#மூங்கில்
Explore tagged Tumblr posts
karuppuezhutthu-blog · 2 months ago
Text
சீனா: பெய்ஜிங் திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் மியான்மர் உள்நாட்டுப் போர் - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “ஒரே கிராமம், இரு நாடுகள்” இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை “மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்” கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட…
0 notes
venkatesharumugam · 7 months ago
Text
4 🐊🐊 முதலைகள் உலகில் சாகசப்பயணம் 🐊🐊 4
எங்கள் படகை உரசி நெளிந்த அந்த முதலை ஒரு அலிகேட்டர் என்பது அதன் அகண்ட தாடையை வைத்து கணிக்க முடிந்தது. அதன் ரம்பப் பற்களின் இடையில் கொழுத்த மீன் ஒன்றை கவ்வியிருந்தது. சரேலென மீண்டும் நீருக்குள் அமிழ்ந்து மறைந்தது எங்கள் பயமும் பறந்தது முதலைகள் பொதுவாகவே கூச்சசுபாவிகள் அதனிடம் நாம் வாலாட்டினால் மட்டுமே அது வா��ாட்டும் வேறு தொந்தரவுகள் தராது என்றார் கைடு / படகோட்டி.
இந்த எவர்க்ளேட் ஆற்றைப்பற்றி சில தகவல்கள் 100 சதுர மைல் பரப்பளவு நீளமும் 150 சதுர மைல் அகலமும் கொண்ட பெரும் நீர்ப்பகுதி ஆறெங்கும் கோரைப்புற்களும் எர்வாமேட்டின் கம்பெனி சொல்வது போல அரிய வகை நீர்த் தாவரங்களும் நிறைந்த ஏரியாகும்! சதுப்பு நில திட்டுகளும் தாவரக் காடுகளும் ஆங்காங்கே குட்டித் தீவுகள் போல அமைந்திருக்கும்.. இந்தச் சூழல் தான் முதலைகள் வாழ்வதற்கு மிக மிகப் பொருத்தமானவை.
முதலைகள் சதுப்பு காடுகளில் தாங்கள் இட்ட முட்டையை அழகாக கூடு கட்டி பாதுகாக்கின்றன. குட்டி வைக்கோல் போர் போன்ற கோரைப்புல்லில் ஆன முதலை கூடுகளை ஆங்காங்கே கண்டோம்.. பச்சைப் புல்வெளியில் அது மட்டும் தவிட்டு நிறத்தில் தனித்து தெரிந்தது. அங்குள்ள ஒரு வகை கோரைப்புல்லை கைடு கத்தியால் அறுத்துத் தந்தார் கீழிருந்து மேலாக அந்த புல்லை உருவுவது போல தடவினால் வெல்வெட் போலிருந்தது.
இப்போது அதையே மேலிருந்து கீழாக தடவுங்கள் மிக மிக மெதுவாக என்றார் நானும் அதை மேலிருந்து கீழாக தடவிய அடுத்த விநாடியே சுருக்கென்று என் விரலை துளைத்தது அந்த புல்.. துணி தைக்கும் ஊசியால் கையைக் குத்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போல என் விரலில் ஒரு ரத்த முத்து துளிர்த்திருந்தது! அந்தப்புல் கீழிருந்து மேலாக வெல்வெட் போலவும் மேலிருந்து கீழாக முட்களையும் இருமுகம் கொண்டது.
பிறகு அங்கிருந்த மூங்கில் தண்டு போன்ற ஒரு தாவரத்தின் தலையில் ஒரு பூ மஞ்சளில் சிரித்தது.. அதை உடைத்து உடைத்து ஒரு நெக்லெசாக மாற்றி ஒரு சின்னப்பெண்ணுக்கு பரிசளித்தார் படகோட்டி! அந்த இலையில் இருந்த ஒரு புழுவை தின்னப் போவதாக போக்கு காட்டி அனைவரையும் சிரிக்கவும் வைத்தார். மீண்டும் ஏர் போட் புறப்பட அங்காங்கே டைவ் அடிக்கும் முதலைகளை பார்த்துக் கொண்டே கரைக்கு திரும்பினோம்.
40 நிமிடப் பயணம் திரில்லிங்காக முடிந்தது! இந்த நதியில் ஏன் இந்த வகை ஏர்போட்டுகள் என்றால் தாவரங்கள் சேதமாகாமல் பயணம் செய்யவே என்பதும் பிறகு புரிந்தது! நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெற்றுக் கொண்டோம்! அடுத்து அங்கு டிஸ்கவரி சானலில் நாம் பார்த்து ரசித்த உலகப் புகழ் கேட்டர் பாய்ஸ் வழங்கும் அலிகேட்டர் ரெஸ்க்யூ என்னும் ஷோவிற்கு சென்றோம். அதென்ன அலிகேட்டர் ரெஸ்க்யூ..?
50லிருந்து 60 இராட்சத முதலைகள் இருக்கும் ஒரு கூண்டு வேலி தெரிந்தது.. கரும் பாறைகளாக முதலைகள் அசை��ின்றி குவிந்து கிடந்தன 8 அடி நீளம் முதல் 15 அடிவரை வித விதமான முதலைகள்! கூண்டைச் சுற்றி நாங்கள் எல்லாரும் நிற்க சினிமா காட்சிக்கு பெல் அடிப்பது போல மணி ஒலிக்க அந்த கூண்டுவேலியின் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு கெளபாய் தொப்பியணிந்த இளைஞன் தனியாளாக கொஞ்சமும் அச்சமின்றி படுத்திருந்த முதலைகளை கடந்து உள்ளே நுழைந்தான்...
வரும்...
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
noolagan · 9 months ago
Text
https://noolagan.com/2024/03/யாருடனும்-உன்னை-ஒப்பிடாத/
யாருடனும் உன்னை ஒப்பிடாதே
ஒரு நாள் அன்பு என்பவர் ரொம்பவும் சோர்ந்து போய் காணப்பட்டார். அவருக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையை வாழ்வதற்கே வெறுத்து விட்டார். அதனால், விரக்தியோடு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு காடு தென்பட்டது. ‌‌
அந்த காட்டிற்கு சென்றபோது, அந்த காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தார். அந்த பெரியவரிடம் அன்பு தன் முடிவைத் தெரிவித்தார். தான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அன்பு கூறினார்.
அதைக்கேட்ட அந்த பெரியவர் புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. சுற்றியும் பூச்செடிகளாக இருந்தன.தெரிகிறதா குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றை எல்லாம் காட்டி அன்பிடம் கேட்டார்.
இவை என்னவென்று தெரிகிறதா?
ஏன் தெரியாது.. பூச்செடிகளும், மூங்கில்களும் என்றார் அன்பு. இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன் என்றார் பெரியவர். ஓ..! அழகாக வளர்ந்துள்ளதே என அன்பு ஆச்சரியப்பட்டார். இந்த பூச்செடிகளையும், இந்த மூங்கில் தோப்பில் உள்ள மூங்கிலையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன் என்றார் அந்த பெரியவர். அவர் சொல்வதை அன்பு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பூந்தோட்டத்தையும், இந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!
இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம் பரப்பின. மூங்கில் விதைகள் மட்டும் ஒரு வாரமாகியும் முளைவிடவில்லை. ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை.
ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை. கடைசியில் எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் வெளிவந்திருந்தன.
அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோடு ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான் ஆனால், வெறும் ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வ���க வேகமாக வளர்ந்து இப்போது தோப்பாய் நிற்கின்றன. அந்த விதைகள் கிட்டத்தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.
இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.
உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர் பாய்ச்சலுக்கான அவகாசமிது.
அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்.
உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய். இந்த மூங்கில் உயரத்திற்கு நீ வளர்வதற்கு, உனது முயற்சிகளை அதிகரித்து மூங்கிலைப் போல வீரியமாய் வளர்ந்து விண்ணைத் தொடு!
0 notes
babystories · 1 year ago
Text
���ூங்கில் ஆம்லெட் செய்முறை - Bamboo Omelet Recipe Story | 3D Tamil Moral Stories | Maa Maa TV Tamil
youtube
0 notes
ethanthi · 1 year ago
Text
மூங்கில் குருத்தில் உள்ள மருத்துவ குணம் தெரிந்து கொள்ளுங்கள் !
ஆனால் நாம் தான் அதை எல்லாம் மதிக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்னாடியா இல்லை பின்னாடியா என கேட்டால் சாப்பாடே அது தான் என்ற ஒரு காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
அந்த அளவுக்கு கைநிறைய மருந்துகளை கலர்கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் மூதாதையர்கள் நமக்காக எத்தனை அற்புதமான மூலிகைகளையும் உணவு பொருட்களையும் தாவரங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
0 notes
crazyanimals1-blog · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
cartoonworlds · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
nicekidspostss · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
carsadventuress · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
dinosaurworlds · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
karuppuezhutthu-blog · 2 months ago
Text
மூங்கில் தினம்: பழங்குடிகளின் வாழ்வியலில் மூங்கில் ஒரு அங்கமாக இருப்பது எப்படி?
பட மூலாதாரம், Nithya Pandian படக்குறிப்பு, மூங்கில் மற்றும் இதர தாவரங்கள் உதவியோடு கட்டப்பட்டிருக்கும் நீலகிரி தொதவர்களின் கோவில் கட்டுரை தகவல் இன்று செப்டம்பர் 18, சர்வதேச மூங்கில் தினம். சர்வதேச மூங்கில் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலின் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. அன்றாட பயன்பாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் மூங்கில்களை…
0 notes
supergamesss · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
animalsworldes · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
zombievideos · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
animalzootopia · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மூங்கில் வீடு - Magical Gold Bamboo House Story | Tamil Mora...
0 notes
babyanimalss5s · 1 year ago
Video
youtube
ஏழை மூங்கில் குல்ஃபி விற்பவர் - Poor Bamboo Kulfi Seller | Tamil Moral S...
0 notes