#மாணிக்கம்
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 2 months ago
Text
#பகவதியின்_கை
பாலக்காட்டில் இருக்கும் ஏமூர் பகவதி அம்மன் கோவில் விசேஷமானது. அங்கு போய்விட்டு வந்தால் குடும்பத்திலுள்ள துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்றனர். நமக்கு தான் வாழ்க்கையில் இன்பம் என்பது IRCTCயின் பாஸ்வேர்டு போல வரவே வராதே! இங்கு போயித்தான் பார்ப்போமே என்று நான் உறுதி பூண்டு (இஞ்சி, வெங்காயம், மிளகாய்னு) முடிவெடுத்தேன்!
கேரளா என்றால் என் அன்புத் தோழி ஶ்ரீலக்ஷ்மி இல்லாமலா! அவளுக்கு போன் செய்து நீ திருச்சூரில் இருந்து கிளம்பி ‘பாலக்காடு வரூ’ என்றதும் ச்ச்சேட்டாஆஆ என்று ஆனந்தமாகக் கூவினாள். அவள் காரில் கிளம்பி.. நான் கிளம்பி எல்லாவற்றையும் Fast forwardல் ஓட்டிவிட்டு.. பாலக்காடு கல்பாத்தி ஓட்டலுக்கு வந்தால் அதோ இரண்டாவது மேசையைப் பாருங்களேன்!
பாலக்காட்டின் பலாக்காய் & பூசணி போட்ட சாம்பாருடன், எரிசேரி, புளிசேரி, பப்படம், பிரதமன்னு ஒர் வல்லிய… அடச்சே… ஒரு நல்ல உணவை ருசித்துக் கொண்டிருப்பது நாங்களே தான்! சாப்பிட்டு முடித்து கோவிலின் இருப்பிடத்திற்கு கூகுள் மேப் போட்டால் அங்கிருந்து 12 கி.மீ என்று காட்டியது! ஏறி இறங்கும் கேரள ரோலர் கோஸ்டர் சாலைகளில் ஶ்ரீலக்ஷ்மி காரை செலுத்தினாள்!
ஏமூர் என்பது நாங்கள் போக வேண்டிய ஊர்! அங்கிருக்கும் பகவதி அம்மன் தான் விசேஷம்! ஏமூர் பகவதி அம்மன் என்றால் பாலக்காடு மட்டுமல்ல கேரளாவிற்கே நன்கு தெரியும்! இந்தக் கோவிலில் அம்மனின் சிலை இல்லாது அம்மனின் கை மட்டுமே மூலவராக இருக்கும். பாட்ஷாவுக்கு மாணிக்கம் போல ‘கை’பகவதி அம்மன் என்றும் இந்த அம்மனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.!
குடும்பப் பிரச்சனைகள், நீண்ட நாட்கள் தடைபடும் காரியங்கள், ��ிருமணத் தடை, தோஷங்கள், சாபங்கள், பாபங்கள் என தாடி பாலாஜிக்கு வாலி படத்தில் இருக்கும் வியாதிகள் போல குடும்ப பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த அம்மனை வழிபட்டால் தீரும். இதையெல்லாம் கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில் ஶ்ரீலக்ஷ்மி என்னிடம் காரை செலுத்திய படியே என் காதுகளில் ஒலித்தாள்!
நகரில் இருந்து 4 கி.மீ தாண்டியதும் பசுமை வயல்கள் தெரிந்தன. இறைவனின் தேசத்தில் இயற்கை அழகிற்கா பஞ்சம்! வாழையும், தென்னையும், நெல்லும் பச்சையாக சிரித்தன! அபாரமான நீர் வளமும் வழிநெடுக எங்களுடன் வந்தன! கேரளாவில் ஒரு சிறப்பு நம்ம ஊர் போல புறநகர் பகுதி என்பது கிடையாது. நாம் போகும் பாதையின் இரு புறமும் வீடுகள் கடைகள் அமைந்திருக்கும்.
சேட்டன்கள்.. அசட்டு மஞ்சள்/காவி நிறத்து வேட்டி அணிந்து முழங்கை வரை சுருட்டிய சட்டை அணிந்து.. பீடி வலித்துக் கொண்டோ, கட்டஞ் சாயா ருசித்துக் கொண்டோ இருந்தனர். எல்லாரது கால்களுக்கு பக்கத்திலும் மூன்றாவது காலாக குடை இருந்தது! நாளிதழ் படித்தோ அல்லது லாட்டரி ரிசல்ட் பார்த்துக் கொண்டோ மலையாளத்தில் சம்சரித்துக் கொண்டிருந்தனர்!
ஏமூர் அருகே சாலை விரிவாக்கம் நடப்பதால் வழியைத் திருப்பி விட்டிருந்தனர்! லக்ஷ்மி குழப்பமடைந்து காரை ஒரு டீக்கடையில் நிறுத்தி கண்ணாடியை இறக்க, அந்த ஊரின் ஒட்டு மொத்த மக்கட் தொகையும் அவள் கதவருகே கூடியது! ஏமூர் பகவதி.. என அவள் துவங்க, நேராப் போய் இடதுபக்கம் என்று அனைவரது குரலும் கோரஸாக ஒலிக்க அது அந்த பகவதியம்மனுக்கே கேட்டிருக்கும்!
ஶ்ரீலக்ஷ்மி கதகளி, மோகினி ஆட்டம், ஓவியம், சமையல் என பல திறமைகள் கொண்டவள்! அவளது அபாரமான கார் டிரைவிங் திறமையை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்! கோவிலை நெருங்கும் வேளையில் சாலையின் இடதுபக்கம் இருந்து 10 அடி நீள கருநாகம் ஒன்று சாலையை கடக்க லக்ஷ்மி ப்ரேக் போடாமல் வண்டியை குலுங்காது வளைத்து திருப்பிய விதம் அற்புதமானது!
அடி! கருநாகம் தப்பிச்சோ என்றேன்! அல்லா சேட்டா அது ராஜ நாகம் என்றாள்! அப்போதே என் நெஞ்சு அல்லு விட்டது! கோவில் வளாகத்துக்குள் நுழைந்து காரை நிறுத்தி செருப்புகளை காரில் விட்டுவிட்டு, அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு கோவிலுனுள் நுழைந்தோம். மிக மிக அமைதியான சூழல், அர்ச்சனை என்பது கூட அமைதியாக உரக்க மந்திரங்கள் சொல்லாமல் செய்தனர்!
கோவில் வருஷம் 16 பூர்ணம் விஸ்வநாதன் வீடு போல இருந்தது! கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்து மனதில் ஒரு பாஸிட்டிவான எண்ண அலைகள் வந்து மோதியது. கோவில் இப்போது கட்டுமான பணிகள் நடந்து ��ருவதால் அதற்கு நன்கொடை தரமுடியுமா என வற்புறுத்தாமல் கேட்டனர். அதை முடிந்த அளவிற்கு செய்து அம்மனை மனமுருக வேண்டி கோவிலுக்கு வெளியே வந்தோம்!
வெளியே கோவிலுக்கு அடுத்த காம்பவுண்ட்டில் ஒரு பெரிய கொட்டகையில் நான்கடி நீள அழகிய தந்தம் கொண்ட 10 அடி உயர யானை ஒன்று கடிகாரத்தின் பெண்டுலம் போல அதன் தலையை வலமிடமாக ஆட்டியபடி நின்றது! அதை போட்டோ எடுக்கச் சென்ற என்னைப் பார்த்ததும்… என் மீது தன் தும்பிக்கையால் ஒரு தென்னை மட்டையை வாரி எடுத்து வீசியது!
யானை மஸ்த்தில் இருக்கிறது என்றனர்! என் உடல் நலம் குணமாக மனமுருக வேண்டுதல் வைத்த ஶ்ரீலக்ஷ்மி வெள்ளியில் செய்த இரு கால்களை உண்டியலில் சேர்த்தாள். அங்கிருந்து கிளம்பும் போது ஒரு புதிய வணிகம் கிடைத்தாக எனக்கு செய்தி வர இதெல்லாம் காக்கா உட்கார பனம் பழம்னு என் பகுத்தறிவு சொல்ல.. அந்தப் புதிய நிறுவனத்தின் பெயர் ஶ்ரீபகவதி டிரேடர்ஸ்!!! 🙏🙏🙏
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
karuppuezhutthu-blog · 3 months ago
Text
சீமான்: ஒற்றைப் பனை மரம் படத்திற்கு எதிர்ப்பு ஏன்? - என்ன சர்ச்சை?
கட்டுரை தகவல் புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்? புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன்…
0 notes
thenewsoutlook · 4 months ago
Text
மிராக்கல் மருத்துவ மையம் சார்பில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கு
பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் மத்திய அரசின் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு,கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்…
0 notes
sirukathaigal · 8 months ago
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே! - வளர்கவி
குடிவரவாளன் 10-12 - வ.ந.கிரிதரன்
கருந்துளையும் கருங்காலி மாலையும் - அகிலா கிருஷ்ணமூர்த்தி (அறிமுகம்)
காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் 5-6 - ரமணிசந்திரன்
தரி-சினம் - எஸ்ஸார்சி
லெட்சுமி - இரா.கலைச்செல்வி
ஏலியன் சுற்றுலா வாசிகள் - நஞ்சப்பன் ஈரோடு
பேராசைக்கு ஓர் ஊர்… - வாசுகி நடேசன்
நாக மாணிக்கம்! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
சேற்றில் மனிதர்கள் 7-9 - ராஜம் கிருஷ்ணன்
0 notes
minnambalam · 11 months ago
Text
0 notes
newstodaysworld · 1 year ago
Text
Check out this post… "கரூர் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் இரண்டு நாள்முகாமை குளித்தலை எம் எல் ஏ மாணிக்கம் துவக்கி வைத்தார் !".
0 notes
eyeviewsl · 1 year ago
Text
Coca-Cola அறக்கட்டளையானது தனது பணியினை மட்டக்களப்பினில் இருகக்கூடிய நீர்த்தேக்கங்களில், அதன் தட்டுப்பாட்டினை நீக்குவதாகும்
Coca-Cola அறக்கட்டளையானது தனது பணியினை மட்டக்களப்பினில் இருகக்கூடிய நீர்த்தேக்கங்களில், அதன் தட்டுப்பாட்டினை நீக்குவதாகும்
Coca-Cola அறக்கட்டளையானது, தனது நடைமுறைப் படுத்தும் உதவியாளனான We Effectஇற்கு நன்கொடையினை   வழங்கீடு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான நீர் முகாமைத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பினை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களை வெற்றிகரமாகப் புனரமைத்தல் தொடர்பான தனது சமீபத்திய திட்டத்தினை வெளியிட்டது. திக்கனை குளம், மாணிக்கம் குளம் மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
newssuvidhaaestore · 2 years ago
Text
”மதவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்வார்"- மாணிக்கம் தாகூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது ரெட்டியபட்டி கிராமம். இங்கிருக்கும் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சுகந்தி. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செவிலியராக பணியாற்றி வரும் இவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு கைகளினால் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நைட்டிங்கேல் விருதினை சமீபத்தில் பெற்றார். மாணிக்கம் தாகூர் எம்.பி. இதனை அறிந்த…
Tumblr media
View On WordPress
0 notes
madhansband · 2 years ago
Text
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : Amma Endrazhaikatha Movie/Album Name : Mannan 1992 Star Cast : Rajinikanth, Kushboo and Vijayashanthi Singer : K. J. Yesudas Music Composed by : Ilayaraja Lyrics written by : Vaali
அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல் வரிகள்:
ஆண்: {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2) நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஆண்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண்: அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
ஆண்: பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
ஆண்: அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே.
ஆண்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண்: பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
ஆண்: விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஆண்: ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஆண்: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே பிறந்தேனே.ஏ.
ஆண்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது..
ஆண்: {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
Please Like, Share & Subscribe and support us to entertain you more with our musical performances…
MadhansBand #rajinikanth #rajinikanthsongs #ammasongs #ammasongstatus #weddingmusicband #musicband #wedding #marriageorchestra #weddingorchestra #instrumental #corporateevents #tamilwedding #weddingmusicband #weddingentertainment #weddingevent #weddingsongstamil #flute #fluteinstrumental #saxaphone #violinbgm #violincover #violininstrumental #violinweddingbgm #weddingbgm #tamilwedding #weddingplanners #events #eventmanagement #eventmanagementcompany #eventmanagers #chennaimusicband
1 note · View note
mykovai · 2 years ago
Text
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை 
கோவை, கோவை ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை  சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம் .  சந்திர பாலன் லேத் மெஷின் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சந்திரபாலன் மாணிக்கம் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக மாணிக்கத்தின் சம்மதத்துடன்  கல்பனா என்ற பெண்ணை சந்திரபாலன் திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years ago
Text
அண்ணாமலை தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிறார்- மாணிக்கம் தாகூர்
அண்ணாமலைக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சார்ந்த அனைத்து அமைச்சர்களும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉப்பிலிகுண்டு,  நெடுமதுரை, தூம்பகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் , 100 நாள் வேலை திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் சந்தித்து…
Tumblr media
View On WordPress
0 notes
nidurali · 2 years ago
Text
Watch "மனிதரில் மாணிக்கம் மாநபி நாதர் 'ஸல்'" on YouTube
youtube
0 notes
karuppuezhutthu-blog · 4 months ago
Text
சோஃபி பூன்ஸ்: மாணிக்க கல்லை ஆய்வகத்தில் உருவாக்கிய பெண் ஆய்வாளர் - ஒரு சிறு துகள் கல்லானது எப்படி?
பட மூலாதாரம், University of the West of England படக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுரை தகவல் செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில்நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான ச��ழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில்…
0 notes
tamilnewspro · 2 years ago
Text
செய்தித்துறையின் பாடநூல்- செய்தியாளனுக்கு ஒய்வு இருக்கவே கூடாது என்று வாழ்ந்துகாட்டியவர்
செய்தியாளனுக்கு ஓய்வு இருக்கக்கூடாது என்று வாழ்ந்துகாட்ட���ய மாணிக்கம், மரணத்திற்குப் பின்னரான காலத்திலும் ஒரு செய்தியாளனின் எழுத்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஊடகத் தொழில் மேன்மையையும் விட்டுச் சென்றிருக்கிறார் பிராந்தியச் செய்தியாளான் என்ற படி நிலையைக் கடந்து, தேசிய மற்றும் சர்வதேசச் செய்தியாளான் என்ற தரத்துக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். பிராந்தியச் செய்தியாளர்கள்தான் தேசிய மட்டத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
sirukathaigal · 8 months ago
Text
நல்வழிச் சிறுகதைகள் 2 - நாரா.நாச்சியப்பன்
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
நல்வழிச் சிறுகதைகள் - இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.
பொருளடக்கம்
1. மலை நாட்டு வீரன் 2. நல்லவர் நமசிவாயம் 3. வீரன் திருமாவலி 4. வல்லவன்பட்டினத்து மல்லன் 5. வாதுக்கு வந்த புலவர் 6. தம்பி மாணிக்கம் 7. நீராம்பல் பூ 8. பாரிக்கு நிகரானவன் 9. இளைஞன் எழுதிய கவிதை 10. இளநீர் குடித்த இளைஞன் 11. எலி வேட்டையும் புலி வேட்டையும்
Tumblr media
0 notes
venkatesharumugam · 2 years ago
Text
“வெங்கி ரு(ர)சிக்கிறான்”
1. பிரியாணி
சீரகச் சம்பா, பாஸ்மதி இந்த 2 அரிசிகளில் சீரகச் சம்பா பிரியாணி தான் பிரியாணிகளின் பேரரசன். பாஸ்மதியை பொறுத்தவரை பிரியாணியின் ருசி சீரகச் சம்பாவிற்கு இணையாக எப்போதும் இருந்ததில்லை! சீரகச் சம்பா பிரியாணி சூடாகவோ கொஞ்சம் ஆறியோ இருந்தாலும் ருசி மாறாது! பாஸ்மதி அப்படி அல்ல கொஞ்சம் சூடு ஆறினாலும் பாட்ஷா மாணிக்கம் ஆவது போல ரொம்ப அமைதியாகிவிடுவார்!
ருசியும் சிறப்பா இருக்காது! பாஸ்மதி லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் போல பிரியாணியின் மசாலா பாடத்தை முழுவதும் உள் வாங்கிக்க மாட்டார்! மேம்போக்காகத்தான் வாங்கிப்பார்! சீரகச் சம்பா இதில் படு ஸ்மார்ட்! உள்ளதை உள்ளபடியே உள்வாங்கி அதில் அவர் குணத்தையும் சேர்த்து பிரமாதமான அவுட்புட் தருவார்! எனவே பேசிக்கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ பாஸ்மதியை சாப்பிடக்கூடாது சட்டுன்னு சூடு ஆறுவதற்குள் உண்ணவேண்டும்!
நாம ரசிச்சு சாப்பிடுறதை பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்கோம்! எனவே இந்த அவசர அடி பாஸ்மதியை வழியனுப்பிவிட்டு வரலாமா! கிளம்புங்க மிஸ்டர் பாஸ்மதி டாட்டா.. பை பை.. வாங்க இப்போ சூடான சீரகச் சம்பா பிரியாணியை ரசிச்சு ருசிச்சு சாப்பிடப் போகலாம்! அரக்க பரக்க வராதிங்க, வேலை டென்ஷன், சீக்கிரம் நான் போகணும் என்பவர்கள் இதோ வாசலில் வண்டியேறிக் கொண்டு இருக்கும் பாஸ்மதியோடு நீங்களும் கிளம்பிவிடலாம்!
பிரியாணியை சாப்பிட வரும் போது நமது வாய் மட்டுமல்ல மனதும் குதுகலமாக இருப்பது நல்லது! தட்டோ அல்லது வாழை இலையோ தண்ணீர் தெ��ித்து வச்சுக்கோங்க! பிரியாணி சாப்பிடும் 10 நிமிடத்திற்கு முன்பு மிதமான சூட்டில் 2 ஸ்பூன் அல்வா அல்லது கேசரி சாப்பிடுவது (ஸ்வீட் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கக் கூடாது) மிகச் சிறந்த வார்ம் அப் ஆகும்! இலையில் தயிர் பச்சடி, முட்டை, மற்ற சைடிஷ் எல்லாம் வச்சிட்ட���ங்களா!
குட்! ஒழுங்கா கையை வச்சிகிட்டு சும்மா இருக்கவும்! பச்சடியை தொட்டு நக்குவது, சிக்கனை கொறிப்பது, முட்டையை விண்டு ருசிப்பது இப்படி எல்லாம் எதையும் டேஸ்ட் பார்க்கக் கூடாது! இலை/தட்டில் சூடான சீரக சம்பா பிரியாணியை அளவாக வாங்குங்க! தட்டிலோ இலையிலோ முழு இடமும் பிரியாணிக்கு என்பது போல நிரப்பக்கூடாது! தயிர் வெங்காயம், தால்ஸா இவற்றிற்கும் சரியான இட ஒதுக்கீடு தேவை என்பதால்.!
சைவ சாப்பாட்டில் நாம் சாம்பார்ருக்கு மட்டும் வாங்கும் அளவு சாதத்தின் அளவே (கொஞ்சம் கூடலாம்) பிரியாணியை வாங்கவும், பிரியாணியில் மினிமம் 3 கறி துண்டுகளாவது இருப்பது அவசியம்! இப்போது ஒரே ஒரு கரண்டி கறி இல்லாத தால்ஸாவை மட்டும் பாதி பிரியாணியின் மீது அபிஷேகம் செய்யவும். கறியோடு ஒரு கரண்டி தால்ஸாவை பிரியாணிக்கு 2 இஞ்ச் இடைவெளியில் வலது பக்கம் நிலை நிறுத்தவும். தால்ஸாவில் இருந்து சரியாக..
ஒன்றரை இஞ்ச் இடம்விட்டு தயிர் வெங்காயத்தை வைத்துக் கொள்ளவும்! அவித்த முட்டை மீது கால் கரண்டி தால்ஸாவை ஊற்றி குளிப்பாட்டிவிடவும். தால்ஸாவும் தயிர் வெங்காயமும் ஒரே திசையில் இருப்பது முக்கியம்! இப்போது குழம்பு படாத சூடான பிரியாணியை ஒரு கறித்துண்டோடு எடுத்து தேவைப்படும் அளவு தால்ஸாவில் ஒரு பிரட்டு பிரட்டி இதன் மீது தயிர் பச்சடியை சிறிது அள்ளி வைத்து அப்படியே அதை சாப்பிடவும்! இப்போது..
உங்கள் வாய்க்குள் சூடான பிரியாணி, மட்டன் துண்டு, தால்ஸா, தயிர் பச்சடி அனைத்தும் சங்கமமாகியிருக்கும்! பிரியாணியின் சூடும் அதன் மசாலா காரமும் கன்னத்தின் உட்பரப்பில் பரவும்! நன்கு ரசித்து இதை மென்று விழுங்குங்கள்! பாதியை விழுங்கும் போதே இடையிடையே தால்ஸாவின் எலும்புக் கறி, சிக்கன் 65, முட்டை போன்ற தொடுகறிகளை உள்ளே அனுமதியுங்கள்! பெரிய நல்லி எலும்பையோ அல்லது சிக்கன் லெக் பீஸையோ இப்போது..
நீங்கள் ருசிப்பதில் ஆர்வம் காட்டக்கூடாது! அதை நீங்கள் ருசிக்கும் நேரத்தில் பிரியாணியின் சூடு ஆறிவிடும்! பெரும்பாலும் எலும்பில்லாத கறியை பிரியாணியோடு சாப்பிட்டு விட்டு எலும்புடன் சாப்பிடுவதை கடைசியாக வைத்துக் கொள்ளவும்! எலும்பு அல்லது லெக்பீஸ் கறிகளை முடிந்தவரை தனியாக பிரித்து வைத்துவிட்டு பிறகு கடைசியாக 1 கரண்டி பிரியாணியை சூடாக வாங்கி சாப்பிடுவது சாணக்கியர்களின் செயலாகும்!
மட்டனோ, சிக்கனோ தால்ஸா/சால்னாவை குழ���த்து அடிப்பது தவறு பிரியாணி மீது அவை பரவலாக இருந்தாலே போதும்! பிரியாணியை முதல் ரவுண்டில் எலும்பில்லாத கறியோடு துவக்குதல் நலம். எத்தனை ரவுண்டு பிரியாணி வாங்கினாலும் குறைவாக வாங்கி நிறைவாக உண்ணுதல் அழகு! பிரியாணி குழைந்து இருக்கக் கூடாது, மசாலா அளவாக இருக்க வேண்டும், இறைச்சி நல்ல பக்குவத்தில் வெந்திருக்க வேண்டும்.
தயிர் வெங்காயம் புளிக்கவே கூடாது! தால்ஸா காரமாக இருக்கக்கூடாது , சால்னா சிறிது காரமாக இருக்கவேண்டும் இதெல்லாம் பிரியாணிக்கு எழுதப்பட்ட டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகள்! சுடச்சுட கை பொறுக்க முடியாத சூட்டில் சில விருந்துகளில் பரிமாறுவார்கள்! இப்போது ஆட்டமுறையை மாற்றிடுங்கள்! இப்போது முதலில் எலும்புக்கறிகளை லெக் பீஸ்களை ருசிக்கலாம். பிறகு பிரியாணியோடு களமாடலாம்!
மட்டன் பிரியாணிக்கு கறி ரோஜாபூ நிறத்தில் வெந்திருக்க வேண்டும்! நல்லி எலும்பை நம் கையால் எடுத்து உதறினாலே மேலிருக்கும் கறி கழன்று தனியே விழவேண்டும்! சிக்கன் எனில் நாம் தொட்டதும் கறி நம் விரல்களை பற்றிக் கொள்ள வேண்டும்! நாட்டுக் கோழி மட்டும் கொஞ்சம் திடமாக இருக்கும்! அதையும் சமைக்கும் விதத்தில் சமைத்தால் கறி கழன்று வரும்! பிரியாணி ருசிப்பதற்கு முன் அல்வா சாப்பிடுவதன் ரகசியம் என்ன தெரியுமா?
பிரியாணி மட்டுமல்ல மசாலா மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் முன் இனிப்பு சாப்பிடுவது உங்கள் நாவின் ருசி மொட்டுகளை நல்ல நிலைக்கு கொண்டு வரும்! உமிழ்நீர் சுரப்பை சீராக்கும்! பிரியாணி சிறிது மசாலா தூக்கலாக தெரிந்தாலும் உங்கள் நாக்கு டிடெக்டர் அதை கண்டுபிடித்துவிடும்! முக்கியமாக உங்கள் பசியுணர்வைத் தூண்டும்! இப்படி பிரியாணி சாப்பிட்டு விட்டு சொல்லுங்க “வேற லெவல்னு” அப்போ அது பொருந்தும்!
ஏவ்வ்வ்வ்வ்வ்
Tumblr media
1 note · View note