#பழக்கண்காட்சி
Explore tagged Tumblr posts
Photo
குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்… பழங்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்ற சுற்றுலா பயணிகள் குன்னூர்: குன்னூரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பழக்கண்காட்சி நிறைவு பெற்றது. இதை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 61வது பழக்கண்காட்சி நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது.
0 notes
Text
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி!
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி!
தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57–வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கியது.
தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பழங்களை கொண்டு அலங்கார வளைவு மற்றும்…
View On WordPress
0 notes
Photo
சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி தொடங்கியது நீலகிரி: குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவையொட்டி 2 நாட்கள் நடைபெறும் 61-வது பழக்கண்காட்சி தொடங்கியது. 61-வது பழக்கண்காட்சி யை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். Source: Dinakaran
0 notes
Photo
ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் துவக்கம் : ஏப்ரல் மாதத்தில் மலர்கள் பூக்கும் ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்த்து ரசிக்கின்றனர். ஏப்ரல், மே கோடை சீசன் சமயத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, படகு அணிவகுப்பு மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசனுக்காக இங்குள்ள சுற்றுலா தளங்கள் தயராகி வருகின்றன. கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக ��ட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் அதிக ரகங்களை கொண்ட பூங்காவாக உள்ள இப்பூங்காவில், 4201 ரகங்களில் சுமார் 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெறும் ரோஜா கண்காட்சிக்கு தயார்ப்படுத்தும் வகையில் பூங்காவில் உள்ள செடிகளை கவாத்து செய்யும் பணிகள் நேற்று துவங்கின. கவாத்து பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கவாத்து செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரோஜா பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவத்து பணிகள் சில வாரங்களில் முடிந்து விடும். இந்த சமயத்தில் வர கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து விட கூடாது என்பதற்காக பூங்காவின் மேல் அடுக்கிலும், கடைசி அடுக்கிலும் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. தற்போது அங்கு செடிகள் நன்கு வளர்ந்து ரோஜா மொட்டுகள் விட துவங்கி விட்டது. சில தினங்களில் பூக்க துவங்கி விடும். இதனால் மற்ற அடுக்குகளில் கவாத்து பணிகள் மேற்கொள்ளும் சமயங்களில் பூங்காவிற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் அவற்றை பார்த்து ரசி்க்கலாம், கவாத்து செய்யப்படும் ரோஜா செடிகள் ஏப்ரல் மாதத்தில் பூக்க துவங்கிவிடும். ரோஜா காட்சி சமயத்தில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும். என அதிகாரிகள் தெரிவித்தனர். Source: Dinakaran
0 notes
Text
குன்னூரில் 60-வது பழக்கண்காட்சி.. அரியவகை பழங்களில் மீன், மயில், ரங்கோலி சிற்பங்கள்!
குன்னூரில் 60-வது பழக்கண்காட்சி.. அரியவகை பழங்களில் மீன், மயில், ரங்கோலி சிற்பங்கள்!
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரியவகை பழங்களினால் ஆன மீன், மயில், ரங்கோலி சிற்பங்களை சுற்றுலா பயணிகளை பெரிதும் கண்டுகளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 2 நாட்களாக பழக்கண்காட்சி நடைபெற்றது. இதையொட்டி இப்பூங்கா முழுவதும் உள்ள அரிய வகை மரங்களின் அருகே தொட்டிகளில் மலர் அலங்காரமும்…
View On WordPress
0 notes
Text
மே 18-ல் உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
நீலகிரி: மே 18, 19, 20-ம் தேதிகளில் உதகை தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கோத்தகிரி நேரு பூங்காவில் மே 5, 6-ம் தேதிகளில் 10வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், மே 26, 27-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60வது பழக்கண்காட்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source: Dinakaran
View On WordPress
0 notes