#சிட்டுக்குருவி
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 7 months ago
Text
டேப்ரிகார்டர் #நினைவு_நாடா
டேப் ரிகார்டர் & கேசட் இவையிரண்டும் எங்களுக்கு அறிமுகமான போது உலகில் இதை விட ஒரு விஞ்ஞான வளர்ச்சி ஏதும் இருக்காது என்று நம்பினோம்! அந்தளவு அவை எங்களைக் கவர்ந்தன அதிலும் கேஸட்டில் பாடல்கள் ரிகார்டிங் செய்யப் போவதே ஒரு தனி சுகம்.
பரிட்சைக்கு கூட அப்படி தயாராகி இருக்கமாட்டோம்! நமக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு அதனை மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள கேசட் ரெகார்டிங் கடைக்குச் சென்று கொடுத்துவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு வரச்சொல்வார்கள்.
இதில் அரிசந்திரனாக சிலர், அரசாங்கமாக சிலர்! அதாவது சொன்னபடி கொடுப்பதும் இழுத்தடிப்பதும் உண்டு. அதிலும் 60 காசட்டில் 12 பாடல்களும், 90 காசட்டில் 18 பாடல்களும் பதியலாம் கடைக்காரர்கள் நமக்கு 60 காசட்டையே பரிந்துரை செய்வார்கள்!
90 காசட் டைட் ஆகி அடிக்கடி உள்ளே சிக்கிக் கொள்ளும் என்பார்கள்! உண்மையில் 60 என்றால் இன்னொரு காசட் அதிகமாக விற்கும் என்பது இதன் பின் ஒளிந்திருக்கும் வணிகம். எங்களை சினிமா பற்றிய அறிவுத் தேடலில் விட்ட பெருமை மியூசிக்கல்ஸ்..
கடைக்காரர்களுக்குத் தான் போய் சேரும்! என்ன பாட்டு என்ன படம் என்பதே அவர்களுக்கு தெரியாது. என்ன படம்னு சொல்லுங்க தம்பி என்று நம்மிடம் கேட்பார்கள். இவர்கள் மிதவாதிகள்! பாடல் ஞானம் இல்லாது சம்பாதிக்க இத்தொழிலில் இறங்கியவர்கள் தீவிரவாதிகள்!
சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்களை இளையராஜா ஹிட்ஸில் பதிந்து தந்து விட்டு கேட்டால் தம்பி இது இளையராஜா மியூசிக் தான் என்று தீக்குண்டமே இறங்குவார்கள்! நாமும் பயந்து ஆமாங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் என ஜகா வாங்கிப் போவோம்!
அன்று இணையம் / கூகுள் வசதி எல்லாம் இல்லை இ��ற்காகவே நான் தேடித் தேடி பாடல்கள் பற்றிய விவரங்களை எடுக்க கற்றுக் கொண்டேன். இதனால் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது! பிறகு சில வருடங்களில் ரசனையானவர்கள் இத்தொழிலுக்கு வந்தார்கள்.
இவர்கள் கடையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட பெரிய நோட் ஒன்று இருக்கும்,அதில் அழகான கையெழுத்தில் படத்தின் பெயரும் பாடலின் முதல் வரியும் எழுதப்பட்டிருக்கும் அதற்கு நேராக ஒரு எண்ணும் இருக்கும்! அதன் படிஎழுதி கொடுத்தால் போதும்.!
அதிலும் சிலர் ரஜினி ஹிட்ஸ்,கமல்ஹிட்ஸ், ராஜாஹிட்ஸ் எனப் பிரித்து எழுதி இருப்பார்கள். சிலர் கலர் கலரான ஸ்கெட்ச் பேனாவில் தென்றல், நிலா, பூ, நெஞ்சம், மேகம் எனத் தொடங்கும் பாடல்களாக தனித்தனி நோட்டுகளில் எழுதி வைத்திருப்பார்கள்!
மிகவும் ரசனையாக இருக்கும் நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்கள் தந்து விட்ட அடுத்த நொடி வீட்டிற்கு வந்து டேப்ரிகார்டரில் பாடலை கேட்கும் சுகம் அடடா.! எனது பால்யம் இசைஞானி இளைய ராஜாவின் பொற்காலமான எண்பதுகள்! இது என் பிறவிப் பயன்.!
சிட்டுக்குருவி, கரும்பு வில், கல்லுக்குள் ஈரம், பன்னீர்புஷ்பங்கள், ஆராதனை, மஞ்சள் நிலா, ஆனந்தக் கும்மி, காதல் ஓவியம்,, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அனைத்து பாரதிராஜா, பாக்யராஜ், கமல்,ரஜினி, படங்கள் என ராஜா பட்டையை கிளப்பிய..
கேட்கக் கேட்க திகட்டாத பாடல்கள் வெளி வந்த காலமது! சில மொக்கை படங்களில் கூட அற்புதமான பாடல்களை தந்து இருப்பார் ராஜா! அதை தேடி எடுத்து பதிவதில் எனக்கு ஆவல் அதிகம்! அந்த படங்களின் பேரெல்லாம் நூலகத்தில் தேடினாலும் கிடைக்காது.
சினிமா பாட்டுப் புத்தகம் என்றொரு பொக்கிஷம் அப்போது இருந்தது! கடையில் போய் சும்மா புரட்டிப் பார்த்துவிட்டு பிறகு தனி நோட்டு வைத்து அந்தப் படத்தின் பெயரை எழுதிக் கொள்வேன்! அந்த நோட்டு தான் அப்போது என் பைபிள், குரான், பகவத் கீதை!
அந்த நோட்டை பின்னாளில் தொலைத்தபோது 2 தினங்கள் சாப்பிடாமல் இருந்தது தனிக்கதை! இதற்குப் பிறகு அசெம்பிள் செட் வந்து சக்கை போடு போட்டது! இதற்காக தனி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்து வைத்திருப்பேன்! இப்போது மோகன்,கார்த்திக், சுரேஷ்..
விஜயகாந்த், ராமராஜன், பிரபு பாடல்களின் காலம்! அந்தப் பாடல்கள் எல்லாம் ஸ்டீரியோ இசையில் கிடைத்தன அந்தப் பாடல்களின் ஸ்டீரியோ இசையை தெருவே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம் இது வீடா? இல்ல சவுண்ட் சர்வீஸ் கடையா? என்று..
திட்டு வாங்குவோம்.இதில் டேப் சிக்கி கொள்வது அதை பென்சிலால் சரி செய்வது, அறுந்து போன டேப்பை குய்க்பிக்ஸ் வைத்து ஒட்டுவது போன்ற மெக்கானிக் வ��லைகளும் தெரிந்து வைத்து கொண்டேன். அது எப்போது நினைத்தாலும் பூ பூக்கும் ஒரு அழகிய இசைக்காலம்!
போன வாரம் ஒரு புது மொபைல் வாங்க நண்பருடன் போனேன்! இளையராஜா 80s ஹிட் பாடல்கள் வேண்டுமென்றேன் இதோ சார் என்றவர் அடுத்த 5 நிமிடங்களில் 500 பாடல்களை டவுன் லோட் செய்து கொடுத்தார் சட்டென்று எனக்கொரு வெறுப்பு தோன்றியது!
ஒரு உண்மையும் விளங்கியது! நாம் ஆசைப்படுவது நமக்கு சீக்கிரமாக கிடைத்து விட்டால் சில சுவாரஸ்யங்களை இழந்து விடுகிறோம்! இல்லையா! ஆனால் சத்தியம் செய்து அடித்துச் சொல்வேன் டேப்ரிகார்டர் காலம் தான் ஒரு பொற்காலம் என்று!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
bharathidasanprabhu · 8 months ago
Text
Tumblr media
🌎 WORLD SPARROW DAY - 20 MARCH 2024 - உலக சிட்டுக்குருவி தினம் - 20 மார்ச் 2024.
0 notes
sirukathaigal · 1 year ago
Text
வைகறை (சிறுகதைகள்) - எச்.எப்.ரிஸ்னா
Tumblr media
கதையாசிரியர்: எச்.எப்.ரிஸ்னா வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.
1. கானல் நீர் 2. ஓயாத நினைவலைகள் 3. கனவுகள் 4. என்னை அறிந்த போது 5. தெளிந்த வானம் 6. சிட்டுக்குருவி 7. சொந்தம் 8. கண்ணீர் 9. தொலைந்த கவிதை 10.வாக்குறுதிகள் 11.தவிப்பு 12. வேதனை 13. சிதைவு 14. உறவுகள் 15. வரம் 16. த��ல்வி 17. விதி 18. கா��ல் கல்வெட்டு 19. பயணங்கள் 20. அழகன்
0 notes
nidurali · 1 year ago
Text
சிட்டுக்குருவி
View On WordPress
0 notes
kadhaisolgiren · 2 years ago
Text
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.
புலவர் உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ யில் இரண்டாவது செய்யுளில் உள்ள இரண்டாவது நீதி ‘நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்’ என்பதாகும். இதன் பொருள��� : நடவாது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்தக் கூடாது.இதை விளக்கும் விதமாக அமைந்த சிறுவர்கான கதை நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்.  பெரிய சோலை ஒன்று இருந்தது. அந்த சோலையில் மயில்,குயில்,மைனா,கிளி, காகம், சிட்டுக்குருவி, ஆந்தை,காடை,வான்கோழி,…
Tumblr media
View On WordPress
0 notes
hornpipetamilsongs · 2 years ago
Video
youtube
சிட்டு குருவி தொட்டு தளுவி சிறந்த தமிழ் வீடியோ தமிழ் பாடல் ஆன்லைனில் #shorts @besttamilsongsonline​#hornpipetamilsong #tamilvideosongs #shorts #90s @besttamilsongsonline ​ 🔔 Don't forget to subscribe to our channel: https://goo.gl/oniuki "சிட்டுக்குருவி..... தொட்டுத் தழுவி.... முத்தம் கொடுக்க பித்தம் புடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ" சிறந்த தமிழ் வீடியோ தமிழ் பாடல் ஆன்லைனில், மலேசியா வாசுதேவன் மற்றும் கே.எஸ்.சித்ராவின் குரல்கள்
0 notes
rajkumarla · 6 years ago
Text
House Sparrow (Passer domesticus)
[Chirp Chirp] House Sparrow (Passer domesticus) #fromMyWindow #Birds #Sparrows #Nature #Photography
Tumblr media
House Sparrow (Passer domesticus)
Great fiction is often praised for evoking a strong ‘sense of place.’ Birds do the same. In my own backyard, watching the types and rhythms of birds each day and each season heightens my appreciation for the subtler workings of the landscape. And when confronted by a seemingly alien place, say a desert or mountain tundra, the birds carry me from confusion to…
View On WordPress
1 note · View note
worldheadlines360 · 4 years ago
Text
WORLD SPARROW DAY 2021 | 20 மார்ச் 2021 | மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த சிட்டுக்குருவி!!! உலக சிட்டு குருவி தினம் | Endanger Species
WORLD SPARROW DAY 2021 | 20 மார்ச் 2021 | மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த சிட்டுக்குருவி!!! உலக சிட்டு குருவி தினம் | Endanger Species
WORLD SPARROW DAY உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல!!! அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது, உ��ிமையானது. அதனால்தான் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்தல் வேண்டும்” என்றார் அருட்பிரகாச வள்ளலார். அப்படி இருக்கும்போது மனிதனோடு மனிதனாக பின்னிப்பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் தான் சிட்டுக்குருவி. மேலும் மனித இனத்தோடு அடைக்கலம் ஆவதால் அவற்றை அடைக்கலத்தான் குருவி என்றும்…
Tumblr media
View On WordPress
4 notes · View notes
maakolam-blog · 5 years ago
Photo
Tumblr media
சிட்டுக்குருவி... www.MaaKolam.com #Maa.Kolam https://www.instagram.com/p/B_SnTqFg2Et/?igshid=17twcee9kgk8q
1 note · View note
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
முருகனுக்கு பால்குடம் எடுக்கும் இந்த நேரத்தில் சிட்டுக்குருவி, காக்கைக்கும் நீர் வைப்போம்: விவேக்! Actor Vivek: முருகனுக்கு பால்குடம் எடுக்கும் இந்த நேரத்தில் சிட்டுக்குருவி, காக... முருகனுக்கு பால் குடம் எடுக்கும் இந்த நேரத்தில் சிட்டுக்குருவிகளுக்கும் நீர்க்குடம் வைப்போம் என்று காமெடி நடிகர் …
1 note · View note
bharathidasanprabhu · 2 years ago
Text
🌎 WORLD SPARROW DAY - 20 MARCH 2023 - உலக சிட்டுக்குருவி தினம் - 20 மார்ச் 2023.
Tumblr media
0 notes
tamizha1 · 3 years ago
Text
இன்று உலக சிட்டுக்குருவி தினம்- ஏய் குருவி... சிட்டுக்குருவி எம்மை விட்டு மறைவாயோ?
இன்று உலக சிட்டுக்குருவி தினம்- ஏய் குருவி… சிட்டுக்குருவி எம்மை விட்டு மறைவாயோ?
நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகி���்ச்சி படுத்த வேண்டும். சேதி சொல்லும் சிட்டுக்குருவியை கொண்டாடும் தேதி இன்று! ஆம். மார்ச் 20-ந்தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம். இயற்கை ஆர்வலர்களின் இதயம் கவர்ந்த இந்த சின்னஞ்சிறு பறவை இனம் எங்கு எந்த பக்கம் திரும்பினாலும் காண கிடைக்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
sirukathaigal · 2 years ago
Text
10 சிறுகதைகள்
10 சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆறறிவு கிளி - அ.வேளாங்கண்ணி
மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும் - ஹமீது தம்பி (அறிமுகம்)
சேரன் எக்ஸ்பிரஸ் - சில்வனஸ் ப்ரித்திம் சுகந்த் (அறிமுகம்)
வணிகவகுப்பும் ரெட்வைனும்! - குரு அரவிந்தன்
முடி துறந்த கதை - மாலினி அரவிந்தன்
எங்கே என் ��ாதல் - செல்வம் கந்தசாமி
சிசுபால வதம் (மஹாபாரதம்) - 2 - ராணி பாலகிருஷ்ணன்
மனசுக்குள் மத்தாப்பு - கோதண்டபானி நிரஞ்சலாதேவி கோவில் காளைகள் - மணிசேஷன் (அறிமுகம்)
சிட்டுக்குருவி - க.நா.சுப்ரமண்யம்
0 notes
nidurali · 1 year ago
Text
சிட்டுக்குருவி
youtube
0 notes
totamil3 · 3 years ago
Text
NGO மாணவர்களுக்கு கூடு பெட்டிகளை தயாரிப்பதில் பயிற்சி அளிக்கிறது
NGO மாணவர்களுக்கு கூடு பெட்டிகளை தயாரிப்பதில் பயிற்சி அளிக்கிறது
சிட்டுக்குருவி பாதுகாப்பை நோக்கி செயல்படும் தன்னார்வ அமைப்பான கூடுகளில் மாணவர்களுக்கு கூடு பெட்டிகளில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 2 வரை இயற்���ை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்க���க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆன்லைன் போட்டிகளை இது நடத்தும். 1000 கூடு கூடு பெட்டிகளை உருவாக்குவதற்கான பட்டறைகளை நடத்துவதற்காக லெனாக்ஸ்…
View On WordPress
0 notes
lovemuthinavideos · 4 years ago
Video
சிட்டுக்குருவி (at Ooty) https://www.instagram.com/p/CN0I5byAJB1/?igshid=1et7ks7cl8st5
0 notes