Text
http://www.tamilhindu.com/2018/08/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88/
0 notes
Text
http://www.tamilhindu.com/2018/08/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88/
0 notes
Text
*🔯பட்டினத்தார் -- பிழைபொறுத்தல் பதிகம்..*
*🔯நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.*
மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாயால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.
சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன.
நமது கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழையை அந்த தெய்வத் தால் மட்டுமே மன்னிக்க முடியும்.
அப்படிபட்ட பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் பாடிக்காட்டுகிறார் பட்டினத்தார்.
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.."
என்பது அந்த அற்புதமான பாடல். இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பட்டினத்தா ரால் பாடப்பெற்றது.
🌿கல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.
🌿கருதாப்பிழை: இறைவனை பற்றிய எண்ண மே இல்லாமல் வாழ்வதும் பிழையே.
🌿கசிந்துஉருகி நில்லாப்பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே
🌿நினையாப்பிழை: இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட���கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.
🌿பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை: முன்பெ ல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு ��ேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.
🌿துதியாப்பிழை: தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?
🌿தொழாப்பிழை: தெய்வம் நமக்குத் தந்தவை அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்?
தினமும் நீங்கள் உறங்க போகும்போது இந்த பிழைபொறுத்தல் பதிகத்தை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
இதனால் உங்களது செல்வங்கள் பெருகும்,
துன்பங்கள் நீங்கும்...
ஓம் நமசிவாய🙏
0 notes
Text
0 notes
Text
0 notes
Text
0 notes
Text
தாயே!! தமிழே!! உயிரே!! உனைப் போற்றி வணங்குகிறேன்!!
ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய தமிழ்ச்சித்தர்கள் வகுத்த தமிழ் தனித்தே சாதரண ஒரு மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற அறிவியற் களஞ்சியம். தோண்டத்தோண்ட வற்றா அறிவருவி. தமிழில் இல்லாதது ஏதுமில்லை.
தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
https://www.facebook.com/groups/305917699863621
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க:
"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவர், 150 வருடங்களுக்கு முன் வ��ழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல் - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்
https://www.facebook.com/groups/305917699863621
தமிழ் எண்கள்
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பது��ம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -
10000000000000000000 = பரார்த்தம் —
100000000000000000000 = பூரியம் -
1000000000000000000000 = முக்கோடி -
10000000000000000000000 = மகாஉகம்
இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்��ுனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
. . ஓங்காரக்குடில் Ongarakudil
<3 Aum Muruga ஓம் மு௫கா <3
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.
https://www.facebook.com/groups/305917699863621
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
0 notes
Text
*Pineal Gland பற்றி அறிய வேண்டிய உண்மைகள்.*
******************************
மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை ஏன் இன்று மனிதனால் அடைய முடியவில்லை? என்றாவது #யோசித்து_உள்ளீர்களா.?அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி பொட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தனின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் . உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்றவற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துவங்கும்.உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது.ஆங்கிலத்தில் இதை "#Soul_Seed "என்றுஅழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை .
இந்த pineal gland உறுப்பின் முலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப்பட்டவையே .#சித்தர்கள்_உணவு_உண்ணாமல்_பருகாமல்உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி .. இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் தூங்கும் பொழுது நம் உச்சந்தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் .. இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம்.
நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் . நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம்.. இந்த பாலம் சிதைக்க பட்டால்? இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ) . இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி.
#என்ன_ஆயிற்று_இன்றைய_மனிதனின்Pineal Gland? உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் .. உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும்..பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்துகின்ற பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில் கலக்க படுகிறது .
https://www.facebook.com/groups/305917699863621
DMT - Dimethyltryptamineஇது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் .. அதுவும் அமெரிக்க நாட்டில்Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால்பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும்உள்ளது முக்கியமாக தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT .~~~~??????~~~~~ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதிகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரட்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும் மனித இனத்���ுக்கு appendix சதை போல தேவை அற்றபொருளாகி விடும் .இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடும் தவம் இந்த வேதி பொருளை தான் மூளையில் உற்பத்தி செய்கிறது .இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .
#இந்த_அரிய_உறுப்பை_கொண்ட_
#கடைசி_தலைமுறை நாமாக கூட இருக்கலாம். மீடியாவில் காட்டப்படும் பல எண்ணச் சிதறல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து,இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடையலாம்.
சித்தர்கள்...ஞானிகள்...
நமக்கு முன்னோடிகளே.
https://www.facebook.com/groups/305917699863621
சித்தர் அறிவியல்
0 notes
Text
0 notes
Text
சிவபூஜை :
ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு அண்டசம், சுவேதசம், உத்பிச்சம், சராயுசம் என நால்வகைப்படும். இவைகளின் விரிவு என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமாகும். இவ்வாறுள்ள யோனிகளுள் மற்றை யோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயசித்தம் முதலியவற்றாலும் நீக்கி, மனிதப்பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாகும். இந்த அருமையாகிய மனிதப்பிறப்பைத் தந்தது பசுபதியாகிய பரமேசுவரனை மனசினாலே நினைத்தற்கும் வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும் கால்களினாலே வலம்வருதற்கும் தலையினாலே வணங்குதற்கும் செவிகளினாலே அவரது புகழைக் கேட்பதற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்திலுள்ள பிரமா, விட்டுணு முதலிய தேவர்களும் இப்பூமியிலே வந்து சிவபெருமானை அருச்சிப்பார்கள். ஆதலால் கிடைத்தற்கரிய இச்சரீரம் உள்ளபோதே சிவபூசை பண்ணி பரமபுருஷார்த்தத்தை அடைதல் வேண்டும்.
"இப்படி எவன் பக்தியினோடு சிவனைப் பூசிக்கிறானோ அவனுக்கு ஆதித்தியோதயத்தினால் இருள் நீங்குதல் போல பாபம் உண்டாவதில்லை; அவனுக்கு உற்��ாதங்களும் கிரகபீடைகளும் அழிகின்றன; எல்லா வியாதிகளும் நீங்கப்பெற்றவனாகின்றான்; சிவசாயுச்சியத்தை அடைகிறான்" என்று சிவபூசையின் பயன் சொல்லப்பட்டிருக்கின்றது.
"வண்டுளருந் தண்டுழாய் மாயோ னிறுமாப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்"(திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்] )
வண்டு உளரும் - வண்டுகள் கிண்டுகின்ற, தண்துழாய்
மாயோன் இறுமாப்பும் - குளிர்ந்த துழாய்மாலையையுடைய திருமாலின்
களிப்பும், புண்டரிகப் போது உறையும் புத்தேள் இறுமாப்பும் - தாமரை
மலரில் இருக்கும் பிரமனது களிப்பும், அண்டர் தொழவாழ் உன்
இறுமாப்பும் - தேவர்கள் பணிய வாழுகின்ற உனது களிப்பும், ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறு என்று உணர்ந்திலை - நஞ்சினை உண்டருளிய இறைவனை
வழிபட்டதனாலாகிய பயன் என்று நீ அறியாது போயினாய் எ - று.
உளர்தல் - கிண்டுதல். இறுமாப்பு - மிக்க களிப்பு;
ஸ்ரீ ஆளுடையப் பிள்ளையாரும்
"பூத்தோர்ந்தாயன கொண்டு நின்பொன்னடி
யேத்தாதாரில்லை யெண்ணுங்கால்"
என்று திருவாய் மலர்ந்த���ுளினார்.
பஞ்சசுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசித்தால்
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே
சிவபூசாவிதி (சிவஸ்ரீ ச.குமாரசாமி குருக்கள் - 1956 - இரண்டாம் பதிப்பு) என்னும் நூலின் உபோற்காதப் பகுதியில் இருந்து...
0 notes
Text
Opportunity to understand Tamil vedic language in English With meaning. That is Thevaram. Buy Book in www.balayoapath.org. திருபிரமபுரம் தேவார பதிகம் ஆங்கில மொழி ஆக்கப்பட்டுள்ளது. மேலும் திருமுறை 1 மற்றும் 2 புத்தகங்கள் கீழ்காணும் இணையதளத்தில் வாங்கி படிக்க முடியும்.
www.balayogapath.org
0 notes
Text
திருஞானசம்பந்தர் பாடல்களில் மாலை மாற்றுப் பதிகம் என்பது தொடர்பாக இணையத்தில் படித்த ஒரு அற்புத பதிவு!
(பகிர்வு)
ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடிய ஒரு வார்த்தையாகும்.
MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது.
ஆங்கிலத்தில் palindrome வார்த்தைகள் அதிகம் உள்ளது.
I PREFER PI
MADAM I'M ADAM
NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம் வார்த்தைகள்
இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. ஒற்றெழுத்துக்கள் எனக் கூடிய புள்ளி வைத்த எழுத்துக்கள் தமிழில் பாலிண்டிரோம்கள் எழுதச் சற்றே தடையாக உள்ளன.
தமிழ் வார்த்தை: விகடகவி -
இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
தாத்தா
பாப்பா
தேரு வருதே
மோரு போருமோ
"பூவாளை நாறு நீ பூமேக லோகமே பூ நீறு நாளை வா பூ"-
தண்டியலங்காரக் குறள் வெண்பா .
ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.
திருஞானசம்பந்தரோ தமிழின் மிக நீளமான பாலிண்டிரோமை அக்காலத்திலேயே ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அழகுற அமைத்திருக்கின்றார்.
திருஞானசம்பந்தர் பாடல்களில் "மாலை மாற்றுப் பதிகம்"என்பது முழுக்க முழுக்க தமிழ் பாலிண்டிரோம்தான்.
மேலும் இந்த மாலை மாற்று பதிக பாடல்களில் ஒற்றெழுத்து எனும் புள்ளி வைத்த எழுத்துக்கள் வராமல் பதிகத்தை பாடியுள்ளார் என்பதை இங்கே குறிப்பிடட்டாக வேண்டும்.
மாலை மாற்று பதிக பாடல்களை தலைகீழாகப் படிக்கவும் முடியும் என்பதோடு பொருளும்,பண்ணும் சிறந்து விளங்கும்படி இந்த பதிகத்தை 11பாடல்கள்களாக
அருளியுள்ளார் சம்பந்தர் .
சரி, மாலைமாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.
ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரி இருக்குமல்லவா?
அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப் புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப் புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.
திருமாலைமாற்று" எனப்படும் இந்த திருப்பதிகம் பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம் தான் கிடைத்திருக்கிறது.
சிறந்த பொருள் பொதிந்த இத்திருப்பதிகத்தை பாடுவதற்கான பலனை இறுதியில் கூறியுள்ளார்.
திரு���ான சம்பந்தர் இயற்றிய மாலை மாற்று (PALINDROME) பதிகத்தின் 11 பாடல்களும் அவற்றின் பொருள் விளக்கமும் கீழே!
திருமாலைமாற்று திருப்பதிகம் - சீர்காழி.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திருநிலை நாயகி, ஸ்ரீ பெரிய நாயகி
திருமுறை : மூன்றாம் திருமுறை 117 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. (01)
பாடல் விளக்கம்:
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (02)
பாடல் விளக்கம்:
வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. மகா சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதா��ா மூவாதா (03)
பாடல் விளக்கம்:
அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (04)
பாடல் விளக்கம்:
என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (05)
பாடல் விளக்கம்:
யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (06)
பாடல் விளக்கம்:
மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (07)
பாடல் விளக்கம்:
உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?
நேணவராவிழ யா��ைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (08)
பாடல் விளக்கம்:
இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா (09)
பாடல் விளக்கம்:
காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே (10)
பாடல் விளக்கம்:
நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. (11)
பாடல் விளக்கம்:
நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக!
பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் விதமாக சிவபெருமானைப் போற்றி திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய,
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.
|| - திருச்சிற்றம்பல��� ||
0 notes
Text
0 notes
Text
0 notes