Text
ஜவான் உருவாக காரணமே நடிகர் விஜய் தான்!
ஜவான்’ திரைப்படம் உருவாக காரணமே நடிகர் விஜய் தான் என்று படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் அட்லீ “எல்லோருக்கும் வணக்கம் நண்பா. ‘ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான். இந்தப் படத்துக்காக அவர் என்னை நிறையவே ஊக்கப்படுத்தினார். எது நடந்தாலும்…
View On WordPress
0 notes
Text
'கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’…
View On WordPress
0 notes
Text
கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாத நோலன்
இன்டர்ஸ்டெல்லர்’, `இன்செப்ஷன்’, `டெனட்’, `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். `இன்செப்ஷன்’ படத்தை 3டி-யில் ரி-ரிலீஸ் செய்யக் கேட்டதற்குக் கூட விடாப்பிடியாக அதை மறுத்தவர். இவரின் அடுத்த படைப்பாக ஜூலை 21-ம்…
View On WordPress
0 notes
Text
மாவீரன் திரை விமர்சனம்
‘மண்டேலா’வில் சமூக அக்கறையுடன் கதை சொன்ன, இயக்குநர் மடோன் அஸ்வின், இதில் அதோடு ஃபேன்டசியை குழைத்திருக்கிறார். இருப்பிட உரிமை மறுக்கப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை மிகை யதார்த்த அம்சத்துடன் அழகாக ஒன்றிணைத்துக் கதை சொல்லியிருப்பதில் கவர்கிறார். பயந்த சுபாவம் கொண்ட சத்யா (சிவகார்த்திகேயன்). எதையும் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழணும்’ என்ற கொள்கையுடைய அவர் நாளிதழ் ஒன்றில், படக் கதை வரைகிற…
View On WordPress
0 notes
Text
ஹேய்.. இங்க நான் தான் கிங்கு
ரஜி��ி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.…
View On WordPress
0 notes
Text
பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள்
பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் பொற்கால ஆட்சி தந்த புனிதரை நினைவு கொள்வோம் ஆட்சியாளர்களுக்கு ஒரு ரோல் மாடல் என்றால், அது அகில உலகத்துக்கும் காமராஜர் ஒருவராகத்தான் இருக்க முடியும். தனக்கென வாழாத ஒரு அரசியல்வாதி அவர். அதனால்தான் அவரை தமிழக மக்கள் கர்மவீரர், பெருந்தலைவர், ஏழைப் பங்காளன், கலா(கருப்பு)காந்தி, தென்னாட்டு காந்தி, உத்தமத் தலைவர் காமராஜர் என பல பெயர்களில் அழைத்து…
View On WordPress
0 notes
Text
அதை செய்வதுக்கு நான் தற்கொலை செய்து கொள்வேன் - இயக்குநர் மிஷ்கின்
என்னிடம் ஜாலியான ரொமான்டிக் படங்கள் எடுப்பதற்கு பதில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மூத்த இயக்குநரும் புதிய நடிகருமான மிஷ்கின் கூறினார். பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகைகள் ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில்…
View On WordPress
0 notes
Text
அந்த மூன்று அணிகளால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிடும் - கெயில்
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அணிகள��க்கு கொடுப்பதுபோல் அதிக அளவில் ஊதியம் கொடுக்க வேண்டும்…
View On WordPress
0 notes
Text
‘‘தோல்வியில் பாடம் கற்கணும்’’சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன்
அமைதி பெரும் பலம் என்கிறார் விராட் ஹோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதல் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பைனலில் மோதின. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில்…
View On WordPress
0 notes
Text
இந்த பாட்டோட கடைசி shot-ல தான் எனக்கு accident ஆச்சு - விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில்…
View On WordPress
0 notes
Text
ரஜினியுடன் கபில்தேவ் ஒரே ஸ்கிரீனில்!
முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கபில்தேவுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில்…
View On WordPress
0 notes
Text
காதலன் படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் வடிவேலு
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய…
View On WordPress
0 notes
Text
பிச்சைக்காரனின் கதையை பணக்காரனின் கதையாக பார்த்த விஜய் ஆண்டனி
இயக்குனர் சசி பிச்சைக்காரனின் கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாரும் பிச்சைக்காரனின் கதையாக கேட்டு பிச்சைக்காரன் கதை என்று நிராகரித்தனர். விஜய் ஆண்டனி மட்டும் தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய…
View On WordPress
0 notes
Text
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் சமூகம் சார்ந்த அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது ட்ரெய்லர் சொல்லுகிறது. இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.இப்படம் 2021ல் பூஜையுடன் தொடங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு…
View On WordPress
0 notes
Text
மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடு!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் பணிகளில்…
View On WordPress
0 notes
Text
குட் நைட் திரைப்பட விமர்சனம்
இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேசல் ரகுநாத், பகவதி என பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. விக்ரம் வேதா’ ‘ ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து நாளை (12-05-2023) அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘குட் நைட்’. இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம்…
View On WordPress
0 notes
Text
விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்காக கஞ்ச விவசாயத்தை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது
இமாசல பிரதேச அரசும் நிறைய கடன் சுமையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்காக கஞ்ச விவசாயத்தை அனுமதிக்க இமாசல பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. மருத்துவ பயன்பாட்டுக்காக மட்டுமே கஞ்சா உற்பத்தி செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இமாசல பிரதேச விவசாயிகளும் கஞ்சா விவசாயத்துக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கஞ்சா விவசாயத்தால்…
View On WordPress
0 notes