Tumgik
#பல் மருத்துவ மாணவர்கள்
totamil3 · 3 years
Text
மருத்துவ மாணவர்கள் அமைச்சரைச் சந்திக்கிறார்கள், உதவித் தொகை அதிகரிக்கும்
மருத்துவ மாணவர்கள் அமைச்சரைச் சந்திக்கிறார்கள், உதவித் தொகை அதிகரிக்கும்
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் துணைத் தேர்வைக் கொண்டு வருமாறு மாணவர்கள் கோரியுள்ளனர் தமிழக மருத்துவ மாணவர் சங்கத்தின் (டி.என்.எம்.எஸ்.ஏ) உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை மா. மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன். அமைச்சருக்கு ஒரு குறிப்பை சமர்ப்பித்த…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
எம்பிபிஎஸ் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்
எம்பிபிஎஸ் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்கள் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள…
View On WordPress
0 notes
sigappurojakal · 5 years
Text
புதிய கல்விக் கொள்கையும், திராவிட  வர்ணாசிரமும்.
புதிய கல்விக் கொள்கையும்,              திராவிட  வர்ணாசிரமும்.
.                     மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.
       மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களை பரிந்துரைக்கின்றனரே தவிர திட்டத்தையே கொண்டு வரக்கூடாது என  எதிர்க்கவில்லை.
       ஏன் தமிழ் நாட்டில் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....?  
       அங்கு தான் இருக்கிறது திராவிட வர்ணாஸ்ரம தர்மம்.
     வர்ணாஸ்ரமம் தெரியும். அது என்ன திராவிட வர்ணாஸ்ரமம்....? அதை இந்த பதிவின் இறுதியில் சொல்கிறேன். அப்போது தான் புரியும்.
----------------------
      புதிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் திரு மோடி டீ குடித்துக் கொண்டே பத்து நிமிடத்தில் எழுதி தயாரித்த ஒன்று அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
      கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் 2015 ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது.
          கடைநிலை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை கொடுப்பதற்காகவும் அதில் மக்களையும், செல்வந்தர்களையும் பங்குதாரராக்கி அவர்களையும் அதில் பங்கு பெறுவதற்கான கருத்து கேட்புகள் இணையதளத்திலும், நேரில் கருத்து கேட்பு க���ட்ட்கள் நடத்தியும் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டது.
    இதன் பின் 2015 மே மாதம் அமைச்சரவை செயலாளர் டி எஸ் ஆர் சுப்பிரமணியன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
             இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, "தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்" என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால்  2017 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.
---------------------
     இவ்வளவு நீண்ட கால ஆய்வுகள், தரவுகள், ஆலோசனைகள் பரிந்துரைளை எல்லாம் தாண்டி சமரப்பிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொளகையை எதிர்க்க என்ன காரணம்.....?
     இங்கு தான் திருட்டு திராவிடத்திற்கு புதிய கல்விக் கொள்கை தலையில் சராமரியாக இடியை இறக்குகின்றது.
      முழுமையான வரைவு இன்னும் வரவில்லை. வரைவின் சுருக்கம் தான் வந்துள்ளது அதற்கே இந்த கதறல்.
------------
     வரைவு X1 : தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பிரதமர் இருப்பார்.
      மேற்கண்ட பரிந்துரை அமலாக்கப்பட்டால் பணத்திற்காக பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் பதவிகளை கோடிகளில் விற்க முடியாது. இது திராவிட கட்சிகளுக்கு விழுந்த முதல் அடி.
         பரிந்துரை 1V : இது தொழிற்க்விக்கானது.  அனைத்து தொழிற்கல்வியும் உயர் கல்வி அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். தனித்து இயங்கும் சட்ட, மருத்துவ, பொறியியல், வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.
           மறுபடியும் ஒரு முறை நன்றாக மேலே உள்ளதை படித்து பார்க்கவும். புரிகிறதா....?
     அனைத்து தனியார் தொழிற்கல்வி அமைப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அரசின் கட்டுப்பாட்டில் வராத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படும்.
    தன்னாட்சி கல்லூரி, சுயநிதி கல்லூரி, தனியார்  பல்கலைக்கழகம் என்று லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு  தரமற்ற மாணவர்களை சேர்ப்பது, அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைத்து அவர்களை தேர்வு பெற வைத்து அனுப்புவது........
          மொத்தமாக எல்லாமே ஸ்வாகா...! இந்த வரைவால்  இதை விட ஒரு பெரிய விடிவுவும் தமிழகத்திற்கு கிடைக்கும். புறம்போக்கு அரசியல் வாதிகளுக்கும், கூத்தாடிகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது.
        தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் திருட்டு திராவிட அரசியல் வாதிகளுக்கும், அவர்களின் பினாமியாக உள்ள கல்வி தந்தைகளுக்கும் சொந்தம்.
     திருட்டு திராவிட அரசியலுக்கு காமதேனுவாக இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட காலியாகி விடும். பென்ஸ் காரில் வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் கல்வி தந்தைகளும், திராவிட கொள்ளையர்களும் தானாக பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.
------------------
பரிந்துரை 3 : இது ஆசிரியர் கல்விக்கானது.
        ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். உயிர் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும். வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டு ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்வி பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும். தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும்.
        புரிஞ்சதா....? இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று நாலு குட்டிச்சவரை வச்சிக்கிட்டு, எழுத்து பிழையில்லாமல் எழுத கூட வக்கற்றவர்களை வாத்தியாராக்க முடியாது. பாடத்திட்டம் சல்லடையாக சலித்து எடுத்தவர்களைத்தான் ஆசிரியராக்கும்.
       தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து லட்சங்களையும், கோடிகளையும் அள்ளுவது யாரென்று பாருங்கள்..... திருட்டு திராவிடத்தின் கல்வித் தந்தைகள் பல் இளிப்பார்கள்.
-----------------
பரிந்துரை 1. f :
     ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.  குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி மதிப்பீடு செய்யப்படும். கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும், ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும் அவர்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்படும்.
        இந்த பரிந்துரையும் இதற்கு முன் நீங்கள் பார்த்த எண் 3 பரிந்துரையும் தான் கல்வித்தந்தைகள், ஜாக்டோ ஜியோ சோம்பேறி கும்பல் இரண்டையும் சேர்த்து கதற வைக்கிறது.
       முதலாவது இந்த பரிந்துரைகள் படி இனி தனியார் பள்ளிகளில் பத்தாவது படித்த கோமளவல்லிகளை டீச்சராக போட்டு மாதம் ஐந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் பப்பு வேகாது.
         சரியான கல்வி தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்ச்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும்.  முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்க பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள். பத்தாங்கிளாஸ் கோமளவல்லிகளை வேலைக்கு வைத்தால் அரசே அந்த பள்ளியை மூடி விடும்.
      இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர் வேலைக்கு வந்தவர் வகுப்பில் படுத்த��� தூங்க முடியாது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை  அவர்களின் வேலையை பணி மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனை தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும்.
       இதனால் தான் ஜாக்டோ ஜியோவும் திருட்டு  திராவிட கல்வி தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றனர்.
----------------
பரிந்துரை 4.J :
          2020 ம் ஆண்டிற்குள் தேசிய பாடதிட்ட வடிவமைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். இந்த பாடத்திட்டம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
            இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான கல்வியாளர்களை கொண்ட குழுவிடம்  பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது திருட்டு திராவிடத்தின் வரலாற்று பொய்களை குழந்தை பருவத்திலேயே திணிக்க முடியாது.
      புரியும்படியாக சொன்னால்....  வைக்கம் வீரர் பெரியார், யுனெஸ்கோ விருது, பெரியார் சாதியை ஒழித்தார்,  கருணாநிதி கலைஞர் என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்டார், மு.க.ஸ்டாலின் மக்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார்...  இப்படியெல்லாம் எதிர்காலத்தில் பாடம் எழுதி தமிழனை ஏமாற்ற முடியாது.
           இது திருட்டு திராவிடத்திற்கு விழுந்த சம்மட்டி அடி.  
-----------------
பரிந்துரை 8.a to l
        ( Note : இது நீண்ட பகுதியாக இருப்பதால் அதன் சாராம்சத்தின் அடிப்படையில் எழுதுகிறேன் )
      இது அரசு, மற்றும் தனியார் பள்ளிகளை ஆரம்பிப்பதில் அனுமதி வழங்குவது முதல்  அதை தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வுகள் செய்தும் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதற்கு தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.
        வீட்டு மொட்டை மாடியில் பள்ளி நடத்துவது, பத்தாவது பாஸ் கோமளவல்லி டீச்சர், விளையாட்டு மைதானம் இல்லை, கழிப்பறை இல்லை, குடி தண்ணீர் இல்லை, விளையாட்டு ஆசிரியர் இல்லை.....   அவ்வளவு ஏன் குட்டிச்சுவர் கூட இல்லாத பள்ளிகள்...   அத்தனைக்கும் இந்த பிரிவு ரிவிட் அடிக்கிறது.
           தனியார் பள்ளி முதலாளிகளும்,  அந்த பள்ளிகளில் டீச்சராக இருக்கும் பத்தாங் கிளாஸ்  கோமளவல்லிகளும் ஏன் கதறுகின்றனர் என புரிகிறதா...?
-----------------
     ஒட்டு மொத்த கல்வி வியாபாரிகளுக்கும் விழுந்த மரண அடிதான் புதிய கல்விக் கொள்கை -2019.
         இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, பெரியார் மண்.... எக்சட்ரா... எக்சட்ரா.... என வேசி ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களை திசை திருப்புகின்றனர்.
          திருட்டு திராவிடர்கள் கல்வியை வியாபார பொருளாக்கி, அதை விற்க வேண்டும் என்பதற்காகவே தரமற்ற சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர்.
       அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும், தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டனர்.
        அந்த தரமான கல்வியை கொடுக்கும் தனியார் கல்வி வள்ளல்கள் யார்...? திருட்டு திராவிடர்கள் தான்.
      சரி, திருட்டு திராவிடர்கள் மட்டும் எப்படி தரமான கல்வியை கொடுக்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்கள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாட திட்டத்தினை கற்பிக்கின்றனர்.
       என்ன ஒரு கொடுமையான விசயம் பாருங்கள்.   மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள திராவிட திருடர்கள்  மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்கு பணத்திற்கு விற்கிறார்கள்.
         அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி உண்டு. ஆனால் அரசு பள்ளிகளில் தரமான கல்வியும் இல்லை, மூன்றாவது மொழியும் இல்லை.
     இது அனைத்தையும் கோர்வையாக்கி பாருங்கள் ஒரு விசயம் மட்டும் தெள்ளத் தெளிவாக புரியும்.
          இலவசமாக நமது குழத்தைகளுக்கு  கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மூன்றாவது மொழியறிவை தடுத்து அதை பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதை சட்டப்பூர்வமாக்கி வைத்துள்ளனர்.
----------------
        மூன்றாவது மொழியை கற்கும் அளவிற்கு நமது குழந்தைகள் இல்லை என்று ஒரு அல்பத்தனமான  காரணத்தை முன்வைக்கின்றனர்.
         இதை விட சுத்த பைத்தியக்காரத்தனமான வாதம் வேறு எதுவும் கிடையாது. நடிகர் சூர்யாவின் குழந்தை மூன்று மொழி படிக்கும் போது குப்பன், சுப்பன்  வீட்டு குழந்தை படிக்காதா...? பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா...?
       தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் கடுமையாக எதிர்க்கின்றனர் இந்த நாசகாரர்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது.
       கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல....? இவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஏன் இப்படி சுற்றி வளைத்து சொல்ல வேண்டும்...? சமச்சீர் கல்வி என்பது கருணாநிதியின் முட்டாள்தனமான கல்விக் கொள்கை என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு....?
-----------------
           2019 - 20 பட்ஜெட்டில் தமிழக  பள்ளிக்கல்வி துறைக்கு  ஒதுக்கப்பட்ட தொகை ரூ.28,757.62 கோடி.  
      இதை ஒரு புரிதலுக்காக 28,000 கோடிகள் என வைத்துக்கொள்ளலாம்.
       தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்தது. 2015 புள்ளி விபரப்படி இது நாற்பத்தி ஐந்து லட்சமாக குறைந்து விட்டது. காரணம் தரமற்ற கல்வி என பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நிராகரித்து விட்டனர்.
        இது இப்போது மேலும் குறைந்திருக்கும். ஒரு கணக்கீட்டிற்காக 45,00,000 மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மாணவனுக்கு ஆகும் செலவை கணக்கிடுங்கள்.
     280,000,000,000 ÷ 45,00,000
                  = 62,222
       அதாவது என்னதான் குருட்டு கணக்காக பார்த்தாலும் ஒரு மாணவனுக்கு வருடம் ஒன்றிற்கு அரசு செலவிடும் தொகை அறுபதாயிரம்.
       ஒரு மாணவனுக்கு அறுபதாயிரம் அரசு செலவு செய்தும் அவன் போட்டி தேர்வுக்கு தயாராக முடியாத ஒரு தரமற்ற கல்வியைத்தான் கொடுக்க முடிகிறது என்றால் பிறகு எதற்கு சமச்சீர் கல்வி...? எதற்கு அரசு பள்ளிக் கல்வி துறையை நடத்த வேண்டும்....?
     இதில் பாதி தொகையை  அதாவது முப்பதாயிரத்தை மாணவனிடம் கொடுத்தால் அவன் தனியார் பள்ளியில் சேர்ந்து தரமான கல்வியை பெற்று விட்டு போகிறான். அரசிற்கும் வருடத்திற்கு பதினான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.
      ஒரு விசயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.  கல்வியை மக்களுக்கு கொடுப்பதில் அரசு தோற்று விட்டது. கல்வித்துறையை நிர்வகிக்கும் தகுதியையும்,  தார்மீக உரிமையையும் திராவிட கட்சிகளின் அரசு இழந்து விட்டது.  
            இதற்கு பேசாமல் கல்வித்துறையையே திருட்டு திராவிடத்தின் கல்வி மாபியாக்களிடம்  ஒப்படைத்து விட்டு போய்விடலாம்.
--------------
    சரி இறுதி பகுதிக்கு வருகிறேன். இந்து வர்ணாஸ்ரமத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே திருட்டு திராவிடத்தின் உதவியுடன் கல்வித்துறையில் திராவிட வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கியுள்ளனர்.
          அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி   மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டு.
         வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தினர் மெட்ரிகுலேசன் மூலம்  தரமான கல்வியை ஆங்கில வழியில் பெறலாம்.
         குப்பன் சுப்பன் குடும்பத்தினர் தரமற்ற சமச்சீர் கல்வியை தமிழ் வழியில் படித்து மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல்  தலைமுறை தலைமுறையாக அரசியல் வாதிகளுக்கு கொடி பிடித்தும், அரசின் இலவசங்களை பெற்றும் பிழைக்க வேண்டும்.
    இது திராவிட சித்தாந்தத்தால் உருவான மூன்று வகை வர்ணங்கள்.
    இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழனை மடையனாக்கி வைத்திருப்பார்கள் என்பதையும் பார்ப்போம்.
0 notes
newsalai · 7 years
Text
மருத்துவ மாணவர்கள் தொடர் உண்ணாநிலை
மருத்துவ மாணவர்கள் தொடர் உண்ணாநிலை
சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழகத்திலுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 24 நாட்களாக மருத்துவக் கல்லூரி முன்பும் சென்னை, சிதம்பரம் என்று பல்வேறு இடங்களிலும் பல்வேறு வடிவங்களில்…
View On WordPress
0 notes
tamilsnow · 7 years
Text
நீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
      நீட் தேர்வு வழக்கில் திடீர் திருப்பமாக இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, திருச்சியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் மே 7-ம் தேதி நீட் தேர்வு…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
பல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்
பல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்
பல் மருத்துவ கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 1070 இடங்களில் 417 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை:
மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பு…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த கூடாது: மருத்துவர் சங்கம் எதிர்ப்பு பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து இச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தங்களது பயிற்சிக் கால உதவி ஊதியத்தை ( Stipend) உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதற்காகப் போராடி வருகின்றனர். தமிழகத்தை தவிர, இதர பல மாநிலங்களிலும், மத்திய அரசின் நிறுவனங்களிலும் இந்த பயிற்சிக் கால உதவி ஊதியம் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே,தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையாக இந்த பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். போராடும் மாணவர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இந்தப் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். பல் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றால், அடுத்த ஆறு மாதம் கழித்து மறு தேர்வை எழுதி வெற்றி பெற்ற பிறகுதான் அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர முடியும் என்ற நிலை உள்ளது.இந்த "பிரேக் சிஸ்டம்(Break System)" முறையால் பல் மருத்துவ மாணவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, எம்.பி.பி.எஸ் படிப்பில் நடைமுறையில் உள்ளது போல் ,முதல் ஆண்டில் தோல்வியுற்றால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கூடுதல் தேர்வை (supplement) நடத்தி முதலாம் ஆண்டு பல் மருத்துவ மாணவர்கள் தங்களது பேட்ச் மாணவர்களுடன் அடுத்தக் கட்டப் படிப்பைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் படிப்புகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். இறுதியாண்டுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள் மறு தேர்வை நடத்திட வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்திடக் கூடாது.இது தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக் கணக்கான இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து விடும். ஏற்கனவே,அரசுப் பணியில் இருக்கும் இளம் மருத்துவர்களின் பதவி உயர்வையும் பாதிக்கும். சில துறைகளில் மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், அத் துறைகளில் மட்டும் ஓய்வு பெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்கும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.அதை விடுத்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சரியல்ல. இது பணி ஓய்வு பெறுதல் என்ற உரிமைக்கு எதிராக உள்ளது. ஓய்வு பெறும் வயது, நீட் தேர்வு , அகில இந்தியத் தொகுப்பு, இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றங்கள் எடுக்கும் போக்கு சரியல்ல. அது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பறிக்கும் செயலாகும். இப்போக்கு நமது அரசியல் சட்டத்திற்கு முரணானதாகும்.நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, கவலையளிக்கும் செயலாகும். மருத்துவப் படிப்பை முடித்தவுடன் , அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ,ஓராண்டு மட்டும் தற்காலிகமாக கட்டாய அரசுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது இளம் மருத்துவர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்துவிடும். இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கூடாது. எக்ஸிட் தேர்வை கொண்டுவரக் கூடாது. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வேண்டும். இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். Source: The Hindu
0 notes
tamilnewstamil · 6 years
Text
பல் இளிக்கும் 'டிஜிட்டல் இந்தியா' முழக்கம்.. அம்பலப்படுத்திய 'நீட்'!
பல் இளிக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’ முழக்கம்.. அம்பலப்படுத்திய ‘நீட்’!
தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ
சென்னை: நீட் தேர்வு எழுத ராஜஸ்தானுக்கு தமிழகத்தின் தென்கோடியில் இருந்து மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்கும், நிலையில்தான் டிஜிட்டல் இந்தியா உள்ளதா என்ற கேள்வி சராசரி மக்களுக்கு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும்…
View On WordPress
0 notes