#உருளைக் கிழங்கு
Explore tagged Tumblr posts
Text
#என்_அம்மாவும்_அசைவமும்
“த(ன)ம் பிரியாணி”
என் அம்மாவின் கை வெல்லம்.! மொட்டை ரசம் வைத்தாலும்.. ஒரு ஆம்லேட் போட்டாலும்.. பழைய சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் ஊற்றி பொன்னிறமாய் வதக்கி.. புளி & கொஞ்சமாய் இஞ்சி பூண்டு சேர்த்து அம்மியில் அரைத்துத் தரும் துவையல் என்றாலும் அது தேவாதி தேவ அமிர்தம்.! வாரா வாரம் ஆரவாரம் என்று என் 12 வயது வரை வீட்டில் 4 முறை அசைவம் சமைக்கும் வழக்கம்..! 13 வயதிற்கு பின்பு வந்த வறுமையால் வழக்கொழிந்து போனது.!
தயிர் சாதத்திற்கே நெய்யூற்றி சாப்பிட்ட காலங்கள் கனவாகி தினமும் சாப்பிட்ட இட்லி தோசையையே இனி ஆண்டுக்கு ஒரு முறை உனக்கு தீபாவளிக்கு மட்டுமே என்னும் டிமானிடைசேஷனை கொண்டு வந்தான் இறைவன் எனும் மோடி.! வறுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று 5 ஆண்டுகள் பொறுத்திருந்த பின்னும்.. அவ்வளவு சீக்கிரம் உங்களை விடமாட்டேன் என்று கூறி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் எங்கள் பின் தொடர்ந்தான்.! ஆனால் பண்டிகைகளில் அம்மா சமைக்கும் சமையல் அற்புதமானது! எல்லாருக்கும் தங்கள் அம்மாவின் சமையல் பிடிக்கும்!
நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொன்னது போல என் கண்களைக் கட்டி விட்டாலும் என் அம்மா போடும் ஆம்லேட்டை 30000% மிகச் சரியாக ருசி பார்த்து கணிப்பேன்..! ஆம்லேட் யார் போட்டாலும் ஒரே சுவையே.! ஆனால் அதிலும் அம்மாவின் கைப்பக்குவம் பிரமாதமானது.. முருங்கைக்காய் உள்ளே உள்ள ஜெல்லியையும் கறி வேப்பிலையையும் கலந்து அம்மா செய்யும் ஈரல் பிரட்டல் ஒரு அலாதியான டிஷ்.. இட்லிய��டன் சாப்பிட்டால் நிச்சயம் 20 இட்லிக்கு குறைந்து ஒருவர் சாப்பிடவே முடியாது.! அதே போல தோசை..!
கறிக்குழம்பை கொஞ்சம் தண்ணீராகத்தான் அம்மா வைப்பார்.. கறி நல்லா வேகும்டா மகனே.. என எனக்கு சமையல் குறிப்பும் தந்தவர் அவரே.. வெள்ளை சோயா பீன்ஸ், கொஞ்சம் உருளைக் கிழங்கு பிறகு கறி என அம்மா வைக்கும் கறிக்குழம்பு.. தன் மேலே கம்யூனிஸ்ட் சிவப்பில் எண்ணெய் மிதக்க தோசைக்கு தொட்டுக் கொள்ள அவ்வளவு பிரமாதமாய் இருக்கும்.. அதிலும் அம்மா சின்ன வெங்காயத்தை வதங்கி போட்டுத்தரும் முட்டை ஆணியன் தோசை இருக்கிறதே அதெல்லாம் 7ஸ்டார் ஹோட்டல் லெவல்.!
தண்ணீராக வைக்கும் குழம்பை மறுநாளைக்கு சுண்ட வைத்தால் கெட்டியான குழம்பு கிடைக்கும் என்னும் அறிவியலை எனக்கு சொல்லித்தந்தவளும் அம்மா தான்.. முட்டைகளைத் தனியாக வேக வைத்து அரை வேக்காட்டில் எடுத்து அப்படியே குழம்பு கொதித்து இறக்கும் போது போட்டுவிடும் பக்குவத்தை சொல்லித்தந்ததும் என் அம்மா தான்.! சில நேரங்களில் குழம்பிலேயே முட்டையை உடைத்து ஊற்றி லேயர் லேயராக கறிக்குழம்பில் ஊறிய முட்டைகளே மட்டன் போல ஆகவைத்து கொடுக்கும் பக்குவம் அம்மாவின் தனிச்சிறப்பு.!
அதே போல குடல் குழம்பு என்றால் கடலை பருப்பு, தேங்காய், வாழைத்தண்டு போட்டு அம்மா வைக்கும் குடல் குழம்பிற்கு திருவிளையாடலின் ஹேமநாதபாகவதர் இருந்திருந்தால் பாட்டுக்கு போட்டியிடாமல் இந்த போட்டியை உண்டுவிட்டு.. சிவபெருமான் வருவதற்கு முன்பே நான் பாண்டிய நாட்டுக்கு அடிமை என சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு நாட்டை விட்டே ஓடியிருப்பார்.! அம்மாவிற்கு வெகுநாளாக கைவராதது பிரியாணி மட்டுமே.! ஒன்று குழைந்த தக்காளி சாதம் போல இருக்கும் அல்லது விறைத்த..
புளிச்சோறு போல இருக்கும்.! சேலத்தில் இருந்து மதுரை வந்த பின்பு ஒருமுறை வீட்டு வாசலில் சில பாய்மார்கள் நின்றிருந்தனர்.! என்னடா இது நம்ம வீட்டுக்கு இவங்க என்னும் கேள்வியோடு யாரு பாய் நீங்க எனக் கேட்டேன்.. தனம் (அம்மாவின் பெயர்) அம்மா இருக்காங்களா தம்பி என்றார்கள்.. என்னங்க விஷயம் என்றேன்.. இல்ல நாளைக்கு ரம்ஜான்.. 50 பேருக்கு பிரியாணி செய்யணும் அதான் அம்மாவை பார்க்க வந்தோம் என்றார்கள்.! எனக்கு வியப்போ வியப்பு நம்ம அம்மாவுக்கு பிரியாணியா.? பாய் அட்ரஸ் மாறி வந்துட்டிங்களான்னு..
கேட்கப் போகும் போது அடுத்தத் தெருவில் இருந்து அம்மாவின் சிநேகிதியான பூமா அக்கா வந்தாங்க.. எலேய் தம்பி நீ உள்ளாற போ அவங்க கரெக்டா தான் வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு.. வியாபார டீல் பேசி அட்வான்ஸ் வாங்கிட்டு அவங்களை அனுப்பிட்டு.. எலேய் உங்கம்மா அம்புட்டு அருமையா பிரியாணி சமைக்கும் தெரியுமான்னு எனக்கு அதுவரை தெரிய���த தகவலை சொல்ல.. எப்படிக்கா என்றேன் அம்மா இந்த ஊரில் முஸ்லிம் பெண்களுடன் பழகி அந்த சமையல் சூட்சுமத்தை பழகிக் கொண்டார்னு அன்னிக்கு தான் தெரிஞ்சது.!
அப்போ ஏன் அதை எங்களுக்கு சொல்லவில்லை?? இட்லி தோசை கறிக்குழம்பே வருடத்திற்கு ஒரு முறை தீபாவளிக்கு கிடைக்கும் வறுமை சூழ் குடும்பத்தில் அடிக்கடி மட்டன் பிரியாணியை கொண்டு வந்து கொடுத்து பிள்ளைகளின் ஆசையை வளர்த்த வேண்டாம் என்று அம்மா எடுத்த முடிவே தனக்கு பிரியாணி அற்புதமாக செய்யத் தெரியும் என்பதை மறைத்ததற்கான காரணம் என்று தெரிந்து கொண்டேன்.! பிறகு வசதிகள் வந்ததும் அம்மாவை பிரியாணி செய்யச் சொல்லி அதன் செய்முறையை கேட்டறிந்து கொண்டேன்!
இன்றும் ரம்ஜான் பிரியாணி என்றால் அம்மாவின் நினைவும் அவர் தேர்ந்தெடுக்கும் இளசான ஆட்டுக்கறியின் பாகங்களும்.. கொழுப்பு& எலும்போடு சுரைக்காய், அவரைக்காய், மாங்காய் போட்ட பருப்பு தால்ஸாவும், வாயில் கரையும் பதத்தில் மெலிசாக நறுக்கி புளிப்பில்லாத தயிரில் ஊற வைத்த வெங்காயமும், மொச்சை, கத்திரி போட்டு செய்த புளித் தொக்கும், கேரட் வெள்ளரி தயிர் பச்சடியும், புதினா துவையலும், பொரித்த நாட்டுக் கோழியும் என் கண் முன்.. சாரி வாய்முன் வந்து போகும்.!
அம்மா செய்யும் பிரியாணிக்கு என்றும் என் வந்“தனம்”

0 notes
Video
youtube
உருளைக் கிழங்கு செல்ல குட்டி || Urulaikilangu Chella Kutty || Animation ...
0 notes
Link
சுவையான பூரி கிழங்கு செய்வது எப்படி?
0 notes
Text
மறந்தும் கூட வாழைப்பழம் அருகில் இதை வைத்து விடாதீர்கள்..
மறந்தும் கூட வாழைப்பழம் அருகில் இதை வைத்து விடாதீர்கள்.. #banana #
நம் வீட்டில் உணவு பொருட்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் கூட ஒரு முறை உண்டு.
ஒரு விஷயம் இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
குறிப்பாக வெங்காயமும் உருளைக்கிழங்கும் ஒன்றாக சேர்த்து வைக்கவே கூடாதாம்.
அந்த வகையில் வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் எப்போதும் தனியாக தான் வைக்கவேண்டும். காரணம் வாழைப்பழத்தில் இருந்து எத்திலின் என்ற வாயு வெளியாகிறது.
இது அருகில் உள்ள மற்ற உணவுப்…
View On WordPress
0 notes
Text
உடல் எடையை குறைக்க ஏழு நாள்கள் செய்ய வேண்டிய டயட் முறை!
உடல் பருமன் எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய ஒரு பரவலான பிரச்சனையாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க பலரும் பல டயட் முறையை செய்தும் பலனளிக்கவில்லையா. அப்போ கீழ்கண்ட டயட் முறையை பின்பற்றினாலே போதும். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டயட் முறையை பின்பற்றினாலே போதும். உடல் எடையை குறைக்க ஏழு நாள்கள் செய்ய வேண்டிய டயட் முறை:- முதல் நாள் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழத்தை தவிர மற்ற எல்லாவிதமான…
View On WordPress
0 notes
Text
கண்கட்டிகள் தீர்வு
தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும். *கொய்யா இலை* கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள். உருளைக் கிழங்கு தோல் : பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள்…

View On WordPress
0 notes
Text
இந்த வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!
இந்த வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!
நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த வடையை செய்ய அதிகமாக எந்த பொருட்களும் தேவைப்படாது. சட்டுனு அஞ்சு நிமிஷத்துல வடை சுட்டு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி செஞ்சிடலாம். உருளைக் கிழங்கு வெங்காய வடையை எப்படி செய்வது? என்பதை இனி இப்பதிவில்…

View On WordPress
0 notes
Photo

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு! அதெல்லாம் சரி. 'நிலக்கடலையை உண்ணக்கூடாது... அப்படி உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு போன்ற இதயநோய் வரக்கூடும்' என்கிறார்களே ? ✔️ நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. ✔️ சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. இதய நோய் சிறப்பு மருத்துவர் சர். இராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, "நிலக்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, இதயநோய் வரும் என்பது தவறான கருத்து. சொல்லப்போனால், அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. நிலக்கடலையில் உள்ள காப்பர் சத்து மற்றும் அதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் பொருட்களில் மோனோ அன் சாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன" இதய நோயை அண்டவிடாத தன்மையைக் கொண்டுள்ள நிலக்கடலை சற்று ஆறுதலாக இருந்தபோதும், "ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?" என்று தஞ்சையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் குருமூர்த்தியை அணுகியதில், “வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். தற்போதைய உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நிரூபித்திருக்கின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு, இன்டெக்ஸ் (Index) (அதாவது, G - 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால், பச்சைப்பட்டாணி, வாழைப்பழம், புழுங்கல் அரிசி, அவித்த உருளைக் கிழங்கு போன்றவற்றில் G-1 அதிகமாக இருக்கிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். ஆனால், வேர்க்கடலையில் G-1 குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. அத்துடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. #life #health #tips (at Chennai, India) https://www.instagram.com/p/CRWMHF7hz-O/?utm_medium=tumblr
0 notes
Text
விவசாயியின் முயற்சியால் கொடைக்கானலில் விளையும் சுவை மிகுந்த சீனாவின் கருப்பு நிற கேரட் | black carrot
விவசாயியின் முயற்சியால் கொடைக்கானலில் விளையும் சுவை மிகுந்த சீனாவின் கருப்பு நிற கேரட் | black carrot
கொடைக்கானலில் சீனாவின் கருப்பு நிற கேரட்டை விவசாயி ஒருவர் விளைவித்துள்ளார். கொடைக்கானல் மலையில் கேரட், உருளைக் கிழங்கு, மலைப் பூண்டு, சவ்சவ் உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன. கொடைக்கானல் பாம்பார்புரம் விவசாயி ஆசீர், சீனாவில் கருப்பு வண்ணத்தில் கேரட் விளைவிக்கப்படுவதை அறிந்து, அதை கொடைக்கானலில் பயிரிட விரும்பினார். இதையடுத்து கருப்பு நிற கேரட்டுக்கான விதைகளை ஆன்லைன் மூலம் வாங்கினார்.…

View On WordPress
#Black#black carrot#carrot#கடககனலல#கரட#கரபப#கருப்பு நிற கேரட்#கொடைக்கானல்#சவ#சனவன#நற#மகநத#மயறசயல#வவசயயன#வளயம#விவசாயி
0 notes
Photo

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன!வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வைகோமத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18.12.2020 அன்று சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய ��ரை:-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலைஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ~து ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்துஉழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டோம்என் பார்க்கும் நிலைஎன்று உழவு அதிகாரத்தில் மூன்று பாடல்களைச் சொல்லி,மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்துஎன்று உழவர் பெருங்குடி மக்களுடைய உன்னதத்தைக் குறளோவியமாகத் தீட்டி, எழில்மிகு வள்ளுவர் கோட்டத்தை அமைத்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய கனவு நனவாகின்ற விதத்தில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில், அவரால் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உண்ணாநிலை அறப்போரின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் - நாளை கோடையில் மலரப் போகின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய முதலமைச்சர் ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களே,
தாய்க் கழகத்திலிருந்து எங்களைப் பாராட்டுவதற்கு வந்து அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் ஆருயிர் அண்ணன் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே,
மதச்சார்பற்ற முற்போக்குக் ���ூட்டணியின் அங்கங்களாகத் திகழுகின்ற கட்சிகளின் மதிப்புமிக்கத் தலைவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, அன்புடைய தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே வீறுகொண்டு வந்திருக்கின்ற வாலிப வேங்கைகளே, ஜனநாயகத்தின் விழிகளாகச் செவிகளாகத் திகழ்கின்ற செய்தியாளர்களே, ஊடக ஒளிப்பதிவாளர்களே சிரம் தாழ்ந்த வணக்கம்.
“எங்களைத் தூக்கிலே தொங்க விடாதீர்கள். தூக்குக் கயிற்றை எங்கள் கழுத்திலே மாட்டாதீர்கள். எங்கள் கண்களில் கட்டப்பட்டு இருக்கின்ற கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள். நாங்கள் மடிகின்ற நேரத்தில் புன்னகை பூத்தவாறு இந்த மண்ணைப் பார்த்தவாறு மடிய விரும்புகின்றோம்.நாங்கள் புரட்சிக்காரர்கள். நாங்கள் ஆயுதம் ஏந்திகள். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே எங்களை தூக்கிலிடாதீர்கள். எங்களின் மார்பை நோக்கிச் சுடுங்கள். உங்கள் துப்பாக்கி ரவைகள் எங்கள் மார்பை துளைத்துக் கொண்டு செல்லட்டும். எங்கள் பச்சை இரத்தம் இந்த மண்ணில் பரிமாறப்படட்டும்” என்று சொன்ன பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வழி வந்த வீராதி வீரர்கள் பஞ்சாப் சிங்கங்களின் கர்ஜனையால் டெல்லியே நடுங்கிக் கொண்டு இருக்கக்கூடிய ��ிலையில், தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் துருட்டோ, “நாம் ஒரு குடும்பம். நமது நண்பர்கள் அங்கே போராடுகின்றார்கள். அவர்களை ஆதரிக்கின்றேன்” என்று கூறினார். இந்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது. அதைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் நான் ஆதரிக்கின்றேன் என்று கூறினார்.ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டரஸ், “இந்தியாவில் விவசாயிகள் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காக யார் எங்கே போராடினாலும் அவர்களை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமை” என்று கூறினார்.இதே நேரத்தில் டெல்லி போராட்டத்தை ஆதரித்து கலிபோர்னியா, சிட்னி, இலண்டன், கனடா நகரங்கள் என உலகத்தின் பல பகுதிகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் போராடுகின்றார்கள்.இந்த டிசம்பர் 18 ஆம் நாள், இந்திய விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஐக்கிய மாகாணத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டது. நைனிடால் சிறைச்சாலையில் இருந்த ஆசிய ஜோதி - மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு இந்தச் செய்திகைக் கேள்விப்பட்டு, கசையடியை நிறுத்த வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். நிறுத்தப்படவில்லை. இதனை அறிந்த நேரு, நான் உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கப் போகின்றேன் என்று மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தொடங்கிய நாள்தான் 1930 டிசம்பர் 18.மூன்று நாட்கள் உண்ணாவிரதம் முடிந்தபிறகு பிரிட்டிஷ் அரசு கசையடியை நிறுத்திக் கொண்டது என்பது வரலாறு.“முதலமைச்சர் அவர்களே ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் நீங்கள் எங்கே இருக்கப் போகிறீர்கள்?” என்று பாலகிருஷ்ணன் கேட்டார். எதிரே இருந்த மக்கள் நீங்கள் சொன்னீர்கள், “புழலாக இருக்கலாம் அல்லது வேலூராக இருக்கலாம்” என்று.ஆனால் முதலமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டார். நமது கூட்டணித் தலைவருக்கு வெற்றி. முதலமைச்சர் இன்றைக்கு என்ன பேசியிருக்கிறார் என்று ‘மாலை முரசு’ ஏட்டில் முதல் பக்கத்தில் வந்திருக்கின்றது. அவர் சொல்கிறார், “நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள்” என்று. ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் அவர் மக்களில் ஒருவராக இருந்து, நானும் முதலமைச்சர்தான் என்று சொல்லிக்கொள்வதற்கு ஏற்ற விதத்தில், நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.மூன்று வேளாண் சட்டங்களை எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதை எல்லோரும் விளக்கினார்கள். பேராசிரியர் ஜவாஹிருல்லா அழகாகச் சொன்னார். நெருக்கடி நிலை காலத்தில் கல்வித் துறையும், வனத் துறையும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் விவசாயம் எடுத்துச் செல்லப்படவில்லை. விவசாயம் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், மாநிலப் பட்டியலில் இன்றும் இருக்கி��்றது.மாநிலப் பட்டியலில் இருக்கின்ற ஒரு பொருள் மீது எப்படி மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தீர்கள்?ஐ.ஏ.எஸ். முன்னாள் அதிகாரிகள் 78 பேர் சேர்ந்து மிகத் திட்டவட்டமாக ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்கள். நாங்கள் அந்தச் சட்டங்களை வரி விடாமல் அலசி ஆராய்ந்து பார்த்தோம். கூட்டாட்சி தத்துவத்தின் குணாதிசயத்தையே குழிதோண்டிப் புதைக்கின்ற விதத்தில் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. கூட்டாட்சிக் கோட்டையின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உருவப்படுகின்றன. இந்த மூன்று சட்டங்களில் ஒன்று அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 இல் கொண்டுவரப்பட்டது. உருளைக் கிழங்கு, வெங்காயம், கோதுமை, நெல், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் எல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது. இந்தப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தரும் கொள்கை நிலைநாட்டப்பட்டு இருந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் இந்தப் பொருட்கள் எல்லாம் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அவை அத்தியாவசியப் பொருட்கள் கிடையாது. ஆகவே அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டியதும் இல்லை, அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டியதும் இல்லை.இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க. அரசுதான், அகில இந்திய அளவில் வேளாண்மை வணிக மண்டலம் என்ற இரண்டாவது சட்டத்தைக் கொண்டுவந்தது. பிற மாநிங்களில் மண்டிகள் என்று அழைக்கப்படுபவற்றை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களாக டாக்டர் கலைஞர் அவர்கள் இங்கே உருவாக்கினார்கள். மக்களின் விளை பொருட்களைத் தீர்மானிக்கின்ற சந்தைகளாக உருவாக்கினார். இனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கிடையாது. அதை அகற்றுவதற்காகத்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.வேளாண் உற்பத்திச் செலவு விலைக்கான ஆணையம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து இருக்கின்ற விவசாய விளைபொருட்கள் பட்டியலிலிருந்து நெல், கோதுமை, சோளம், மக்காச் சோளம், ராகி, பார்லி, கம்பு உள்ளிட்ட எழு வகை உணவு தானியங்கள், ஏழு வகை எண்ணெய் வித்துகள், ஐந்து வகை பயிறு, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, சணல், தேங்காய் நான்கு வகை வணிகப் பயிர்கள் என மொத்தம் 23 பொருட்களை நீக்கிவிட்டார்கள்.வேளாண் நில ஒப்பந்த பண்ணைச் சட்டத்தின்படி இதற்கு முன்னர் இருந்த நிலையை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இந்த நிலத்தில், இத்தனை ஏக்கரில், இதுதான் சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு விதையும், உரமும் நாங்கள் தந்துவிடுகிறோம். பொருளை எங்களுக்குத்தான் தர வேண்டும். நாங்கள் நிர்ணயிக்கின்ற விலைக்குத்தான் தர வேண்டும். இதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கின்றது.விலை உயர்ந்து இருக்கின்றது என்று விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியாது. ஒரு விவசாயி தன் நிலத்தில் என்ன பயிரிட வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்க முடியாது. பெரு வணிகர்கள், கொள்ளை லாபக்காரர்கள், அதானி, அம்பானி போன்ற பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு பகாசூர���் கம்ப���னிகள் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள். மிகுந்த முன்னெச்சரிக்கையோடும், திட்டத்தோடும் நரேந்திர மோடி செயல்பட்டு இருக்கின்றார். அதன் விளைவாகத்தான் அரியாணா மாநிலத்தில் இரயில்வே துறைக்கு என்று நிலத்தைக் கைப்பற்றி, அடிமாட்டு விலைக்கு அதை அதானி கம்பெனிக்கு விற்றார்கள். இலட்சக்கணக்கான டன் விளைபொருட்களைச் சேமித்து, பதுக்குவதற்காக, விலை ஏற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த இடத்தில் அவன் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துவிட்டான்.அதுமட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் மோகோ என்கின்ற இடத்தில் 14 சேமிப்புக் கிடங்குகளை அதானி கம்பெனி அமைத்திருக்கின்றான். 8 இலட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள விளை பொருட்களை இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் வைக்க முடியும். இவை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டுவிட்டன.விவசாயி பாடுபட்டு என்ன பலன்? கடனிலே பிறந்து, கடன் வாங்கி, கடனிலே வளர்ந்து, கடனிலேயே மடிகின்றான் விவசாயி.நான் ஒரு விவசாயி என்கின்ற முறையில் பேசுகின்றேன். எனக்கு கலைப்பை பிடித்து உழவும் தெரியும், மாட்டு வண்டி பூட்டி வேகமாகச் செல்லவும் முடியும்.நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்ததைப் பற்றி டி.ஆர். பாலு அவர்களும், தம்பி சிவா அவர்களும் மிக அழகாக எடுத்துரைத்தார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது என்றால், அதனை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னாலும், வாக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும்.மக்களவையின் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பினால், நிலைக்குழுவுக்கு அனுப்புவார்கள். மாநிலங்கள் அவையில் தெரிவுக் குழுவுக்கு அனுப்புவார்கள். இந்த முறை இருந்தது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதல் முறை இருந்தபோது, தெரிவுக் குழுக்களுக்கு அனுப்புகின்ற மசோதாக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதமாக இருந்தது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசில், 71 சதவிகிதம் நிலைக் குழுக்களுக்கும், தெரிவுக் குழுக்களுக்கும் மசோதாக்கள் அனுப்பப்பட்டன.ஆனால், 2014 இல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு, அது 25 சதவிகிதமாகக் குறைந்தது.இதன் பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மசோதாவைக்கூட நிலைக் குழுவுக்கும், தெரிவுக் குழுவுக்கும் அனுப்பவில்லை. ஆக ஜனநாயகத்தை அழிக்கின்றார்கள்; படுகொலை செய்கின்றார்கள்.200 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் பிரிட்டிஷ் படையில் இருந்த மகர் ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த 200ஆவது நினைவு நாள் பீமாகோரேகானில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று மகர் ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர். எல்கார் பரிஷத் நடத்திய அந்நிகழ்ச்சியில் இந்துத்துவ சனாதன சக்திகளை கண்டனம் செய்து உரையாற்றிய சிந்தனையாளர்களான கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், க���தம் நௌலகா போன்ற 80, 85 வயது தாண்டியவர்களை பொய் வழக்கில் கைது செய்து, ஈவு, இரக்கம் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.விவசாயப் போராட்டக் களத்தில் இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆம்! அரவிந்த் கெஜ்ரிவால் ஆண் சிங்கம் அல்லவா? அவர் கிழித்து எறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகின்றேன். I Salute him. இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள் என்று அவர்தான் சொல்லி இருக்கிறார். இந்த உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவாறு 21 பேருக்கும் நாங்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம்.பஞ்சாப்-க்கு, அரியாணா-வுக்குப் பக்கபலமாக, உத்திரப்பிரதேசத்திலிருந்து திக்காயத்தின் மகன் பத்து இலட்சம் பேரோடு திரண்டு வருகிறேன் என்று கூறினாராமே, அதைப் போல தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜிப்ரால்டர் கோட்டையைப் போல தென்னகத்தில் தமிழகம் இருக்கின்றது.இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆம்! இருளுக்குப் பின்னால்தானே வெளிச்சம். கரிய இருட்டு வைகறைக்கு கட்டியம் கூறுகிறது என்பதைப் போல, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலைமையில் உதயசூரியன் உதித்து, தேர்தல் களத்தில் வெற்றி பெற்று, தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்து, இந்தச் சட்டங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, விவசாயிகளைப் பாதுகாக்கின்ற முதலமைச்சராகத் திகழ்வார்.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, ஏழாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரைப் போல, உழவர் பெருங்குடி மக்களைக் காப்பார். வெல்க உதயசூரியன்.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
0 notes
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 ஃபிஷ் சப்பாத்தி ரோல் 🔴
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது மஞ்சள் தூள் 1 ஸ்பூன் உப்பு போட்டு கலக்கி அதில் முள் அதிகமில்லாத மீன்களைப் போட்டு நீரை கொதிக்கவிட்டு மீனை வேக வைக்கவும்! 100 கிராம் சோளம், ஒரு கைப்பிடி பட்டாணி, 3 உருளைக் கிழங்கு 1 காரட் 2 முட்டை அனைத்தையும் நன்கு குழைய வேக வைத்து இவை எல்லாவற்றையும் நன்கு மசித்துக் தனியே வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 குடை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி அதில் மல்லித் தழைகளை நுணுக்கிப் போட்டு ஒரு எலுமிச்சையை பிழிந்துவிடவும். இதில் உப்பு & பெப்பர் தூவி நன்கு கைகளால் கலந்துவிட்டு! ஒரு கப் மைனீஸ், 2 ஸ்பூன் மில்க் க்ரீம், மசித்து வைத்த முட்டை & காய்கள் கலவையை சேர்க்கவும்! வேக வைத்த மீனை முள் நீக்கி உதிர்த்து..
இதோடு சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலக்கி வைக்கவும்! சூடான சப்பாத்தி செய்து அதன் நடுவே இந்தக் கலவையை வைத்து ரோல் செய்து தரவும்! சாஸ் & புதினா சட்னி இதற்கு அற்புதமான காம்போ! அனைவரும் விரும்பி ருசிக்கும் அருமையான சத்தான மாலை நேரச் சிற்றுண்டி!

0 notes
Link
மைதா மாவில் தான் புரோட்டா செய்து சாப்பிட்டி ருப்போம். இப்போது வித்தியாசமாக உருளைக் கிழங்கு புரோட்டா செய்முறை களைப் பார்ப்போம்.
0 notes
Text
உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறை!
பொதுவாக நம் எல்லோரிடமும் பொதுவான கருத்து உள்ளது. உருளைக் கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கவும் முடியும். உடல் எடை குறைக்கவும் முடியும். இதற்கு வழி அதை பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறை:- உருளைக் கிழங்கை எண்ணெயில் பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் உடலின் எடை அதிகரிக்கும். உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் உடலின் எடையை வெகு…
View On WordPress
0 notes
Text
முக்கியத்துவம் பெற முயலும் தேஜஸ்வி!| Dinamalar
முக்கியத்துவம் பெற முயலும் தேஜஸ்வி!| Dinamalar
[ad_1]
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் ஓரங்கட்டப்பட்டு, அவரது மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலு இருக்க லாலு இல்லை!
பீஹாரில் தனது அரசியல் ஆதிக்கம் குறித்து, லாலு பிரசாத் யாதவ், ‘சமோசாவில் ஆலு (உருளைக் கிழங்கு) உள்ள வரை பிஹாரில் லாலு இருப்பான்’ என, அடிக்கடி கூறுவார். ஆனால், பிஹாரின் சமோசாக்களில் தற்போதும் ஆலு இருக்க, லாலு மட்டும்,…
View On WordPress
0 notes
Text
வாழைக்காய் வறுவல் 10 நிமிடத்தில் இப்படி செய்ய கறி சுவையில் அசத்தலாக இருக்குமே.
வாழைக்காய் வறுவல் 10 நிமிடத்தில் இப்படி செய்ய கறி சுவையில் அசத்தலாக இருக்குமே.
வாழைக்காய் வறுவல், உருளைக் கிழங்கு வறுவலை போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லா காய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பல வழிகள் உள்ளன. எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படி செய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். ஈஸி…

View On WordPress
0 notes
Text
சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தமிழர்களின் வாழ���க்கையில் இன்றியமையாத இடம்பிடித்துள்ள சாம்பார் தமிழ் மரபு சார்ந்த துணைக்கறி உணவு என்று பலர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். இனி அவ்வாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த சாம்பார் மராத்தியர்கள் தமிழகத்திற்கு மராத்தியர்கள் அளித்த கொடை என்று தஞ்சை மராத்தியர் வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாம் சாஹூஜி போன்சலே காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. எப்படிச் சாம்பார் சமைக்கப்பட்டது என்று பார்ப்போமா?
சாம்பார், குழம்பு வகையை (Sauce or Gravy) சேர்ந்த, அரைத் திடமான துணைக்கறி / தொடுகறி உணவு ஆகும். உலகம் முழுவதிலும் சமைக்கப்படும் உணவு வகைகளில் குழம்புகள் (Sauces) முக்கிய அங்கம் வகிக்கின்றன. பெரும்பாலான குழம்பு வகைகள் தனியே உண்ணத் தக்கதல்ல. இதனைச் பிரதான உணவுடன் (Main Course) கலந்து உண்ண வேண்டும்.
தமிழ்நாட்டு உணவில் சாம்பார் ஒரு மு��்கிய அங்கமாகவே மாறிவிட்டது எனலாம். ருசியும் மனமும் நிறைந்த சாம்பார் இல்லாத சாப்பாடு களைகட்டுவதில்லை. இட்லி, பொங்கல், வடை, தோசை போன்ற காலைச் சிற்றுண்டி முதல் மதிய உணவான சோறு வரை சாம்பார் துணைக்கறியாக மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவாகும். நமது சாம்பருக்கு வடஇந்தியாவிலும், மேலை நாடுகளிலும் ரசிகர் கூட்டம் உண்டு. சாம்பார் சாதம், சாம்பார் இட்லி, சாம்பார் வடை போன்ற உணவு வகைகள் தென்னிந்திய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறுவதுண்டு.
சாம்பார் வகைகள்
காய்கறிகள், பருப்பு (Lentils), புளிக்கரைசல், மஞ்சள், மிளகாய் வற்றல் மற்றும் மல்லி கலந்து அரைத்த சாம்பார்ப் பொடி ஆகிய அடிப்படை மூலப் பொருட்களைக் கொண்டு சாம்பாரினைச் சமைத்தாலும் இதன் சமையல் முறை மற்றும் ருசி ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு வேறுபடுகிறது. செட்டிநாடு சாம்பார், தஞ்சாவூர் சாம்பார், திருநெல்வேலி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், மலபார் சாம்பார், கர்நாடகா சாம்பார், உடுப்பி சாம்பார், கொங்கனி சாம்பார் ஆகிய சாம்பார்களின் சமையல் முறையில் சிற்சில வேறுபாடுகள் உண்டு. முருங்கைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய், அவரைக்காய், சுண்டைகாய், உருளைக் கிழங்கு, கேரட், பலாக்கொட்டை, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், சௌ சௌ, பூசணிக்காய், சாம்பார் வெங்காயம், கீரை – பருப்புடன் சேர்த்து சமைக்கும் காய்களுக்கேற்ப சாம்பாரின் சுவை மாறுபடும். வெங்காய சாம்பார், கதம்ப சாம்பார், தக்காளி சாம்பார், தேங்காய் சாம்பார், அரைத்துவிட்ட சாம்பார், திடீர் இட்லி சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார் போன்ற சாம்பார் வகைகள் தெனிந்தியாவில் விரும்பி உண்ணப்படுகின்றன.
தஞ்சை மராத்திய அரசு
தஞ்சையைச் சோழர்கள் 12 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்.இதன் பின்பு 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களும், 17,18 ஆம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்தனர். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி (கி.பி. 1674 – 1684) என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றித் தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். தஞ்சை மராத்திய அரசு தஞ்சாவூர் சிவாஜி (கி.பி.1832-1855) ஆட்சிக்காலம் வரை (1855 ஆம் ஆண்டு வரை) நீடித்தது.
முதலாம் சாஹூஜி போன்சலே (Shahuji I Bhonsle (Marathi: शाहुजी १/शहाजी तंजावरचे) (கி.பி. 1684 – 1712) என்னும் ஷாஜி தஞ்சை மராத்திய போன்சலே மரபின் இரண்டாவது அரசராவார். இவர் வெங்கோஜியின் மூத்த மகனும் சத்திரபதி சிவாஜியின் சகோதரருமாவார். இவர் தன் 12 ஆம் வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார்.இம்மன்னரின் காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது.
மராட்டியர்கள் புளிப்புச் சுவையை விரும்பி உண்பது வழக்கம். ஆம்தி என்னும் மராட்டிய புளிக்குழம்பு இவர்களுக்குப் பிடித்தமான துணைக்கறி உணவாகும். தமிழ்நாட்டில் பயன்படுத்துவது போல மராட்டியர்கள் புளியை (Tamarind (Binomial Name: Tamarindus indica) பயன்படுத்தவில்லை. இதற்குப் பதிலாக கோகம் (Kokum (Binomial Name: Garcinia indica) என்னும் குடம்புளியைப் பயன்படுத்தினார்கள். இந்தக் கோகம் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் விளைந்தன.

Kokum (Wikipedia)
ஆம்தி சாஹூஜி மன்னருக்கு மிகவும் பிடித்த துணைக்கறியாகும். ஒரு நாள் மஹாராஷ்டிராவில் இருந்து கோகம் என்னும் குடம்புளி வரவில்லை. இதனால் சாஹூஜிக்குப் பிடித்த ஆம்தியை எப்படிச் செய்வது என்று சாரு விலாச போஜன சாலையைச் சேர்ந்த சமையல்காரர்கள் குழம்பினர். கோகமிற்குப் பதிலாகத் தமிழ்நாட்டின் புளியைப் பயன்படுத்தலாமா என்று யோசித்தனர்.
புளி, துவரம்பருப்பு, காய்கறி, மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி ஆம்தி குழம்பைச் சமைத்தனர். சாஹூஜி எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று பயந்தனர். இந்த ஆம்தி சாஹூஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று என்பது வியப்பான செய்தி. புளி சேர்த்துச் சமைத்த ஆம்தி குழம்பை விரும்பிய சாஹூஜி, தனது ஒன்று விட்ட சகோதரரும் மராட்டிய சிவாஜியின் மகனுமான சத்திரபதி சாம்பாஜிக்கு (கி.பி. 1657 – 1689) அளித்த விருந்தில் ஆம்தியைப் பரிமாறியுள்ளார். சத்திரபதி சாம்பாஜிக்கும் புளி சேர்த்துச் சமைத்த ஆம்தி குழம்பு பிடித்துப் போயிற்று. சாம்பாஜியைக் கௌரவிக்க எண்ணிய சாஹூஜி புளி சேர்த்துச் சமைத்த ஆம்திக்கு சாம்பாஜி ஆஹார் என்று பெயாரிட்டார். சாம்பாஜி ஆஹார் என்ற பெயர் சாம்பார் என்று மருவியது. இதுவே சாம்பாரின் கதை. புளி சேர்த்துச் சமைத்த ஆம்தி என்னும் சாம்பாருக்கு சுமார் 300 வயது மட்டுமே என்று புரிந்து கொள்ளலாம்.
.தஞ்சை மராத்திய போன்சலே மரபினைச் சேர்ந்த மன்னர்கள் செய்திகளை ஆவணப்படுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். உணவுகளின் செய்முறைகளையும் ஆவணப்படுத்தினார்கள். “போஜன குதூகலம்” மற்றும் “சரபேந்திர பக்ஷாஸ்திரம் என்ற இரண்டு நூல்க��ும் மராத்திய உணவுகளின் செய்முறைகளை ஆவணப்படுத்துவதற்காக இயற்றப்பட்டன. இந்த நூலில் வேப்பம்பூ சேர்த்துச் சமைக்கப்பட்ட சாம்பாரின் செய்முறை இடம்பெற்றுள்ளது. பிற்காலத்தில் பலவகைச் சாம்பார் செய்முறைகள் சமைக்கப்பட்டிருக்கலாம். பிரபல உணவு வரலாற்றியலாளர் கே.பி.அச���சயாவும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பெயர்காரணம்
சம்பாரம் என்ற சொல்லை கி.பி. 1530 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் கிழக்குச் சுவரில் பொறிக்கப்பட்ட தமிழ்நாட்டு கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது:
“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுது உள்படத் தளிகை ஒன்றுக்குப் பணம் ஒன்றாக,” (South Indian Inscriptions, IV, 503, 1530 CE , Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha (A.R No. 56 of 1892) என்பது கல்வெட்டுப் பாடம்.
பல காய்கறிகளைக் கொண்டு சமைக்கப்பட்ட சம்பாரம் என்ற கறியமுது. மராத்தியர்கள் கி.பி. 1675 ஆம் ஆண்டளவில்தான் ஆட்சிக்கு வந்தனர். எனவே சாம்பார் மராத்திய மன்னரின் போஜன சாலையில் செய்யப்பட்டது என்ற கருத்தை மறுப்பவர்களும் உள்ளனர்.
புளி சேர்க்கப்பட்ட குழம்பை தெலுங்கில் புலுசு Telugu: “పులుసు” (Pulusu) என்று பெயரிட்டு அழைத்துள்ளார்கள். ஆந்திராவில் புளி சேர்த்துச் சமைக்கப்பட்ட குழம்பு இருந்துள்ளது. மராத்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பே புலுசு இருந்திருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். கன்னடத்திலும் ஹூளி Kannada: “ಹುಲಿ” (Huli) என்றால் குழம்பு என்று பொருள். கன்னடத்தில் பிஸி பேளா ஹூளி அன்னா (bisi bēle bhāt) (Kannada: ಬಿಸಿ ಬೇಳೆ ಭಾತ್) என்றால் சாம்பார் சாதம் என்று பொருள்.
சாம்பார் ஊட்டச்சத்து மதிப்பு
சாம்பார் கலோரி சத்து மிக்கது. 308 கலோரிகள் ஒரு கப் சாம்பாரில் இருப்பதாக மதிப்பீடு செய்துள்ளார்கள். துவரம் பருப்பு புரோட்டின் சத்து மிக்கது. பச்சைப் பட்டாணி சேர்த்தால் சத்துக்கள் மிகுதியாகக் கிடைக்கும். சாம்பாரின் ஊட்டச்சத்து உள்ளடக்கம்: புரோட்டீன் 15 கிராம், கொழுப்பு 9 கிராம், சர்க்கரை 3 கிராம், பொட்டாசியம் 265 மி.கி., சோடியம் 14 மி.கி., நார்ச்சத்து 3 கிராம் ஆகும். இது மட்டுமின்றி இரும்புச்சத்தும் வைட்டமின் சியும் சாம்பாரில் உள்ளது. நாம் சேர்க்கும் காய்கறிகளைப் பொருத்து நார்சத்து அமையும். புளியும் உப்பும் அளவு மிகாமல் கவனித்துக்கொள்வது நல்லது. இட்லியுடன் சேர்த்து உண்ணும்போது நல்ல சுவையும் மிகுந்த ஊட்டச் சத்தும் கிடைக்கும்.
குறிப்பு நூற்பட்டி
சாம்பாஜி (விக்கிபீடியா)
சாம்பார் நல்லதா? மருத்துவம் குறிப்பிடும் சத்துக்க��், எச்சரிக்கைகள்! #HealthTips விகடன் ஏப்ரல் 12, 2017
சாம்பாரின் வயசு என்ன? ஆதி வள்ளியப்பன் தமிழ் இந்து டிசம்பர் 21, 2013.
தமிழ் மண்ணில் பிறந்த மராட்டிய குழந்தை சாம்பார் https://www.dinamalar.com/news_detail.asp?id=1086207&Print=1
முதலாம் சாகுஜி (விக்கிபீடியா)
Garcinia indica Wikipedia
Sambar (dish) Wikipedia
youtube
சாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.
0 notes