cinekadhir-blog
cinekadhir-blog
Cine Kadhir
7 posts
Latest Tamil Cinema News in Tamil
Don't wanna be here? Send us removal request.
cinekadhir-blog · 5 years ago
Text
Latest CineKadhir Tamil Cinema News
Cine Kadhir Tamil, Telugu, Malayalam, Kannada, Bollywood and Hollywood film industry. Our contents include the latest news, features, events, trailers, photos and videos.
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி இந்த வருடம் மட்டும் துறமுகம், கெளரி, படவேட்டு ஆகிய திரைப் படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், நிவின் பாலி திரையுலகில் கால் பதித்த பத்தாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் ‘பிஸ்மி ஸ்பெஷல்’ மற்றும் ‘கேங்ஃஸ்டர் ஆஃப் முண்டன்மாலா’ ஆகிய திரைப்படங்கள் தனது நடிப்பில் வெளிவர இருப்பதாக டிவிட்டரில் கடந்த 16ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே நிவின் பாலியின் நடிப்பில் உருவாகும் ’படவேட்டு’ திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனத் தகவல்கள் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் நிவின் பாலியுடன் மஞ்சு வாரியார் மற்றும் அதிதி பாலன் இணைந்து நடிக்கிறார்கள். லிஜு கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகர் சன்னி வெய்னும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
முன்னரே அறிவித்தது போல நிவின் பாலி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ”மோதல்… போராட்டம்… பிழைப்பு… மனிதர்கள் இருக்கும் வரை சண்டை தொடரும்…” என்று பதிவிட்டு ’படவேட்டு’ திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தை லிஜு கிருஷ்ணா இயக்குவதாகவும் சன்னி வெய்ன் தயாரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
Source: https://www.cinekadhir.com/otherlanguage/nivin-pauly-padavettu-first-look-poster-out-now/
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
https://www.cinekadhir.com/news/amithap-bachan-thanked-for-prayers/சமீபத்தில் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
திரைத்துறை பிரபலங்களும், ரசி��ர்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் அமிதாப் குடும்பம் இந்த தொற்றிலிருந்து மீண்டு வரப் பிரார்த்தனை செய்வதாகவும், தைரியத்துடன் இருக்குமாறும் பதிவிட்டிருந்தனர்.
அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், 8 வயது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் ஆய்வு செய்ததில் லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் இருவரும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே ஐஸ்வர்யா ராயும் அவரது மகளும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகாத நிலையில் அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக் பச்சனும் உள்ளனர். நால்வரும் இருக்கும் இந்த பழையப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அமிதாப், ”உங்கள் அனைவரின் அன்பையும் நாங்கள் காண்கிறோம்… உங்கள் பிரார்த்தனைகளை நாங்கள் கேட்கிறோம்… நாங்கள் எங்கள் கைகளைக் கூப்பி நன்றி தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Source: https://www.cinekadhir.com/news/amithap-bachan-thanked-for-prayers/
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
இன்று ஜூலை 1ஆம் தேதியை உலகம் முழுவதும் உலக மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1991ஆம் ஆண்டிலிருந்து ஜூலை 1 தேசிய உலக மருத்துவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டு மருத்துவர்களை கெளரவிக்கும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவிவரும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் இரவு பகல் பாராது தங்கள் குடும்பம், குழந்தைகளையும் பிரிந்து மக்களின் உயிரைக் காக்க கொரோனா தடுப்பு பணியில் தீவிரப் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பலரும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து திரையுலகில் உள்ள பலரும் தேசிய உலக மருத்துவர்கள் தின வாழ்த்து பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்துப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘பல கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற சுயநலமின்றி தங்கள் வாழ்வைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு மருத்துவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இவரைப் போலவே  நடிகர் கமல்ஹாசன், நிவின் பாலி, பார்த்திபன், கதிர், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
Source: https://www.cinekadhir.com/news/doctors-day-celebrity-wishes/
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு,இந்தி,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்த இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், சச்சின் போன்ற படங்களின் மூலம் தமிழ்த�� திரை உலகில் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். இவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒரு திரைப்பட நடிகர்.
இன்று மருத்துவர்கள் தினத்தைப் பற்றிப் பல திரைக் கலைஞர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் வேளையில், ஜெனிலியாவும் அவரது கணவரும் உடல் உறுப்பு தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.
“இதனைப் பற்றி நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தோம் ஆனால் செய்யமுடியவில்லை. மருத்துவர்கள் தினமான இன்று எங்கள் உறுப்புகளை தானம் அளிப்போம் என்று உறுதி ஏற்கிறோம். மேலும் இதைச் செய்வதற்கு எங்களை ஊக்குவித்த மருத்துவர் நாசர் ஷெரீர் அவர்களுக்கும், ’தி பிடரேஷன் ஆஃப் ஆப்ஸ்டடிரிக் அண்ட் கைனகாலஜிகல் சொசைட்டி ஆஃப் இண்டியா’ நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு உயிர் எனவே அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என்று தனது டிவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
Source: https://www.cinekadhir.com/news/jeniliya-and-rithesh-donate-organs/
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
https://www.cinekadhir.com/otherlanguage/tollywood/deepika-padukone-join-with-prabas-next-film/பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தகவல்கள் வெளியான நிலையில் அதைப் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரபாஸின் 20வது திரைப்படமான ’ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான டிவீட்களைப் பெற்று சாதனையும் படைத்தது. இந்தப் படத்தில் பிராஸூடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ்,மலையாளம் என நான்கு மொழிகளில் அடுத்த வருடம் வெளியாகிறது.
இதற்கிடையே பிரபாஸின் 21வது திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை, தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனை வைஜெயந்தி மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ”வாக்குறுதியளித்தபடி, இதோ – எங்கள் அடுத்த பெரிய அறிவிப்பு! சூப்பர்ஸ்டாரை வரவேற்கிறது” என்று பதிவிட்டு, ”தீபிகா படுகோன், உங்களை வரவேற்கிறோம்! இந்த நம்பமுடியாத சாகசத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருக்கிறது.
மேலும் நாக் அஸ்வின், பிரபாஸ், தீபிகா படுகோன் இணையும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய சிறப்புக் காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
நாக் அஸ்வின், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் 2022ல் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
To know latest tamil cinema updates visit this website - https://www.cinekadhir.com/otherlanguage/tollywood/deepika-padukone-join-with-prabas-next-film/
0 notes
cinekadhir-blog · 5 years ago
Link
தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான இந்தி நடிகைகளுள் ஒருவர் கரிஷ்மா கபூர். இவர் ப��ண்களைப் மையப்படுத்திப் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
1991 இல் பிரேம் கொய்டி திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து போலிஸ் ஆஃபீசர், ஜாக்ருடி, சப்னே சாஜன் கே எனத் தொடங்கிப் பல பல படங்களில் நடித்துப் பிரபலமானவர். ’ராஜா இந்துஸ்தானி’  திரைப்படம் இவரது திரைப்பயணத்திற்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
சில இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணி புரிந்துள்ளார். தற்போது ஜீ 5இல் ஒளிபரப்பாகும் மெண்டல் குட் என்ற வெப் தொடரிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் தான் உள்ளார் கரிஷ்மா கபூர். தொடர்ந்து ஊரடங்கிற்கு முன் எடுத்த புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் சிறுத்தையுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். தன் ஜீப்பில் ஏறிய சிறுத்தையை கரிஷ்மா துப்பாக்கியோடு பார்ப்பது போல் அந்த புகைப்படத்தில் உள்ளார். மேலும் அதில் அவர் ”இது கணினியில் உருவாக்கிய வி எஃப் எக்ஸ் அல்ல, உண்மையிலேயே சிறுத்தை உடன் நான் உள்ள புகைப்படம் அது. அந்த புகைப்படம் எடுக்கும் போது மிகுந்த பயத்திலிருந்தேன். அது என்னத் திரைப்படம் என்று யூகிக்க முடிகிறதா?“  என்று கேட்டுள்ளார் கரிஷ்மா.
To know more 👉🔗- https://www.cinekadhir.com/news/karishma-kapoor-with-real-tiger/
1 note · View note