#வேத காலம்
Explore tagged Tumblr posts
ramanan50 · 2 years ago
Text
பண்டைய வரைபடங்கள் இந்திய வரலாற்று நிகழ்வுகள் காலக் குறிப்புகளுடன்
பண்டைய இந்தியாவில் ஐம்பத்தாறு இராச்சியங்கள் இருந்தன .அவற்றில் சில மிகப் பெரியவை, பேரரசுகள் . சில தமிழ்நாட்டில், சேர இராச்சியம் போன்று சிறியவை.ராமாயணம், மகாபாரத காலத்தில் பெரிய ராஜ்ஜியங்களை விட , சிறிய ராஜ்ஜியங்கள் செழிப்பாக இருந்தன என்பது கவனிக்கத்தக்கது.தமிழ் சேர மன்னன் பெருஞ்சோற்று உதியன் நெடுஞ்சேரலாதன் , மகாபாரத இதிகாசப் போரில் இரு படைகளுக்கும் உணவளித்தான்.இது குறித்த மேலும் விவரங்களுக்கு இது…
Tumblr media
View On WordPress
0 notes
kingmabry · 9 months ago
Text
Tumblr media Tumblr media
*தினம் ஒரு (தெய்வத்தின்) குரல்*
யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நி��ாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையா���த் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாபகாரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.
ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு _ஜட்ஜ்_ குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம்.
சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். *“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ”* என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லி��ிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் அந்த கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது.
சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.
ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அநுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். _“இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்”_ என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.
2 notes · View notes
andrewkingslyraj · 3 months ago
Text
 15ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் தந்தையான மார்டின் லூதர் அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகம்.
    அது ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்திற்கு புறம்பான காரியங்களை துணிகரமாக நடப்பித்துக்கொண்டிருந்த காலம். தேவன் ஊதி மனிதர்களுக்குக் கொடுத்த தம் சட்ட புஸ்தகத்தை பொது மக்களிடம் கொண்டுபோகாமல் ஒழித்துவைத்து மனிதர்களுடைய பாரம்பரியங்களை கிறிஸ்தவத்திற்குள் திணித்துக்கொண்டிருந்த காலம். கடவுள் தரும் இலவசமான பா�� மன்னிப்பையும், இரட்சிப்பையும் காசுக்கு விற்ற தெய்வபயம் அற்ற மதவாதிகள் இருந்த காலம். அப்படிப்பட்ட காலத்தி��் ஜூலை 17, 1505 அன்று மார்டின் லூதர் அவர்கள் இறையியல் கற்கும்படியாக அகஸ்தீனிய மடாலயத்திற்குச் சென்றார். அவருடைய பெற்றோர் அவ்வளவு எளிதாக மடாலயத்திற்கு அனுப்பிவிடவில்லை. அவர்கள் மகன் வேறு நல்ல துறையில் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தேவன் ஒருநாள் தங்கள் மகனை பயன்படுத்தி தமது வார்த்தையை நிலைநாட்டுவார் என்பது அன்று அவர்களுக்கு தெரியாது. லூதர் தனது தீர்மானத்தில் உறுதியாக நின்று மடாலயத்திற்கு சென்றார். லூதர் இரட்சிப்பின் நிச்சயம் இன்றி தனது ஆத்துமாவைக் குறித்த பயத்தோடுதான் மடாலயத்திற்கு சென்றார். காரணம் ரோமன் கத்தோலிக்க மதம் தேவனுடைய நித்திய இரட்சிப்பின் சத்தியத்தை போதிக்கவில்லை. லாதர் தனது இரட்சிப்பின் நிச்சயமின்மையை தனது வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய இன்னலாகவே பதிவிடுகிறார். இரட்சிப்பைக் குறித்த கவலையால் பலமணி நேரம் பக்தி காரியங்களில் ஈடுபடுவார். ஆனாலும் அது அவருக்கு உதவவில்லை. பலமணி நேரம் தனது பாவத்தை மடத்தில் உள்ள குருமாரிடம் அறிக்கை செய்துவந்தார். இவருடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்த அவருடைய வழிகாட்டியான ஒருவர் குருமார்களைத் தேடுவதை நிருத்தி கிறிஸ்துவின்மீது மாத்திரம் கவணம் செலுத்தும்படி அறிவுறை வழங்கினார். இந்த வார்த்தையானது பின்நாட்களில் அவருடைய மனந்திரும்புதலுக்கு காரணமாக விளங்கியது.
    1510ஆம் ஆண்டு ரோமாபுரிக்கு புனித பயணம் செய்த லூதர் தேவனுடைய திருச்சபையில் அரங்கேரிய அவலத்தைப் பார்த்து மனம் கொதித்தார். 1511ஆம் ஆண்டு விட்டன்பர்கில் உள்ள மடாலயத்திற்கு மாற்றப்பட்ட லூதர் அங்கே இறையியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கே புதிதாக நிரூவப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார். சங்கீத புஸ்தகங்களை விளக்கும்போது ரோமன் கத்தோலிக்க மதத்தைக் குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். பின் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிரூபத்தை விளக்கும் போது கத்தோலிக்க மதத்தைக் குறித்த் அவருடைய விமர்சனம் வீரியம் பெற்றது (1515 மற்றும் 16களில்). வேத சத்தியங்களை கற்றுக்கொள்ளவும், சக இறையியலாளரோடு வாதிடவும் ஆரம்பித்தார். ஒரு மனிதன் நீதிமானாவது கிருபையினாலும், விசுவாசத்தின் மூலமாகவும், கிறிஸ்துவில் மாத்திரம் மட்டுமே என்பதை அறிந்துகொண்டார். அவருக்கு பலநாட்கள் போராட்டமாக இருந்த இரட்சிப்பின் நிச்சயத்தையும் சுவிசேஷத்தின் மூலம் பெற்றார். இது சபை வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது. கத்தோலிக்க மதத்தினால் பூட்டப்பட்டிருந்த வேதம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அநேகர் கர்த்தருடைய வேதத்தை தேடி வாசிக்க ஆரம்பித்தனர்.
    அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் "தேவ நீதி"யைக் குறித்து எழுதுகிற��ர். ஆரம்பத்தில் இந்த பதத்தை லூதர் வெறுத்தார். ஏனென்றால், தேவன் நீதியான நியாயாதிபதியாக இருந்து அவருடைய ஜனத்தை அவர்களுடைய நீதியின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பார் என்று புரிந்து வைத்திருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை அப்படியே போதித்து வந்தது. இங்கே சிக்கல் என்னவென்றால், மனிதனுடைய நீதி எப்போதும் பரிசுத்த தேவனை திருப்தி படுத்த முடியாது என்பதை லூதர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே மிகவும் கவணத்தோடு வேதத்தை படிக்க ஆரம்பித்தார். பொதுவாக கத்தோலிக்க துரவிகள் வேதத்தை படிப்பதில்லை, வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. இப்படி வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கடவுள் வெளிப்படுத்திய சத்தியத்திலிருந்துதான் தன் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டும் என்பதில் உருதியாயிருந்தார். வேதத்தை வாசிக்கும்போது அப். பவுல் உண்மையில் என்ன போதிக்கிறார் என்பதை லூதர் கண்டுகொண்டார். அதாவது 'நீதி என்பது தேவனுடைய கிருபையினால், கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறுகிற இலவச பரிசு' என்பதை கண்டுகொண்டார். தேவன் எதிர்பார்ப்பது எதுவோ, அதை தேவன் கிறிஸ்து இயேசுவின் மூலம் கொடுக்கிறார். நீதிமானாகுதல் என்ற வேத சத்தியத்தை லூதர் கண்டுகொண்டது உண்மையில் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது. கத்தோலிக்க துரவி சீர்திருத்தவாதியானார்.
    அக்டோபர் 31, 1517 அன்று லூதர் தனது 95 ஆய்வறிக்கைகளின் பட்டியலை விட்டன்பர்கில் உள்ள ஆலயத்தில் அறைந்தார். இந்த ஆய்வறிக்கைகள் ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்த பாவமன்னிப்பு சீட்டு போன்ற மூட நம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்தது. கிருபை மாத்திரமே ஒரு மனிதனை நீதிமானாக்க முடியும் என்ற அடிப்படை சத்தியத்தை இந்த ஆய்வறிக்கைகள் பிரகடணம் செய்தது. லூதர் இந்த ஆய்வறிக்கைகளின் நகலை ஆர்ச் பிஷப்பான ஆல்பிரட்சுக்கு அனுப்பி பாவ மன்னிப்பை வியாபாரப்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார். ஆனால், ஆல்பிரட்ச் லூதரின் வைராக்கியத்தை மதிக்கவில்லை. இதைக் குறித்த செய்தி ரோமிற்கு சென்றது. லூதரின் 95 ஆய்வறிக்கையின் பட்டியல் போப்பின் அதிகாரத்தை தாக்குவதாகப் பார்த்தார்கள். 1518ஆம் ஆண்டு ஹைடல்பர்கில் நடந்த ஒரு கூடுகையில் லூதர் தனது நிலைபாட்டை நிலைநாட்டினார். இங்கே லூதர் முழங்கிய தெளிவான சத்தியம் இறையியல் புரட்சியைப் பற்றவைத்தது. இங்கே நடைபெற்ற விவாதம் தான் சிலுவையைப் பற்றிய சத்தியத்தை மீண்டும் வெளிக்கொண்டுவந்தது.
    ஹைடல்பர்கில் லூதர் எடுத்தியம்பிய சத்தியத்தை மறுக்கும்படி போப்பின் அடுத்த அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. ஆனால் லூதரோ "வேதமும் தெளிவான காரணமுமின்றி" தன் கருத்தை மறுப்பது முடியாது என்று கூறிவிட்டார். இது லூதரை ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்ற காரணமாக அமைந்தது.
    இருப்பினும் லூதர் தளர்ந்துவிடவில்லை. 1519 முழுதும் அவர் தொடர்ந்து விட்டன்பர்கில் கற்ப்பித்து வந்தார். அவ்வாண்டு ஜூன்-ஜூலையில் ��டைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மன்னிப்பைப் பற்றியும் போப்பைப் பற்றியும் ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். போப்பின் வேதத்திற்கெதிரான செயல்பாடுகளைப் பொருக்க முடியாத லூதர் போப்பை "ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் இருக்கும் காட்டு பன்றி" என்று விமர்சித்தார். ஜூன் 15, 1520 அன்று லூதரை கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்றப்போவதாக போப்பிடமிருந்து பயமுறுத்தும்படியான கடிதம் வெளிவந்தது. அக்டோபர் 10ஆம் தேதி பெற்ற லூதர் இந்த கடிதத்தை டிசம்பர் 10ஆம் தேதி பொதுவெளியில் எரித்து அதன்மீதுள்ள வெறுப்பை காட்டினார்.
    1521ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லூதரை சபையிலிருந்து துரத்துவதற்கான கடிதமும் வந்தது. பேரரசர் ஐந்தாம் சார்லஸ், லூதர் பக்க நியாயத்தை எடுத்துக்கூறும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார். அங்கேயும் லூதர் தன் எழுத்துகளை மறுக்கமாட்டேன் என்றார். ஆதலால் லூதர் தடை செய்யப்பட்ட நபரானார்.
    இப்பொழுது லூதர் தேடப்படும் குற்றவாழியானார். அவரைக் கொல்வதற்கு துடியாக துடித்துக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து தப்பித்தது ஆச்சரியமே. வாஸ்ட்பர்க் கோட்டையில் 1522ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒழிந்துகொண்டிருந்தார். பின் பழையபடி சத்தியத்தை போதிக்க ஆரம்பித்தார். லூதர் தனது துரவு வாழ்க்கையைத் துரந்து கேத்தரினா வொன் போரா என்ற கத்தோலிக்க கண்ணியாஸ்திரியை மணந்தார்.
    விட்டன்பர்க்கில் 1533 முதல் தனது மரணம் வரை (1546) இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். ஐஸ்லெபன் என்ற இடத்தில் பிப்பிரவரி 18, 1546 அன்று கர்த்தருக்குள் நித்திரையடந்தார்.
    தனது வாழ்நாளில் கர்த்தருடைய சுவிஷேசத்திற்க்காக வைராக்கியமாக நின்ற இவரின் வாழ்க்கை இன்று பல கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்துவருகிறது. தேவனை மாத்திரமே உயர்த்தி, அவருடைய வார்த்தையே சகல அதிகாரம் நிறைந்தது என்பதை எடுத்துக்கூறி, வேதத்திலிருக்கும் சத்தியத்தையே திருச்சபை போதிக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுருத்திய மார்டின் லூதருக்கு இன்றை புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் மதிப்பளிக்காமல் புதிய வெளிப்பாடுகள் இன்னமும் உண்டு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே சபைகளைப் பார்த்தால் மனவேதனையாக இருக்கிறது. தேவன் கிருபையாக கொடுக்கும் இரட்சிப்பை மனிதனுடைய சாதனையாக போதிக்கும் இன்றைய புராட்டஸ்டண்ட் சபைகளைப் பார்த்தால் மனம் வேதனையாக இருக்கிறது. மனந்திரும்புங்கள். வேதத்தின் பக்கம் திரும்புங்கள். கிறிஸ்துவின் பக்கம் திரும்புங்கள். தேவனுடைய கிருபையை சார்ந்துகொள்ளுங்கள். அவர் மீது மாத்திரம் விசுவாசம் வையுங்கள். தேவன் ஒருவருக்கே மகிமையை செலுத்துங்கள். தொடரட்டும் சீர்திருத்தம் தேவ வார்த்தையை மட்டும் கொண்டு.
0 notes
sirukathaigal · 2 years ago
Text
10 சிறுகதைகள்
10 சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
https://www.sirukathaigal.com/2023/02/21/ மூன்று வருஷங்களுக்குப் பின்… - ரா.வீழிநாதன்
ரேணுகா – ஒரு பக்க கதை - சோலச்சி
மீன் வாங்கலையோ! - சே.வெ.சண்முகம்
வேத வித்து - 7 & 8 - சாவி
என்னை பற்றி நான் அறிய - ஸ்ரீ.தாமோதரன்
தற்செயலாக - சுஜாதா
காலம் மறந்த இடம் - அத்தியாயம்: ௧௦ - சு.சோமு
கலியன் மதவு - 25 & 26 - ஜூனியர் தேஜ்
கல்யாண மாலை - சௌ.முரளிதரன்
இரவில் - தொ.மு.சி.ரகுநாதன்
0 notes
lordcomesoon · 3 years ago
Text
ஐந்து ஆகமங்கள்
ஐந்து ஆகமங்கள் ஆதியாகமம் – உபாகமம் ஆதியாகமம் • கிமு 1430 இல் எழுதப்பட்டது • காலம் 4004-1805 கி.மு • வேத ஆசிரியர் மோசே ஆதியாகமம் 1-11 உருவாக்கம் -பாபலின் கோபுரம் ஆதியாகமம் 12-25 ஆபிரகாமின் வாழ்க்கை ஆதியாகமம் 25-27 ஈசாக்கின் வாழ்க்கை ஆதியாகமம் 28-36 யாக்கோபு வாழ்க்கை ஆதியாகமம் 37-50 யோசேப்பின் வாழ்க்கை யாத்திராகமம் • கிமு 1400 இல் எழுதப்பட்டது • கிமு 1525-1400 வரையிலான காலகட்டம் • வேத ஆசிரியர்…
Tumblr media
View On WordPress
0 notes
common-man · 4 years ago
Text
ஒரு தேரின் கதை!''🌹
(உண்மைச் சம்பவம்)
--By Amaruvi Devanathan.
#ஆண்டு 1953....
நாராயண ஐயங்கார் வீட்டுத் திண்ணையில் படுத்து கொண்டிருந்த எனக்கு தூக்கம் கெட்டது. மெல்லக் கண் விழித்துப் பார்த்தேன்.
தெருக���கோடியில் புகை போன்று இருந்தது. நாராயண மாமா, பெரிய தோண்டியில் தண்ணீர் எடுத்து கொண்டு ஒடினார்!
ஊரில் ஒரே களேபரம். சன்னிதி த��ருவே அல்லோகலப் பட்டது. குடியானத் தெருவிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள்.
முடிந்தவரை கிணறுகளிலிருந்து எல்லாம் தண்ணீர் கொண்டுவந்து இருந்தனர். அருகில் இருக்கும் குளங்களில் இருந்தெல்லாம் தண்ணீர் கொண்டுவர வண்டிகள் அனுப்பப்பட்டன!
சன்னிதி தெருவாசிகள் எல்லாரும் அழுதபடி இருந்தனர். செய்வதறியாமல் ‘ஓ’வென்று கதறினர்....
ஒன்றும் புரியவில்லை. எதுவோ கலவரம் போல் தெரிந்தது. புதுமையாக இருந்தது.
அப்பா வேறு ஊரில் இல்லை.... வழக்கம் போல் வேத பாராயணம் என்று மன்னார்குடி சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் விபரமாவது தெரியும்.
'சின்னவன்' என்று எனக்கு யாரும் ஒன்றும் சொல்லாமல் தெருக்கோடி நோக்கி ஓடியவண்ணம் இருந்தனர்!
நானும் வேஷ்டியை பிடித்துக்கொண்டு ஓடிச் சென்று பார்த்தேன்.
கூட்டம் தாண்டி, நெருப்பு சுவாலை தெரிந்தது! ஆனால் நெருங்க முடியவில்லை. அனல் அதிகம். சற்று விலகி நின்று பார்த்தேன்.
அறுபது அடி தேர் எரிந்து கொண்டிருந்தது! 💔
பெண்கள் வாய் விட்டு அழுதனர். மக்கள் ஆக்ரோஷமாக மண்ணையும் தண்ணீரையும் வாரி இரைத்தனர். அணைந்தபாடில்லை.
என் பங்குக்கு, நானும் வேஷ்டியை அவிழ்த்து.... மண்ணை வாரி நிரப்பி, தேர் மீது மீண்டும் மீண்டும் எறிந்தேன்.
'யானைப் பசிக்கு சோளப் பொறி போல்' இருந்தது. ஒரு நாள் முழுவதும் எரிந்து தணிந்தது. 🙁
🌿🌿
தேர் அழுந்தியதால் 'தேர் அழுந்தூர்' என்று பெயர் பெற்ற எங்கள் ஊரில் தேர் இல்லை. வெறும் கரிக் கட்டைகளே மிஞ்சின. 🙁
செய்தி கேட்டு அப்பா உடன் வந்து சேர்ந்தார். அப்பாவும் நாராயண ஐயங்காரும் துக்கம் தாங்காமல் அழுதனர். ஏதோ பெரிய அழிவு வருகிறது என்று அப்பா சொன்னார்.
- பேரிழப்பு.
- அதன் பின் பேரமைதி.
ஊர் அழிவு தொடங்கியது.
ஊரில் எல்லார் வீடுகளிலும் ஒருசேர இழவு விழுந்தது போல் இருந்தது.
ஒரு யுகம் முடிந்து... அடுத்த யுகம் துவங்கும்போது இவ்வாறு ஒரு பேரழிவு எற்படும் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது.
🌿🌿
'ஆமருவியப்பன்' களை இழந்து போனான்.
வருடங்கள் செல்லச் செல்ல ஆமருவியப்பனின் உற்சவங்களும் படிப்படியாக நின்று போயின.
ஐம்பது வருடம் தேர் இல்லாமலே காலம் கழிந்தது.
ஊரில் மங்கலம் அழிந்து அமங்கலம் தலை விரித்தாடியது.
தன் சோகை அழிந்த ஊரில் இருந்து சன்னிதி தெரு காலியானது. பிழைப்பு தேடி மக்கள் புலம் பெயர்ந்தனர்.
தேர் எரிந்த கதை மறக்கப்பட்டது.
'தேராத ஊரானது தேரழுந்தூர்'.
வருடாவருடம் வானம் பொய்த்தது.
கழனிகள் நிரம்பிய ��ர் என்று ஆழ்வார் பாடிய ஊர் கழிசடைகளால் கை விடப் பட்டது.
வயிற்று பிழைப்பு மேலோங்கியதால் படித்த மக்களும் வெளியேறினர்.
🌿🌿
''தேரும் ஊரும் மறக்கப்பட்டது'' என்பது என்னால் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை.
ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும் போதும் தேர் முட்டியில் நின்று ஒரு பெருமூச்சு விட்டு செல்வதே முடிந்தது.
''வேஷ்டியை அவிழ்த்து மண்ணை அள்ளி போட்டது'' மீண்டும் மீண்டும் நினைவு வந்து வருத்தியது. 🙁
தேர் எரிந்த ஒரு வருடத்தில் அப்பாவும் மாரடைப்பால் காலமானார். குடும்ப பாரம் காரணமாக வெளியூரில் படிப்பும் வேலையும் என்று கழிந்தது.
ஆனால்....
தேர் எரிந்த காட்சி மட்டும் மனதை விட்டு மறையவில்லை.
ஐம்பது வருடத்தில், தேர் இருந்த இடத்தில்.... #கோழி, #இறைச்சிக்கடை முதலியன தோன்றின.
அரசு பட்டா வழங்கி அந்த இடத்தில் வீடும் கட்டப்பட்டது.
ஊரும், மக்களும் மறந்த தேர்க்கட்டைகள்.... ஐம்பது வருட மழை வெயில் தாங்கி சிறிது சிறிதாக அழிந்தது. பண்டைய இரும்பும், சில பாழடைந்த கட்டைகளுமே அந்த இடத்தின் மறைந்த கதையைப் பேசின.
'தேர்_மூட்டி' என்று அழைக்கப்பட்ட அந்த இடம் ...... இன்னமும் அவ்வாறே அழைக்கப்பட்டது.
ஆனால் தேர் தான் இல்லை!
🌿🌿
கல்வி, குடும்பம், பொதுச் சேவை என்று காலம் சென்று கொண்டிருந்தது.
பணி ஒய்வு பெற்று ஊர் திரும்பினேன்.
அதுவரை, ஊர்க்காரர்களை சந்திக்கும் போதெல்லாம் ‘தேர் கட்டுவது' பற்றி நகைச்சுவையாகப் பேசப்பட்டது.
அதற்குக் காரணம் நாற்பதாண்டுகளும் 'அரசுகள் இந்த முயற்சிக்குக் கை கொடுக்காது...' என்ற பொதுவான நம்பிக்கையே.
மக்களின் எண்ணம் போலவே... அரசுகளும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு கை கொடுக்காமலேயே இருந்தன.
கோவில்களுக்கும், அவை சார்ந்த நிலங்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் முதலியன ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும்......
அரசுகள் அவற்றை மீட்க 'எந்த முயற்சியும் செய்யவில்லை' என்பது நிதர்சனகமாகவே இருந்ததும் தேர் பற்றிய அரசுகளின் எண்ண ஓட்டம் பற்றிய மதிப்பீடாக இருந்தது.
🌿🌿
‘'கோஸக பக்த சபா’' என்ற ஒரு அமைப்பை வேறு இருவருடன் சேர்ந்து தொடங்கினேன்.
அதன் மூலம் ஊர்ப் பெருமாளுக்கு ''உற்சவங்கள்' ' நடத்தப்பட்டன.
வருடம் தோறும் வசூல் செய்து உற்சவங்கள் செய்தோம்.
அதற்கே 'போதும்... போதும்...' என்று இருந்தது!
''ஆளைப் பார்த்தவுடன் கதவைச் சாத்தும்'' அளவிற்கு ஊர் ஊராகச் சென்று கோவில் விஷயமாக அலைந்து கொண்டிருந்தோம்!
🌿🌿
சில வருடம் முன்பு அன்றைய அரசு ஒரு திட்டம் அறிவித்தது.
''பழம்பெரும் கோவில்களுக்கு தேர்த் தி��ுப்பணி செய்ய ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை''
என்று அறிவித்தது!
ஆனால் மேலும் பணம் தேவைப்பட்டால் பக்தர்கள் தாங்களே ‘நன்கொடையாளர்’ முறையில் உதவி செய்யலாம் என்று ஆணை பிறப்பித்தது!
இது ஒரு நல்ல ஆரம்பம் என்று நினைத்தேன். சபாவில் கூப்பிட்டு பேசினேன்.
ஆனால், 'ஐந்து லட்சம் கொண்டு என்ன செய்ய முடியும்...?!' என்று பின்வாங்கினோம்.
இன்னொரு அரசு பதவி ஏற்றது.
''பயன்படாமல் இருக்கும் அரசு பணம் மீட்டுக்கொள்ளப்படும்என்று அறிவிப்பு செய்தது!
வேறு வழி தெரியவில்லை.... ''தேர் கட்டலாம்'' என்று முடிவெடுத்தோம்!!
அரசு ஒப்புதல் தேவை என்றார்கள். பல முறை முயற்சி செய்து பெற்றோம்.
🌿🌿
தேர் கட்டும் ஸ்தபதியை தேடினோம்.
'மன்னார்குடி தேர்' எவ்வாறு கட்டினார்கள் என்று ஆராய்ந்தோம்.
பல ஸ்தபதிகளை பார்த்தோம்.
ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தோம்.
பின்னர் மரம் ஏலம் எடுக்கவேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களை தேடி அலைந்தோம்.
ஒப்பந்தம் செய்தவர் மரம் தரவில்லை. இழுத்தடித்தார்.
இதற்கிடையில்.....,
- ஒவ்வொரு நிலையிலும் அரசியல்,
- அதிகார வர்க்கம்,
- வேண்டாதவர்கள் மற்றும்,
- கலகக்காரர்களின் குறுக்கீடுகள்
என்று ஒவ்வொரு நாளும் முன்னேறினோம்.
🌿🌿
இதற்கிடையில் எரிந்த தேரின் மிச்சங்களைப் பார்வையிட.. ஒரு அரசு குழு வந்தது.
பின்னர் சிதைந்த தேரின் மிச்சங்களை அப்புறப்படுத்தினோம்.
1835-ல் யாரோ... ஒருவர் தேரினை செப்பனிட்டுள்ளார்!' என்று ஒரு செப்புப் பட்டயம் கிடைத்தது.
சுமார் 150 வருடங்கள் கழித்து, அத்திருப்பணியை செய்ய....
ஆண்டவன், 'என்னையும் நண்பர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளான்!' என்று நினைத்து,
அன்று முழுவதும் பசியே எடுக்கவில்லை.
ஒரு சகாப்தத்தின் நிறைவில் நிற்பது போன்ற உணர்வு!
ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தினை மீட்கும் பணியில் இருப்பது போன்று உணர்ந்தேன்!
அப்போது முதல்....
''நான்... என்ன செய்தேன், - அவை எப்படி செய்யப்பட்டன'' என்று தெளிவாக நினைவில்லை!
தற்போது நினைத்தால் கூட பிரமிப்பாக உள்ளது!
🌿🌿
'இலுப்பை மரம்' பெரிய அளவில் தேவை என்று ஸ்தபதி கூறினார். ஊர் ஊராக அலைச்சல்.
எங்கெங்கு இலுப்பை மரம் தென்படுகிறதோ உடனே, அந்த இடத்தின் உரிமையாளரை சந்திப்பது, மரம் கேட்பது என்று இருந்தேன்.
ஆனால், என்ன அதிசயம்!
'கோவில் தேருக்காக' என்று தெரிந்தவுடன் மிகப் பலரும் இனாமாகவே தந்தனர்!!
ஆட்களை கொண்டு வந்து மரம் அறுப்பது, வண்டிகளில் கொண்டு செல்வது என்று மிகக் கடும் பயணம் அது.
எந்தெந்த ஊருக்கெல்லாம் சென்றேன் என்று என் நினைவில் இல்லை. அனேகமாக... தஞ்சை மாவட்டம் முழுவதும் சென்றிருப்பேன்!
மரம் வெட்ட #காவல்துறை, #வனத்துறை முதலிய துறைகளில் அனுமதி பெற வேண்டும்.
ஒவ்வொரு முறையும் அது ஒரு போராட்டமே. அதைப்பற்றி எழுத இந்த ஒரு சகாப்தம் வேண்டும்.
🌿🌿
பின்னர், தேருக்கான இரும்பு சேகரிப்பு.
பல இரும்பு வியாபாரிகள் தந்தனர். இதில் பல சமயத்தவர்களும் அடக்கம்!
🌿🌿
மூன்று ஆண்டுகள்....
குடும்பம், உடல் நிலை இவை பற்றிய நினைவே இல்லை. ‘தேர்’ மட்டுமே எண்ணத்தில் இருந்தது.
தேர் எரிந்த காட்சி மனதில் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.
''எப்படியும் தேர் கட்டி, ஓட்டி முடிக்க வேண்டும்'' என்று ஒரு வெறி....
- இப்போது நினைக்கிறேன்!
''எரிந்த தேர் மீண்டு எழப் போகிறது!'' என்று பெயர் தெரியாத பலர் கூட உதவினர்.
🌿🌿
2005-ல் பல தியாகங்களுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் வெள்ளோட்டம்.
அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து வந்திருந்த கூட்டம் இருக்கிறதே.....!!
'இதற்காக....... ஐம்பது வருடங்களாக காத்து இருந்திருப்பார்கள்' போல் தெரிந்தது!
மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் நிகழ்வாக அது அமைந்தது!
🌿🌿
‘'#தேர்_இழந்தூர் 💔
என்று அறியப்பட்ட எங்கள் ஊர்...
#தேர்_எழுந்தூர்’ ❤️ ஆனது!''....
என்று சபா தலைவர் ரங்கனாதன் கூறி ஆனந்தப்பட்டார்.
உடன் பணியாற்றிய ரங்கராஜன் பேச முடியாமல் கண் கலங்கி நின்றார். அன்று எழுபது வயது கடந்த இருவரும் செய்துள்ள தியாகங்கள் பற்றி ஒரு தொடர் எழுதலாம்.
🌿🌿
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இதே போல் அனைவரும் கூடி தீ அணைக்க முற்பட்டனர்.
ஐம்பது ஆண்டுகள் கழித்து அதைவிட பல மடங்கு மக்கள் வந்திருந்து புதிய தேரை இழுத்தனர்.
வெள்ளோட்டத்தின் போது என் பள்ளி நண்பன் அஜீஸ் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தார்! 🌺
'மத நல்லிணக்கம்' என்றால் என்னவென்று எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்.
🌿🌿
பின்னர், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உற்சவத்தின்போது.... ஆமருவியப்பன்' தனது தேரில் எழுந்தருள்கிறார்! ❤️
🌿🌿
1955-ல் என் மனதில் எரியத் தொடங்கிய தீ, 2005-ல் அணைந்தது!
ஊரார் பலரின் நிலையும் அப்படியே என்று நினைக்கிறேன். 🙂
ஸ்ரீஆமருவியப்பன்பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
சோழ நாட்டு இருபத்து மூன்றாவது திருத்தலம்.
0 notes
srikamakshivedicservice · 4 years ago
Text
ரதசப்தமி RathaSapthami 19.02.2021 தாத்பர்யம்
ரதசப்தமி RathaSapthami 19.02.2021 தாத்பர்யம்+919994217856 பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார். அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி…
Tumblr media
View On WordPress
0 notes
mrpuyal · 5 years ago
Text
மகா சிவராத்திரி உருவான கதை - Maha Sivarathiri Tamil
Tumblr media
மகா சிவராத்திரி உருவான கதை. Maha Sivarathiri Tamil மஹா சிவராத்திரி சிறப்புகள். சிவராத்திரி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்?
Tumblr media
கும்ப மாதம் என்று கூறப்படும் மாசி மாதத்தில் (தேய்பிறை) கிருஷ்ண பட்சத்தில் வரும் சதுர்தசி திதியுடன் கூடிய தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்? • நித்திய சிவராத்திரி • மாத சிவராத்திரி • பட்ச சிவராத்திரி • யோக சிவராத்திரி • மகா சிவராத்திரி இவ்வாறு சிவராத்திரிகள் ஐந்து வகைப்படும். இதில் மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரியே “மகா சிவராத்திரி (Maha sivaratri)” என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரி உருவான கதை வரலாறு
Tumblr media
பிரளயம் முடிந்து உலகம் முழுதும் உள்ள உயிர்கள் அனைத்தும் சிவனிடத்தில் ஒடுங்கின. பிரம்மனும் சிவனிடத்தே ஐக்கியம் ஆனார். உயிர்கள் ஏதும் தோன்றவில்லை. இதை கண்டு அகில உயிர்களுக்கும் தாயான பார்வதி தேவி மனம் வருந்தி மீண்டும் பிரபஞ்சம் உருவாகி உயிர்கள் பிறக்க சிவனை நோக்கி இரவு முழுவதும் தியானித்து சிவன் மனம் மகிழ பூசைகள் செய்தார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன் மீண்டும் உலகம் தோன்ற அருள் புரிந்தார். அன்னையும் அவள் பூஜ�� செய்து அருள் பெற்ற தினத்த���ல் எவர் சிவனிற்கு பூஜைகள் செய்தாலும் அவர்களுக்கு சகல சௌக்கியமும், முக்தியும் கிடைக்க வேண்டும் என்ற வரம் வேண்டினார். சிவனும் பார்வதியின் வேண்டுதலை ஏற்று வரமளித்தார். பார்வதி பூஜைகள் செய்த அந்த இரவே மகா சிவராத்திரி (மஹா சிவராத்திரி) தினமாகும். இந்நாளில் நந்தி முதல் சனகாதி முனிவர்கள் வரை பலரும் விரதமிருந்து பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர். மஹா சிவராத்திரி சிறப்புகள் - கதை ஒரு காட்டில் வாழ்ந்து வந்த குரங்கானது வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. குரங்கு வில்வம் என அறியாது இலைகளை இரவு முழுவதும் கொய்து கீழே போட்டு கொண்டே இருந்தது. அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அறியாமல் குரங்கு எறிந்த போதிலும் சிவராத்திரி அன்று இரவு முழுதும் சிவனிற்கு அர்ச்சனையாக மாறியதால் இறையருள் பெற்றது. அந்த குரங்கே “முசுகுந்த சக்ரவர்த்தி” ஆக பிறந்தார் என்ற கதை உள்ளது. ஒரு சமயம் வேடன் ஒருவன் இரவில் காட்டில் புலி துரத்தி வருவதற்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். புலியானது அவனை இரையாக்க அந்த மரத்தையே சுற்றி கொண்டே வந்தது. வேடன் இரவில் கண் அயர்ந்து விடாமல் இருக்க மரத்தின் இலைகளை கொய்து எறிந்து கொண்டே இருந்தான். அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டே இர���ந்தது. சிவராத்திரி என்று வேடன் அறியாமல் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்த போதிலும். சிவன் மனம் மகிழ்ந்து அவனுக்கு முக்தி அளித்தார் என்ற கதையும் கூறப்படுகிறது. சிவராத்திரி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?
Tumblr media
சிவராத்திரியன்று முதல் நாள் ஒரு பொழுது உண்டு சிவராத்திரியன்று உண்ணாமல் விரதமிருந்து நான்கு சாம பூஜைகள் செய்து மறுநாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து பின் சிவராத்திரி விரதம் முடிக்க வேண்டும். நான்கு சாம பூஜைகளும் சிவனிற்கு பிடித்தமான அபிஷேக பொருட்கள், மலர்கள், இலைகள், பழங்கள், கிழங்கு வகைகள், நைவேத்தியங்கள் கொண்டு பூஜிக்க வேண்டும். நான்கு சாம பூஜை நேரங்கள் முதல் காலம் – இரவு 07:30PM இரண்டாம் காலம் – இரவு 10:30PM மூன்றாம் காலம் – நள்ளிரவு 12:00AM நான்காம் காலம் – அதிகாலை 04:30AM நான்கு சாம பூஜை முறைகள் முதல் சாமம் (இரவு 7:30PM) இந்த முதல்கால பூஜை, ஸ்ருஷ்டி தொழில் புரிபவரான "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசா��ம்) அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரை மற்றும் அரலி பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பால் அன்னம் மற்றும் பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாகப் படைக்க வேண்டும். நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. தமிழில் சிவபுராணம் ஓதி பூஜிக்க வேண்டும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். இரண்டாம் சாமம் (இரவு 10:30PM) இந்த இரண்டாவது சாம பூஜையை காக்கும் கடவுளான "விஷ்ணு" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், துளசியால் அர்ச்சனைகள் செய்தும், பாயசம் நிவேதனமாக படைக்க வேண்டும். நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர் வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. கீர்த்தி திருஅகவல் ஓதி பூஜிக்க வேண்டும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தனம் தானியம் சம்பத்துக்கள் வந்து சேரும். மூன்றாம் சாமம் (நள்ளிரவு 12:00AM) இந்த மூன்றாம் சாம பூஜை அருளே வடிவான "அம்பாள்" பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், மூவிதல் வில்வம் மற்றும் ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைக்க வேண்டும். இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. திருவண்டபகுதி ஓதி பூஜிக்க வேண்டும். இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை "லிங்கோத்பவ காலம்" என்பர். இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக வானிலும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடைய காலம் ஆகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க அம்பிகையின் அருளும் உடன் கிடைக்கும். நான்காம் சாமம் (அதிகாலை 4:30AM) இந்த நான்காவது சாம பூஜையானது முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் போற்றி திருஅகவல் பாட வேண்டும். சுத்தான்னம் (வெள்ளை சாதம்) நிவேதனமாகப் படைத்தும் ஷோடச உபசாரங்கள் செய்தும் பூஜைகள் செய்யப்பட வேண்டும். 2020-இல் மஹா சிவராத்திரி - 2020 Maha Sivarathiri Tamil 
Tumblr media
இந்த ஆண்டு Maha Sivarathiri (Tamil) பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வெள்ளி கிழமை வருகிறது. சிவ ஸ்தலங்கள் சென்று எல்லாம் வல்ல சர்வலோக நாயகனான ஈசனை திருகோயிலிற்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த நாளில் விரதமிருந்து தேவார, திருவாசகங்கள் பாடி நான்கு சாமங்களும் “நமசிவாய” என்ற மந்திரம் ஓதி சிவபெருமானை பூசித்து எல்லா பாவங்களும் நீங்கி நற்கதி பெறுவோம். Read the full article
0 notes
kailaasatamil · 5 years ago
Photo
Tumblr media
வேத காலம் வேத பாரம்பரியம் - நித்யமாக நிரந்தரமாக வாழும் ஞானப்பாரம்பரியம். சனாதன இந்து தர்மம் என்று அழைக்கப்படும் இப்பாரம்பரியம், மனித நாகரிகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் காலமான 1900 மில்லியன் ஆண்டிலிருந்து தன் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கண்டறிந்துள்ளது. இந்த பாரம்பரியம் பாரத வர்ஷத்தில் செழித்து வளர்ந்தது. இப்பூமியே பாரத வர்ஷம் என்று அழைக்கப்பெற்றது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய மலைத் தொடரான இமயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 'ஆர்யவ்ரதம்' அதாவது ;பாரதம் என்றழைக்கப்படும் இப்பகுதியில்தான் இச்சமுதாயம் செழித்து, வளர்ந்தது. ஒருபக்கம் பரந்த பலமிக்க இமயத்தின் உறுதியான பாதுகாப்பும், முப்புரமும் கடலால் சூழப்பெற்று எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாழ்வதற்கு சரியான மிகச் சிறந்த வானிலையையும் புவியியலையும் பெற்றுள்ளது. ஞான வாழ்வு வாழ்வதற்கான மிகச் சிறந்த வாதாவரணத்தை பெற்றுள்ளது. அமைதியான சூழல்,இயற்கையின் வளமை மற்றும் இயற்கையின் பாதுகாப்பை தருகிறது. வியப்பிற்குரியதாக இருக்கும் இவை எல்லாமே தெய்வீக ஏற்பாடுகளே. அவதார புருஷர்களும், ஞானகுருமார்களும், உயர்ந்த பெருமைக்குரிய ஞானபாரம்பரியத்தை ஜீவன் முக்த சமுதாயத்தை வாழ்வதற்கும், வளர்ப்பதற்கும், தர்மத்தை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்ட சமுதாயம் இதுவாகும். புனித நதிகளான கங்கை-சரஸ்வதியின் ஆற்றங்கரையோரங்களில் நைமிசாரண்யம் அமைக்கப்பட்டது. நைமிசாரண்யத்தில் கோடிக்கணக்கான ஞானபுருஷர்களும், ஞானத்தை அடையும் பாதையில் இருக்கும் ஜீவன்களும் வாழ்ந்தனர். அத்தகு நைமிசாரண்யத்தில், கேட்கும் வரங்களை அருளும் தெய்வீக சக்திகள் நிறைந்த கல்பதருவான ஆலமரத்தின் ��டியில் அமர்ந்து இந்த மிக உயர்ந்த சர்வக்ஞபீட ஞானத்தை ஆதிகுரு சதாசிவன் அருளினார். இந்த ஞானத்தின் அதிர்வலைகளை அமரர்களான நம் ரிஷிமார்கள் உள்வாங்கி, வெளிப்படுத்தி வாழ்ந்தனர். நைமிசாரண்யத்தைப் பற்றி ரிக்வேதம் போன்ற வேதங்களிலும், இராமாயணம் - மஹாபாரதம் - ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களிலும் நைமிசாரண்யம், வியாசர் மற்றும் சனகாதி ரிஷிகள் போன்ற ஞான குருமார்களின் தலைமையில் ரிஷிகள் மற்றும் முனிவர்களுடன் ஒன்றுகூடி சங்கமமாக வளர்ந்தது என்பதைப்பற்றிய பதிவுகள், ஆதாரங்கள் உள்ளன. இங்குதான் உலக அமைதிக்காகவும், மனித உயிர்களின் உயர்வுக்காகவும் மிக உயர்ந்த புராணங்களும், பல்வேறு யக்ஞங்களும் செய்யப்பட்டன. நைமிசாரண்யம்: -அவதாரபுருஷர்கள் வாழும் ஆரண்யம்! நைமிசாரண்யம் - எப்பொழுதும் விழிப்புடன் இயங்கும் ஆதி ஆரண்யமாகும். இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. மனித குலத்திற்காக பிரபஞ்ச சக்தியினால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி பல்கலைக்கழகம், மூத்த பல்கலைக்கழகம் இந்த நைமிசாரண்யத்தில் அமைந்துள்ளது. சனாதன இந்து தர்மத்தின் ஆணி வேர் என்றால் அது இந்த நைமிசாரண்யமே. இது காலத்தின் போக்கால் பாதிக்கப்படுவதில்லை. சனாதன இந்து தர்மத்தைப் பற்றி பரமஹம்ஸர் மிக அழகாகச் சொல்கிறார்... சனாதன இந்து தர்மம் - மிகுந்த சக்திவாய்ந்த, அதிநவீன, மிகுந்த அறிவாற்றலுடனான, மிகச் சரியாக வடிவமைக்கப்பெற்ற மதம். தன்னை மேலும் மேலும் மாற்றிக்கொள்வதற்கும், உயர்த்திக்கொள்வதற்கும், மேம்படுத்திக் கொள்வதற்கும் ஊக்கமளித்து சாத்தியக்கூற்றையும் அளிக்கும் மிக உயர்ந்த மதமாகும். இந்த உயர்ந்த மெய்ஞான அறிவை கற்பதற்கும், கற்பிப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும் மையமாக நைமிசாரண்யம் பங்காற்றியது. பிற்காலத்தில் அசாதாரணமான கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் நடக்கும் நாளந்தா மற்றும் தக்ஷசீலம் போன்ற மதிப்பு மிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களாக விரிவடைந்தது. வாழையடி வாழையாக வரும் குரு-சிஷ்ய பரம்பரையின் வழியாக, குருவிடமிருந்து சீடர்களுக்கு தீட்சை வழியாக ஞானமும் சக்திகளும் பரிமாற்றப்பட்டன. உலகிற்கு நன்மையளிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பிரபஞ்சவியல், ஆரோக்கியம், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகளில் ஆழ்ந்த அறிவையும் அனுபவத்தையும் ஏற்படுத்த வேத காலம் முதலாக லட்சக்கணக்கான ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் பல கோடி ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தனர். மனிதகுல மேம்பாட்டிற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். அவர்களின் ஞானமும், சத்தியத்தைப்பற்றிய அறிவும், அது சார்ந்த கண்டுபிடிப்புகளும், அற்புத சக்திகளின் வெளிப்பாடுகளும் அதன் புனிதத்துவமும் மாறாமல் வேத நூல்க��ாக பதியப்பட்டுள்ளது. குரு சிஷ்யப் பரம்பரையில் ஞான பரிமாற்றமானது குருவி��மிருந்து தீக்ஷை மூலமாக, சத்தியங்களை நேரடியாக குருவிடமிருந்து கேட்பதன் மூலமாக பகிரப்பட்டது. அறிவியல், வாழ்க்கை முறை, கல்வி, தியானம், தொழில்நுட்பம், தியானசிகிச்சை, யோகா, மருத்துவம் போன்ற ஒவ்வொரு துறைகளிலும் பொதிந்திருக்கும் ரகசிய ஞானத்தை, சக்திகளை கண்டுபிடித்து நாம் தினசரி உபயோகிக்கும் வகையில் வேத நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 notes
joininghands · 5 years ago
Text
அன்பானவர்களே முதலில் கீழே உள்ள வேத வசனங்களை வாசிப்���ோம். பின்னர் அதன் ஆவிக்குரிய பொருளை வேத ஆதாரங்களுடன் பார்ப்போம். இயேசு கிறிஸ்து தாமே இந்த தேவ இரகசியங்களை விளங்கிக்கொள்ள உதவி செய்து இயேசு கிறிஸ்துவின் இரகசிய வ��ுகை குறித்து முழு நிச்சயத்தை உங்கள் இருதயங்களில் உண்டாக்குவாராக. ஆமென்
வேதம் இப்படியாக சொல்கிறது:
3. ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7. அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
8. நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
9. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10. அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
11. இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
12. நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
வெளி 17:3-12
மேலே வசனம் சொல்லும்போது நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்றும் சொல்லி அத்துடன், ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம் என்று சொல்லி இருக்கிறது அல்லவா?
மேலும் வேதம் சொல்வதைப்பாருங்கள்:
அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும் என்றும் சொல்லி கூடவே இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான் என்றும் சொல்லி இருப்பதைப்பார்த்தோம்,
அப்படியாயின் இந்த காரியங்கள் உண்டாகும் காலம் இயேசு கிறிஸ்துவின் மண��ாட்டி சபையினர் பூமியில் இருக்கும் இன்றைய காரியங்கள் அல்ல மாறாக மணவாட்டி சபை இயேசுவின் இரகசிய வருகையில் பரலோகம் ஏறி சென்ற பின்னர்(1தெசலோனிக்கேயர் 4:16-17) அந்தி கிறிஸ்து தானியேலுக்கு வெளிப்படுத்திய இஸ்ரவேல் யூதருக்கு உண்டாகும் ஒரு வாரமாகிய:
27. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
தானியேல் 9:27
என்றும் அறியலாம்.ஆகையினால் அந்தி கிறிஸ்து யூதரின் ஒருவாரமாகிய 7 நாட்கள்(7 வருடங்கள்) காலங்களில் முற்பகுதியில் பகிரங்கமாக வெளிப்படுவான் என்றும் அறிந்து கொள்ளமுடியும்.
ஆகவே இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையினரின் காலமாகிய புதிய ஏற்பாட்டுக்கலமாகிய இந்த நாட்களில் அவன் பகிரங்கமாக வெளிப்படமாட் டான். ஆனால் இன்று மணவாட்டி சபை பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமேயானால் அவன் நாளை கூட பகிரங்கமாக வெளிப்படுவான் என்றும் அறியலாம். அத்துடன் கிருபையின் காலம் முடிந்து அன்று தொடக்கம் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் 1 வார காலமாகிய 7 வருடங்களின் ஆளுகை அந்தி கிறிஸ்துவினால் ஆளுகை செய்யத்தொடங்கி விடும் என்றும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.அப்பொழுது மணவாட்டி சபை பூமியில் இல்லையென்றும் பரலோகத்தில் இருக்கும் என்றும் அறியலாம்(வெளிப்பாடு 4ம் 5ம் அதிகாரங்கள்)
இப்பொழுது வெளிப்பாடு 17:8-11ல் சொல்லப்பட்டு இருக்கும் மிருகம் யாராக இருக்கக்கூடும் என்று முன்னர் யூதர்களை உபத்திரவப்படுத்திய இராஜா யார் யார் என்று வேத ஆதாரங்களுடன் ஓரளவு தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நிதானிக்கலாம்.
(1) எகிப்து =பார்வோன்
(2) அசீரியா= சனகெரிப்,
(3) பாபிலோன்=நேபுகாத் நேச்சர்,
(4) மேதியா -பெர்சியா=தரியு,
(4) கிரேக்கம்= மகா அலெஹ்சாண்டர்,
(6) ரோம்- இத்தாலி =தீத்து ராயன்,
(7)ஜேர்மனி=ஹிட்லர்.
மேலே சொல்லப்பட்டு இருக்கும் இராஜாக்கள் தான் கடந்த காலங்களில் யூதர்களை உபத்திரவப்படுத்திய இராஜாக்கள். ஆகவே மேலே சொல்லப்பட்டு இருக்கும் 7 பேர்களில் யாராவது ஒருவன் முதல் யூதர்களை உபத்திரவப்படுத்தி பின்னர் மரித்து பாதாளம் சென்று பின்னர் உயிரோடு எழுந்து பூமிக்கு வந்து மீண்டும் அந்தி கிறிஸ்துவாக யூதர்களை 7 வருடம் மகா உபத்திரவப்படுத்தலாம் என்றும் நாம் நிதானிக்கலாம்.
எப்படியென்றால் இந்த 7 பேர்களையும் குறித்து வேதம் வெளிப்பாடு 17:8ல் சொல்லும்போது நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்று சொல்லி இருக்கிறது அல்லவா?
இதன் மூலம் அவர்களில் ஒருவன் தான் வெளிப்பாடு 17:11ல் சொல்லி இருப்பதுபோல் இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான் என்றும் அந்த 7 ல் இருந்து எட்டாவதானவ னே அந்தி கிறிஸ்து என்றும் நாம் வேத ஆதாரங்களுடனேயே நிதானிக்கலாம்.
இதை ��ாசிக்கிற அனைவரையும் அன்பின் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக- ஆமென்
0 notes
iamprabhuantony · 5 years ago
Text
கடைசி காலத்தை குறித்த ஆராய்சி கட்டுரைகள்!
கடைசி காலத்தை குறித்த ஆராய்சி கட்டுரைகள்!
  நீங்கள் இதுவரை கேட்டிராத, உங்கள் போதகர் உங்களுக்கு எடுத்துக் சொல்ல தவறிய வேத ஆராய்சி கட்டுரைகள். நாம் வாழும் இந்த காலம் கடைசி காலமாக இருக்கவே முடியாது. அப்படியானால் எது கடைசி காலம்?
இந்த கட்டுரைகளை வாசியுங்கள்!
இது கடைசி காலமா?
https://shrtm.nu/r5tk
கடைசிக்காலத்தை குறித்து தானியேல் திர்க்கதரிசி சொன்னத�� வாசித்திருக்கிறிர்களா? https://shrtm.nu/syJY
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?
https://shrtm.nu/h…
View On WordPress
0 notes
sirukathaigal · 2 years ago
Text
10 சிறுகதைகள்
10 சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
காணாமற்போன கறவைப் பசு - தராசன், பரமார்த்த குரு
பென்சில் – ஒரு பக்க கதை - சோலச்சி
குப்பை வாளி - முஸ்டீன்
வேத வித்து 5 & 6 - சாவி
விடாத உறவுகள் - ஸ்ரீ.தாமோதரன்
கொலைக் கணக்கு - டி.என்.இமாஜான்
காலம் மறந்த இடம் - அத்தியாயம்: ௯ - சு.சோமு
கலியன் மதவு - 23 & 24 - ஜூனியர் தேஜ்
அம்மா என்றால் அன்பு - இரஜகை நிலவன்
அரைகுறைக் கதைகள் – 2 - கொனஷ்டை
0 notes
sigappurojakal · 6 years ago
Text
நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.
நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.
1940 கால கட்டங்களில் 5 நாட்கள் கல்யாணம் கோலாகலமா நடக்கும்.
அந்த கால கட்டத்துல சத்திரமெலாம் கிடையாதே.
தெருவில் பந்தலை போட்டு அந்த அக்ரஹாரத்துல உள்ளவாளோட அகங்களையெல்லாம் கல்யாண ஏற்பாடு பண்றவா உபயோகம் பண்ணிப்பா.
நாம் 1970-களில் உள்ள கல்யாணங்களை பார்ப்போமா.
அப்ப பெண்ணாத்துலயோ, பிள்ளையாத்துலயோ கல்யாணம் நிச்சயம் ஆகிடுத்துன்னா தபால் கார்டு ஓரத்துல மஞ்சள் தடவி இரண்டு பக்கத்து சொந்தகாராளாத்துக்கும் உடனே தகவல் பறக்கும்.
இந்த காலம் மாதிரியா முகூர்த்த நேரத்துக்கு ந��ருங்கின சொந்தகாராளே வர மாதிரி.
ஆத்து வாசல்ல ஜலத்தை தெளிச்சு கோலத்தை போட்டா ஜே ஜேன்னு உறவுகாராள்ளாம் கூடிடுவா.
அதுலயும் பெண்ணோட/பிள்ளையோட அத்தைகளும், மாமாக்களும் முன்னாடி வந்து நிப்பா.
கல்யாணத்துல இவாளோட சீர்தான ரொம்ப முக்கியம் , பந்தா அதவிட தூள் பறக்கும்
அதுலயும் பொண்ணோட அத்தை கடிதாசு கிடைச்ச உடனே அடுத்த ரயிலை பிடித்து ஆத்துக்குள்ள வரச்சயே அண்ணா நீ போட்ட கடிதாசு கிடைச்ச உடனயே ஆத்துல போட்டது போட்டபடி பறந்து வந்துட்டேன்.
நம்ப அம்மாவும், அப்பாவும் இருந்தா முதல் பேத்திக்கு கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பான்னு கண்ணை தொடச்சுண்டு ஸ்வாதீனமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துடுவா.
இப்ப மாதிரியா அந்த கால கட்டத்துல ஸ்டார் கல்யாண மண்டபங்கள். ஒப்பந்த அடிப்படைல ஆட்கள்.
சீர் பக்ஷணங்கள் பண்றதுக்காகவே ஊர்ல இருக்கற அத்தை, மாமி, சித்தி, பாட்டி உறவுகளெல்லாம் கூடிடுவா.
பக்ஷணம், அப்பளம் பண்றச்சே அவா அடிக்கற கூத்தெல்லாம் பார்க்க கண்கள் கோடி வேணும்.
சாப்பாட்டு கடை ஆகியாச்சுன்னா கல்யாணத்துக்கு கடைசி 15 நாளைக்கு முன்னாடி வரைக்கும் கடைகளுக்கு போய் பாத்திரம் பண்டம், மளிகை சாமான்களுக்கு, துணிமணிகள் இத்யாதிகளுக்கெல்லாம் ஆத்துல உள்ள புருஷாளும், சொந்தகார மனுஷாளும் களத்துல இறங்கி வேலை செய்வார்கள்.
இந்த காலம் மாதிரி மாப்பிள்ளையாத்துகாரா ளுக்கும், அவா சொந்த/நட்புகளுக்கும் ஹோட்டல்ல அறைகள் போட மாட்டாளே. சுத்தி இருக்கற அக்கம் பக்கத்து மனுஷாளே தன்னாத்து கல்யாணம் மாதிரி அவா அவாளோட அகங்களையே சுத்தம் பண்ணி சந்தோஷமா கொடுப்பார்கள்.
நினைச்சு பார்த்தா கூட அந்த பொற்காலங்கள் திரும்பி வராதே.
கல்யாணத்துக்கு முதல் நாள் பிள்ளையாத்துகாரா பிள்ளைக்கு யாத்ரா தானம் பண்ணி முடிக்கற துக்குள்ள பொண்ணாத்துல வண்டி ஏற்பாடு பண்ணி அவாத்துக்கு இவா ஒரு தம்பதிகளோட அனுப்பி வச்சுடுவா. வெளியூரா இருந்தா ரயில்வே ஸ்டேஷனுக்கோ/பஸ் நிலையத்துக்கோ வண்டி அனுப்பிடுவா.
பிள்ளையாத்துகாரா சத்திரத்துக்கு வந்த உடனே மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதத்துக்கு அழைச்சுண்டு போயிடுவா.
கல்யாண சமையல்லாம் காண்ட்ராக்ட் கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம் மொத்தமா வாங்கி வச்சு உக்கிராண அறையில் பத்திரமா வச்சு அதை பாத்துக்க பெண்ணாத்துல உள்ள உறவுகாராள்ளாம் மாத்தி, மாத்தி ட்யூட்டி போட்டுண்டு பரிஜாரகாளுக்கு வேணும்கறதை எடுத்து கொடுப்பார்கள்.
இதுக்கு அசாத்ய பொறுமை வேணும்.
கார்த்தால பிள்ளையாத்துலயும், பெண்ணாத்து லயும் விரதம் முடிஞ்சு சாப்பாடு ஆன பிறகு சாயந்திரம் நிச்சயதார்த்தம்தான்.
அந்த காலத்துல இந்த காலம் மாதிரி கல்யாணத் துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னா பெரிய ஹால்களில் வைக���கற பழக்கம் கிடையாது.
பிள்ளையாத்துலதான் பண்ணுவா. அதுக்கு பெண்ணை கூட்டிண்டு போக மாட்டா. அத ஒப்புதல் தாம்பூலம்னுதான் சொல்லுவா.
கல்யாயாணத்துக்கு முதல் நாள் விவாஹ பத்திரிக்கை வாசிச்சு பண்றதுதான் ஒரிஜினல் நிச்சயதார்த்தம்.
அந்த கால கட்டத்துல ரிசப்ஷன் கூட ரொம்ப அத்தி பூத்தா மாதிரி மேல்மட்டத்துகாராதான் பண்ணுவா.
அதுவும் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரம்தான் வச்சுப்பா.
நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு திறந்த கார்ல மாப்பிள்ளை ஜான்வாசத்துல வருவார்.
முன்னாடி நாதஸ்வர கச்சேரி, கேஸ் லைட்டோட கோலாகமா ஜான்வாசம் நடக்கும்.
நிச்சயதார்த்த விருந்து முடிஞ்ச பிறகு ஒரு பக்கம் சீட்டு கச்சேரி, இன்னொரு பக்கம் முகூர்த்த தேங்காய் பைகளை பொண்ணாத்துகாரா போட்டுண்டு இருப்பா.
அது மாதிரி பிள்ளையோட அத்தை, மாமா பண்ற ஜபர்தஸ்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும்.
அதுவும் பிள்ளையோட அத்தை, பெண்ணோட அம்மா, அப்பாட்ட இதோ பாருங்கோ மாமா எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.
அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.
அப்பறம் நானே உங்களன்ட கேக்கனும்னு நினைச்சேன். அது என்ன முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு க்ருஷ்ண ஜயந்திக்கு உருட்டின உப்பு சீடை சைஸ்ல இருக்கே.
குழந்தை கையால குஞ்சாலாடை பிடிக்க சொன்னேளாக்கும்னு தோள்பட்டைல நக்குனு இடிச்சுப்பா.
பிள்ளையோட மாமா காபி கழனி ஜலமாட்டம் இருக்கு, வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு இடுப்புல உள்ள பஞ்சகச்சம் நழுவறது தெரியாம ஆகாசத்துக்கும், பூமிக்கும் தை தைன்னு குதிப்பார்.
இந்த களேபரங்களையெல்லாம் தாண்டி மறுநாள் காசியாத்திரைக்கு மாப்பிள்ளை மங்கள ஸ்நானம் பண்ணிட்டு அத்தை கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் இத்யாதிகளோடு காசியாத்திரைக்கு புறப்படுவார்.
சுமங்கலி பொண்டுகள்ளாம் தசரத நந்தன தானவ மாதர பாடுவா.
சாஸ்திரிகள் சொல்றதை பெண்ணோட தகப்பனார் மாப்பிள்ளையிடம் காசி யாத்திரை போகாதீங்கோ, எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரோம் அவளை பாணிக்ரஹணம் பண்ணிக்கனும்னு சொல்லி மாலை மாத்தற நிகழ்ச்சிக்கு அழைப்பார்.
இந்த மாலை மாத்தற சம்ப்ரதாய்த்துல பெண்ணையும், மாப்பிள்ளையும் மாமாக்கள் தூக்கிண்டு ஓடுவாளே அப்பப்பா செம கலாட்டாதான்.
பெண்கள்ளாம் சுத்தி நின்னுன்டு மாலை மாற்றினாள் கோதை மாலை சாத்தினாள், மன்மதனுக்கு மாலையிட்டாயேன்னு பாட்டுகளை பாடி கரகோஷம் பண்ணுவா.
இது முடிஞ்சு கன்னூஞ்சலில் பெண், பிள்ளையை உட்கார வைத்து பால், பழம் கொடுத்து பச்சைபிடி சுற்றி
கன்னூஞ்சல் ��டினாள் காஞ்சனமாலை மன மகிழ்ந்தாள், கந்த மலர் மீதுரையும் பாட்டுகளை பாடி மஞ்சன நீரை சுழற்றி ஹாரத்தி எடுத்து முகூர்த்த மேடைக்கு அழைத்து செல்வார்கள்.
பெண்ணுக்கு அப்பா மடில உட்கார வச்சு கூறைப் புடவையை கொடுத்து நாத்தனார் அவளை மடிசார் கட்ட அழைச்சுண்டு போவா.
பெண்ணை அப்பா மடில உட்கார வச்சுண்டு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறச்சே அவரோட மடியை விட மனசு ரொம்ப கனக்கும்.
சும்மாவா விதையை இல்லை கன்னி என்னும் வ்ருக்ஷத்தையே வேரோட பெயர்த்து எடுத்து இன்னொரு குடும்பத்துக்கு கன்னிகாதானமா கொடுக்கறாரே.
இந்த கன்னிகாதானத்துலதான் கொடுக்கறவா கையும், வாங்கறவா கையும் சமமா இருக்கு.
எந்த தானத்துக்கும் இல்லாத விசேஷம் கன்னிகானத்துக்கு மட்டும்தான் உண்டு.
கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருமே சமமான பலனை அடைகிறார்கள்.
மாங்கால்யதாரணம், சப்தபதி சம்ப்ரதாயங் கள்ளாம் முடிஞ்ச உடனே இரண்டு பக்கத்து உறவு/நட்புகளெல்லாம் தம்பதிகளோட அம்மா, அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண் வந்தாச்சான்னு சந்தோஷத்துல அவாளை ஆலிங்கனம் பண்ணிப்பா.
தாத்தா பாட்டிகள்ட்ட பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு விஜாரிச்சு ஆசீர்வாதம் வாங்கிப்பா.
பாட்டி, தாத்தாக்களெல்லாம் இதை கண்ல ஆனந்த பாஷ்பம் பொங்க ஆனந்தமா ரசிச்சுண்டுருப்பா.
சப்தபதி ஆனபிறகுதான் எல்லாருமே ஓதியிட்டு ஆசீர்வாதம் பண்ணுவா.
முகூர்த்த சாப்பாடு முடிஞ்சு கிளம்பறவாளுக் கெல்லாம் தாம்பூல பை, சீர் பக்ஷணத்தோட மரியாதை பண்ணி விடை கொடுப்பா.
சாயந்திரம் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும்.
இரண்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுப்பா.
பிள்ளையோட அத்தை கருநாகப் பழம் போல கருத்த பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு பாடுவா.
அதற்கு பதிலடி கொடுக்க பெண்ணோட மாமி உடனே எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் வெகு சங்கோஜகாரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும்.
அன்னிக்கு ராத்திரி மாப்பிள்ளைக்கு வெள்ளித் தட்டில் பால் சாதம் சாப்பிட சொல்லுவா.
வெள்ளித் தட்டை அலம்பி வைக்கற மச்சினிக்கி பதில் சம்பாவனை பண்ணுவா.
அப்ப பெண்ணோட அத்தை பெண்ணோட அம்மாட்ட காதுல மெதுவா சொல்லுவா.
காமு பாத்தியோன்னோ நம்ப இத்தனை சீரை பண்றோம். அது நொட்டை, நொள்ளைம்பா.
ஆனா இவாளுக்கு மச்சினிக்கும், மச்சினனுக்கும் பதில் சம்பாவணை பண்றச்சே கை கரணா கிழங்கா போயிடும்னு மெதுவா நக்கலடிப்பா.
முகூர்த்தத்துக்கு அன்னிக்கு இரவே சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிடுவா.
சோபன அறையை நன்னா பூஜோடனையால அலங்காரம் பண்ணி, மெல்லிய ஊதுபத்தி மணம், பால் பழம், பக்ஷண வகைகளோடு இந்திர ��ோகம் மாதிரி ஜோடனை இருக்கும்.
முதலில் ஒரு வயதான தம்பதிகள் படுக்கையில் சாஸ்திரத்துக்கு உட்கார்ந்து எழுந்திருப்பார்கள்.
அப்புறமா தம்பதிகள் சோபன அறைக்கு போன பிறகு வெளில பெண்கள் கூட்டமா ஒக்காத்துண்டு பள்ளியறை பாடல்களை பாடுவார்கள்.
மறுநாள் காலையில் மச்சினன் படுக்கையை சுருட்டின பிறகு படுக்கையின் அடியில் அவனுக்கு சீர் பணம் வைத்திருப்பார்கள்.
கார்த்தால பாலிகையெல்லாம் தெளிச்சு முளை விட்ட நவதான்ய கூடையை சுத்தி வந்து பெண்களாம் கும்மி பாட்டுக்களை பாடுவார்கள்.
இரண்டு நாள் விருந்து பலமா இருந்ததால கட்டுசாத கூடை சாப்பாடுக்கு முன்னாடி விருந்துல மிளகு குழம்பு, பருப்புத் துகையலோட பத்திய சாப்பாடு தேவாம்ருதமா இருக்கும்.
விருந்தெல்லாம் ஆனபிறகு சம்பந்தி மரியாதை முடிஞ்சு பெண் புக்காத்துக்கு புறப்படறச்சே பெண்ணோட அம்மா புடவை தலைப்பால முகத்தை மூடிண்டு அழறச்சே எல்லாருக்குமே மனசு கலங்கி போயிடும்.
அப்பாவுக்கு வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாம கண்ல ஜலம் பிரவாகமா இருக்கும்.
அப்பதான் பிள்ளையோட அம்மா, பெண்ணை பெத்தவாகிட்ட மாமா, மாமி கல்யாணத்துல நாங்க ஏதாவது தெரியாத கோபத்துல பேசியிருந்தோம்னா எங்களை மன்னிச்சுடுங்கோ
எல்லாம் இவரோட உறவுகாரா சுபாவத்துக்காக த்தான் அப்படி நடந்துண்டோம்.
இனிமே உங்காத்து பொண்ணு எம் பொண்ணு மாதிரின்னு சொன்ன உடனே
மாமா, மாமி உடனே நன்னாருக்கு நீங்க சொல்றது கல்யாணம்னா இதெல்லாம் சகஜம்தான். இதுக்கு போய் மன்னிப்பு கேட்கறதாவதுன்னு அவாள சமாதனப் படுத்தி சந்தோஷமா வழியனுப்பி வைப்பா.
மிளகாய்பொடி இட்லி, புளியோதரை, தயிர்சாதம், வற்றல், வடாம், ஊறுகாய் கட்டுசாதங்களோடும், கறிகாய்கள், சீர் பக்ஷணங்களோட மாட்டுப்பெண் மணக்க மணக்க புக்காத்துக்கு வருவா.
அந்த கட்டுசாத கூடை இத்யாதிகள் இருக்கே. ஆஹா அது எந்த தேவலோக அமுதத்துக்கும் ஈடு இணையில்லை.
எனக்கு என்னவோ 1980 - 2000 வரை உள்ள கால கட்டத்துல உள்ள தம்பதிகளோட வாழ்க்கை அமோகமா இருந்துருக்குன்னு தோணறது.
கணவனும், மனைவியும் ஒத்தொருகொருத்தர் நன்னா புரிஞ்சுண்டு அனுசரணையா தாம்பத்யத்தை ரசிச்சு வாழ்ந்துருக்கா.
இன்னும் வாழ்ந்துண்டும் இருக்கா.
மேலே குறிப்பிட்ட கல்யாணங்கள் மாதிரி இனிமே இந்த தலைமுறைகளில் நடக்குமா.
ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அமோகமா நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை நினைதுப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது.
பசுமை மாறா நினைவுகள்.
0 notes
lordcomesoon · 6 years ago
Photo
Tumblr media
சாது சுந்தர் செல்வராஜ் அய்யா தீர்க்கதரிசன மாநாடு நிகழ்ச்சி – ஏன்ஜல் டிவியில் நவம்பர் 2018ல் பேசியதின் தொடர்ச்சி ….. தீர்க்கதரிசனம் உரைத்தது நடந்துக்கொண்டிருக்கின்றன... பொய்யாய்ப்போன எதிர்ப்புகள்... பாபிலோனிய வழிபாடுகளை விட்டொழியுங்கள்.... ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வேத வாக்கியங்கள் எதை முன்னுரைத்திருக்கின்றதோஅவைகள் அனைத்தும் தற்கால கடைசி நாட்களில் ஒவ்வொன்றாய் கூடிவந்து நிறைவேறப்போகின்றன. - சாது சுந்தர் செல்வராஜ் அய்யா தீர்க்கதரிசன மாநாடு நிகழ்ச்சி - ஏன்ஜல் டிவியில் நவம்பர் 2018ல் பேசியதின் தொடர்ச்சி ..... ...கீழே தொடர்ந்து படியுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்திக்காட்டியபடி மிருகத்தின் முத்திரை சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்க்கு முன்பே அறிமுகப்படுத்தப்படுமென்று நான் பிரசங்கிக்க ஆரம்பித்தேன், உபத்திரவத்திற்க்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்கின்றவர்களான அநேக வேத வல்லுநர்கள், பெந்தேகொஸ்தே பாஸ்டர்களும் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஊழியம் ஒரு கள்ளப்போதனை செய்கிறவரென்று எல்லோரும் எங்களை எதிர்த்து ஊழியத்தையும் வெறுத்து ஓரங்கட்டினார்கள். ஏறக்குறைய எல்லாம் பெந்தோகொஸ்தே பாஸ்டர்களும் எனக்கு அப்படிப்பட்ட முத்திரையை குத்த ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் ஐரோப்பா முழுவதும் மலேசியா சிங்கப்பூர் முழுவதும் இந்த வதந்தியை பரப்பினார்கள். ஆனால் பொறுமையாய் என் சமாதானத்தை காத்துக்கொண்டு கர்த்தருடைய வார்த்தையில் உறுதி குலையாமல் நின்றேன். ஆனாலும் இந்த தற்காலிக நிரூபணத்தை திரும்பிப்பாருங்களேன், இன்றைய உலகம் பணமற்ற உலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்திலுள்ள அநேக நாடுகள் பணமற்ற பரிவர்த்தனைக்கு ஒரு நேரத்தை குறித்துவிட்டனர். அநேக நாடுகள் 2020 ல் பணமற்ற நாடாக ஆக்க தீர்மானித்து விட்டார்கள். 2020 க்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தள்ளித்தான் இருக்கிறது. கைகளில் பதிக்கப்படுகிற அந்த சின்னஞ்சிறிய சிப் உலகம் முழுவதும் இப்போது பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது. சிட்னி, ஆஸ்திரேலியா, ஸ்வீடனில் ஒரு கம்பெனி கட்டாயமாக ஊழியர்களுக்கு பதித்து விட்டார்கள். கடந்த வாரம் செய்தித்தாளில் நடந்த நிகழ்ச்சியை பார்த்தேன், அமெரிக்காவில் ஒரு கம்பெனி கட்டாயமாக எல்லோருக்கும் பதித்தார்கள். உலகத்திலிருக்கிற அநேக தேசங்கள் பத்து இலக்க கணினி அடையாள அட்டையை தந்துக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு அடையாளமாகயிருக்கிறது?மிருகத்தின் முத்திரையை பதிக்கும் அந்திக்கிறிஸ்துவையல்லாவா பறைசாற்றுகின்றன?இவைகளெல்லாமே முழுவீச்சில் நடப்பதற்க்கு ஒன்றிரண்டு ஆண்டுகள்தானிருக்கின்றன? இன்னும் சபை எடுத்துக் கொள்ளப்படவில்லையே? அப்படியென்றால் உபத்திரவ காலத்திற்க்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் பிரசங்க போதனை என்ன ஆனது? இன்னும் ஒன்றை பகிர���ந்துக் கொள்ளுகிறேன் கேளுங்கள். கடைசி காலத்தில் பத்து ராஜாக்கள் உலகில் ஒருங்கிணக்கப்படுவார்களெனௌறு த��னியேல் 10:11 அதிகாரங்களில் படிக்கலாம். அதிலும் தானியேல் 9 ல் பத்து கொம்புகள் எழும்புவதை பார்க்கிறார். பத்து தேசங்கள் ஐரோப்பா கண்டத்திலிருந்து எழும்பும் என்று தீர்க்கதரிசிகளும் வேத வல்லுநர்களும் கூறிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் பிரதமர் ஜரோப்பா கூட்டமைப்பு பத்து நாடுகளாக இணைந்து கூட்டமைப்பாக வேண்டுமென்று முன்மொழிந்திருக்கிறார். இதை கொஞ்சம் கவனியுங்கள், பத்து தேசமாக இணைந்து அந்த பத்து தலைவருக்குள்ளே ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். தானியேல் தீர்க்கதரிசி அதை அப்படித்தான் தரிசிக்கிறார். பத்து கொம்புகளுக்குள்ளே ஒரு கொம்பு உயர எழும். என்னுடைய அன்புக்குரிய சகோதர சகோதரிகளே மகன்மார்களே மகள்மார்களே எல்லாமே உங்கள் கண்களுக்கு முன்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒருபக்கம் அந்திக்கிறிஸ்துவின் தலைவன் இருக்கிறான், வெளிப்படுத்தின விசேஷம் 13 ஒரு கள்ளத்தீர்க்கதரிசி எழுவான் என்கின்றதே .. ? கள்ளத்தீர்க்கதரிசி என்றாலே ஒரு மத ஒருங்கிணைப்பிற்க்கு தலைவன் என்றுதானே அர்த்தம்? ஒரே ஒரு உலக அரசாங்கம் இருக்கும், ஒரே ஒரு மதமும் இருக்கும். இன்றைய மத தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உலகத்திலுள்ள பெரும்பான்மையான மதத்தலைவர்களை அழைத்து 2020 ல் ஒரே மதத்திற்க்கான ஒருங்கிணப்பை அமைக்க அழைத்திருக்கிறார். என்னுடைய அன்புக்குரிய சகோதர சகோதரிகளே மகன்மார்களே மகள்மார்களே 2006 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னிடத்தில் இவைகளையெல்லாம் காண்பித்தபோது நான் வெளிப்படையாக பிரசிங்கித்தேன். ரொம்ப காலமாக நானே உபத்திரவ காலத்ற்க்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் இதெல்லாம் தவறு என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு காண்பித்தார். அதை பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தபோது உபத்திரவ காலத்ற்க்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற பாரம்பரிய கருத்துகளில் ஊறிப்போன பழமையான போதகர்கள் எங்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அப்படி அந்த போதகர்கள் உக்கிரமாக எங்களை கைவிட்டுவிட்டு கள்ளத்தீர்க்கதரிசி என்று முத்திரையிட்டதன் நிமித்தம் எங்கள் ஊழியத்தோடு இணைந்திருந்த விசுவாச மக்கள் எங்களை விட்டு வெளியேறி போய் விட்டார்கள். ஆனால் தற்போதைய நிலவுகிற காட்சியை கண்ணோக்கிப் பாருங்கள். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் பிரசிங்கித்த வந்த காரியங்கள்தான் என்று அதிவிரைவாக நடந்துக்கொண்டிருக்கும் அதிரடி காரியங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப்பெரிய அடையாளமாகும். சகரியா 14 ம் அதிகாரத்தில் படிக்கிறோம், எருசலேம் தத்தளிப்பின் பாத்திரமாக மாறும். உலக தேசங்களெல்லாம் எருசலேமில் கூடிவரும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இஸ்ரேலில் டெல் அவிவ் நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகம் எருசலேமிற்க்கு மாற்றப்படுமென்று தீர்மானித்து அதற்க்கென ஏற்பாடுகளை செய்தார். பின்பு அதை மாற்றியும் விட்டார். அவர் தூதரகத்தை மாற்றியபிறகு தென் அமெரிக்காவைச்சேர்ந்த இரண்டு நாடுகள் தங்கள் தூதரகத்தை மாற்ற முடிவெடித்தனர். ஆஸ்திரேலியா பிரதமரும் டெல்அவிவிலி���ுந்து எருசலேமிற்க்கு மாற முடிவெடுத்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டில் ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மனிசன் பதவியேற்றவுடனே டெல்அவிவிலிருக்கும் தூதரகம் எருசலேமிற்க்கு மாற்றப்படுமென்று அறிவித்துவிட்டார். உலக நாடுகளெல்லாம் ஒன்றுகூடி அங்கே எருசலேமில் கூடுகின்றனர். என்னுடைய அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மகன்மார்களே !மகள்மார்களே! இவைகள் எதை காட்டுகிறது? தேவனுடைய இராஜ்யம் இறங்கி வரப்போகிறது என்பதையல்லவா பறைசாற்றுகிறது? இனி காலம் இல்லை, சர்வவல்ல தேவனின் இராஜ்யம் வரப்போகிறது! வேதாகமம் மிகத்தெளிவாக சொல்லுகிறது, சகரியா 14: 1,2 சொல்லுகிறது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதம் ஒலிவ மலையைத் தொடும். ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் பரலோகத்திற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அதே இடத்திற்க்கு அவர் மீண்டும் திரும்ப வருவார். ஒலிவ மலையிலிருந்து அவர் தேவாலயம் இருக்கும் பகுதிக்கு எருசலேம் நோக்கி நடந்துபோவார். அந்த நேரத்தில் 24 ம் சங்கீதம் நிறைவேறும். கதவுகள் உயர்த்தப்படும். தேவாலயத்தின் சுவர்களில் ஒரு வழி திறக்கப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தேவாலயத்திற்க்குள்ளே ராஜநடையோடு நடந்து போவார் என்னுடைய அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மகன்மார்களே !மகள்மார்களே! இவை எல்லாமே அதிசீக்கிரத்தில் நிறைவேறப்போகின்றன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலிருந்தபோது ஒரே ஒரு செய்தியை சொன்னார், பரலோக இராஜ்யம் சமீபமாயிருக்கிறது, மனந்திரும்புங்கள், அதுதான் வார்த்தை "மனந்திரும்புங்கள்". பாவிகள் மனந்திரும்புவதற்க்கு பிரசிங்கப்படும் வார்த்தை மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும்தான்... உங்கள் பொல்லாத வழியிலிருந்து நீங்கள் திரும்பிவர வேண்டும், தேவ பக்தியற்ற உங்கள் வாழ்க்கை வழிகளிலிருந்து திரும்பி வாருங்கள், வெளி. விசேஷம் புத்தகத்தில் 14:6 & 7 ல் நாம் என்ன படிக்கிறோம், வானத்திலிருந்து ஒரு தூதன் முரட்டு சத்தமிட்டு கூறுகிறான்... வெளிப்படுத்தின விசேஷம் 14:6 பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான். அந்த தேவ தூதனின் செய்தியைத்தான் நீங்கள் ஏன்ஜல் டிவியில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு பின்னால் பறந்துவந்த தூதன் இப்படியாக சொன்னான், "பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்". பாபிலோன் என்றால் என்ன? இரண்டுவிதமான அரசாங்க அமைப்புகளின் கூட்டமைப்புதான் பாபிலோன், ஒன்று அரசியல்ரீதியான அரசாங்கம், மற்றது மதரீதியான அரசாங்கம். பாபிலோன் என்றாலே இந்த கலப்படம்தான். பாபிலோனின் இரகசியமே ஒரு மதம் சார்ந்த அமைப்பாகும். இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் கடைபிடிக்கக்கூடிய அ��ேக காரியங்கள் ஆதி கிறிஸ்தவத்திலிருந்து தோன்றியவையல்ல. அவைகளெல்லாமே பாபிலோனியாவில் கடைபிடிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்ட இரகசிய வழிமுறைகளாகும். இன்றைய கிறிஸ்தவத்தோடு அவை இரண்டற கலந்து விட்டன. உதாரணத்திற்க்கு கேளுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25 இல்லை, என்ன அப்படியா? ரோம சக்கரவர்த்தி கான்ஸ்டைன்டின் சூரியக்கடவுளின் பிறப்பை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக அறிவித்து விட்டான். சக்கரவர்த்தி கான்ஸ்டைன்டின் கிறிஸ்தவனாக மாறினான். ரோமர்களுக்கும் யூதர்களுக்கும் சமாதானம் ஏற்பட வேண்டுமென்ற முயற்சியில் அவர்கள் இருவரையும் ஒன்றாக மணமுடித்து வைத்துவிட்டார். சூரியக்கடவுளின் பிறந்தநாளாகயிருந்தது கிறிஸ்து இயேசுவின் பிறந்தநாளாய் மாறிப்போனது. அது ஒரு பாபிலோனிய அரசனின் பழக்கமாகும்... உயிர்த்தெழுதலை கொண்டாடுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாகும்....எங்கும் அதை கொண்டாடுகிறோம்.. எல்லா இடத்திலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எப்பொழுதெல்லாம் உயிர்த்தெழுதலை கொண்டாடுகிறோமோ அது முயலோடு முட்டையோடு சம்பந்தப்பட்தாயிருக்கும். எங்கிருந்து இந்த அனுபவங்கள் வந்தது? மீண்டும் பாபிலோனியாவிலிருந்து வந்தவைதாம்.. கிறிஸ்துமஸ் நாளன்று நாம் அணிவிக்கிற ஆபரணங்கள், அலங்கரிப்புகள், கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், இவைகளை பார்த்தால் அவை ஒவ்வொன்றுமே பாபிலோனிய ஆசரிப்பு முறைகளிருந்து வந்தவைகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு வந்தது, மனுபுத்திரனே, இரண்டாம் தூதன் உரைத்த செய்தியை நீ முழக்கமிடும் நேரம் வந்துவிட்டது. என் ஜனங்களையெல்லாம் பாபிலோனைவிட்டு வெளியேவரும்படி அழைப்பு கொடு. ஆகவே இதுமுதற்கொண்டு அழைப்பினை விடுக்கிறோம். இப்போதிலிருந்து இந்த நிகழ்ச்சி நாளிலிலிருந்து சொல்லுகிறோம், பாபிலோனிலிருந்து வெளியே வாருங்கள். பரிசுத்த வேதாகமத்தில் பின்பற்றப்பட்ட அடிப்படையான ஆதி கிறிஸ்தவ முறைக்கு திரும்பி வாருங்கள். ஏன்? ஒரு பொய்யான கள்ள மதம் தலையெடுத்துக்கொண்டிருக்கிறது. உலகளாவிய ஒரு கள்ள மதம் வந்துக்கொண்டிருக்கிறது. அது எல்லா மதங்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும். அதுதான் பாபிலோனியாவைப்பற்றிய ரகசியமாகும். அதோடு நீங்கள் கலந்து சம்மமந்தப்படாதிருங்கள். ஆவியினால் நிறைந்த அபிஷேகம் பெற்ற பலபேர் பெந்தேகொஸ்தே சபைகள் பாஸ்டர்கள் கொஞ்சகொஞ்சமாக கடந்த காலங்களில் பாபிலோனிய ரகசியங்களோடு சம்பந்தம் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தையை நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு வல்லமையான பட்டயத்தையுடைய தேவ தூதன் பறந்து வருகிறதைப் பார்க்கிறேன். திருச்சபைக்குள் சரியான வழிபாடை வகுக்க வருகிறான் - பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், அசுத்தமுள்ளவன் இன்னும் அசுத்தமாகட்டும், நீதியுள்ளவன், இன்னும் நீதி செய்யட்டும். கிறிஸ்தவ ஜனங்களே பாபிலோனைவிட்டு வெளியே வாருங்கள். உங்கள் ஆதி அன்பிற்க்கு திரும்பிவாருங்கள். இப்போதே உங்கள்முன் திறந்த வாசலை வைக்கிறார். தேவனிடம் திரும்பி வாருங்கள். உங்கள் ஆதி அன்பிற்க்கு திரும்பி வாருங்கள். அநேக ஊழியர்களுக்கு முன்பாக இந்த திறந்த வாசலை பார்க்கிறேன்.
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து விட்டனர் : கமல்ஹாசன் தாக்கு நவீனத் தளங்களிலும் ப���மைவாதிகள் புகுந்து விட்டனர் என்று நடிக��் கமல்ஹாசன் கூறியுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன், இது தொடர்பாக வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் மெல்ல ஊடுருவி திராவிட பண்பாட்டை பலவீனப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று அவர் கேட்டிருந்தார். இதற்கு நடிகர் கமல் ஹாசன் அளித்துள்ள பதில் வருமாறு:- என் முயற்சியும் இலக்கும் தாங்கள் அறிந்ததே. தமிழகத்தின் திராவிடப் பாரம்பரியம் சமீப காலத்தையது அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் தொட்டுத் தொடர்வது. 1000 வருடங்களுக்கு முன்னால் ராமானுஜரின் சமூகப் புரட்சி ஓர் அடையாளம், ஒரு முக்கியத் தருணம் என்று கூடச் சொல்லலாம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பழைய பதிப்புகளில் ‘திராவிட வேத சாகரம்’ என்றிருக்கும். அரசியலில் திராவிட இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த வேளையில் அதை ஒருவேளை பதிப்பகத்தார் நீக்கினார்களோ என்னவோ. தாங்கள் குறிப்பிட்டது போல் பெரியாரின் இயக்கம் கேரளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே அவருக்கு ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம். அப்பெயர் கேரளத்திலும் தமிழகத்திலும் பிரபலம். என்றும் இன்றும் சுபிட்சத்துடன் கூடவே அசட்டுத் துணிச்சலும் வரும் என்பதற்கு அடையாளமே உலகெங்கும் பாசிசத்தின்பால் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு. உலகையே வலக்கைப் பக்கம் திரும்ப வைக்கும் அம்முயற்சி வெல்ல வாய்ப்பில்லை. அவை ஒரு தற்காலிக பே‌ஷன், சிகையலங்காரம் போல ரொம்ப காலம் நீடிக்காது என்பதே என் நம்பிக்கை. சமூகம், சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் (அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலை முறையினர்), இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழைமைவாதத்தை, சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீனத் தேன் தடவித்தர, திணிக்க முயற்சி செய்கின்றனர். நான் நாத்திகன் அல்லன், பகுத்தறிய முற்படுபவன். நாத்திகன் என்ற பெயர்க் குறிப்பு ஆத்திகர்கள் செய்தது. அவர்கள் எனக்கு நாமகரணம் செய்வதை நான் விரும்பவில்லை. நாத்திகன், பகுத்தறிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வாதம் செய்பவர்கள் இவ்விரண்டு நிலைகளையும் பகுத்தறியாத ஒரு பக்கவாதக்காரர்கள். இருவேறு கருத்துக்களை ஆராய்ந்து நிஜத்தை நெருங்க ஆவலுற்றிருப்பவரே பகுத்தறிவோர். அவர்களின் எண்ணிக்கை தானாகவே கூடிவிடும். விஞ்ஞானமும் ஞானமும், முன்னேற்றத்தின்பால் மனித குலத்திற்கே உள்ள ஈர்ப்பும், பகுத்தறிவாதிகளின் எண்ணிக்கையை எதிர்ப்பாளர்களையும், மீறிக் கூட்டியே தீரும். இந்த உலக நியதி தன்னிச்சையாய் செயல்படக் காத்திராமல் தமிழகத்தைப் பாதுகாக்கும் பணியில் இளைஞர் சமுதாயம் இறங்கி விட்டது. பழையன கழியும், புதியன புகும். பழைய கலாசாரத்தில் போற்றப்பட வேண்டிய மேற்கோள்களைக் காட்டாமல் அவற்றை மறைத்தும், மறந்தும் செயல்படுகின்றனர், பழைமை விரும்பிகள். விவசாயத்தை அழித்து நிலத்தடி வாயுக்களை வர்த்தகம் செய்ய முயற்சி செய்வதும் புராணக் கதைகளைச் சரித்திரமாக்க முயற்சி செய்வதும் இவர்கள் காலகாலமாக செய்யும் அயராத்தீய பணிகள். முன்பெல்லாம் அமைதியாக நடந்த பல பண்டிகைகளில் ஆர்ப்பாட்டம் அதிகமாகி, பக்தியையும் தாண்டிய வர்த்தகமாக அவை மாறி வருகின்றன. இதைத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறார்கள். ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில் இத்தலை முறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்க தொடங்கி விட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணைய தளத்தில் சினிமாக் கலைஞர்களை சாதி வாரியாக பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன. முன்பெல்லாம் இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால் இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி விட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ‘எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவால் இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நமபிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கி விடும். மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கித் தள்ளினாலும், சுழலும் இவ்வுலகின் ஈர்ப்பு அதை முன்னோக்கித் தள்ளி விடும். மீண்டும் தமிழகம் சமூகத் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். Source: Maalaimalar
0 notes
karursitharth · 8 years ago
Photo
Tumblr media
மே - 12: உலக செவிலியர்கள் தினம் வைகோ வாழ்த்து
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகி��்புத் தன்மையும் கொண்டு மனிதநேயத்துடன் ஆற்றும் மகத்தான சேவை. இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள்தான். இதை நினைவு கூற வேண்டியது நமது சமூகக் கடமை.
இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேலையும் இணைத்து ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ என்று பெயர் வைத்து அழைத்தனர். ��அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது” என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நவீன தாதியியல் முறையை உருவாக்கி, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைகளை செய்து சிகரங்களைத் தொடுவதற்குப் பதிலாக ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.
1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும், இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியரில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமிய போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.
விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் தங்களைக் காக்க வந்துள்ளது என்று இராணுவ வீரர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். ‘விளக்கேந்திய பெருமாட்டி’ (Lady with the lamp) என்று வர்ணித்தனர். அதைத் தொடர்ந்து 1883 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், 1907 ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்த தினப் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ‘ஆர்டர் ஆ~ப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாகக் கௌரவிக்கப்பட்டார்.
13.08.1910 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது உலக வாழ்க்கைப் பயணத்தை முடித்து மரணத்தைத் தழுவினார். அவர் மறைவிற்கு பின்பு அவரின் தன்னலமற்ற பணியை நினைவு கூற ஆண்டுதோறும் மே 12 ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப் பூர்வமான தருணமாகும். புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை தேர்வு செய்து மே 12 ஆம் நாளில் மத்திய, மாநில அரசுகள் அவர்களை கௌரவிப்பதே நாம் வழங்கும் நன்றியாகும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்திய நர்சிங் கவுன்சில் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணி நியமனம் செய்திட வேண்டும்.
சித்திரை மாதக் கத்திரி வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கால கட்டத்தில் அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவக் கருவிகளும் இருப்பில் வைத்திருக்க ஆவன செய்திட வேண்டுகிறேன்.
புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன். புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.
தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க. ‘தாயகம்’ சென்னை - 8 11.05.2017
0 notes