#அதிக உதிரப்போக்கு
Explore tagged Tumblr posts
aakashfertilitycentre · 11 months ago
Text
Tumblr media
மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு நிற்க என்ன தீர்வு ?
0 notes
universaltamilnews · 5 years ago
Text
பெண்கள் மாதவிடாயின் போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா? உண்மை காரணம் இதுதான்
பெண்கள் மாதவிடாயின் போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா? உண்மை காரணம் இதுதான் #menses #ஆணின்உயிரணுக்கள் #ut #utlifestyle #tamilnews #universaltamil
சமீ��� காலமாக கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுதல், அது நாளடைவில் புற்றுநோயாக மாறுதல் ஆகிய பிரச்சினைகளால் இறுதியில் கர்ப்பப்பையையே எடுத்துவிடுகிற சூழல் உண்டாகிறது. அப்படியே அதை எடுத்துவிட்டாலும் அதற்குப் பின்பாவது அவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறதா என்ன? அதற்குப் பிறது இன்னும் ஏராளமான தொல்லைகளை அவர்கள்…
View On WordPress
0 notes
drsaleemayush · 2 years ago
Video
youtube
மாத விலக்கில் அதிக ரத்த போக்கை உடனடியாக நிறுத்தும் மூலிகை | ரத்த பித்தம...
மாதவிலக்கின் போது அதிக ரத்த போக்கை உடனடியாக நிறுத்த உதவும் மூலிகை இது.. ஆயுர்வேத சிகிச்சையில் அதிக உதிரப்போக்கு நிறுத்த உதவும் இந்த மூலிகை எப்படி பயன்படுத்தலாம் மூலத்தில் அதிக ரத்த போக்கை குணப்புத்தக்கூடிய இந்த மூலிகை  தமிழ் இது.. Herb which helps to stop excessive bleeding while menstruation.. #drsaleem #dub #rakthapittam #ayurvedicmedicine #herbal #vasa #ஆடாதோடை #alahifaayush #bleeding #bleedingdisorders #excessivebleeding #viral #trending  #DUB #excessvaginal
0 notes
sociihubcommunity · 5 years ago
Photo
Tumblr media
Menses cycleலில் உதிரப்போக்கு வருவதில் சிக்கலா? அதிக ரத்த போக்கா? What you must do do quickly?
0 notes
abishakram5 · 5 years ago
Text
பெண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்முழுமையான பார்வை
♥பெண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்
முழுமையான பார்வை
#பெண்குறியின்_வெளி #மடிப்பு
♥பெண் குறியின் வெளி மடிப்பு என்பது மிருதுவான தோல் மடிப்பாகும். இது ரோமத்தால் மூடப்பட்டுள்ளது. இவை பிறப்பு வாய் மற்றும் உறுப்புகளை மூடி பாதுகாக்கின்றன. பெண் குறியின் உள் உதடு பெண் குறியின் வெளி மடிப்பிற்கு உள்ளே அமைந்துள்ள இரண்டு மடிப்புகளாகும். இந்த உதடுகள் பிறப்பு வாய் மற்றும் சிறுநீர் தாரை ஆகியவற்றை பாதுகாக்கின்றன.
#மகளிர்_கந்து
♥மகளிர் கந்து பட்டாணி அளவில் உள்ள ஒரு உறுப்பாகும். இது அதிக உணர்ச்சியுள்ள பகுதி மற்றும் இது பெண்களின் பாலுணர்வின் உச்சகட்ட இன்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இது ஆண் குறியை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. பெண் குறியின் உள்உதடு மேற்புறத்தில் இணையும் இடத்தில் இது அமைந்துள்ளது. சிறுநீர் தாரை மற்றும் பிறப்பு வாய் திறப்பு ஆகியவை மகளிர் கந்துக்கு ��ீழே அமைந்துள்ளன.
#பிறப்பு_வாய்_குழாய்
♥பிறப்பு வாய் குழாய் என்பது தசையாலான ஒரு குழாய். இது உடலுறவின்போது ��ண் குறி உள்ளே நுழைவதற்கும் குழந்தை பிறக்கும் போது அது கருப்பையிலிருந்து வெளியே வருவதற்கும் ஏற்றவாறு விரிந்து கொடுக்கும் தன்மையுள்ளதாக அமைந்துள்ளது. கருப்பையிலிருந்து மாதவிடாய் உதிரப்போக்கு கருப்பை வாய் குழாய் மூலம் வெளியேறுகிறது. கருப்பை வாய் குழாயில் நரம்புகள் ஆரம்பிக்கின்றன. 
♥எனவே இங்கு அழுத்தம் ஏற்படும்போது உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதனால் இன்பம் கிடைக்கிறது. பிறப்பு வாய் குழாய் கருப்பை வாயருகில் முடிவடைகிறது. பிறப்பு வாய் குழாயின் திறப்பு சில நேரங்களில் கன்னித்திரை என்ற மிக மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும். இந்த கன்னித்திரை பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது என்ற மூட நம்பிக்கை உள்ளது.
♥ அதே போன்று இந்த கன்னித்திரை முதல் உடலுறவின் போது மட்டுமே கிழிந்து இரத்தம் வெளிப்படும் என்றும் தவறாக நம்பப்படுகிறது. இயல்பாக அதிக உடல் செயல்பாடுகளான விளையாட்டுக்கள், கடின வேலைகள் ஆகியவை செய்யும்போதும் இந்த கன்னித்திரை கிழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இது முதல் உடலுறவின் போது கிழிந்தாலும் கூட இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்படாது. மாறாக சிறு துளி உதிரமே வெளிவரும்.
#கருப்பை_வாய்
♥கருப்பை வாய் என்பது கருப்பையின் திறப்பு பகுதியாகும். இது கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. கருப்பையிலிருந்து மாதவிடாய் உதிரம் இந்த கருப்பை வாய் வழியாக பிறப்பு வாய் குழாயை வந்தடைகிறது.
#கருப்பை
♥கருப்பை என்பது பேரிக்காய் வடிவிலான உறுப்பு. இது உத்தேசமாக நம் கை முஷ்டி அளவு இருக்கும். இது வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே அமைந்துள்ள தசையாலான ஒரு வெற்று பை ஆகும். இது சிறுநீர் பைக்கும் மலக்குடலுக்கும் நடுவே அமந்துள்ளது. இது கரு முழு வளர்ச்சியடைவதற்கு ஏற்றவாறு விரிந்து குழந்தை பிறந்த பின் சுருங்கிவிடும் தன்மை உள்ளது. மாதவிடாய் உதிரம் கருப்பையின் உட்புற சுவற்றிலிருந்து வெளியேற��ம். உடலுறவின் போது பெண்ணுக்கு உச்ச கட்ட இன்பம் தோன்றும்போது கருப்பையின் மேல்புறம் சுருங்கும்.
#சினைக்குழாய்
♥இரண்டு சினைக் குழாய்கள் உள்ளன. அவை கைகளைப்போல் கருப்பையின் இரண்டு பகுதிகளிலும் சினைப்பையை நோக்கி நீண்டிருக்கின்றன. ஆனால் அவை சினைப்பையை தொடுவதில்லை. சினைப்பையிலிருந்து சினை முட்டை வெளியாகும்போது சினைக்குழாய் அதை தன்னுள் இழுத்துக் கொண்டு குழாயின் உட்புறத்தினுள் தள்ளுகிறது. கருவுருதல் சினைக்குழாய்க்குள் தான் நடைபெறுகிறது. உடலுறவின்போது உச்சகட்டத்தில் சினைக்குழாய்களும் சுருங்குகின்றன.
#சினைப்பைகள்
♥கருப்பையின் இரண்டு புறமும் சினைப்பைகள் உள்ளன. இவை பாதாங்கொட்டை போன்ற அமைப்பிலும் அளவிலும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் சினைக்குழாய்க்கு அருகில் இருக்கும் ஆனால் சினைக்குழாயோடு இணைந்திருக்காது. சினைப்பையில் சினை முட்டைகள் உருவாகின்றன. அத்துடன் பெண் இயக்கு நீரான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் இவற்றில் சுரக்கின்றன. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு முட்டை அவளது சினைப்பையில���ருந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் சுமார் 400 முற்றிய முட்டைகள் மட்டுமே வெளியேறுகின்றன. 40 அல்லது 45 வயதில் முட்டை உருவாவதும் மாதவிடாய் உதிரப்போக்கும் நின்றுவிடுகின்றன.
#மாதவிடாய்_சுழற்சி_பற்றிய #சில_தகவல்கள்
♥விடலைப்பருவப் பெண்களுக்கு 10 முதல் 19 வயதிற்குள் மாதவிடாய் உதிரப்போக்கு ஆரம்பமாகிறது. ஒவ்வொரு மாதமும் 5 அல்லது 6 சினை முட்டைகள் முதிற்சியடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒரே ஒரு நன்கு முற்றிய முட்டை மட்டுமே வெளியேறும். அதை சினைக்குழாய் உறிஞ்சி தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும். முட்டை கருப்பையை நோக்கி மெதுவாக நகரும். அதே நேரத்தில் சினைப்பையில் சுரக்கும் இயக்கு நீர்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் ஆகியவை ஆண் விந்தவுடன் இணைந்து சினைப்பட்ட கருவை சுமப்பதற்கு ஏற்றவாறு கருப்பை சுவற்றை கெட்டியாக்கும் செயலில் ஈடுபடும். முட்டை கருவாகாவிட்டால் அது சிதைந்துவிடும். 
♥இப்போது கருவை சுமக்கவும் அதற்கு உணவு ஊட்டவும் உருவான கருப்பை சுவருக்கு வேலை இல்லை. எனவே அது கலைந்து மாதவிடாய் உதிரப்போக்காக வெளியேறும். இவ்வாறே மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் சுமார் 50 மிலி இரத்த இழப்பு ஏற்படும். மாதவிடாய் உதிரப்போக்கு மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். இந்த சுழற்சி 28 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை தொடரும். இந்த சுழற்சியில் நாள் அளவு தொடர்ச்சி ஆகியவற்றில் நபருக்கு நபர் அதிக வேறு பாடு இருக்கும். ஒரு சிலருக்கு அதிக அளவிலும் நீண்ட நாட்களுக்கும் உதிரப்போக்கு இருக்கும். ஒரு சிலருக்கு மிகக்குறைந்த உதிரப்போக்கு இருக்கும். இவ்வாறு குறைந்த உதிரப்போக்குக்கு காரணம் இரத்த சோகையாகும். 
♥வாய்வழியாக மாலா டி கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கும் மிதமான உதிரப்போக்கு இருக்கும். மாதவிடாய் சினைப்பைகள் பிறப்பு வாய் குழாய் கருப்பை வாய் கருப்பை சினைக் குழாய் சுழற்சியில் மிக முக்கியமான காலம் கருவுருதல் நடைபெறும் காலமாகும். 28-30 நாள் சுழற்சியில் மூன்று நாட்கள் மட்டுமே கருவுறுவதற்கு ஏற்ற காலமாகும். இந்த நாட்களில் முட்டையின் வெள்ளைக்கரு போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிப்படும். இந்த வெள்ளைப்படுதல் இயல்பானது. கலந்தாலோசகர்கள் இயல்பான வெள்ளைப்படுதலுக்கும் இயல்புக்கு மாறான வெள்ளைப்படுதலுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டியது அவசியம். கருமுட்டை வெளிப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவும் இரண்டு நாட்கள் கழித்தும் மட்டுமே கருவுருதலுக்கான வாய்ப்புகள் உள்ளன.
#மாதவிடாய்_சுகாதாரம்
♥மாதவிடாய் ஏற்படும் காலங்களில் தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். இனஉறுப்புகளை மென்மையான சோப்பு மற்றும் மிதமான சுடு நீரில் தினமும் கழுவுவது உடலில் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவும்.
#மாதவிடாய் #உதிரப்போக்குக்கு #அணையாடை
♥மென்மையான பருத்தி துணி அல்லது கடைகளில் விற்கப்படும் சுகாதார பஞ்சுப்பொதிகளை மாதவிடாய் உதிரத்தை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கின் அளவுக்கேற்றவாறு இவற்றை 3 அல்லது 4 முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணையாடையை மாற்றும் போதும் பிறப்புறுப்புகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சோப்பு மற்றும் நீரால் கழுவ வேண்டும். 
♥துணியாலான அணையாடையை பயன்படுத்தினால் அதை சோப்பிட்டு சுத்தமாக துவைத்து வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். ஈர��ான துணிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவற்றால் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் கிருமித்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க ஒரே துணியை மற்ற பெண் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 3 அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை பழைய துணியை அப்புறப்படுத்திவிட்டு புதிய துணியை பயன்படுத்த வேண்டும். 
♥ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுகாதார அணையாடையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். பயன்படுத்திய அணையாடையை ஒரு பேப்பரில் சுற்றி குப்பைக்கூடையில் போட வேண்டும். எச்ஐவி பாதிப்புக்காளான பெண்கள் தங்கள் அணையாடையை பிளீச்சிங் பௌடர் கலந்த நீரில் நனைத்தபின் அப்புறப்படுத்த வேண்டும். அதே போன்று துணி பயன்படுத்துபவர்களாக இருந்தால் துணியை துவைப்பதற்கு முன் பிளீச்சிங் பௌடர் கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்தபின் சோப்பிட்டு நன்கு துவைக்க வேண்டும்.
#மார்பக_வளர்ச்சி
♥ஆண் பெண் இருபாலாருக்குமே மார்பகங்கள் அமைந்திருந்தாலும் பெண்ணின் மார்பகமே தனித் தன்மையுடையதாக உள்ளது. மார்பகத்தின் அளவு ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. மார்பகம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ எப்படி இருந்தாலும் அதன் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது. குழந்தை பிறந்தவுடன் பாலூட்டுவதற்காக மார்பக சுரப்பிகளிலிருந்து பால் சுரக்கும்
via Blogger https://ift.tt/2SS34Rd
0 notes
Text
பெண் குழந்தைகளைப் பாதிக்கும் மாதவிடாய்க் குழப்பம் - தீர்வு என்ன?
மாதவிடாய் என்பது,  பூப்படைந்த பெண்களில் உடலில்  சுழற்சி முறையில் ஏற்படும் ஓர் இயல்பான இயற்கையான உடலியல் மாற்றம். இந்தச் சுழற்சி என்பது, பெண்ணுக்கு பெண் மாறுபடும். குறைந்த பட்சம் 21 நாள், அதிகபட்சம் 35 நாள்களுக்கு ஒருமுறை வருவதை 'நார்மல்' என்று வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
Tumblr media
ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பருவமடைதலிலேயே நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால்,  சீரற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் என பெண்களில் பலர் இளம்வயதிலேயே மனதளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மாதவிடாய் என்பது இயல்பான நிகழ்வு தான் என்று காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் இன்னும் அதுசார்ந்த மூடநம்பிக்கைகள் ஓயவில்லை. மாதவிடாய் காலங்களில் பிள்ளைகளை வீட்டை விட்டு விலக்கி வைப்பது, தனிப்பாய், தனித்தட்டு கொடுத்து தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போன்ற செயல்களை படித்தவர்களே செய்து வருகிறார்கள். குழந்தைகள் மனதில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட தண்டனை என்ற மனோபாவம் உருவாகி விடுகிறது.  
அண்மையில், திருநெல்வேலியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் மாதவிடாய் ஏற்பட்டு சீருடையிலும் இருக்கையிலும் ரத்தக்கறை படிந்த��ள்ளது. பிற மாணவிகள் அதைச் சுட்டிக்காட்ட, பதறிய மாணவி கழிவறைக்குச் செல்ல வகுப்பாசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அந்த ஆசிரியை வகுப்பறையில் ரத்தக்கறை படிந்ததற்காக மற்ற மாணவர்களின் முன் திட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சொல்லி வகுப்பை விட்டு வெளியேற்றியும் இருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
7-ம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு மாதவிடாய் என்பதே புதிய அனுபவம் தான். அதைப்பற்றி போதிய அளவுக்கு புரிதல் இருக்காது. அதன் அறிகுறிகளைக் கூட அந்த மாணவி அறிந்திருக்க மாட்டாள்.  அவள் கவனத்தை மீறி நிகழ்ந்த ஒரு தவறை பெரிதாக்கி சுட்டிக்காட்டியதோடு, பிற மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தி வெளியேற்றும் அளவுக்குத் தான் ஒரு ஆசிரியைக்கு மாதவிடாய் பற்றிய அறிவு இருக்கிறது. அந்த மாணவி மட்டுமல்ல... அவளைப் போல ஆயிரமாயிரம் சிறுமிகள் மாதவிடாயை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதி பெரும் மன உளைச்சல் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அது குறித்துப் பேசுவதும் பிறகு மறந்து விடுவதும் நம் இயல்பாக இருக்கிறது. மாதவிடாய் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சிறுமிகளை விட பெற்றோருக்கு அது குறித்த விழிப்பு உணர்வு இங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.
நாம், நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றிய என்ன மாதிரியான புரிதலைத் தந்திருக்கிறோம்? இதுபோன்ற சூழ்நிலைகளை  எப்படி எதிர்கொள்வது என்று எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்?
"ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளுக்கே புரிதலுக்கான தேவைகள் அதிகம் உள்ளது. குறிப்பாக தத்தம் உடல் ரீதியான புரிதல் அதிகம் தேவைப்படுகிறது. உணவுமுறை மாற்றம், சுற்றுச்சூழல்,  மன அழுத்தம், சமூகச்சூழல் போன்ற  காரணங்களும், மரபியல் மாற்றங்களும் 11 வயதிலேயே பூப்பெய்த வைத்து விடுகின்றன. ஆனால் அதுகுறித்து அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால், கேள்விக்குறிதான்!?
Tumblr media
ஒரு குழந்தை 11 வயதிலும், இன்னொரு குழந்தை 15 வயதிலும் பூப்படையலாம். ஆக, பூப்படைந்த சிறுமிக்கும் பூப்படையப் போகும் சிறுமிக்கும் மாதவிடாய் குறித்து என்னமாதிரியான அறிவு இருக்கிறது என அவரவர் பெற்றோருக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) தெரிந்திருக்க வேண்டும்.
7, 8 வயதுக்குள் பூப்பெய்வதற்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது மிகவும் அவசியம்' என மருத்துவக் குழுவின் பரிந்துரை ஒன்று சொல்கிறது. ஆனால் அறிகுறிகள் என்னென்ன என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரியவில்லை.  பிள்ளைகள் தெரிந்த��� கொள்ளும் முன் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் பற்றிய அறிவுரைகளைப் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கு முன், அதுபற்றி ஏற்கனவே அவர்கள் என்னென்ன  அறிந்திருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் தவறாக அறிந்து வைத்திருக்கக் கூடும். அதை தவறென்றுச் சுட்டிக்காட்டி சரியான தகவலை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உண்டு.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?  மாதவிடாய் பற்றிய மருத்துவரீதியான புரிதலை குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். உதாரணமாக, மாதவிடாய் காலத்தில் ஏன் ரத்தம் வருகிறது? அத்தருணத்தில் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நாப்கின்எப்படி பயன்படுத்துவது?  எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றவேண்டும்? ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் என்ன செய்யலாம்? அந்நேரத்தில் எப்படி நாப்கின் பயன்படுத்தவேண்டும்? மாதவிடாய்க் காலத்தில் தவிர்க்கவேண்டிய/தவிர்க்கக்கூடாத உணவுகள் என்னென்ன?  அந்நாட்களில் வரும் வலியில் இருந்து மீள்வது எப்படி என்றெல்லாம் விளக்க வேண்டும்.
மேலும், இக்கட்டான சில சூழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் சொல்லித்தரவேண்டும். உதாரணமாக, மாதவிடாயின்போது, பொதுவெளியில் வலி ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது, தன்னை அறியாமல் ஆடையில் கறை படிந்து விட்டால் சூழலைப் புரிந்துகொண்டு பதற்றமடையாமல்  சுத்தப்படுத்துவது, எப்போதும் ஒரு நாப்கினை பையில் வைத்திருப்பது போன்ற ஒழுங்குமுறைகள��ப் போதிக்கவேண்டும்." என்கிறார்,  குழந்தைகள் உளவியல் ஆலோசகர் டாக்டர் சங்கீதா சங்கரநாராயணன்.
"பெண்களுக்கு 10 முதல் 11 வயதில் பருவ மாற்றங்கள் நிகழத் துவங்கும். எனவே, 8 வயது தொடங்கி அவர்களுக்கு அதுகுறித்த விஷயங்களை ஷேர் செய்யவேண்டும். சில சிறுமிகள் 15 வயதில் பூப்பெய்துவர். சிலர் 10 வயதிலேயே பூப்பெய்துவிடுவர். இரண்டுமே இயற்கையான விஷயம்தான். இரண்டையுமே விளக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான் (அம்மாவாகவோ, பெண் உறவினராகவோ இருத்தல் கூடுதல் நலம்). இது பெண்கள் வாழ்வில் ஏற்படும் சராசரி விஷயம் என்பதை விளக்கிக்கூறி, 'உன் உடலில் எப்போது ரத்தப்போக்கு தெரிகிறதோ அப்போது பயப்படாமல் என்னிடம் வந்து சொல்' என்று சொல்வது, அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்கு மாறாக,  மாதவிடாய் பற்றி எதுவும் அறியாமல் திடீரென அனைத்தையும் அறிந்துகொள்ளும் குழந்தைகள், பதற்றமடையத் துவங்குவர். இது அவர்களின் வளர்சிதை மாற்றங்களைப் பாதிக்கும்.
மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், அதிக வலி எடுத்தல், சுழற்சி சரியாக இல்லாமை போன்றவற்றை குழந்தைகள் சொல்லாவிட���டாலும், பெற்றோர் தாமாக முன்வந்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்பா/அம்மா - மகளுக்கான பந்தம் எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக உள்ளதோ, அந்த அளவு குழந்தைகள் தங்கள் மாதவிடாய் நேரத்தில் தைரியமாகவும் இயல்பாகவும் செயல்படுவர்..." என்கிறார்,  மகப்பேறு மருத்துவர் டாக்டர் மனுல‌ஷ்மி.
மாதவிடாயின்போது வரும் சிக்கல்களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறி குழந்தைகளை வளர்க்க வேண்டும். அப்போதுதான் அது உடலில் ஏற்படும் ஒரு இயல்பான விஷயம் என்ற கருத்தை அவர்கள் உணர்வர். அவர்களது உடல்நிலையைப் பொறுத்து அவர்களாகவே முடிவெடுத்துக் கொள்ளும் திறனை குழந்தைகள் கையில் ஒப்படைப்பது நல்லது. வலி ஏதுமின்றி அவர்கள் உடல்நிலை நன்றாக இருப்பின், இயல்பாகவே அவர்கள் வளரட்டும். வலி ஏற்படும்போது அதற்கேற்ற மருத்துவமுறையைப் பின்பற்ற வலியுறுத்துங்கள்.
0 notes
lourryspark-blog · 8 years ago
Text
கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ!
பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது 'வாழைப்பூ' . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
Tumblr media
குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.
Tumblr media
`வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற்றுக்கடுப்பு கொல்காசம்-அழியனல்
என்னஏரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை'
- அகத்தியர் குணபாடத்தில் வாழைப்பூவின் பயன்கள் பற்றிப் பாடலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
சரி, வாழைப்பூவின் பயன்கள் பற்றிப் பார்ப்போமா!
இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய் வந்தவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
சிலருக்கு மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை, மருத்துவ உலகம் 'ரத்த மூலம்' என்ற பெயர் வைத்து அழைக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும்.
Tumblr media
வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும்.
அதேபோல், இப்போது உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்னை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
Tumblr media
பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.
அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பிரச்னை உள்ளவர்கள், இதை நல்ல பக்குவத்தோடு ரசம் செய்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் வெளியேறிவிடும். வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும்.
Tumblr media
அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.
சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.
Tumblr media
'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!
0 notes
comn17 · 8 years ago
Text
தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!--
"தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!-- தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் பயன்கள்: 1) புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்ட���ின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும் . 2) தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. 3) மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. 4) மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. 5) தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. 6) தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். 7) தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 8) தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது. 9) முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. 10) இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்ற��் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
0 notes
abishakram5 · 5 years ago
Text
மாதவிலக்கு என்றால் என்ன?
♥#மாதவிலக்கு என்றால் என்ன? எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்? சுகாதாரமாக இருப்பது எவ்வாறு? போன்ற பொதுவான சந்தேகங்களுக்கு விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
♥மாதவிலக்கு, பெண்களின் உடலில் மாதாமாதம் நடைபெறும் ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். பன்னிர���்டு வயது முதல் பருவமடைந்த எல்லாப் பெண்களுக்கும் 49 வயது வரை நிகழக்கூடிய ஒன்று. முதலில் ஒரு பெண்ணின் உடலில் மாதவிலக்கு மற்றும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புகள் எங்கு அமைந்திருக்கின்றன என அறிவோம். 
♥கருப்பையானது பெண்ணின் அடிவயிற்றில் தொப்புளுக்கு சற்று கீழே பேரிக்காய் வடிவில் தசைகளால் ஆன ஒரு அமைப்பு.  இரு இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள தசை நார்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் இரு சினைக்குழாய்கள் மற்றும் சினைப்பைகள் இருக்கும். கருப்பையின் அடிப் பாகமான கருப்பைக் குழாய் ஆனது யோனியுடன் இனைக்கப்பட்டு மாதவிலக்கு மற்றும் கருத்தரிப்பிற்கு ஒரு பாதையாக அமைந்திருக்கிறது.
#மாதவிலக்கு_என்பது_என்ன? 
♥பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 
♥கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.
♥ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. 
#மாதவிலக்கிற்கும் #ஹார்மோன்களுக்கும்_என்ன_தொடர்பு♥ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துக���ன்றன. 
♥ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பையினுள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன. 45 அல்லது 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாக குறைகிறது. இதனால் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது, இதையே  ‘மெனோபாஸ்’ (Menopause) என்கிறோம்.
♥மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய #தற்சுகாதார #வழிமுறைகள்:
மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல.
அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.
♥மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு  முறையாவது பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. 
♥சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். 
மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை எடுத்துச்செல்வது அவசியம்.
♥இளம் பெண்களுக்கு மாதவிலக்கு குறித்து எழும் #பொதுவான #சந்தேகங்கள்:
♥அதிக வலி ஏற்படக் காரணம் என்ன?
மாதவிலக்கின் போது கருப்பையின் வெளிப்புறத்திலுள்ள தசைநார்கள் கருப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளேயுள்ள ரத்த நாளங்களான திசுக்களை கருப்பையின் வாய்ப்பகுதி வழியே வெளியேற்றுவதால் கருப்பையை தாங்கிப் பிடித்திருக்கும் இடுப்பு எலும்புகளில் வலி ஏற்படுகிறது. குழந்தை பெறாத இளம் பெண்களுக்கு  கருப்பையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதால் தசை நார்கள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த நேரிடுகிறது, அதன் விளைவாக இளம் பெண்களுக்கு அடிவயிற்றில் கூடுதல் வலி ஏற்படுகிறது. 
♥வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளலாமா?
பொதுவாகவே வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அதிக வீரியம் கொண்ட ஒரு சில வலி நிவாரண மாத்திரைகளினால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வலியுடன் கூடிய மாதவிலக்கில் இருந்து விடுப்பெற சில எளிய உடற்பயிற்��ிகள் மற்றும் வீட்டு வைத்தியங்களே போதுமானது, தேவையில்லாமல் மாத்திரைகளை எடுப்பது கருப்பையில் நீர்க்கட்டிகளை உருவாக்க நேரிடும். 
♥ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்து ஒரு டம்ளர் மோரில் மோரில் கலந்து குடித்தால் வலி குறையும்.
♥மாதவிலக்கின் போது வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா?
♥பொதுவாக நமது கை, கால்களில் அடிபட்டு ரத்தம் வந்தால் அதில் காற்று படும்போது ஒருவிதமான வாடை வீசுவது இயல்பு, அதே போன்று மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தில் இருந்து வாடை வருவதும் இயல்பு. வாடை வருவதால் பலர் இதைக் கெட்ட ரத்தம் என்கிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது உடலில் எந்தப் பகுதியிலும் கெட்ட ரத்தம் என்று ஒன்று இல்லை என்பதே உண்மை.
♥மாதவிலக்கு நாட்களில் சுபகாரியங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்லக்கூடாது என்பது சரியா?
♥கண்மூடித்தனமான எந்த ஒரு சடங்கும் தவறானதே. பெண்மையின் ஒரு அடையாளமே மாதவிலக்கு, எனவே அதை எண்ணி வெட்கப்படவோ அல்லது அதை இழிவாகக் கருதுவதோ மூடத்தனம் ஆகும். அறிவியல் உண்மைகளை மறந்துவிட்டு பெண்கள் மீது கட்டுப்பாடுகளை திணிப்பதும் அவர்களைத் தனிமைப்படுத்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும், தேவைகளையும் பறிப்பதும் எந்த வகையிலும் நியாயம் இல்லை. 
♥மாதவிலக்கின்போது அசைவம் சாப்பிட்டால் உதிரப்போக்கில் வாடை வீசுமா?
♥நாம் உண்ணும் உணவு தொண்டை வழியே நுழைந்து உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைந்து செரிமானம் அடைந்து விடுகிறது, அதிலிருக்கும் சத்துக்கள் மட்டுமே நமது ரத்தத்தில் கலக்கின்றன. இரப்பைக்கும், கருப்பைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதே அறிவியல் பூர்வமான உண்மை. 
♥ரத்தசோகைக்கும் மாதவிலக்கிற்கும் தொடர்பு உண்டா?
♥மாதவிலக்குப் பிரச்னை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். உதிரப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது. எனவே ரத்த சோகையை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நமது உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதாவது முருங்கைக்கீரை, அறைக்கீரை, பேரிசை பழம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மாதுளை பழம், கர்ப்பப்பை வலுப்பெற அத்திப் பழம் போன்றவற்றைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்காமல் உண்ண வேண்டும்
via Blogger https://ift.tt/3dDbMvi
0 notes