#புனித நதி
Explore tagged Tumblr posts
Text
ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் 64 பேர் காயமடைந்துள்ளனர்
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள செனானி நகருக்கு அருகே புனித தேவக் ஓடையின் மேல் உள்ள தரைப்பாலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்ததில் குறைந்தது 64 பேர் காயமடைந்தனர், அவர்களில் கிட்டத்தட்ட 24 பேர் படுகாயமடைந்தனர். செனானி சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் பர்வேஸ் அகமது நாயக் கூறுகையில், தாவி நதி புனித நீரோடையுடன் கலக்கும் பெனி சங்கம் என்ற இடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த…
View On WordPress
0 notes
Text
மகர சங்கராந்தி 2023: கங்காசாகரில் புனித நீராடும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் | இந்தியா செய்திகள்
மகர சங்கராந்தி 2023: கங்காசாகரில் புனித நீராடும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் | இந்தியா செய்திகள்
மேற்கு வங்காளம்ஹூக்ளி நதி மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமமான கங்காசாகரில் மகர சங்கராந்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள் என்று மேற்கு வங்க அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். புனித நீராடுவதற்கான நல்ல நேரம் சனிக்கிழமை மாலை 6.53 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை தொடர்ந்தது. கடந்த சில நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை மாநிலம் மற்றும் நாடு…
View On WordPress
0 notes
Text
புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!
[matched_content Source link
View On WordPress
#ganges#holly river#river ganga#women gangraped#இநத#எஙக#கஙகயல#கங்கை#கணடரகக��த#சனற#தசம#பதம#பலயல#பனத#பாட்னா#புனித நதி#மழகம#வனமறய
0 notes
Text
கவ்ஸர் நதி (ஹவ்ளுல் கவ்ஸர்)
🍁
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான நற்பாக்கியங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்காக சுவர்க்கத்தில் கவ்ஸர் என்னும் நதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.
இது குறித்து திருக்குர்ஆனில், “(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக் கின்றோம்.” என்று கூறப்பட்டுள்ளது. ( ஸூரத்துல் கவ்ஸர், வசனம் – 1. )
“கவ்ஸர் என்றால் என்ன?” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “(அது) சுவர்க்கத்திலுள்ள ஓர் ஆறாகும். அதனை என் இறைவன் எனக்காக கொடுத்திருக்கிறான். அதன் தண்ணீர் பாலைவிட அதிக வெண்மையான��ாக இருக்கும். அதன் சுவையோ தேனைவிட அதிக இனிப்பானதாக இருக்கும். அதில் பறவைகளும் இருக்கின்றன. அவற்றின் கழுத்துகள் ஒட்டகத்தின் கழுத்துகளைப் போல் இருக்கும்” என்று கூறினார்கள். அப்போது உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், “இந்தப் பறவைகள் மிகவும் உல்லாசமாக இருக்கும்” என்று கூறினார்கள். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “அவற்றை உண்பவர்கள் அவற்றை விட உல்லாசமாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ. )
கவ்ஸர் நதியின் பரப்பு, ஒரு மாத நடை தூரமுடையதாக இருக்கும். அதன் இரு மருங்குகளிலும் விலை உயர்ந்த கற்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் இருக்கும். அதன் நீர் பாலைவிட அதிக வெண்மை யானதாகவும், கஸ்தூரியை விட அதிக வாசமுள்ளதாகவும் இருக்கும். அதன் நீரை அருந்தியவர்கள் பின்னர் ஒருபோதும் தாகிக்க மாட்டார்கள். அங்கு நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான பாத்திரங்கள் இருக்கும். இவ்விவரங்களைக் கூறும் ஹதீஸ்களில் சில:
‘நிச்சயமாக நாம் உமக்குக் கவ்ஸரைக் கொடுத்திருக்கிறோம்’ என்பதைக் குறித்து அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் வினவப்பட்டார்கள். (அதற்கவர்) “அது ஒரு நதி. உங்களுடைய நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அது கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனுடைய இரு மருங்குகளிலும் துவாரமிடப்பட்ட மாணிக்கம் இருக்கிறது. அதனுடைய பாத்திரங்கள் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமானவை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள். நூல்: புகாரீ. )
“என்னுடைய ஹெளல் ஒரு மாதத் தூரமு(பரப்பளவு)ள்ளது. அதன் தண்ணீர் பாலினும் வெண்மையானது. அதன் வாடை கஸ்தூரியினும் அதிக வாசனையுள்ளது. அதன் கோப்பைகள் வானின் நட்சத்திரங்கள் போன்றவை. அதிலிருந்து அருந்தியவர் (பின்னர்) ஒரு போதும் தாகிக்க மாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியலலாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. )
“நாயகமே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை உள்ளன?” என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் “எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன. சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு அவருடைய இறுதிநாள் வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டு ஆறுகள் வருகின்றன. அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலா ஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும். அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட அதிக இனிமையாக இருக்கும்” என்று ��ூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம், திர்மிதீ. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தில் கவ்ஸர் நதியைக் கண்டிருக்கிறார்கள். இது குறித்த ஹதீஸ்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜூக்கு சென்ற போது (கூறிய விவரங்களில்) “நான் ஒரு நதியின் பக்கமாக அழைத்து வரப்பட்டேன். அதன் இரு மருங்குகளிலும் துவாரமுள்ள முத்துக் கூடாரங்களிருந்தன. ‘இது என்ன, ஜிப்ரயீல்?’ என்று கேட்டேன். ‘இது கவ்ஸர்’ என்று (அவர்) கூறினார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: ��ுகாரீ. )
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினருக்குக் கிடைக்கும். அவர்களின் எண்ணிக்கையும் மிகவும் கூடுதலாக இருக்கும். இது குறித்த ஹதீஸ்: “நிச்சயமாக எல்லா நபிமார்களுக்கும் ஒவ்வொரு ஹவ்ளு உண்டு. அங்கு அவரவரின் சமூகத்தினர் வருவார்கள். அன்றி, நிச்சயமாக அவர்கள் தங்களுக்குள் அவர்களில் எவர் (அதாவது எந்தச் சமூகத்தினர்) அதிகமாக வருகிறார்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வார்கள். மேலும், நிச்சயமாக நான் என்னுடைய ஹவ்ளில் அவர்களை விட அதிகமான பேர் வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரதுப்னு ஜூன்துப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ. )
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியமுடைய உம்மத்தினருக்கு விருந்தோம்புபவராக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இருப்பார்கள்! ஆயினும், இஸ்லாம் மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்தி, மாற்றங்களை உண்டு பண்ணியவர்கள் கவ்ஸர் நதியை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள்! இது குறித்த ஹதீஸ்கள்:
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜூன்துப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன். அப்பொழுது உங்களில் சிலர் என்னிடம் கொணரப்படுவீர்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்களின் பக்கம் குனியும் போது, அவர்கள் என்னை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள். அப்பொழுது நான், “இறைவனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே!” என்று கூறுவேன். அதற்கு, “நிச்சயமாக, இவர்கள் தங்களுக்குப் பின் என்னவென்ன புதுமைகளை மார்க்கத்தில் உண்டுபண்ணினார்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறப்படும். எனவே நான், “தூரமாகிவிடுங்கள்: தூரமாகிவிடுங்கள். எனக்குப் பின் (என் மார்க்கத்தை) மாற்றியவர்கள் (நீங்கள்) எனக் கூறுவேன்” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, தன்னுடைய ஹபீபு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் நம் அனைவருக்கும் கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்
0 notes
Text
கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை || Aadi Amavasai Kanyakumari Beach devotees not allowed
கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை || Aadi Amavasai Kanyakumari Beach devotees not allowed
கொரோனாவைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் நதி ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து…
View On WordPress
0 notes
Text
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம் குருபூர்ணிமை பூஜைகளுக்குப் பிறகு, புனித நதி காவேரிக்கு ஆரதி #பகவான் நித்யானந்த பரமசிவம் #கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்
http://gateway.nithyananda.org/kailaasaunion/
Books: books.nithyananda.org
Programs: programs.nithyananda.org
nithyananda.org
Nithyananda Pedia:nithyanandapedia.org
Kailaasa website:kailaasa.org
Nlighten Up:nlightenup.net
Enlighten app:https://apps.apple.com/us/app/nlighten/id1454489025
www.nithyananda.tv
Become a Kailaayavasi (resident of Kailaasa): http://kailaasavasi.kailaasa.org
0 notes
Photo
தொடர்ந்து கழிவுநீர் கலப்பு, துணிகள் வீச்சு தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் *சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதும், அழுக்கு துணிகள் வீச்சும் தொடர்கதையாவதால் இன்னும் 20 ஆண்டுகளில் நீரை பயன்படுத்த முடியாத நஞ்சாக மாறும் வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிக்கும் தாமிரபரணி புண்ணிய நதிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது. நதிநீர் பயன்பாட்டுக்காக அண்டை மாநிலங்களின் தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாதது, அனைவரது பாவங்களையும் தானே சுமந்து போக்கும் கங்கையே, தன்பாவம் நீங்க இங்கு புனித நீராடி செல்வது உள்ளிட்ட பல்வேறு புராண சிறப்புகள் தாமிரபரணியை சாரும். நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 120 கி.மீ. தொலைவு பாய்ந்து பல லட்சக்கணக்கான விளை நிலங்களை வளப்படுத்தி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடி���ீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. பல்லாண்டுகளாக பரந்து விரிந்து பாய்ந்த நதி, முறையான பராமரிப்பின்றியும், இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகளாலும் காலப்போக்கில் சுருங்கிக் கொண்டே வருகிறது. தாமிரபரணி சமதளத்தை தொடும் பாபநாசத்தில் துவங்கி புன்னக்காயல் வரையிலும் பல இடங்களில் தொழிற்சாலைகளின் கழிவும், குடியிருப்புகளின் கழிவுநீரும் ஓடைகள் வழியாக நேரிடையாக ஆற்றில் கலந்து பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர நதி முழுவதும் அமலைச் செடிகளும், சீமை கருவேல மரங்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்நதியில் பல இடங்களில் குளிப்பவர்களுக்கு தோல் வியாதிகளும், நீரை காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு உணவுக் குழாயில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர பல இடங்களில் விழிப்புணர்வின்றி ஒரு சிலரால் அழுக்கு படிந்த துணிகளும், குப்பைகளும் நதியில் கொட்டப்பட்டு வருகின்றன.தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை மகாபுஷ்கரணி விழா நடத்தப்பட்டது. இதனால் பாபநாசம் முதல் புன்னகாயல் வரை பல இடங்களில் ஆற்றின் கரையோரங்கள் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரால் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு மாதம் வரை சுத்தமாக பராமரிக்கப்பட்ட தாமிரபரணி ஆறு கழிவு நீராலும், ஆற்றில் வீசப்படும் குப்பைகளாலும், பழைய துணிகளாலும் மீண்டும் பாழ்பட்டு வருகிறது. பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பினரின் அக்கறையின்மையால் கழிவுநீர் நேரடியாக தாமிபரணி ஆற்றில் இணைகிறது. மேலும் கனரக வாகனங்கள், கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி சுத்தப்படுத்துகின்றனர். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த சுத்தம் தற்போது நதியில் இல்லை என நீரியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றுக்குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் கண்ணுக்கு முன்னே தாமிரபரணி நதி மாசுபடுவது குறித்து பாளை சதக்கத்துல்லா கல்லூரி வேதியியல் துறை பேராசிரியரும், நிலத்தடிநீர் குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருபவருமான கமாலுதீன் கூறுகையில், ‘‘பொதுவாக ஒவ்வொரு நதியிலும் இயற்கையாக நுண்ணுயிரிகள் நிறைந்து காணப்படும். இதே போல் தாமிரபரணியிலும் வரப்பிரசாதமாக உள்ள உயிரிகள், ஆற்றில் சேரும் குப்பைகள், கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததோடு கால்நடைகள் மற்றும் ஒரு சில வி��ங்குகளின் கழிவுகளும், சாக்கடை மற்றும் மனிதகழிவுகளும் அதிக அளவில் ஆண்டுக்கு ஆண்டு கலப்பதால் நதியின் பாதுகாப்பு படையாகத் திகழும் நுண்ணுயிரிகள் அழியும். பின்னர் படிப்படியாக தாமிரபரணி தண்ணீரே நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் நதியின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது’ என்றார். கடும் நடவடிக்கை தேவை தாமிரபரணிக்கு மகாபுஷ்கரணி விழா துவங்கும் முன் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் நதியில் மாசு கலக்காமலும், குப்பைகள் கொட்டாமலும் தடுத்து கண்காணித்தனர். ஆனால் புஷ்கர விழா நிறைவடைந்ததும் அவர்களே பல இடங்களில் கழிவுகளை நதியில் கொட்டி வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள பல நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இல்லை. கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் மறு பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டமும் செயல்படவில்லை. இதனால் நதியில் தினமும் பல லட்சம் லிட்டர் அளவிற்கு கழிவுநீர் கலப்பது வேதனையளிக்கிறது. இதுதவிர பல இடங்களின் ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து தனியார் தோட்டம் அமைத்துள்ளனர். செங்கல் சூளைகள் இயங்குகின்றன. சில இடங்களில் தோட்டங்கள் அமைத்து அதன் வழியாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகின்றனர். ஐகோர்ட்டில் வழக்கு தாமிரபரணி ஆறு முழுவதும் படர்ந்து காணப்படும், ஆகாயத்தாமரை, நீர்கருவை, வேலிகாத்தான் போன்ற செடிகள் அதிக அளவில் நீரை உறிஞ்சும் செடிகளாகும். இதன்காரணமாக ஆற்றில் ஓடும் நீரின் அளவு குறைவது மட்டுமல்லாமல் நீரின் தரமும் குறைகிறது. தேவையற்ற தாவரங்கள் ஆற்றின் குறுக்கேயும், கரை ஓரங்களிலும் வளர்ந்து நீரோட்டத்தை குறைக்கின்றன. தேவையற்ற தாவரங்களால், குப்பைக் கழிவுகளால் நோய் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டு பொதுமக்கள், கால்நடைகள், வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றவும், குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . Source: Dinakaran
0 notes
Text
Jagadeesh Krishnan psychologist and International Author
‘புஷ்கரம்’
என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
புனித நதிகளில் நடைபெறும்
கும்பமேளா.
‘மகாபுஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
கும்பமேளா.
பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும்.
குருபகவான்
கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.
நம் நாட்டில் உள்ள முக்கியமான
12 நதிகள்
12 ராசிகளாக சொல்லப்பட்டுள்ளன.
இராசி நதி
மேஷம் கங்கை
ரிஷபம் நர்மதை
மிதுனம் சரஸ்வதி
கடகம் யமுனை
சிம்மம் கோதாவரி
கன்னி கிருஷ்ணா
துலாம் காவிரி
*விருச்சிகம்*
*தாமிரபரணி*
தனுசு சிந்து
மகரம் துங்கபத்ரா
கும்பம் பிரம்மநதி
மீனம் பிரணீதா
குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ,
அந்த ராசிக்குரிய நதியில்
பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.
அப்போது
பிரம்மா
விஷ்ணு
சிவன்
தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர்.
இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்
மற்றும்
நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.
ஈசனால்
அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டதான் தாமிரபரணி நதி.
தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு
*தாம்பிர வர்ணி*
என்று முதலில்
பெயர் சூட்டப்பட்டது.
காலப் போக்கில்
அது
*தாமிரபரணி*
என்றாயிற்று.
அகத்தியருக்காக ஈசனால்
உருவாக்கப்பட்டு, ��ற்றாத
ஜீவ நதியாய்
ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன.
பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம்
*143 படித்துறைகள்* அமைந்துள்ளன.
இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கர்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம்.
0 notes
Text
‘புஷ்கரம்’
‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12வூ12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. ���ிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.
நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ராசி நதி
மேஷம் - கங்கை ரிஷபம் - நர்மதை மிதுனம் - சரஸ்வதி கடகம் - யமுனை சிம்மம் - கோதாவரி கன்னி - கிருஷ்ணா துலாம் - காவிரி விருச்சிகம் - தாமிரபரணி தனுசு - சிந்து மகரம் - துங்கபத்ரா கும்பம் - பிரம்மநதி மீனம் - பிரணீதா
குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.
ஈசனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி
சிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தனக்குத் தெரியாது. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார். உடனே, தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழி அகத்தியர் காலத்துக்கு முன்னரே இருந்தது என்பது இதனால் தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).
ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.
தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.
143 படித்துறைகள்
அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
விருச்சிக ராசியில் குருப்பெயர்ச்சி
திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம்.
23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.
இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விபரம் வருமாறு:-
தேதி (கிழமை) ராசி
1. 12.10.2018 (வெள்ளி) விருச்சிகம் 2. 13.10.2018 (சனி) தனுசு 3. 14.10.2018 (ஞாயிறு) மகரம் 4. 15.10.2018 (திங்கள்) கும்பம் 5. 16.10.2018 (செவ்வாய்) மீனம் 6. 17.10.2018 (புதன்) மேஷம் 7. 18.10.2018 (வியாழன்) ரிஷபம் 8. 19.10.2018 (வெள்ளி) மிதுனம் 9. 20.10.2018 (சனி) கடகம் 10. 21.10.2018 (ஞாயிறு) சிம்மம் 11. 22.10.2018 (திங்கள்) கன்னி 12. 23.10.2018 (செவ்வாய்) துலாம்
ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (த��்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.
தானம் கொடுத்தல்
இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ பரம தர்மம் எனப்படும். நல்ல பசுவைத் தானம் செய்வதால் மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிரார்த்தம் (திதி) கொடுத்தல்
இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.
நீராடல் விதிகள்
1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது. 2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும். 3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது. 4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. 5. நதியில் உள்ளம்குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘‘ஹரி, ஹரி’’ என்று சொல்ல வேண்டும். 6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.
7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. 8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும். 9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும். 10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது. 11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது. 12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம். திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமண மான வர்கள் அதி காலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.
தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்
1. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகர்):-
நவதிருப்பதிகளுள் ஒன்றான இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. அவர் 11 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார். குருவின் அம்சமாக ஆதிநாதப் பெருமாள்- ஆதிநாதவல்லி (குருகூர்வல்லி) இங்கே அமர்ந்துள்ளனர்.
2. முறப்பநாடு:-
தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலா யங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலும் நீராடுவது அதிக மகிமையானது.
குரு தோஷம் நீங்க
நவக்கிரகங்களில் குருபகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற இவ்விரு தலங்களிலும், தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்! வேணும் சுபம்!
0 notes
Text
மகா புஷ்கரம் விழா ! 144 ஆண்டுகளுக்கு பின் !
குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கன்னி ராசியில் இருந்து, காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது, நடத்தப்படுவது தான் காவிரி புஷ்கரம் விழா. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. மகா புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாக கருதப்படும். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். *புஷ்கரம் விழா :* நவகிரகங்களில் ஒருவரான வியாழன் ஒரு முறை பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். குருவின் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மன், குருவின் முன் தோன்றி அவரின் கோரிக்கையை கேட்டார். குரு, தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். பிரம்மனும் தருவதாக ஒப்புக்கொண்டார். பிரம்மனின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம், 'என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்" என, பிரம்மனிடம் வருந்தி கெஞ்சி கேட்டுக் கொண்டது. இதனால், பிரம்மன், குருவுக்கும், புஷ்கர தீர்த்தத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார். புஷ்கரமானது, குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம��� செய்வதுடன், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, புஷ்கரம் விழா, ஒவ்வொரு வருடமும், குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடப்பது வழக்கமானது. குருப்பெயர்ச்சி காலத்தில், அந்தந்த ராசிக்குரிய நதிகளில், 12 நாட்கள் பிரவேசம் செய்வதாக, புராணங்கள் கூறுகின்றன. *ராசிகளும் அதற்குரிய புண்ணிய நதிகளும் :* மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - பிரம்மபுத்ரா, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - சிந்து, மீனம் - பரணீதா ஆகிய நதிகளில், குரு பகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ, அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அந்த சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒன்றாக இருந்து, மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். *சிறப்பு :* 144 ஆண்டுகளுக்கு பின் வரும் மகா புஷ்கரம் விழாவை, காவிரி பாயும் எல்லா இடங்களிலும் கொண்டாடலாம். கன்னி, துலாம், விருச்சிக ராசியுடையோர், புனித நீராடுவதால் நல்ல பலன்களை பெறுவர். இவ்விழாவில் சிறப்பு ஹோமங்கள், வேத திருமுறை பாராயணங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், காவிரியில் ஆரத்தி வழிபாடுகள் நடைபெற உள்ளன. *பலன்கள் :* இந்த நாட்களில், மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால், துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு வாழ்வர். புஷ்கர காலங்களில், காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் மற்றும் பலவகை தோஷங்கள் நீங்கும். இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால், 3.50 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
0 notes