#துப்பாக்கியால் சுட்டு கொலை
Explore tagged Tumblr posts
topskynews · 2 years ago
Text
இன்ஸ்டாவில் புகைபிடித்து, கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட வீரமங்கைக்கு வலைவீச்சு
கோவையில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மையில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே  நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன் பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years ago
Text
ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே
ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே #Hungwellapolice #shooting #death #police #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஹங்வெல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹத்கம பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்க…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
இன்ஸ்டாகிராம் அறிமுகம்; ஒரு தலைக் காதல் தொல்லை: மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!
இன்ஸ்டாகிராம் அறிமுக���்; ஒரு தலைக் காதல் தொல்லை: மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞர் காதல் வலை வீசிய நிலையில் அதை ஏற்க மறுத்துள்ளார் மருத்துவக்கல்லூரி மாணவி. அந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் மானஷா (24). இவரது தந்தை மாதவன் கண்ணூர் போக்குவரத்து காவல் துறையில் ஹோம் கார்டாக பணி செய்து வருகிறார்.…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூரை அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு நபரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுபனையூர் தக்கா கிராமப் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் ஹனீப் என்பவரது மகன் ஹாரூன் (40). இவரது தந்தை சையத் ஹனீப் பெயரில் உரிமம்…
Tumblr media
View On WordPress
0 notes
vettai-blog1 · 6 years ago
Photo
Tumblr media
வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள்! மெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் குறித்த, மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து, சக பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் இருந்ததுஇந்த நிலையில், குறித்த 5 பேர் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் பிணமாக கிடந்தனர். இதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் கடத்தப்பட்டு, பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.குறித்த, மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் நிலவி வருகிறார்கள். இவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
சீனாவில் உறவினரின் டி.என்.ஏ மூலம் சிக்கிய ‘சீரியல் கில்லருக்கு’ மரண தண்டனை சீனாவில் 1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன ஊடகங்களால், 'ஜேக், தி ரிப்பர்' (Jack the Ripper) என்று அழைக்கப்பட்ட காவோ செங்கியாங் கொலை செய்யும் முன்பு சிறுமிகள் மற்றும் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் வழிப்பறி செய்வது மட்டுமல்லாது ��வர்களை பாலியல் வல்லுறவுக்கு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கொலை செய்த பின்னர் அவர்களின் தொண்டைப்பகுதியில் வெட்டியதுடன், இறந்த உடல்களையும் சிதைத்துள்ளார். கன்சூ மாகாணத்தில் உள்ள பய்யின் எனும் இடத்தில் அவர் நடத்திவந்த மளிகைக் கடையில் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பலரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே காவல்துறையினரால் இவரைக் கைது செய்ய முடிந்தது. பழங்கால அமெரிக்கர்கள் கதையை கூறும் 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய டி.என்.ஏ 5,000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசானில் வளர்ந்த 'சாக்லேட் தாவரம்' இவர் 2002ஆம் ஆண்டே கொலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உறவினர் வேறொரு சிறு குற்றத்துக்கு கைதான பின்னரே இவரைப் பற்றிய துப்புக் கிடைத்தது. கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரி காவல்துறையிடம் ஏற்கனவே இருந்த டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போனது. அதை வைத்து கைது செய்யட்ட நபரின் உறவினர் ஒருவர்தான் தொடர் கொலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல் துறையினர் காவோ செங்கியாங்கை நெருங்கினர். முதல் கொலை அவரது மகன் பிறந்த 1988ஆம் ஆண்டில் காவோ தனது முதல் கொலையை செய்துள்ளார். அப்போது 23 வயதாகும் பெண் ஒருவரின் உடல் 26 கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளையும் அவர் வெட்டி எடுத்ததாக பெய்ஜிங் யூத் டெய்லி எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவரால் கொல்லப்பட்டவர்களிலேயே மிகவும் இளம் வயதுடைய சிறுமியின் வயது எட்டு. இவரது தொடர் கொலைகளுக்கு பிறகு பய்யின் நகரத் தெருக்களில் தனியாக நடப்பதைப் பெண்கள் தவிர்த்தனர். பெரும்ப��லும் துப்பாக்கியால் சுட்டு அல்லது நச்சை ஊசி மூலம் செலுத்தியே சீனாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும், வியாழனன்று காவோவுக்கு மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: Source: BBC.com
0 notes
thottaeditor-blog · 6 years ago
Photo
Tumblr media
சென்னை மருத்துவ கல்லூரி மாணவி சுட்டுக்கொலை துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரரும் தற்கொலை போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்த சரஸ்வதி மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். இதனிடையே நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை சரஸ்வதி மீண்டும் எழுதினார். அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதால், நர்சிங் படிப்பை பாதியில் விட்டு விட்டு கடந்த 2016-ம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். முகநூல் ��ழக்கம் மூலம் காதலரான கார்த்திவேல், தனது காதலி சரஸ்வதியின் படிப்புக்கு அவ்வப்போது செலவு செய்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரஸ்வதியின் படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தனர். கடந்த சில மாதங்களாக சரஸ்வதி தன்னை ஒதுக்குவதாக கருதிய கார்த்திவேல், தன்னை விட்டு அவர் பிரிந்து சென்று விடுவாரோ? என்று எண்ணினார். இதனால் சரஸ்வதி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் சரஸ்வதியிடம் கேட்டபோதுதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்து உள்ளனர். சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு வந்த இடத்தில், இந்த விவகாரம் அவர்களுக்கு இடையே மீண்டும் வெடித்தது. இதனால் அவர்களுக்குள் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திவேல், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் வெளியாயின. இதனிடையே மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, போலீஸ்காரர் கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
0 notes
macbookcharger-blog1 · 7 years ago
Text
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை: ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Tumblr media
சில நாள்களுக்கு முன்னர் பெங்கள���ருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர்.
 லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயரிழந்தார்.
இந்த படுகொலைக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வரும் நேரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'கௌரி லங்கேஷின் மரணம் என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதைப் போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்காது என்று நம்புகிறேன். இந்தியா, கருணையுடனும் முன்னேற்றமடைய வேண்டுமென்றும்  விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
0 notes
henrymarker-blog · 7 years ago
Text
அரசு மரியாதையுடன் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் உடல் அடக்கம்: முதல்வர் சித்தராமையா அஞ்சலி
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட அரசியல் மூத்த தலைவர்கள், இலக்கியவாதிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கன்னட பத்திரிகையின் ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளருமான கெளரி லங்கேஷ், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட���ர். 
Tumblr media
பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்ட கெளரி லங்கேஷ், இரவு 7.56 மணிக்கு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் வந்துள்ளார். காரில் இருந்து இறங்கி வீட்டின் முகப்பு நுழைவு வாயிலைத் திறந்து வளாகத்தினுள் சென்றவர் கதவை மூடத் திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  இதில் கெளரி லங்கேஷின் தோள்பட்டையின் இடது பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கெளரி லங்கேஷ், தப்பி வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, கால் இடறி கீழே விழுந்த கெளரி லங்கேஷை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் 7 சுற்று சுட்டுள்ளனர். இதில், இதயத்தில் 2 குண்டுகள் துளைத்ததால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 0.32 கைத்துப்பாக்கியால் கெளரி லங்கேஷ் 
சுடப்பட்டது தெரியவந்துள்ளது. கண் தானம்: முன்னதாக, கெளரி லங்கேஷ் தனது கண்களைத் தானம் செய்ய ஒப்புதல் அளித்திருந்ததால், , மருத்துவர்கள் அவரது கண்களை அகற்றினர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது இளைய சகோதரர் இந்திரஜித் லங்கேஷ்,' கெளரி லங்கேஷின் இதயத்தில் குண்டு துளைத்துள்ளதால், அவர் சம்பவ இடத்திலே உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கெளரியின் விருப்பத்தின்படி அவரது கண்கள் இரண்டும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. கெளரியைக் கொன்ற கொலைகாரர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என்றார். ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி: விக்டோரியா மருத்துவமனையில் இருந்து ஜே.சி.சாலையில் உள்ள ரவீந்திர கலாúக்ஷத்ராவுக்கு கெளரி லங்கேஷின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு கெளரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கெளரி லங்கேஷின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சித்தராமையா அஞ்சலி: மாலை 3.30 மணி அளவில் கெளரி லங்கேஷின் உடல் சாமராஜ் பேட்டில் டி.ஆர்.மில் அருகே உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. கெளரி லங்கேஷ் மதச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாதி என்பதால், எவ்வித மதச் சடங்குகளும் செய்யப்படவில்லை.  அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் சித்தராமையா மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கெளரியின் தாய் இந்திரா, தங்கை கவிதா, தம்பி இந்திரஜித் உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் சித்தராமையா ஆறுதல் கூறினார். பின்னர், மாலை 4.30 மணி அளவில் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூரை அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு நபரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுபனையூர் தக்கா கிராமப் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் ஹனீப் என்பவரது மகன் ஹாரூன் (40). இவரது தந்தை சையத் ஹனீப் பெயரில் உரிமம்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
மெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Mexico #PoliceMurder
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி  …
View On WordPress
0 notes
vettai-blog1 · 6 years ago
Photo
Tumblr media
மகனை கொன்று நேரலையில் தற்கொலை செய்த ராணுவ வீரர்: ஃபேஸ்புக்கில் பரபரப்பு ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்வது, தற்கொலை செய்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர் ஒருவர் தனது 5 வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜோவோனி மெக்லண்டன் ஜூன���யர் என்பவருக்கு 27 வயத்ஹில் ஒரு காதலியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3-ம் தேதியன்று தன்னுடைய தாய்க்கு போன் செய்த ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியையும் கொன்றுவிட்டேன் என கூறிவிட்டு போனை வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது.
0 notes
tamilsnow · 6 years ago
Text
தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
  தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கேட்ட மனு மீதான விசாரணையை இன்று  ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பேரணியை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு 13 பேரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். #Thirunavukkarasar #SterliteProtest தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள�� பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர். அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:- அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர். குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்��ிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.  #Thirunavukkarasar #SterliteProtest Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
தூத்துக்குடியில் அதிர்ச்சி.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை
தூத்துக்குடியில் அதிர்ச்சி.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை.
கார்பொரேட் நிறு��னமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.
இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
திருமணத்தின்போது பயங்கரம்: மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனைச் சுட்டுக்கொன்ற நண்பர்  திருமணத்தின் போது, மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை நோக்கி அவரின் நண்பர் சுட்டதில் மணமகன் பரிதாபமாக பலியானார். வடமாநிலங்களில் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களின் பெருமையை உணர்த்துவது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இந்த வழக்கம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்மிபூர்கேரி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நேற்று ஒரு திருமணம் நடக்க இருந்தது. அப்போது, மணமகன் சுனில் வர்மா அமர்ந்திருந்தார். மணமகனுக்குரிய சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, மணமகனுக்கு எதிர்த்திசையில் அவரின் நண்பர் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தார். அப்போது திடீரென மணமகனின் நண்பர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை சுட்டார். இதில் முதல் குண்டு வெளியில் பாய்ந்தது. 2-வது குண்டு மணமகனின் மார்பில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து மணமகனை அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து நீமாகான் போலீஸ் நிலையத்தில் மணமகனின் பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மணமகனைச் சுட்ட அவரின் நண்பர் தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரை தீவிரமாகத் தேடிவருகிறோம் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், மணமகன் நண்பர் வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கி என்று போலீஸார் கூறுகின்றனர். மணமகனுக்கும் அவரின் நண்பருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததா, அல்லது ஏதேச்சையாக துப்பாக்கிக் குண்டு வெடித்து அவர் பாய்ந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாக்களில் இதுபோன்று துப்பாக்கியால் சுடும் வழக்கத்துக்கு ஏற்கெனவே அரசு தடைவிதித்திருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மணமகனைத் துப்பாக்கியால் சுடும் காட்சி தொடர்பான வீடியோ அனைத்து இந்தி தொலைக்காட்சிகளிலும் வெளியானது.  சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வைரலானது குறிப்பிடத்தக்கது. Source: The Hindu
0 notes