கதை. பெண் வாகனம் ஓட்டுவது தவறா???அதனை எதிர்ப்பதில் எத்தனை ஆணாதிக்கமும், உரிமை நசுக்கலும்!!!! காலம் கடந்த நட்பால் மட்டும் உன்னை காதலித்து வாழ்வேன் என்ற வரிகள் மனதில் பதிந்த வரிகள்.. பெண்ணானவள் ஓர் நல்ல தோழியாகும் போது அது தாய்மைக்கு நிகர்தான்.. இதனை விதைக்கும் போது தான் சரிநிகர் சமத்துவம் பிறக்கும்.. இனியும் சாம்பல்கள் எந்த ஒரு பிஞ்சையும் கருக்கிட வேண்டாம்.. அந்த வேதனையை நினைக்ககூட வலிக்கிறது மனது... என்றும் #காதல்_கண்_கட்டட்டும் தீமை மறந்த நட்பு மலர... (at Aascars Theatre)
0 notes
Text
ஆன்லைன் ஷாப்பிங் நன்மைகள்
நாம் வழக்கமாக ஷாப்பிங் செல்வது எப்படி? ஆடை அலங்காரங்களை அணிந்து கொண்டு ஒரு பையையும் பணத்தை எடுத்துக் கொண்டு, கடைக்குச் செல்கின்றோம். ஒரு கடை என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு பல்பொருள் அங்காடி அல்லது வணிக வளாகமாகவும் இருக்கலாம். அதனால் அங்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து பார்த்து வாங்குகிறோம். அவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வாருகின்றோம். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நிலமை…
0 notes
Text
பெற்றோர்களினால் தம்மை அறியாமல் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் தவறுகள்
ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும். எந்தவொரு பிள்ளைக்கும் முதல் ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் சொந்த வீடாகும், அவர்களின் எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகள் போன்ற பல விடயங்கள் அந்த பெற்றோரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்வதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பிள்ளைகள் நல் வழியில் சென்றால், அதன் கௌரவம் பெற்றோருக்கு கிடைப்பது போல் பிள்ளைகள் மோசமான பாதையில்…
0 notes
Text
முஸ்லிம்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?
நாய் வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். செல்லப் பிராணிகளை வளர்க்கும் நோக்கத்துடன் இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி இல்லை. “எந்த வீட்டில் நாயோ அல்லது உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம். மேலும், “நாய் வளர்ப்பவர்கள் தினமும் இரண்டு கீரத் அளவு (இரு மடங்கு உகது மலையளவு)…
0 notes