#மாற்றுத் தொழில் முயற்சி
Explore tagged Tumblr posts
ilakkuwebnews · 10 months ago
Text
0 notes
pooma-tamilchannel · 3 years ago
Text
ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!
ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!
ஆர்வத்துக்கும் திறமைக்கும் முரண்பாடு வந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை இதுதான் என்பது போகிறபோக்கில் மாணவர்கள் சிலரைக் கேட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?
உங்களுக்கு எது நன்றாக வரும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். எனக்குப் பாடப் பிடிக்கும், ஆனால் குரல் சரியில்லை, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஆனால் சீக்கிரமே அவுட் ஆகிவிடுவேன், எனக்கு அறிவியல் பிடிக்கும், ஆனால் சமன்பாடுகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது…
பிடித்தது கையில் சிக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இருக்கிறது. எதில் திறமை இருக்கிறதோ அது அவ்வளவாகப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் இந்த ரகம். நன்றாக ஓவியம் வரையத் தெரியும், ஆனால் ஓவியத்தில் பெரிய ஆர்வம் இல்லை. நன்றாக ஓடுவேன் ஆனால் அதெலெடிக்ஸில் ஈடுபாடு கிடையாது, நிகழ்ச்சிகளை நடத்தச் சொன்னால் கலக்கிவிடுவேன் ஆனால் அதெல்லாம் தேவையில்லாத தொல்லை…
உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆர்வமும் திறமையும் பரஸ்பரம் இணைந்து போகாத நிலைதான் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான பிரச்சினை. இப்படிப்பட்ட சிக்கல் வரும்போது என்ன செய்வது?
ஆர்வத்துக்கு முதலிடம்
ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும். பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.
அப்படி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில விஷயங்களில் ஆர்வம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் திறமையை ஒரு மட்டத்துக்கு மேல் வளர்த்துக்கொண்டு செல்ல முடியாது. உதாரணம் வாய்ப்பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அடிப்படையாக ஓரளவேனும் நல்ல குரல் அமையாவிட்டால் ஒரு அளவுக்கு மேல் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. விளையாட்டிலும் அப்படித்தான். கிரிக்கெட்டின் மேல் வெறியாக இருக்கலாம். வெறித்தனமாக உழைக்கலாம். ஆனால் இயல்பாகவே கிரிக்கெட் திறன் இல்லாவிட்டால், அதில் ஒரு மட்டத்துக்கு மேல் போக முடியாது. அப்படிப் போக முடியும் என்றால் இன்று இந்தியாவில் ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்களும் இரண்டாயிரம் கும்ப்ளேகளும் உருவாகியிருக்க வேண்டும். ஏன் உருவாகவில்லை? ஆர்வம் மட்டும் போதாது என்பதுதான் காரணம்.
ஆர்வத்தை மட்டும் பின்தொடர்வதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விளையாட்டு, ராணுவம் போன்ற சில துறைகளுக்கு உடல் வலுவும் திறனும் அவசியம். இவை இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் காரணத்தால் உடலில் குறைபாடு உள்ளவர்கள், எவ்வளவு முயன்றாலும் அந்தத் துறையில் பிரகாசிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, ஆர்வம் என்பதைக் கண்மூடித்தனமாகப் பின்தொரட முடியாது.
சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறன்கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது வசப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.
உங்கள் பாதை உங்கள் பயணம்
திறமை இருந்தால்…
ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலா��். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகி��வற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.
அதற்காக ஆர்வத்துக்கு அணை போட்டு இயல்பான ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியது இல்லை. மனதுக்கு அதிகமாகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்காகவோ மாற்றுத் துறையாகவோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பாட்டைப் பிரதானத் துறையாகக் கொண்டவர் எழுத்திலும் பிரகாசிக்கலாம். திறமையின் அடிப்படையில் ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஆர்வத்தின் அடிப்படையில் ஓவியம் அல்லது கைவினைத் தொழிலில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். ஆர்வத்துக்கும் தீனி, வருமானத்துக்கும் வழி.
இதுவரை பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்வோமா?
தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதானத் துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விஷயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.
ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.
பொருத்தமான உதாரணத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். ஒரு பையன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் சென்றான். வேகப் பந்து வீச்சைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை. சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்.
பந்துவீச்சுப் பயிற்சியின்போது சில சமயம் மட்டை வீச்சிலும் ஈடுபட வேண்டுமல்லவா? அப்படி அவன் ஆடும்போது தலைமைப் பயிற்சியாளர் அவனைக் கவனித்தார். அவனது மட்டை பேசும் விதத்தைக் கண்டு அசந்துபோனார். அவனைக் கூப்பிட்டு, “உனக்குப் பந்து வீச்சு சரிப்பட்டு வராது, நீ போய் பேட்டிங் பயிற்சி செய்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பையன் ஏமாற்றத்துடன் திரும்பினான். ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்னாளில் உலகிலேயே சிறந்த மட்டையாளர் எனப் பெயர் வாங்கினான். அவன் செய்த சில சாதனைகளை யாராலும் நெருங்கக்கூட முடியாது என்னும் அளவுக்குச் சாதனைகள் புரிந்தான்.
அவன் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
Tumblr media
0 notes
sigappurojakal · 4 years ago
Text
அரசு ஊழியர் யார்?
அரசு ஊழியர் யார்?
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? சட்டம் சொல்வதென்ன?
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற ப��ி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.
”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)
அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..
1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)
2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)
3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).
அரசு ஊழியர் பெறும் சம்பளம்
அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல
அரசு ஊழியர்களுக்கான செலவு
மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ��ழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.
அரசின் முக்கிய துறைகள்
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை
எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
மக்கள் நல்வாழ்வு (ம) ��ுடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.
விதி-3
எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.
விதி-3-A
எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.
விதி-5
எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.
விதி-6 (4) (aa)
எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.
விதி-7
எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.
விதி-11
எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.
விதி-12
எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.
விதி-14
எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுதலை தடுக்க வேண்டும்.
விதி-14-A
எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது
விதி-17
எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு க��ழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.
விதி-20
எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.
விதி-20-B
எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.
பிரிவு-21
எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.
இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?
அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.
ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.
இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.
மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.
இறுதியாக!
எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல்.என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்
மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேர��், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்
0 notes