#அர்ஜூன மகேந்திரன்
Explore tagged Tumblr posts
Text
அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில்
அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் #ArjunaMahendran #ut #utnews #tamilnews #universaltamil #lka
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச பொலிஸார், குற்றுப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துககொள்ளப்பட்டபோது, இந்த விடயம்…
View On WordPress
0 notes
Photo
முறிகள் திருட்டு இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தி: மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றீர்களா? மத்திய வங்கியில் முறிகள் மோசடி இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 30 வருடங்களில் பூரணத்துவம் அடையும் ஒரு பில்லியன் ரூபாவிற்கான முறிகளை ஏலத்தில் விடுவதற்காக மத்திய வங்கி அறிவித்தல் விடுத்திருந்தது. கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுக் கொ��்டிருக்கையில் அதன் மொத்தப் பெறுமதியை 20 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆலோசனை வழங்கினார். மத்திய வங்கி அதிகாரிகளின் ஆட்சேபனை காரணமாக அந்தத் தொகை 10 பில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டது. இதனையடுத்து, ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி மக்களின் கருத்து மேலோங்கியபோது முறிகள் விநியோக நடைமுறையை மாற்றுவதற்கு கட்டளை இட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், ஊழல் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிட்டிபன குழுவை நியமித்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அர்ஜுன மகேந்திரன் சுற்றவாழி என குழுவினர் முடிவினை வௌியிட்டனர். டியூ குணசேகர தலைமையிலான கோப் குழுவின் இடைக்கால அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல் நாளில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் வழங்கிய ஆலோசனையையே தாம் நடைமுறைப்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கிய வாக்குமூலம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பின்னர் அம்பலமானது. தேர்தலின் பின்னர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவின் விசாரணை ஆரம்பமானது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிக்குறிப்புகளுடன் கூடிய நீர்த்து போகச் செய்யப்பட்ட கோப் அறிக்கை வெளியாகியது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி ஆணைக்குழு 11 மாதங்களாக விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. பின்னர் அது சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்தது. அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிங்கப்பூரில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக செயற்படுவதுடன், நாட்டையும் நிர்வகிக்கின்றனர். மக்கள் ஒரு நாளும் இந்த திருட்டை மறக்கக்கூடாது என்பதுடன், வெள்ளைக் கழுத்துப்பட்டி திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மீண்டும் இத்தகைய குற்றங்கள் நிகழாதிருக்க உறுதி பூணவேண்டும்.
0 notes
Photo
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கண்டுபிடிக்க முடியாமற்போன அர்ஜூன மகேந்திரன் தென்னாபிரிக்க ஊடகத்திற்கு செவ்வி முறிகள் மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தென்னாபிரிக்க ஊடகமொன்றுக்கு நிதி தூய்தாக்கல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து வௌிவருகின்ற ”பிஸ்னஸ் லைவ்” இணையத்தளத்திற்கு சர்வதேச வங்கியொன்றுடன் தொடர்புடைய நிதி தூய்தாக்கல் குறித்து அர்ஜுன மகேந்திரன் கருத்துக்களை வௌியிட்ட���ள்ளார். அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழில் முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்குநராக தற்போது செயற்பட்டு வருகின்றார். அவரை கண்டுபிடிக்க முடியாமற்போனதாக தெரிவிக்கப்பட்டு சுமார் ஒரு வருடமாகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கண்டுபிடிக்க முடியாமற்போன அர்ஜுன மகேந்திரனை தென்னாபிரிக்க ஊடகம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் புலப்படுவது இயலாமையா? கரிசனையின்மையா?
0 notes
Text
பூதாகரமாகியுள்ள பிணைமுறி மோசடி விவகாரம் ரவியின் பதவி பறிபோகும் நிலை : முடக்கப்படுமா பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனம்?
#ut #utnews #lka #universaltamil #tamilnews #bondissue
சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜூன அலோசியஸ், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதால் அரசியல் அரங்களில் பெரும் அதிர்வலைகள் தோற்றம் பெற்றுள்ளன.
க…
View On WordPress
0 notes