Social media advocate. Hardcore bacon enthusiast. Travel trailblazer. Music scholar. Freelance introvert. Alcohol geek.
Don't wanna be here? Send us removal request.
Text
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வலியுறுத்தி டி.விகளை உடைத்துப் போராட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணியினர், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, டி.வி களை ரோட்டில் போட்டு உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட மாணவரணிச் செயலாளர் கவியரசன், ''ஒருவருடைய அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் நோக்கில், பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதனால், தமிழர���களின் கலாசாரம், பண்பாடு பாழ்பட்டுப்போகிறது.
தமிழ் நாட்டில் கூடங்குளம் அணுஉலைப் பிரச்னை, கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. பிரச்னை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, நீட் தேர்வில் தமிழக மருத்துவ மாணவ, மாணவியர் பாதிப்பு, தமிழக விவசாயிகள் பிரச்னை எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளைப் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாத விதத்தில் திட்டமிட்டே திசை திருப்புவதற்காக, இந்த விஜய் டி.வி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள், ஆபாசமான உடைகள் அணிந்து வருவதால், குடும்பப் பெண்கள் வழி தவறிப் போக வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தோடு டி.வி., பார்க்க முடியவில்லை... அருவருப்பாக இருக்கிறது. நாம் விருப்பப்பட்டால் பார்க்கலாம். இல்லையென்றால் பார்க்காமல் போகலாம். குடும்பத்திற்குள் அனைவரும் அமர்ந்து பார்க்கும் டி.வி நிகழ்ச்சிகளுக்குக் கட்டாயம் தணிக்கைக் குழு அமைக்க வேண்டும். தணிக்கைக் குழு இல்லாததால்தான், இப்படிப்பட்ட ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" என்றார்.
0 notes
Text
சசிகலா அணி விநியோகித்த ரூ.732 கோடி இவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்காது! புதிர் கிளப்பும் அன்புமணி
சசிகலா அணி விநியோகித்த ரூ.732 கோடி இவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்காது! புதிர் கிளப்பும் அன்புமணி
கையூட்டு தருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எ���ப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சசிகலா - எடப்பாடி பழனிசாமி கூட்டணி செய்த முறைகேடுகள் மற்றும் தகிடுதத்தங்கள் குறித்து பாமக முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார். சசிகலா தலைமையிலான அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கும் பதவிச்சண்டை உச்சக்கட்டத்தில் இருந்தபோது சசிகலா அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த பேரங்கள் தொடர்பாக இரு அணிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசி, அவர்கள் தெரிவித்தக் கருத்துகளை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து ஆங்கிலத் தொலைக்காட்சியும், தமிழ்த் தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.
பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனிடம் நடத்தப்பட்ட உரையாடலில்,‘‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர். அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்துக்கு தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே பன்னீர்செல்வம் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். பன்னீர் செல்வம் அணியில் சில உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். வேறு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்தால் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணியில்அமைச்சர் பதவி வாங்கித் தருவேன்’’ என்று கூறியிருக்கிறார். சசிகலா அணியைச் சேர்ந்த சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜிடம் நடத்தப்பட்ட உரையாடலில், ‘‘சசிகலா அணி சார்பில் பணம் தரப்பட்டது உண்மை தான். அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சில உதிரிக் கட்சி உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாக தரப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.
இரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்த தகவல்கள் சிதம்பர ரகசியங்கள் அல்ல. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால், இந்த உண்மைகள் இப்போது ஆதாரங்களுடன் வெளிவந்திருப்பது தான் குறிப்பிடத்தக்கது ஆகும். அதிமுகவின் இரு அணியினரும் தங்களை உத்தமர்களாக காட்டிக் கொண்டாலும் அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க எப்படியெல்லாம் பேரங்களை நடத்தினார்கள் என்பது தமிழக மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல வாக்காளர்களுக்கு கையூட்டு, வென்று ஆட்சியை ��ைப்பற்றிய பின்னர் அதை தக்கவைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு, ஆட்சியமைக்கத் தடை ஏற்படுத்தாமலிருக்க உரியவர்களுக்கு கையூட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மூலம் கையூட்டு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு கையூட்டு என ஆளும் அதிமுக பயணித்த பாதையைப் பார்த்தாலே அந்தக் கட்சியின் ஊழல் சாம்ராஜ்யத்தை உணர முடியும்.
தமிழக அரசியலை திமுகவும், அதிமுகவும் எந்த அளவுக்கு சாக்கடை ஆக்கியிருக்கின்றன என்பதற்கு இது சிறந்த உதாரணம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு தருவது உள்ளிட்ட செலவுகளுக்காக அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6,000 கோடியும் செலவழித்திருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைப்பவர்களால் எப்படி நல்லாட்சி வழங்க முடியும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் சீரழிந்ததற்கு இரு கட்சிகளும் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு அடித்தக் கொள்ளைகள் தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளைத் தடுக்க மத்திய, மாநில அரசு அமைப்புகளும் தவறி விட்டன. ஆட்சி மாற்றம் நடைபெற்ற நேரத்தில் இரு அணிகளின் உறுப்பினர்களுக்கு பணப் பட்டுவாடாவும், தங்கமும் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கப்பட்டன என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த உண்மை. ஒரு உறுப்பினருக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியில் இருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.732 கோடி விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றுக்கும், தமிழகக் காவல்துறைக்கும் தெரியாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் இவற்றையெல்லாம் எவரும் விநியோகித்திருக்க முடியாது.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ரூ.4000 வீதம் கையூட்டு வழங்கப்பட்டபோது, அந்தப் பணம் எங்கிருந்து விநியோகிக்கப்பட்டிருக்கும் என்பதை சரியாக யூகித்து சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தி ஆதாரங்களைப் பறிமுதல் செய்தது. ரூ.4000 கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்த வருமானவரித்துறைக்கும் மற்ற அமைப்புகளுக்கும் ரூ.6 கோடி வீதம் கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதா அல்லது இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனரா என்பது மர்மமாக உள்ளது. சசிகலா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பன்னீர்செல்வம் அணி உறுப்பினர்களுக்கும் கையூட்டு கொடுக்கப்பட்டதற்கு இதைவிட வலிமையான ஆதாரம் தேவையில்லை.
ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும் நீடிக்கக் கூடாது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 171(e) பிரிவின்படி கையூட்டு ��ருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
0 notes
Text
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத் தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அரசின் இந்த அறிவிப்புக்கு கேரளா, பீகார், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துவிட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இறைச்சி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இறைச்சி தடைஉத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இறைச்சி தடை விவகாரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!
0 notes
Text
செல்வாக்கை சரிக்கட்டுமா சசிகலா அணி...? தினகரன் ஜாமீன் பின்னணி!
ஆளுங்கட்சியாக இருந்தாலும் இருவேறு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றாக இணைக்கும் பணி, வேகமாக நடப்பது போல் வெளியில் தெரிந்தாலும் உள்ள���க்குள் என்னவோ வேறு ��தை ஓடுகிறது. அவரவர் பலத்தைக் காண்பித்து கட்சி, ஆட்சி, இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்தான் இரண்டு அணிகளுக்குள் பந்தயம் நடக்கிறது... பந்தயத்தில் முந்திக் கொள்ளும் பாய்ச்சலில் சசிகலா அணியே முதலில் இருப்பதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.கவில் ஏற்பட்ட குளறுபடிகள் ஊரறிந்த ஒன்றே. அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா என்று இருந்து வந்த நிலை மாறி சசிகலா, நடராஜன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் என பலரது பெயர்களே ஊடகங்களை கடந்த சில மாதங்களாக ஆக்கிரமித்து வருகின்றன. இதனிடையே இரு அணிகளும் பிரிந்ததிலும், இப்போது இணைவதிலும் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.டி.வி தினகரனுக்கு தற்போது கிடைத்திருக்கும் ஜாமீன், விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதனால் சசிகலா அணி வலுப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் முதல்வர் பதவியில் சசிகலா அமர முயற்சி செய்தபோது அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். டி.டி.வி தினகரனும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் , பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வியும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அ.தி.மு.கவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக குரல்கள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினகரனுக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன், சசிகலா அணியின் கை மீண்டும் ஓங்குகிறதோ என்ற கேள்வியை எழச் செய்துள்ளது.
டி.டி.வி தினகரன் சொன்னால்தான் அ.தி.மு.க எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நிலை வலுவாக உள்ளது. அதனை மிகவும் தாமதமாக உணர்ந்த தினகரன் தரப்பு 'நமது எம்.ஜி.ஆர்.' அஸ்திரத்தை எடுத்துள்ளது. நமது எம்ஜிஆர் நாளிதழில் எழுதப்படும் அரசியல் விமர்சனங்கள் பா.ஜ.கவுக்கு எதிராகப் போகிற விஷயம், தமிழக பா.ஜ.க மூலமாக டெல்லி தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது என்றும்... அதன் விளைவாக, டி.டி.வி தினகரன் அணியை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக, கமலாலய வட்டாரம் தெரிவிக்கிறது. பா.ஜ.கவுடன் ��சிகலா அ.தி.மு.கவின் உறவு எப்படி உள்ளது என்பது இப்போதைக்கு பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆனால் பா.ஜ.கவை எதிர்க்க எப்படி நமது எம்.ஜி.ஆர் இதழுக்குத் துணிச்சல் வந்தது என்பதற்கு ஜனாதிபதி தேர்தலைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும் இரட்டை இலை விவகாரத்தில் இரு அணிகளும் பிரமாணப் பத்திரங்களை லாரிகளில் கொண்டு வந்து தாக்கல் செய்யும் கூத்துக்களும் நடந்து வருகின்றன. சசிகலா அணியின் சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், பிரமாணப் பத்திரங்களை இரண்டு லாரிகளில் கொண்டுவந்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தார். பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னர் மைத்ரேயனும், இப்போது மனோஜ் பாண்டியனும் ஆவணங்களை மாறி மாறி தாக்கல் செய்துவருகின்றனர்.
இவர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை அள்ளிக் கொண்டுவந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர். இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றுவதில், சசிகலா - பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தப் போட்டி, அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து, தற்போது பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்வதில் வந்து நிற்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், சசிகலா அணிக்குத் தாவத் தயாராகிவிட்டார் என்ற தகவலும் அலையடிக்கிறது. கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து தப்பித்து வந்தேன் என்று உருக்கமாகப் பேட்டியளித்து பரபரப்பை கிளப்பிய சரவணன், அணி மாற முடிவெடுத்துள்ளதாக பரவும் தகவல், சசிகலா அணிக்குத் தெம்பைக் கொடுத்துள்ளது. அதற்கு அச்சாரம் போடும் வகையில் ஜூன் -1 ம்தேதி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த சரவணன், செல்லப்பாவுடன் முன்பை விட நீண்ட நேரம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் மனு ஒன்றையும் அளித்தார். விரைவில் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்க, ராஜன் செல்லப்பா போகும்போது கூடவே எஸ்.எஸ். சரவணனும் போவார் என்று சொல்லப்படுகிறது. இப்படியான தகவல் பரவுவதை தெரிந்து கொண்ட எஸ்.எஸ்.சரவணன், 'நான் எப்பவுமே ஓ.பி.எஸ் அணிதாங்கோ' என அறிக்கை விட்டிருக்கிறார். ஓ.பி.எஸ். அணியில் இருக்கிற எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக இந்தப்பக்கம் வந்து விடுவார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள், அதில் ஒருவர் கட்சி தாவி வந்து மந்திரி சபையை அலங்கரித்தவராம்.
ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்காக சசிகலா பேனரை எடப்பாடி அன்-கோ அகற்றியிருந்தாலும் அ.தி.மு.க இன்னும் மன்னார்குடி கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
0 notes
Text
தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5
இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும்.
1. ஆஸ்திரேலியா
2. வங்கதேசம்
3. பாகிஸ்தான்
4. நியூசிலாந்து
சாம்பியன்ஸ் டிராபி கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பையிலும் சரி, டி20 உலகக் கோப்பையிலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம். 1996முதல் 2015 வரை நடந்த ஆறு உலகக் கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஒரு முறை சாம்பியனும் கூட. ஆறு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை வின்னர். சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி இதுவரை சாதித்தது என்னென்ன.. சறுக்கியது எங்கே... இம்முறை சாம்பியன் வாய்ப்பு எப்படி?
1998ல் நடந்த முதல் மினி உலகக்கோப்பையில் நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்துடன் மோதியது. முரளிதரன் சுழலில் 188 ரன்களுக்கு சுருண்டது. சேஸிங் ஈஸி என நினைத்தார் கேப்டன் ரணதுங்கா. ஆனால் நியூசிலாந்து சைமன் டவுல் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். டாப் ஆர்டரை அடக்கினால் பின் வரிசை வீரர்கள் திமிர முடியாது எனத் திட்டம் போட்டார். அதைச் சரியாக செயல்படுத்தவும் செய்தார். விளைவு... ஐந்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் காலி. இலங்கை முடங்கிவிட��ம் என்றே மேட்ச் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா பொறுப்புடன் ஆடி 90 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
காலிறுதியில் தென் ஆப்ரிக்காவைச் சந்தித்தது இலங்கை. தென் ஆப்ரிக்கா முக்கியமான போட்டிகளில் ஆடுகிறதென்றால் இயற்கை அன்னை குஷியாகிவிடுவது அப்போதே வாடிக்கை. அன்றும் அப்படி மழை பெய்தது. 50 ஓவர் போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. காலிஸ் எடுத்த சதத்தால் சேஸிங்கில் 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓட ரெடியாக இருந்தது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 224 ரன்கள் எடுக்க வேண்டும் என்றனர் நடுவர்கள். இலங்கை சோர்ந்தது. அது பேட்டிங்கிலும் அப்படியே எதிரொலித்தது. ஹன்ஸ் குரோனியேவுக்குச் சிக்கல் தராமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி ஓடினார்கள் இலங்கை பேட்ஸ்மேன்கள். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 132 ரன்கள் எடுத்து தொடரிலிருந்து வெளியேறியது ரணதுங்கா அணி.
இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்யாவில் நடந்தது. இம்முறை தகுதிச் சுற்றி ஆடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இலங்கைக்கு. தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. குணவர்தனே மற்றும் ஜெயவர்த்தனே அதிரடியால் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சயீத் அன்வர் சதமடிக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை அணி.
2002 ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. முதல் போட்டியிலேயே இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி தந்தது இலங்கை அணி. சயீத் அன்வரின் அரை சத உதவியோடு 200 ரன்கள் அடித்தது பாக். ஜெயசூர்யாவின் அதிரடி சதத்தில் 37வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. நெதர்லாந்தை 206 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முரளி சுழல், அட்டப்பட்டு மற்றும் சங்கக்காரா இணையின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
2002, செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. முதலில் பேட் பிடித்தது. ஜெயசூர்யா களத்தில் வாணவேடிக்கை காட்டியபோது 275 நிச்சயம் 350 லட்சியம் என பெவிலியனில் இருந்த அர்னால்டும், ஜெயவர்த்தனேவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கங்குலி சுழல் மன்னன் ஹர்பஜனை வைத்து கதையை முடித்தார். இதனால் இந்தியாவுக்கு இலக்கு 245 என்றானது. நிச்சயம் இம்முறை இந்தியா வெற்றி பெறும் என பலரும் நம்பியிருந்தார்கள். முதல் ஓவரை வாஸ் வீசினார். மெய்டன். மோங்கியாவுக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த சேவாக் இப்போது பேட்டிங் பிடிக்க வந்தார். சந்தித்த ஐந்து பந்துகளில் மூன்றை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். இலங்கை ரசிகர்கள் பதறினர். திடுமென மழை வந்தது. விடவேயில்லை கொட்டித் தீர்த்தது. மேட்ச் ஆடமுடியவில்லை. மறுநாள் மீண்டும் போட்டி என அறிவித்தார்கள் நடுவர்கள்.
செப்டம்பர் 30 அன்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொண்டது. மீண்டும் முதலில் பேட் பிடித்தது இலங்கை. கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், டெண்டுல்கர் என சுழல் வீரர்களை வரிசையாக அனுப்பினார் கங்குலி. தட்டுத்தடுமாறினாலும் ஜெயவர்தனேவின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 222 என்ற எண்ணை அடைந்தது இலங்கை. மெதுவாக இலக்கை நோக்கி நகரலாம் என முடிவு செய்திருந்தார் கங்குலி. விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என உறுதியாகயிருந்தார். ஆனால் வாஸ் பந்தில் டக் அவுட் ஆனார் மோங்கியா. சேவாக் மெதுவாக ஆட வேண்டும் என நினைத்தாலும் அவரது பேட் பந்துகளை விரட்டியடித்தே பழக்கப்பட்டதால் 22 பந்தில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கால் சதத்தை எடுத்தார். மறுமுனையில் 22 பந்துகளைச் சந்தித்து ஏழு ரன்கள் எடுத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மீண்டும் மழை. போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர் நடுவர்கள். கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் கோப்பையை வென்றது இலங்கை.
2004 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் டக் வொர்த் லூயிஸ் முறையில் தோற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
2006 சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச் சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்தது இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகளைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஆடுவதற்கு தகுதி பெற்றது. இரண்டு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும் இடம்பிடித்தது. நியூசிலாந்தை மட்டும்தான் லீக் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆகவே இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.
2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தென் ஆப்பிரிக்காவை மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வென்றது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை இறுதியில் நுழைய முடியாத சோகத்துடன் வெளியேறியது இலங்கை.
2013 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிருந்த பிரிவில் இலங்கையும் இடம்பெற்றது. கடினமான பிரிவில் இடம்பெற்றாலும் அருமையாக ஆடியது. நியூசிலாந்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் இங்கிலாந்தையும், ஆஸியையும் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. 2011 உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் என்றார் சங்கக்காரா. ஆனால் தோனிய���ன் வியூகங்களை சமாளிக்கமுடியாமல் சொந்த நாட்டுக்கே விமானம் ஏறியது இலங்கை அணி.
இப்போது ?
2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13ல் மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது.
இலங்கை அணியின் சமீப கால சாதனை எனச் சொல்ல வேண்டுமெனில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததைத்தான் குறிப்பிட முடியும். சங்கக்காரா, ஜெயவர்த்தனே என இரண்டு சீனியர்கள் வெளியேறியதில் இலங்கை அணி ஆட்டம் கண்டிருக்கிறது. சரியான கேப்டன், நல்ல அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இலங்கை அணி ஆடும் பல போட்டிகள் கத்துக்குட்டிகளின் ஆட்டத்தைப் போலவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது தனிநபர் விளையாட்டு அல்ல. அது ஒரு குழு விளையாட்டு. தனிநபரைச் சார்ந்திருந்தால் ஒரு அணி எந்த அளவுக்குச் சரிவை சந்திக்கும் என்பதற்கு இலங்கை நல்ல உதாரணம்.
சாம்பியன்ஸ் டிராபியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில்தான் இலங்கை விளையாடும். தென் ஆப்ரிக்கா, இந்தியா என இரண்டு வலுவான அணிகளைத் தாண்டி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்தில் தற்போது பேட்டிங்குக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதில் மலிங்கா, குலசேகரா எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் மாத்யூஸ் எப்படி ஆடப்போகிறார் என்பது முக்கியமான கேள்வி. இலங்கை அணிக்கு மாத்யூஸ் மிகச்சிறந்த கேப்டன் எனச் சொல்ல முடியாது. அவரது முடிவுகள் மெச்சத்தக்கதாக இல்லை.
இலங்கை அணியில் இம்முறை ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அசேலா குணரத்னே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக நிரோஷன் பந்துகளைப் பவுண்டருக்கும் சிக்ஸருக்கும் விளாசி வருகிறார். ஆனால், இவரால் பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியவில்லை என்பது மைனஸ். உபுல் தரங்கா சீனியர் பிளேயர்.
அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பினால் இலங்கை கவுரமான ஸ்கோர் குவிக்க முடியும். இவர்களைத் தவிர தினேஷ் சந்திமால் குறிப்பிடத் தக்க பேட்ஸ்மேன். ஆனால், நிலையற்ற ஆட்டம் என்பது இவரது மைனஸ். திசேரா பெரேரா, ஆஞ்சலோ மாத்யூஸ், அசேலா குணரத்னே என மூன்று பேரும் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்தால் அரையிறுதி வரையாவது இலங்கை வரும் என நம்பலாம்.
பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2019 உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷய��்களை எடுத்துச் செல்ல முடியும். கப்புகெதராவை எந்த அடிப்படையில் அணியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இப்போதுதான் அணி சற்றே பலம் பெற்றிருக்கிறது. சீனியர்களும் ஜுனியர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள்.
youtube
0 notes