the-thought-vault
The Thought Vault
2 posts
Don't wanna be here? Send us removal request.
the-thought-vault · 11 months ago
Text
2023 இனிதே நிறைவுபெற்று 2024 தொடங்கியது!
#2023,
நிறைய புது புது அனுபவங்களை தந்தது, அதில் (மகிழ்ச்சி, முன்னேற்றம், சாதனை, பயம், தனிமை, பிரிவுகள், கோபம் ) என பலவும் அடங்கும்.
**ஜனவரி 2023**
நான் சம்பாதித்த பணத்தில் புதிதாக பைக் வாங்கினேன், அதில் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன்.
பல நாட்கள் ஏக்கத்துடன்  இருந்து வாங்கியவர்களுக்கு தெரியும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லையென்று.
**பிப்ரவரி 2023**
என்னுடன் அலுவலகத்த���ல் வேலைபார்க்கும் நண்பனுக்கு (Hemnath) திருமணம் ஆனது.
திருமணத்திற்கு முந்தையநாள் இரவு நானும் என் அலுவலக நண்பர்களும் மண்டபத்திலேயே தங்கினோம், அன்றிரவு நடந்த அரட்டைகளுக்கும், ரகலைகளுக்கும் அளவேயில்லை.
**மார்ச் 2023**
என் அக்கா மகளுக்கு 9ஆவது பிறந்தநாள். அவளது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம்.
**ஏப்ரல் 2023**
பல வருடங்களுக்கு பிறகு கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள எங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு  சென்றுவந்தோம்.
நான் கார் நன்கு ஓட்ட கற்றுக்கொண்டதற்கு பிறகு முதல்முறையாக zoom cars இல் கார் வாடகைக்கு எடுத்து அப்பாவையும் அம்மாவையும் அழைத்துச்சென்றேன், அது புது அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
சிலநாட்களுக்கு பிறகு என் உடன்பிறவா தங்கையை சந்தித்தேன். என் பள்ளி பருவத்திலிருந்தே அவள் அறிமுகம்.
எத்தனையோ பேர்கள் என் வாழ்வில் தங்கையென்று வந்து சென்றிருக்கிறார்கள் ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை என்னை விட்டுக்கொடுக்காத, மறக்காத ஒரே தங்கை அவள் (திவ்யா).
மாத இறுதியில் என் நீண்டநாள் நண்பனின் (சிவா) புதுமனைபுகுவிழா நடந்தது, அங்கு நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தோம்.
அவன் குடும்பத்தில் நடந்த இந்த சுபநிகழ்ச்சி எனக்கு மிகவும் சந்தோஷம்.
**மே 2023**
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சக அணியாளர்கள் எல்லாரும் dugout க்கு டீம் அவுட்டிங் சென்றோம்.
அணியில் சேர்ந்து சிறிதுநாட்களே ஆனதால் அவர்களுடன் பெரிதாக ஒன்றும் என்ஜோய் செய்யவில்லை, என் ug நண்பர்களுடன் சென்றுருந்தால் நான் மிகவும் சந்தோசமாக விளையாடிருப்பேன்.
AWS cloud practitioner certification க்காக தயாராகிக்கொண்டுருந்தனான் இந்த மாதம் தேர்வெழுதி வெற்றிபெற்றேன், இதற்க்கு தயாராக சிறுதுநாட்களே எடுத்துக்கொண்டு முடித்ததால் மனஜரிடம் பாராட்டையும் பெற்றேன்.
இந்த மாத இறுதி வாரத்தில் நானும் என் ug நண்பர்களும் பாண்டிச்சேரிக்கு பைக்கில் சென்றுருந்தோம், போகும்பொழுது எதிர்பாராமல் சூர்யா மற்றும் ஜெய் விபத்து ஏற்பட்டது அதில் இருவருக்கும் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டது. இருந்தும் முதலுதவி எடுத்துக்கொண்டு நங்கள் போகவேண்டிய இடத்திற்கு சென்றோம். ரொம்பநாள் பிறகு ஒன்றாக இவர்களுடன் வெளிய வந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அங்கு தங்கியபோதும் அங்கிருந்து கிளம்பியபோதும் எங்களுக்குள் நிறைய வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. அது வீட்டிற்கு வருவத்துக்குள் மனக்கச���்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் முகம் திருப்பிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். அவர்கள���டம் இருந்து விலகி இருந்தேன்.
அந்த பாண்டிச்சேரியில் இருந்த நாட்களே கடைசி அவர்களிடத்தில் நான் நானாக
**ஜூன் 2023**
இத்தனை நாளாக Software Test Engineer Trainee ஆக இருந்தேன், இந்த மாதத்திலிருந்து Software Test Engineer ஆக பணியில்  உயர்ந்தேன்.
மாத இறுதியில் என் கல்லுரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது, நான் இதே கல்லுரியில்தான் UG & PG இரண்டுமே முடித்தேன். இப்பொது PG க்கான பட்டம் வாங்க சென்றுருந்தேன், நான் மூன்றாமிடம் பெற்றுருந்தேன் என் தோழி (பவித்ரா) இரண்டாமிடம் பெற்றுருந்தால். எங்கள் இருவர்க்கும் மேடையில் பதக்கங்களை தருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருந்தோம் ஆனால் அவ்வாறு நடக்கவில்லை முதலிடம் பெற்றவர்களுக்கு மட்டும்தான் மேடையில் பட்டத்தையும் பதக்கத்தையும் கொடுத்தார்கள், இவாறு நடந்ததில் எங்களுக்கு பெரிய வருத்தம்தான். நாங்கள் மேடையில் பட்டம் பெறுவோமென்று எதிர்பார்த்துக்கொண்டுருந்த எங்கள் பெற்றோர்களுக்கும் இது ஏமாற்றத்தை தந்தது.
இது ஒரு பக்கம் இருக்க நண்பர்கள் அனைவரும் வந்துருந்தாலும் முன்புபோல் யாரும் அவ்வளவாக பேசிக்கவில்லை, அதற்கு காரணம் முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களாக இருக்கும்.
இறுதியில் இவர்களை அடுத்து எங்கு எப்போது சந்திக்கப்போகிறோம் என்று நினைப்புடனும் கனத்த மனதுடனும் அங்கிருந்து விடைபெற்றேன்.
**ஜூலை**
என்னுடன் கல்லுரியில் pg படித்த என் தோழிக்கு தி��ுமணம் ஆனது, அங்கு என் நெருங்கிய நண்பர்கள் சிலர் வந்துருந்தார்கள். கல்யாணம் முடிந்ததும் அவளுக்கு பரிசை குடுத்துவிட்டு நங்கள் சில நண்பர்கள் கிளம்பும் வழியில் ஒரு டீ கடையில் நீண்டநேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
இதே மாதம் தான் என்னுடன் ug இல் என்னுடன் படித்த தோழிக்கும் திருமணம், அங்கு சென்றுருந்தேன்  தனியாக. நான் அங்கிருந்து கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்குமுன் மற்ற நண்பர்களும் வந்தார்கள், பேசிக்க தங்கினோம் சிறிது நேரத்துக்கு பின் கொஞ்ச கொஞ்சமாக பேசினோம் அனால் அது எங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துவைக்கும் வாதங்களாகவே இருந்தது. சிலருடன் சமரசம் ஆனாலும் முழுமையாக பேசிக்கவில்லை. ஆபீஸ்க்கு நேரம் ஆனதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
**ஆகஸ்ட் 2023 - டிசம்பர் 2023**
செப்டம்பரில் என் பிறந்தநாள் வந்தது, தனிமையில் நாள் கடந்தது.
அம்மாதம் இறுதியில் நான் eye lasik surgery செய்துகொண்டேன், ஒரு மாதம் பணியில் விடுப்பு எடுத்தேன். என் surgery க்கு 85000 செலவானது அதை அச்சமயம் கடனாக குடுத்து உதவினார் பாலாஜி அண்ணா, என்னுடன் பணிபுரிபவர்.
surgery க்கு பிறகு ஓய்வெடுத்த நாட்களே என் வாழ்க்கையில் மிக பொறுமையாக சென்ற நாட்கள் அவ்வளவு கடியாக இருந்தது அதேபோல் மனதில் அளவில்லாத எண்ணங்களும் ஓடிய வண்ணமாகவே இருந்தது.
அக்டோபர் முடிவில் அப்பாவிற்கு உடல்��லம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
இந்த சம்பவம் என் பள்ளி காலத்தில் நடந்த நிகழ்வை கண்முன் காட்டியது. எப்படியோ அப்பா கொஞ்சம் நலம் ஆகி வீட்டிற்கு வந்தார்.
நவம்பர் தீபாவளி அன்று நானும் என் அக்கா மகளும் ஒன்றாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினோம்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் #2023 பல நிகழ்வுகள் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைத்துள்ளது,
நிறைய நன்மையையும் அளவுக்கு மேல் துன்பத்தையும் தந்திருக்கிறது. அனால் இதுதான் வாழ்க்கை, நடக்கும் சம்பவம் நமக்கு சந்தோசத்தை தந்தாள் அதை நன்கு அனுபவெய்தும், கஷ்டங்களை தந்தாள் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டும்  முன்னேறி செல்வதே சிறந்தது.
"இதுவரை நடந்த நல்லதை ஊக்கமாகவும், என்மேல் எறியப்பட்ட கற்களை படிக்கட்டுகளாகவும் வைத்து முன்னேறி நகர்கிறேன்" 
#2024 welcome buddy
-Ahobilanathan   
0 notes
the-thought-vault · 1 year ago
Text
The world is not a wish-granting factory.
2 notes · View notes