#கார்லிக்
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 5 months ago
Text
#லெபனான்_உணவுகள்
இவ்வுலகின் மிகச் சிறந்த ருசியான உணவுகள் கிடைக்கும் டாப் 5 நாடுகளில் லெபனானும் ஒன்று! மொழி தெரியாத ஏதாவது ஒரு நாட்டில் சிக்கிக் கொண்டு நாம் எந்த உணவை சாப்பிடுவது என்று தவிப்பவர்கள் கண்ணில்.. லெபனான் நாட்டு உணவுகள் விற்கும் கடைகள் தெரிந்தால் தயங்காமல் அங்கே போய் சாப்பிடலாம்! உணவு வகைகளில் சைவம் / அசைவம் இரண்டிலும் ஸ்டார்ட்டர்..
முதற் கொண்டு டெஸர்ட்ஸ் எனப்படும் ஃபினிஷிங் வரை பலப்பல ருசியான உணவுகளை தங்களது கைப்பக்குவத்தில் தரும் ஆச்சிகள் நம் செட்டி நாட்டில் மட்டுமல்ல லெபனான் நாட்டிலும் உள்ளார்கள்! உலகில் ஒரு மனிதன் நிச்சயம் ருசிக்க வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று! லெபனான் நாட்டு உணவில் ஆலிவ் ஆயிலும், வெள்ளைக் கொண்டைக் கடலையும் பருப்பும் நெய்யும் போன்றது!
அது இல்லாவிட்டால் அங்கு எந்தச் சமையலும் முழுமை பெறாது! அடுத்து டெஸர்ட்ஸ் எனப்படும் உணவுகளின் தாய்நாடு லெபனான்! இவர்களது தேநீர் / காபியும் தனித்துவம் வாய்ந்தவை! லெபனானின் ஐஸ்க்ரீம்களும் ஜோரானவை! வித விதமான உணவு வகைகளை ருசிப்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு (அதான் தெரியுமேங்குற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்) இதற்கு முன்பு..
பல நாடுகளில் எனது வீர தீரப் பிரதாபங்களின் விபரீத வரலாறுகள் நினைவுக்கு வந்தன. செஷல்ஸ் தீவுகளில் ஆக்டோபஸ் கறி, மலேசிய நல்லி எலும்பு, தாய்லாந்தில் பூச்சிக்கறி, சீன பாம்பு நூடுல்ஸ், அரபு ஒட்டகம் என ருசித்து உள்ளேன்! ஆனால் இங்கு அது போல முகம் சுளிக்கும் இம்சைகள் இல்லை! உலகின் பாரம்பரியமான உணவு வகைகள் இது! ஆயிரக்க���க்கான வருடங்கள் பாரம்பரிய மிக்கது!
லெபனான் உணவுகளில் அதிக உணவுகள் ரோமானியர்களின் உணவு முறையிலிருந்து உருவானவை! எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் சிரியா உணவுக் கலாச்சாரமும் இதில் பின்னிப் பிணைந்திருக்கும். யார் கண்டது எகிப்திய பிரமிடுகளுக்குள் இன்று டம்மியாக படுத்துக் கிடக்கும் பல மம்மிகள் கூட இதை சாப்பிட்டு இருக்கலாம்! பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் வந்த பிறகு வேறு சிலபுஉணவு முறைகளை..
அது லெபனானில் புகுத்தி இருந்தாலும்.. அது லெபனீஸ் உணவுக் கலாச்சாரத்தை ஏதும் பாதிக்கவில்லை! வாங்க இனி நாம் லெபனான் உணவுகளை ருசிக்கலாம்! முதலில் ஃபலாஃபல் (Falafal) நம்ம ஊரு மசால் வடை கொஞ்சம் உருண்டையா போண்டா போல இருந்தா எப்படியிருக்குமோ அப்படி இருந்தது! இதனோடு அவித்த ஆலிவ், தக்காளி, புதினா மற்றும் க்ரீன் இலைகள் தந்து இது 100%
சைவ உணவு சாப்பிடுங்க என்றனர்! தயக்கமாக எடுத்து கடித்தேன்! அட சூப்பர்! இது அப்படியே நம்ம ஊரு மசால் வடையாச்சே! ஆமாங்க அப்படியே மசால் வடை தான் நம்ம வடைக்கு அரைப்பது போல கர கரன்னு அரைக்காது மிக மிக நைசாக அரைத்திருந்தார்கள்! நல்ல சூடாக சாஃப்டாக இருந்ததால் அந்தத் தட்டு உடனே காலி! அடுத்து "ஹம்மஸ்" இதுதான் புகழ் பெற்ற லெபனான் உணவு! வெள்ளைக்..
கொண்டைக் கடலையில் எள் சேர்த்து மென்மையாக ஃபேர்னஸ் க்ரீம் போல அரைத்து பரிமாறப்படும் உணவு! லெபனான் உணவுகளில் பூண்டு, எலுமிச்சை அதிகம் உபயோகிக்கிறார்கள்! அதே போல் சிக்கன், மட்டன், மீன்கள் எல்லாம் பெரும்பாலும் கிரில்டு முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கும்! மட்டனில் லாம்ப் என்பது இங்கு ஃபேமஸ்! நம்ம ஊரில் பிரியாணியில் கறித் துண்டுகளை நீக்கி விட்டு..
குஸ்கா என்பது போல 100% சைவமான ஹம்மஸில் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் ஹம்மஸ் என்கிறார்கள்! இதற்கு மெயின் கோர்ஸ் கார்லிக் ரொட்டி! யெஸ் நம்ம ஊரு நான் ரொட்டி போல ஆனால் சிறிய முக்கோணமாய் மென்மையான ரொட்டிகள்! ஒரு ஸ்பூன் ஹம்மசை ஆலிவ் எண்ணை விட்டு கலக்கி ஜாம் தடவுவது போல ரொட்டியில் தடவி சிக்கன் துண்டுகளை வைத்து அதேபோல..
இன்னொரு ரொட்டியிலும் தடவி ஒன்றாக்கிச் சாப்பிடவேண்டும்! ஆகா எனக்கு அப்படியே நார்த் இண்டியா ஃபீல் வந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அடுத்து வந்தது ஃபிஷ் ஃபில்லட் (Fish fillet) மீனை ப்ளேட் கட்டிங் எனப்படும் தலை முதல் வால் வரை படுக்கை வசத்தில் கட் செய்த இறைச்சி! ஒரு சிறிய கர்சீப் போல ஒரு பக்க இறைச்சி! மீனிலிருந்து நடு முள்ளெல்லாம் எடுத்துவிட்டு..
இளநீரில் இருக்கும் வழவழ தேங்காய் போல தோசையாக வந்தது! ஆலி��் காய்கள், தக்காளி க்ரீன் சாலட் என காம்பினேஷன் பக்கா! கடைசியாக வந்தது பக்லவா.! (Baklava) இந்த வகை இப்ப உலகப் பிரபலம்! ஏன் ! நம்ம வீட்டுக் கல்யாண விருந்தில் கூட இதை இப்ப மெனுவில் சொல்றோம்! அது தாங்க டெசர்ட்ஸ்! லெபனான் தான் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது! முக்கோணம் அல்லது..
டைமன்ட்/ ஹார்டின் வடிவ ஆரஞ்சு க்ரீம் கேக்குகள் உலர் பருப்புகள் தேன் கலந்த ருசியான உணவு! இந்த குனாஃபா கூட லெபனானின் உணவு வகைகளில் ஒன்று தான்! கத்திரிக் காய், உருளைக் கிழங்கில் கூட நிறைய வெரைட்டிகள் இதிலுண்டு!இவையனைத்துமே டிட்டோ நம்ம இந்திய உணவுகள் போலத்தான் ருசியிலும்! மனிதப் பிறவியில் லெபனானின் உணவுகளை ருசிக்காதவர்களின் ஜென்மம் ஈடேறாது!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
esamayal · 4 years ago
Link
கார்லிக் புரோட்டா செய்வது எப்படி?
0 notes
yazhparikitchen · 4 years ago
Link
1 note · View note
vthamilmedia · 3 years ago
Photo
Tumblr media
பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் ரெசிபி
0 notes
itsnirmal888 · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://pickstofit.com/paleo-butter-naan-garlic-naan-keto-naan-paleo-diet-recipes-in-tamil-jo-kitchen/
Paleo Butter Naan & Garlic naan | Keto naan | Paleo diet recipes in tamil | Jo Kitchen
Paleo / Keto Naan: பேலியோ நான் / பட்டர் நான் / கார்லிக் நான் Paleo butter Naan / paleo garlic Naan Naan is traditionally made. source
0 notes
padhusindiankitchen · 4 years ago
Video
youtube
Restaurant style Butter and Garlic Naan I Without Tandoori Oven I பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்
0 notes
besttamilquotes · 7 years ago
Photo
Tumblr media
Use full message… ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக் ஜாதிபத்திரி – Mace – மெக் இஞ்சி – Ginger – ஜின்ஜர் சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர் பூண்டு – Garlic – கார்லிக் வெங்காயம் – Onion – ஆனியன் புளி – Tamarind – டாமரிண்ட் மிளகாய் – Chillies – சில்லிஸ் மிளகு – Pepper – பெப்பர் காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies பச்சை மிளகாய் – Green chillies குடை மிளகாய் – Capsicum கல் உப்பு – Salt – ஸால்ட் தூள் உப்பு – Table salt வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர் கற்கண்டு – Sugar Candy ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம் பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts கிஸ்மிஸ் – Dry Grapes லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ் கசகசா – Poppy – பாப்பி உளுந்து – Black Gram – பிளாக் கிராம் கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம் பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம் பாசிப்பருப்பு – Moong Dal கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால் உழுத்தம் பருப்பு – Urid Dhal துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம் கம்பு – Millet – மில்லட் கேழ்வரகு – Ragi – ராகி கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம் கோதுமை – Wheat – வீட் கோதுமை ரவை – Cracked Wheat சோளம் – Corn சோளப்பொறி – Popcorn எள்ளு – Sesame seeds / Gingelly seeds நெல் – Paddy – பாடி அரிசி – Rice – ரய்ஸ் அவல் – Rice flakes பச்சை அரிசி – Raw Rice புளுங்கல் அரிசி – Par boiled rice கடலை மா – Gram Flour மக்காச்சோளம் – Maize – மெய்ஸ் வாற்கோதுமை – Barley – பார்லி பச்சை பட்டாணி – Green peas சேமியா – Vermicelli சவ்வரிசி – Sago ரவை – Semolina கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa க���ுகு – Mustard – முஸ்டார்ட் சீரகம் – Cumin – குமின் வெந்தயம் – Fenugreek சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா மஞ்சள் – Turmeric – டர்மரிக் ஓமம் – Ajwain / Ajowan தனியா – Coriander – கோரியண்டர் கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப் கறிவேப்பிலை – Curry Leaves கஸ்தூரி – Musk – மஸ்க் குங்குமப்பூ – Saffron – சஃப்ரான் பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர் கற்பூரம் – Camphor – கேம்ஃபர் மருதாணி – Henna – ஹென்னா துளசி – Tulsi எலுமிச்சை துளசி – Basil எண்ணெய் – Oil – ஆயில் கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில் தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில் நல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில் வேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில் பாமாயில் – Palm Oil ஆலிவ் ஆயில் – Olive Oil பால் – Milk – மில்க் பால்கட்டி – Cheese – ச்சீஸ் நெய் – Ghee – கீ வெண்ணெய் – Butter – பட்டர் தயிர் – Curd/Yoghurt – க்கார்ட் மோர் – Butter Milk – பட்டர் மில்க் கீரை – Spinach – ஸ்பீனச் அவரை – Beans – பீன்ஸ் கர்பூரவள்ளி – Oregano நார்த்தங்காய் – Citron – சிட்ரான் திருநீர்பச்சை – Ocimum-basilicum சீத்தாப்பழம் – Custard-apple மாதுளை – Pomegranate பரங்கிக்காய்/பூசனிக்காய் – Pumpkin கருங்காலி மரம் – Cutch-tree அதிமதுரம்-Liquorice அருகம்புல் – Bermuda Grass வல்லாரை கீரை – Pennywort (Centella asiatica) புதினா இலை – Mint leaves வெற்றிலை – Betel leaves நொச்சி இலை – Vitexnegundo (Chaste Tree) அத்தி – Fig கீழாநெல்லி – Phyllanthus nururi தாழை மரம் – Pandanus Odoratissimus,Fragrant Screwpine தூதுவளை – Purple-fruited pea eggplant துத்திக்கீரை – Abutilon indicum பிரமத்தண்டு – Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae கோவைக்காய் – Coccinia grandis முடக்கத்தான் கீரை – Cardiospermum halicacabum குப்பைமேனி – Acalypha indica; linn; Euphor biaceae நத்தைச்சூரி – Rubiaceae,Spermacoce hispida; Linn; சோற்றுக்கற்றாழை – Aloe Vera நாவல் பழம் – Naval fruit (Syzygium jambolana) பேய் மிரட்டி செடி – Anisomeles malabarica, R.br, Lamiaceae தேள்கொடுக்கு செடி – Heliotropium நிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica நெல்லிக்காய் – Amla,Indian Gooseberries சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) – Peucedanum grande; Umbelliferae சிறு குறிஞ்சான் – Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe அரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia அகத்திக்கீரை – Sesbania grandiflora செண்பகப் பூ – Sonchafa (champa) சுண்டைக்காய் – Solanum torvum(Turkey Berry) செம்பருத்தி – Hibiscus(Shoe Flower) கரும்பு – Sugar cane நீர்முள்ளி – Long leaved Barleria (Hygrophila auriculata) அன்னாசிப் பூ – Star Anise பூவரசு – Portia tree (Thespesia populnea) ஊசிப்பாலை – Oxystelma Secamone அமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry கத்தரிக்காய் – Egg plant / Aubergine / Brinjal கொய்யாப் பழம் – Guava மரவள்ளிக் கிழங்கு – Tapioca சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு – Yam விளாம் பழம் – Wood apple முள்ளங்கி – Radish / parsnip புடலங்காய் – Snake gourd பாகற்காய் – Bitter gourd வெண்டைக்காய் – Ladies Finger/ Okra வேர்கடலை/நிலக்கடலை – Peanut வாழைக்காய் – Ash Plantain வாழைப்பழம் – Banana ஊறுகாய் – Pickle உருளைக் கிழங்கு – Potato தேங்காய் – Coconut இளந்தேங்காய் – Tender Coconut இளநீர் – Tender Coconut water பதநீர்/பயினி – Neera /Palmyra juice கள்ளு – Palm wine/Palm Toddy சுண்ணாம்பு – Lime ஆப்பச் சோடா – Baking Soda தீப்பெட்டி – Match Box ஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick
0 notes
venkatesharumugam · 7 months ago
Text
#அசைவமெனும்_அமுதம்
எனது தம்பி மீன் சமைக்கும் போது மீன் குழம்பு வாசத்திலேயே அதில் பூண்டு போட்டுருக்கா இல்ல மாங்காய் போட்டு இருக்கான்னு அதன் மணத்திலேயே அறிந்து கொள்வேன்! அதிலும் விரால் மீன் கருவேப்பிலை ரோஸ்ட் எனது ஃபேவரைட்! மட்டன் ஈரல் குழம்போ அல்லது சுரைக்காய் & சோயா போட்ட மட்டன் குழம்போ கொதிக்கும் போதே அல்சேஷன் போல என்னால் நுகர முடியும்!
சிலசமயம் கத்திரிக்காய் & முருங்கைக்காய் போட்டு வைக்கும் மட்டன் குழம்பில் இருவகை! 1. இளசான முருங்கையை அப்படியே வெட்டிப்போட்டு செய்யும் முருங்கை மட்டன் குழம்பு! 2. முருங்கையை வெட்டிப்போட்டு அதைத் தனியாக நன்கு வேகவைத்து முருங்கைக்கு நடுவில் உள்ள ஜெல்லியை மட்டும் தனியாக வழித்து எடுத்து பெப்பர் தூவிய மட்டன் சுக்கா வருவலுடன் செய்யும் கூட்டு.!
சில நேரங்களில் கண்மாய் கத்திரிக்காயுடன் கோழி சாஃப்ட் ஈரலுடன் தேங்காய் எண்ணெய்யில் வதக்கிய கோழி ஈரல் குழம்பு வைப்பார்.! அது அதகளம்! தோசை இட்லி எல்லாம் தொட்டுக் கொண்டால் பல ஈடு இட்லிகளை ஒருவரே சாப்பிடும் ஈடு இணையில்லாத குழம்பு அது! மதியம் கொஞ்சம் தளர்வாகவும் இரவில் அது கெட்டியாகவும் இரட்டை வேடத்தில் பின்னியெடுக்கும்! சுவையும் ஜோர்!
மீன்குழம்பில் பூண்டுகளை போட்டு பூண்டையே மீனாக்கி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை ஊற்றி வைக்கும் விரால் மீன் & அயிரை மீன் குழம்புகளுக்கு ஆயிரம் ஏக்கர்களை அவர் பெயரில் எழுதி வைக்கலாம்.! அது சாதத்திற்கும் சரி இட்லிக்கும் சரி செம காம்போவாக இருக்கும்! தேங்காய், சீரகம், மிளகு, மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து அவர் வைக்கும் பிச்சுபோட்ட சிக்கன் பிரட்டலுக்கு எல்லாம் சாதமே அதைத் தேடி ஓடிவரும்!
உருளைக்கிழங்கு, வெள்ளை சோயாபீன்ஸ், நுக்கோல் போட்டு செய்யும் மட்டன் நெஞ்செலும்பு சாப்ஸை சாதத்துடனோ, இட்லியுடனோ, இடியாப்பத்துடனோ, சப்பாத்தியுடனோ எதில் வைத்து சாப்பிட்டாலும் சுவை அள்ளும். சில நேரங்களில் அதில் அவித்த முட்டையும் போடுவார்! நான் பெரும்பாலும் மதியம் சமைத்த அந்த முட்டையை இரவில் தான் சாப்பிடுவேன்! அதுவே அக்குழம்பின் சாறுகளில் ஊறி செமையாக இருக்கும்!
கறிவேப்பிலை & புதினாவை மை போல அரைத்து அதில் ஊறவைத்த மட்டன் அல்லது சிக்கனை சமைத்துச் சாப்பிடுவது இன்னொரு இன்பம்! மட்டன் கைமாவில் கோலா உருண்டை உருட்டி பொட்டுக்கடலையை மாவு போல் இடித்து பிரட்டி நுணுக்கிய முந்திரிகள் சேர்த்து வாழை நார் சுற்றி கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கும் மட்டன் கோலா உருண்டைகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்!
வாவல் எனும் போஃம்ப்ரிட் மீனை ப்ளேட் கட்டிங்கில் அறுத்து எலுமிச்சை பிழிந்து ஊறவைத்து பிறகு மசாலா சேர்த்து அதை ஃபிரிட்ஜில் டிப்ரோஸ்ட் செய்து செய்யும் லெமன் தவா ஃபிஷ் அல்லது தந்தூரி ஃபிஷ் அதுவும் குடைமிளகாய் வெங்காயம் ச்செடா சீஸ் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறப்பாகும்! சிக்கன் லாலி��ாப்புடன் மைனீஸ், சாஸ் ஏதும் இன்றி புதினா சட்னியுடன் சாப்பிட்டுப் பார்த்தால் சுவர்க்கம் அருகில்!
எலும்பில்லாத கறியை குக்கரில் அரைத்து எடுக்கும் ஸ்மாஷ்டு மீட் எனப்படும் அரைத்த கறி.. ஃபிஷ், சிக்கன் அல்லது மட்டன் இப்படி எதுவானாலும் இதோடு தக்காளி, புதினா, ஆனியன், ஆலிவ் ஆயில், ஸ்பானிஷ் மிளகாய், பாப்ரிக்கா (குடை மிளகாய்தூள்) துருவிய ச்செடா சீஸ், கார்லிக் பேஸ்ட், ஒயிட் பெப்பர், முட்டைகோஸ் தழைகள், துருவிய சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து வதக்கலாக சமைத்தால் ஆஹா அதுவல்லவோ ருசி! டிரை பண்ணிப்பாருங்க!
டிஸ்கி : இப்போது நான் அதிதீவிர டயட்டில் உள்ளேன்!
Tumblr media
0 notes
venkatesharumugam · 11 months ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 பட்டர் கார்லிக் மஷ்ரூம் ஃப்ரை 🟢
தேவையானவை : காளான் - 500கிராம், வெண்ணெய் - 100 கிராம், ஆலிவ் ஆயில் - 2 tbs, பொடியாக நுணுக்கி நறுக்கப்பட்ட பூண்டு - 4 பற்கள், வெள்ளை ஒயின் - 75மிலி, சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை : ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய்யை சேர்த்து, அதில் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து பின்னர் சில்லி ஃப்ளேக்ஸை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து இதில் காளான்களை போட்டு எல்லா புறமும் நன்கு ரோஸ்ட் ஆகும்படி சில நிமிடங்கள் பிரட்டவும். பின்னர் இதில் வெள்ளை..
ஒயின் சேர்த்து நன்கு கலக்கவும்! ஒயின் சேர்த்து 1 நிமிடம் கிளறி நுணுக்கி வைத்த பூண்டை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்! காளான் நன்கு வெந்துவிட்டதா என்று ஒரு போர்க் ஸ்பூனில் குத்திப் பார்த்து பிறகு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறுதியில் நறுக்கி வைத்த மல்லித்தழைகள் தூவி இறக்கி வைக்கவும்! ருசி மிகுந்த..
அற்புதமான பட்டர் கார்லிக் மஷ்ரூம் ஃப்ரை ரெடி! சாஸ், மயோனீஸ், புதினா சட்னியோடு பரிமாறவும்! மழைக்காலத்தில் செய்து ருசித்தால் அடுத்து மழை வரும் போதெல்லாம் இந்த மஷ்ரூமும் நினைவில் வரும்! வெள்ளை ஒயின் இல்லாவிட்டால் சோயா சாஸ் சேர்த்தும் இதைச் செய்யலாம்! சாஸ் சேர்ப்பதால் சட்னி, மயோனீஸ் தேவை-படாது!
1 note · View note
venkatesharumugam · 1 year ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 கார்லிக் ப்ரான் ஒயிட் சாஸ் 🔴
தேவையானவை : 500 கிராம் சுத்தம் செய்த இறால், 2 tbs உப்பில்லா வெண்ணெய், 1 tbs தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 7 பற்கள் துருவிய பூண்டு, 100மிலி உலர் வெள்ளை ஒயின் அல்லது சிக்கன் ஸ்டாக், 300 மிலி கொழுப்பு குறைந்த கிரீம், 100 கிராம் துருவிய பார்மேசன் சீஸ், 2 tbs நுணுக்கி நறுக்கிய மல்லித்தழை, உப்பு மற்றும் பெப்பர் - தேவையான அளவு.
செய்முறை : சுத்தம் செய்யப்பட்ட இறாலை (வாலோடு அல்லது வால் இல்லாமல்) கழுவி வைக்கவும். ஒரு பெரிய வாணலியை மிதமான சூட்டில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும். இறாலை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, ஒவ்வொரு பக்கத்திலும் 1-2 நிமிடங்கள் வறுக்கவும், இறால் நிறம் இளஞ்சிவப்பு வந்தாலே போதும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தனியே வைத்துவிடவும். அதே வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கவும் இப்போது துருவிய பூண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு வெள்ளை ஒயின் அல்லது சிக்கன் ஸ்டாக் ஊற்றவும்; கடாயின் அடிப்பகுதியில் இது பிடிக்காத அளவு இதை கிளறவும் அடுப்பை குறைந்த நடுத்தர..
வெப்பத்திற்கு மாற்றி, க��ரீம் சேர்க்கவும் அடிபிடிக்காமல் அவ்வப்போது கிளறி இதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். உங்கள் தேவைக்கு ஏற்றபடி இப்போது உப்பு மற்றும் பெப்பர் சேர்த்து கிளறி துருவிய பார்மேசன் சீஸ் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருகி சாஸ் கெட்டியாகும் வரை..
சாஸை வேகவைக்கவும். வாணலியில் வறுத்து வைத்த இறால் சேர்த்து கிளறி இறால் மீது இந்த சாஸை அள்ளி அள்ளி ஊற்றி சமைக்கவும் ஒரளவு கொதித்து குழிழ்கள் வந்ததும் மல்லித் தழைகள் தூவி ருசி பார்த்து தேவைப்பட்டால் உப்பு மற்றும் மிளகு சேர்த்து இறக்கிவிடவும்! கார்லிக் ப்ரான் ஒயிட் சாஸ் ரெடி!
பாஸ்தா, சோறு அல்லது வேகவைத்த காய்கறிகளோடு பரிமாறவும்
மிகவும் கெட்டியான க்ரீம் பயன்படுத்த வேண்டாம்.க்ரீமை அதிக கொதி நிலைக்கு கொண்டு செல்லவும் வேண்டாம். திரிந்துவிடும் க்ரீமுக்கு பதில் தேங்காய் பால் அல்லது எவாப்ரேட் பால் கூட பயன்படுத்தலாம். பினோட் கிரியோட் அல்லது சார்டோனே போன்ற நல்ல தரமான உலர் வெள்ளை ஒயின் பயன்படுத்தவும்.
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 years ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 பட்டர் கார்லிக் ஃபிஷ் 🔴
சாஸ் செய்ய : வெண்ணெய் - 50 கிராம் (உருகியது) பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது), எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டீஸ்பூன்
தேவையானவை : வாவல் மீன் ஃபில்லட் - 350 கிராம், கெய்ன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், பெப்பர் - 1 டீஸ்பூன்,கார்ன் மாவு - 2 டீஸ்பூன், சமையல் எண்ணெய் - 100மிலி, 6 துண்டுகளாக்கிய எலுமிச்சை -1, உப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை : ஒரு கிண்ணத்தில் சாஸ் செய்யும் அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சாஸ் தயாரித்து தனியே வைக்கவும். மீன்களை படத்தில் உள்ளது போல (பொரித்த மீன்கள்) மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டவும், கார்ன் மாவு உப்பு, மிளகு மற்றும் கெய்ன் மிளகாய் சேர்த்து அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி தனியே வைக்கவும். ஒரு வாணலியை சூடாக்கி அதை மிதமான..
தீயில் வைத்து சேர்த்து, எண்ணெய் ஊற்றவும் தவாவில் மீன் பொரிக்கும் அளவு ஆயில் போதும்! அது சூடானதும், மீன் துண்டுகளை போட்டு 2 பக்கமும் மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை பொரிக்கவும். மீனை புரட்ட மரத்தாலான கரண்டிகளைப�� பயன்படுத்தவும். மீனை உடைக்காமல்பொரிப்பது அவசியம். மீன் பொரித்த பின்பு அதை ஆயில் வடிகட்டியில்..
போட்டு ஆயில் வடிந்தவுடன் பூண்டு வெண்ணெய் சாஸுடன் நறுக்கிய லெமன் வைத்துப் பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் அட்டகாசமான சிற்றுண்டி இது. பிரட் டோஸ்ட் செய்து இதோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்! கெய்ன் மிளகாய்தூள் இல்லாவிட்டால் சாதாரண மிளகாய் தூள் 3/4 டீஸ்பூன் சேர்க்கவும்!
{இந்த அளவுகள் 350 கிராம் சிக்கன் சமைக்கவே}
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 years ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 கார்லிக் பட்டர் சிக்கன் 🔴
செய்முறை : கபாப் சிக்கன் துண்டுகளை வெட்டுவது ரெண்டு வகைகளில் உள்ளது! ஒன்று சிக்கன் பிரஸ்ட் எனப்படும் பெரிய துண்டு அடுத்தது கபாப்புக்கு ஏற்றபடி 2 இஞ்ச் அளவில் சதுர வடிவில் வெட்டுவது! பெரிய பீஸ் எனில் படத்தில் உள்ளபடி கறியின் இரண்டுபக்கமும் நன்கு கீறிவிட்டுக் கொள்ளவும்! 500 கிராம் சிக்கனில் பெரிய பீஸ் 3 வரும்.. சின்ன பீஸ் 10 - 12 வரும்!
ஒரு தட்டில் 50 கிராம் மைதா 2 டீஸ்பூன் பூண்டு பவுடர், 1 டீஸ்பூன் பெப்பர் தேவையான உப்பு அனைத்தும் சேர்த்து ஈரமின்றி பிசிறி கலந்து விடவும். 2 நிமிடம் இதை வைத்திருந்து இந்த மாவில் சிக்கன் துண்டுகளை நன்கு பிரட்டவும்! ஒரு வாணலியில் 60 கிராம் பட்டர் அல்லது 50கிராம் பட்டர் + 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு அது சூடானதும் சிக்கனை இதில் வைத்து பொரிக்கவும்!
சிக்கனை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும்படி பொரித்து எடுத்துவிட்டு! பொடிப் பொடியாக சீவிய 4 பூண்டு பற்களை இதே வாணலியில் போட்டு 1 நிமிடம் வதக்கவும். இதில் 50மிலி சிக்கன் ஸ்டாக்கை சேர்த்து கலக்கிவிட்டு பிறகு மீண்டும் 80 கிராம் வெண்ணெய்யை மட்டும் சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது ஒரு கையளவு பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழைகள்..
அல்லது பார்ஸ்லே தழைகள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும். பொரித்த சிக்கனகளை இதில் சேர்த்து அடுப்பை மிதமாக எரியவிட்டு சமைக்கவும்! கலவை கொழ கொழப்பாக மாறும் அவ்வப்போது ஒரு கரண்டியால் இந்த இஞ்சி சிக்கன் ஸ்டாக்கை அபிஷேகம் போல அள்ளி அள்ளி சிக்கன் மீது ஊற்றவும்! இந்த சமயத்தில் உப்பு & மிளகு ருசி பார்த்து சிறித சேர்த்துக் கொள்ளலாம்!
இந்த க்ரேவி மஞ்சூரியன் பதத்தில் திக்கானதும் அடுப்பை அணைத்துவிடவும்! அதிக தீ இருந்தால் எல்லாமே கெட்டியாகிவிடும்! ஆகவே வழு வழுப்பாக வந்ததும் அதிகம் கெட்டியாகும் முன்பே பாகு பதத்தில் எடுத்துவிடவும்! சோறு, ரொட்டி வகைகள், தனி ஸ்நாக்ஸ் என எந்தக் கூட்டணிக்கும் செட்டாகும் அற்புதமான கார்லிக் சிக்கன் இது! அப்போ நாளைக்கு உங்கள் வீடுகளில் வீடே மணக்கும்.. நாவெல்லாம் ருசிக்கும் கார்லிக் பட்டர் சிக்கன் தானே!
சிக்கன் ப்ரோத் கிடைக்காவிட்டால் அதற்கு பதில் ஒயிட் வைன் சேர்க்கலாம்!
Tumblr media
0 notes
venkatesharumugam · 2 years ago
Text
“சூடான இட்லியும் ஜோரான கறிக்குழம்பும்”
பார்ட் - 3
இப்பதிவில் முழுக்க முழுக்க இட்லியும் சிக்கன் & மீன் குழம்புகள் தான் என்கிற இந்த வரியை டைப் செய்யும் வரை இதில் இரண்டையும் சொல்ல முடியுமா அல்லது மீன் குழம்பிற்கு தனிப்பதிவு போட வேண்டுமா என்பது தெரியாமலேயே எழுதுகிறேன். எப்படி மட்டன் குழம்பில் கடந்த முறை சிலவகை குழம்புகளை நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லையோ அதே போல
சிக்கன் குழம்புகளில் விடுபடுதல் ஏதுமின்றி எழுத விழைகிறேன்! இட்லிக்கு பெஸ்ட் சிக்கன் குழம்பு என்றால் அது நாட்டுக் கோழி குழம்பு தான். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மிதக்க சள சளவென்று காரசாரமாக இருக்கும் நாட்டுக் கோழிக் குழம்புடன் சூடான இட்லிகள் என்றால் எதிரியின் வீட்டில் கூட சங்கடமின்றி கை நனைக்கலாம். நாட்டுக் கோழியில் சேவல் கறிக்குழம்பு..
இன்னும் டாப்! என்ன கறி கொஞ்சம் கடினமாக இருக்கும் ஏற்கனவே சொன்னது போல இட்லிக்கு கறிக்குழம்பு எனில் குழம்பில் இருக்கும் கறியை விட குழம்பே பிரதானம்! இதே நாட்டுக்கோழியில் தேங்காய் அரைத்து செய்யும் குழம்பும், நாட்டுக்கோழி பெப்பர் க்ரேவியும் இட்லி சாப்பிடும் அனுபவத்தை மேம்படுத்தும். ஆதார விதியான சூடான இட்லி கொதிக்கும் குழம்பு
மட்டும் மாறவே மாறக்கூடாது. பிராய்லர் கோழிக்கறியில் செய்யும் குழம்புகளில் பெப்பர், ஜிஞ்சர், கார்லிக், மசாலா போன்றவைகள் சேர்த்து மேரினேட் செய்து வைக்கும் குழம்பு தான் பெஸ்ட்! பட்டர் பீன்ஸ், உருளைக்கிழங்கு, எலும்புகள் இன்றி குட்டிக் க���ட்டியாக வெட்டிய கோழிக்கறி போட்ட கறிக்குழம்பு எனில் ஓமக்குச்சி நரசிம்மன் போன்றவர்கள் கூட ஒரு ஈடு இட்லிகளை அசால்டாக..
ஒரு கட்டு கட்டலாம்! எலும்பு இல்லா கோழிக்கறியுடன் கோழி ஈரலும் சரி சமமாக கலந்து வைக்கும் குழம்பு எனில் இட்லிக்கு அது பெஸ்ட்! சிக்கன் திக்கான க்ரேவியுடன் இட்லி சாப்பிடும் போது கூடவே குழம்பும் இருப்பது நல்லது. மிளகாய் தூள் போடாது பச்சை மிளகாயை நீளமாகக் கீறி சேர்த்த குழம்பு என்றால் இட்லியோடு அந்த மிளகாயையும் சேர்த்து ருசிக்கும் போது..
சுகமான அவஸ்தையாக அந்தக் காரம் என்றென்றும் உங்கள் நாவில் நிலைக்கும், நீங்கள் எப்போது நினைத்தாலும் அது இனிக்கும். வறுத்த கோழி மசாலா, சிக்கன் பிச்சுப் போட்ட க்ரேவி, கடாய் சிக்கன் க்ரேவி, மஷ்ரூம் சிக்கன், மஞ்சூரியன் செமி க்ரேவி, சிக்கன் ஸ்டூ, சிக்கன் சால்னா, சிக்கன் தால்ஸா போன்ற வகைகளை சூடான இட்லியுடன் சாப்பிடும் பேரின்பம் நித்தியின்..
கைலாசாவில் கூட கிடைக்காது. ஆனா இட்லிக்கு எனில் குழம்பில் எலும்பில்லா கறி தான் சிறப்பு கோவை சிந்தாமணி சிக்கன் செய்யும் அதே மெத்தேடில் சிந்தாமணி சிக்கன் க்ரேவி, பள்ளிப்பாளையம் சிக்கன், சேலம் கறிமசால் சிக்கன் போன்ற ��்ரேவிகளுக்கு புவி சார்பு குறியீடு தரலாம்!இவையெல்லாம் சிவப்பு மிளகாயின் தலைமையை ஏற்ற தீவிரவாத குழம்புகள்!
பின் விளைவுகள் இருந்தாலும் இட்லியுடன் இதை ருசிக்கும் போது அவை சற்றுக் குறையும்! இட்லிக்கு சிக்கன் குழம்பு காரமாகத் தான் இருக்கணுமா? என்று கேட்பவர்களுக்கு, அங்கும் சில மிதவாத சிக்கன் குழம்பு வகைகள் இருக்கின்றன! க்ரீன் சிக்கன் மசாலா, தயிர் சிக்கன் போன்ற குழம்புகள் கொஞ்சம் சாந்தமானவை. இருந்தாலும் சூடான இட்லிக்கு அவை நிரம்ப..
பாந்தமானவை, இவையெல்லாம் ஒவ்வொரு இட்லி விள்ளல்களுடன் சேர்ந்து நாம் ருசிக்க ருசிக்க ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் சேர்ந்து நாவில் மெட்லி ஆடியது போல இருக்கும்! கத்திரிக்காய், சுரைக்காய், மாங்காய் போட்டு வைத்த கோழிக்குழம்பெல்லாம் வசிய மருந்துகளாகும். சூடான இட்லியோடு இதனைச் சுவைத்தால் சொக்கிப் போவோம்!
சில்லி சிக்கன், ஜிஞ்சர் சிக்கன், கார்லிக் சிக்கன், பெப்பர் சிக்கன், டொமேட்டோ சிக்கன் போன்ற சிக்கன் வகைகளை செமி க்ரேவியாக சூடான இட்லியுடன் சாப்பிட்டு இருந்தால் ஹிட்லர் எல்லாம் நல்லவனாக மாறி இருப்பான். (ஹிட்லர் சைவமாம்) அதே போல சீரகம், தேங்காய், மிளகு அரைத்து சேர்த்த சிக்கன் கைமாவுடன் இட்லி சாப்பிட்டவர்களுக்கு முதுமையே வராது!
சிக்கன் லெக் பீஸ், லாலி பாப், போன்றவை குழம்புடன் இருந்தால் அதை தவிர்த்துவிடவும். அர்ஜுனன் குறி போல நம் இலக்கு இட்லியும் கறிக்குழம்பும் மட்டுமே! கோழி ஈரல் பிரட்டலுடன் சூடாக இட்லிகள் சாப்பிடுவது கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பு போன்றது! அத்தனை மென்மை அத்தனையும் உண்மை! ஆந்திர ஸ்டைல் காரசார சிக்கன் குழம்போ, கேரளத்து ஸ்டைலில்..
கப்ப சிக்கன் குழம்போ எதுவானாலும் இட்லியிடம் சரண்டர் ஆகியே தீரவேண்டும். என் தம்பி பொரிச்ச சிக்கன் குழம்பு செய்வதில் கில்லாடி. காரசாரமான குழம்பில் பொரித்த போன்லெஸ் கறியுடன் இட்லியை சுவைப்பது ஒரு பேரானந்த அனுபவமாகும்.செட்டிநாடு பகுதியில் இட்லிக்கு தரும் சிக்கன் கோலா உருண்டைக் குழம்பு இன்னொரு அற்புதமான க்ரேவி.
விருந்தில் இது கிடைக்காமல் பங்காளிச் சண்டைகள் நடந்த சம்பவங்கள் பல உண்டு. செட்டிநாடு சிக்கன் க்ரேவியும் இப்படித்தான் அதன் பக்குவமும் அதன் மணமே மூக்கில் ருசிக்கலாம். செட்டிநாடு தண்ணி சிக்கன் குழம்பு, இட்லியின் மீது சளசளவென ஊற்றும் போது பந்தியில் வளவளவென பேசும் வாய்கள் ஓய்ந்து.. கவனம் இட்லியில் பாய்ந்து கவளம் கவளமாக..
அதைக் குழம்பில் குழைத்து ருசிப்பார்கள். சிக்கனில் நாட்டுக் கோழி எனில் காரசாரமாகவும், ப்ராய்லர் எனில் பிரத்யேக மசாலாக் கலவை கலந்து பக்குவமாகவும் சமைப்பது சாலச் சிறந்தது! கோழிக்கறி எனும் போது வான்கோழி, காட்டுக் கோழி, கருப்புக் கோழி, வகைகளும் உண்டு! அவை ��ல்லாம் பிராய்லர் கோழி அளவு கூட ருசியைத் தராது! காடைக் குழம்பும், காடை க்ரேவியும்,
ஏன் அதன் வாசனையை சகித்துக் கொண்டால் வாத்துக்கறிக் குழம்பு கூட இட்லிக்கு டெட்லி காம்போவாகும்! பார்த்திங்களா பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்னது போல சிக்கனுக்குள் நுழைந்தது கிச்சனுக்குள் நுழைந்தது போல விறுவிறுன்னு சிக்கன் குழம்பு காம்போக்களை மட்டும் எழுதிவிட்டேன்! நிச்சயம் நான் மீன் குழம்பிற்காகவே அடுத்த பார்ட் எழுதியே ஆகவேண்டும்!
இருந்தால் என்ன சூடான இட்லி + ஜோரான கறிக்குழம்பு எனும் போது படிக்கவா மாட்டீர்கள்!
Tumblr media
மூன்றாவது பந்தி முடிந்தது..
1 note · View note
venkatesharumugam · 2 years ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 பூண்டு கோதுமை பரோட்டோ 🟢
தேவையானவை : கோதுமை மாவு - 250 கிராம் + (1 சிறு கப் - மாவு தேய்க்கும் போது தூவ) பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பொடிசாக நறுக்கிய (அ) துருவிய பூண்டு - 4 பற்கள், பொடிசாக நறுக்கிய (அ) துருவிய பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - 2 tbs, வெண்ணெய் - 3 tbs, ஆயில் - 2 tbs + 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு
செய்முறை : கோதுமை மாவில் பூண்டு விழுது, 2 tbs ஆயில், 1 டீஸ்பூன் உப்பு போட்டு ஒரு கப் வெந்நீரை ஊற்றி நன்கு விசிறி புட்டு மாவு போல கலக்கவும். உதிராக இருக்கும் இந்த மாவை 5 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும்.
5 நிமிடங்களுக்குப் பின் மாவை நன்கு பிசையவும் தேவைக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக நீர்சேர்த்து பிசையவும். மாவை நன்கு பிசைந்து புரோட்டா மாவு பதத்திற்கு மென்மையாக வந்ததும்,
ஒரு ஸ்பூன் ஆயில் தடவி 20 - 25 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும். ஒரு கிண்ணத்தில் 3 tbs வெண்ணெயை உருக்கி ஊற்றி அதில் துருவிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி,
பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கார்லிக் பட்டர் பேஸ்ட் ரெடி. இப்போது மாவை சப்பாத்திக்கு எடுப்பதை விட சற்று பெரிய உருண்டயாக,
எடுத்து சோளாப்பூரி சைசில் தேய்க்கவும். தேய்க்கும் போது எளிதாக தேய்க்க கொஞ்சம் கோதுமை மாவை தூவிக் கொள்ளவும். வட்டமாக தேய்த்த பின் அதில் ஒரு ஸ்பூன் கார்லிக் பட்டர் பேஸ்ட் எடுத்து வைத்து..
ஒரு பிரஷ்ஷால் மாவு முழுவதும் நன்கு தடவி பரப்பி சிறிது கோதுமை மாவை இதன் மீது தூவி தேய்த்த வட்டத்தை விரிக்கும் கை விசிறி போல மடிக்கவும். இது நீளமான நாடா போல வரும் அதை அப்படியே இறுக்கமாக,
சுருட்டினால் புரோட்டா மாவு போலவே சுருளும். இதை வட்டமாக அழுத்தி மீண்டும் சிறிது கோதுமை மாவில் பிரட்டி இந்த புரோட்டாவை சப்பாத்தி அளவிற்கு தேய்க்கவும்.
தேய்த்த புரோட்டாவை கல் நன்கு சூடானதும் அதில் போட்டு 1 ஸ்பூன் ஆயில் விட்டு வேகவிட்டு திருப்பிப் போடவும் அடிக்கடி கரண்டியால் மென்மையாக இதை அமுக்கி மீண்டும் 1 ஸ்பூன் ஆயில் விட்டு,
இரு புறமும் நன்கு சிவந்து வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். ரொம்ப மொறு மொறுன்னு எடுத்துவிடக்கூடாது! லேயர் லேயரான ருசியான கார்லிக் கோதுமை புரோட்டா தயார்.
பூண்டு & கோதுமை கலந்த ருசியில் மென்மையாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும் சைவக் குருமா, அசைவக் குழம்புகள், தயிர் வெங்காயத்துடன் இதை ருசிக்கலாம்.
இதில் பூண்டுடன் மிளகாய் ��ட்டுமின்றி புதினா, நெய்யில் தாளித்த முருங்கைக் கீரை இலைகள் போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம்.
Tumblr media
0 notes
venkatesharumugam · 4 years ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 ஜிஞ்சர் கார்லிக் ஷ்ரிம்ப் ஃப்ரை 🔴
தேவையானவை : நன்கு சுத்தம் ச��ய்து உரிக்கப்பட்ட ஷ்ரிம்ப் 900 கிராம், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 4 பூண்டுப் பற்கள் நுணுக்கி வெட்டப்பட்டவை, 1 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி பொடிசாக நறுக்கியது, 6 டீஸ்பூன் low Sodium சோயா சாஸ், 5 க்ரீன் ஆனியன் (வெங்காயத் தண்டு) பொடியாக வெட்டப்பட்டது, 1 tbs வெள்ளை எள்.
செய்முறை : ஒரு பெரிய வாணலியில் ஆலிவ் எண்ணெயை மிதமான வெப்பத்தில் வைத்து சூடாக்கவும். பின்பு நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து, சுமார் 1 நிமிடம் வதக்கவும்.
பின்னர் ஷ்ரிம்ப்பை போட்டு , சிவந்து ஆரஞ்சு நிறம் வரும் வரை அடுப்பை சிறிது உயர் வெப்பத்தில் வைத்து கிளறவும். இதை சுமார் 2-3 நிமிடங்கள் சமைத்தால் போதுமானது. ஷ்ரிம்ப்பை அதிகம் வேக வைத்துவிட வேண்டாம்.
இப்போது இதில் சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து மற்றொரு நிமிடம் கிளறவும். கடைசியாக, க்ரீன் ஆனியன் சேர்த்து இறக்கி வைத்து வெள்ளை எள் தூவவும்.
சூடான ருசியான ஜிஞ்சர் கார்லிக் ஷ்ரிம்ப் ஃப்ரை ரெடி! நெய் சோறு/ புலாவ் / சாதத்துடன் பரிமாறவும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.
இதுவே மெயின் கிரேவி அல்ல பிற க்ரேவிகளுடன் வைத்து பரிமாற ஒரு ஆப்ஷன் தான்!
Tumblr media
0 notes
venkatesharumugam · 4 years ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 உருளை கார்லிக் ரிங்ஸ் 🟢
தேவையானவை : ரவை- 100கிராம், வெண்ணெய் - 2tbs, பொடிசாக நறுக்கிய பூண்டு - 3 பற்கள், அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு - 200 கிராம், சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், ஆயில் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கு.
செய்முறை : ரவையை ஒரு மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும். அவித்த உருளைக்கிழங்கை கேரட் துருவுவது போல் துருவி வைக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது நன்கு உருகியபின் நறுக்கிய பூண்டை போட்டு பச்சை வாசம் போக வதக்கவும்.
பச்சை வாசம் போனதும் சில்லி ஃப்ளேக்ஸ், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி அரை கப் அளவு நீர் சேர்க்கவும். நீர் நன்கு கொதிக்கும் போது அரைத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும். ரவை நன்கு வெந்து வந்ததும் துருவிய கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பை மிதமாக எரியவிட்டு கிழங்கும் ரவையும் நன்கு கலக்கும்படி கிளறி அடுப்பை ஆஃப் செய்யவும். கிளறிய கலவை ஓரளவு ஆறியதும் அதை சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும். கட்டிகள் ஏதும் இருக்கக்கூடாது. மாவு நன்கு மென்மையாக ஆகும் வரை பிசைந்து விடவும்.
பிசைந்த மொத்த மாவையும் சப்பாத்தி போல வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். மிக மெலிதாக இன்றி கால் இஞ்ச் கனத்திலாவது தேய்த்த மாவு இருக்கவேண்டும். தேய்த்த மாவின் மீது வட்ட வடிவ கட்டர் அல்லது பாட்டிலின் தகர மூடி (பெரியது சிறியது) வைத்து அழுத்தி பெரிய வட்டமாக நறுக்கி அதன் நடுவில் சிறிய மூடியால் அழுத்தி துளையிடவும்.
மீதியான துண்டுகள் பிசிறுகளை மாவாக்கி மீண்டும் தேய்த்து கட் செய்யலாம். வாணலியில் ஆயில் விட்டு நன்கு சூடாக்கி வெட்டிய வளையங்கள் 10 பீஸ் 10 பீஸாகப் போட்டு பொரிக்கவும். ஆயில் நல்ல சூட்டில் இருக்கணும். ஆனால் கொதித்துவிடக் கூடாது கவனமாக பொரிக்கவும்.
ரிங்ஸ் எல்லா பக்கமும் வெந்து வரும் படி சீராக திருப்பிவிட்டு பொரிக்கவும். ��ன்கு சிவந்து பொன்னிறம் அல்லது கோல்டன் பிரவுன் நிறம் வரும் போது எடுக்கவும், பொரித்த வளையங்களை வடிகட்டி ஆயில் உறிஞ்சும் பெரிய டிஸ்யூ பேப்பரில் போட்டு விடவும்.
ருசியான உருளை கார்லிக் ரிங்ஸ் ரெடி! இதனை சாஸ் வகைகளுடன் பரிமாறவும். இதன் கூடவே ஒரு இஞ்சி டீ அல்லது லெமன் டீ அல்லது ஃபில்டர் காபி கண்டிப்பா இருக்கணும். உங்கள் மாலை நேரம் மிக ருசியாகிவிடும்.
Tumblr media
0 notes