#பண��ள
Explore tagged Tumblr posts
Photo
‘ரெப்போ’ வட்டி விகிதம் மாறாது யு.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு மும்பை: ‘ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாது’ என, யு.பி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ஏப்., 5ல், வட்டி விகித நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளது. அதில், தற்போதைய, 6 சதவீத, ரெப்போ வட்டியில் மாற்றம் ஏதும் இருக்காது என, தெரிகிறது.இதற்கு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதும், அதிசயத்தக்க அளவில் பணவீக்கம் குறைவாக உள்ளதும் காரணம் எனலாம்.நடப்பு ஜனவரி – மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 4.4 சதவீதமாக உள்ளது.வரும், 2018 -– 19ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், 3.6 சதவீதத்தை விட அதிகம். இத்தகைய அம்சங்களால், வரும் நிதியாண்டில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source: dinamalar
0 notes
Photo
ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும்: மெரில் லிஞ்ச் வங்கி கணிப்பு மும்பை : ‘ஏப்ரலில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு உள்ளது’ என, பேங்க் ஆப் அமெரிக்க மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது. இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு டிசம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 5.2 சதவீதமாக உயர்ந்திருந்தது. எனினும் இது, ரிசர்வ் வங்கியின் இலக்கான, 2 -– 6 சதவீதத்திற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் மற்றும் வீட்டு வாடகைப் படி தவிர்த்த, முக்கிய பிரிவுகளின் பணவீக்கம், 4.2 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்த இரு பிரிவுகளின் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதர பிரிவுகளில், விலை கட்டுக்குள் உள்ளதால், நடப்பு ஜனவரியில் சில்லரை விலை பணவீக்கம், 5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதனால், பிப்ரவரியை தொடர்ந்து, ஏப்ரலில் ரிசர்வ் வங்கி வெளியிடும் நிதிக் கொள்கையில், வங்கிகளின், ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source: dinamalar
0 notes
Photo
கடன், டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் மாறுவது ஏன்? வட்டி விகித போக்கு சேமிப்பு, முதலீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்துவதால், இதற்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வது நிதி திட்டமிடலில் உதவும்.கடந்த ஓராண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. வங்கிகள் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளன. இதன் காரணமாக மாத வருமானம் மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு இந்த நிதி சாதனங்களை நாடுபவர்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதம் குறையும் போக்கு காரணமாக முதலீட்டு உத்தியில் மாற்றம் தேவையா என, பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு முன், கடன் மற்றும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ரெப்போ விகிதம்வட்டி விகிதம் குறைவது அல்லது உயர்வதில் ரெப்போ விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிகளுக்கு வழங்கிய பத்திரங்களை நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் வாங்கி கொள்வது ரெப்போ பரிவர்த்தனை எனப்படுகிறது. இந்த பரிவர்த்தனை ரெப்போ விகிதம் அடிப்படையில் அமைகிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறும் விகிதம் என்றும் இதை புரிந்து கொள்ளலாம். பொருளாதாரத்தில் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் வங்கிகளை மையமாக கொண்டு நடப்பதால் ரெப்போ விகித மாற்றம் வட்டி விகிதத்தை பாதிக்கிறது.ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக விகிதத்தில் கடன் வாங்குகின்றன என பொருள். இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கிறது. இதற்கேற்ப டிபாசிட்களுக்கான வட்டியும் உயர்கிறது. அதே போல, அரசும் பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து டிபாசிட் பெறுகிறது. ரெப்போ விகிதம் உள்ளிட்ட வழிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் கொண்டே அரசு இதற்கான வட்டியை அளிக்கிறது. (வங்கிகள் ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப அரசுக்கு வட்டி அளிக்கின்றன). இந்த விகிதம் குறைவது அரசின் வட்டி அளிக்கும் ஆற்றல் மீது தாக்கம் செலுத்துகிறது. எனவே ரெப்போ விகிதம் ��ுறையும் சூழலில் வட்டியும் குறைகிறது.நாட்டின் பொருளாதாரத்தில் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளில் ஒன்றாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது. வங்கிகளின் வட்டி விகிதம் வர்த்தக நிறுவன முதலீடு மற்றும் தனிநபர் சேமிப்பு மீது தாக்கம் செலுத்துவதால், இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். இவை பரஸ்பரம் தொடர்பு கொண்டவை. பணவீக்கம்பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான விலையில் ஏற்படும் மாற்றத்தின் விகிதமே பணவீக்கமாக அமைகிறது. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு குறைகிறது. அப்போது அதிக வட்டி விகிதம் ஈடுசெய்கிறது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு பாதுகாக்கப்படுகிறது. இதனால் அதிக தாக்கம் ஏற்படுவதில்லை. வட்டி விகிதத்தில் இருந்து பணவீக்கத்தை கழிப்பதையே உண்மையான பலன் விகிதமாக கொள்ள வேண்டும். பொதுவாக பொருளாதார மந்தநிலை சூழலில் அரசுக்கான வருமானம் குறையும் வாய்ப்பு இருப்பதால், இதன் காரணமாகவும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையலாம். Source: dinamalar
0 notes
Photo
அள்ளித் தந்த ஆண்டு புதிய ஆண்டின் துவக்கத்தில், முதலீட்டாளர்கள் மனதில் புதிய உற்சாகமும், உத்வேகமும் தோன்றுவது வாடிக்கை. அதிக லாபம் ஈட்டிய ஆண்டுகளின் நிறைவில், அதிக எதிர்ப்பார்ப்பும், வேகமும் மிக இயல்பாக தோன்றிவிடும். அப்படிப்பட்ட தோற்றத்தோடு, 2017 முடிந்து, இந்த புதிய ஆண்டு துவங்குகிறது.என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தால், 2018ல் நம் முதலீடுகளை வெற்றி நோக்கி செலுத்த முடியும்? கடந்த ஆண்டு பார்த்த லாப குறியீடுகள் இந்த ஆண்டிலும் தொடருமா? நம் முதலீட்டு சிந்தனையில் என்னென்ன மாற்றங்களை உள்ளடக்க வேண்டும்? 2017 போல ஓர் ஆண்டு, முதலீட்டு வரலாறு காணாதது! அத்தகைய ஆண்டின் தொடர் ஆண்டு அதைவிட சிறப்பாக அமைய பல சிரமங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார வளர்ச்சி விரைந்து வேகம் பிடிக்க வேண்டும். அரசின் வருவாய் பெருக்கம் கூடி , நிதி பற்றாக்குறைகள் குறைய வேண்டும். பணவீக்கம் குறைவாக தொடர வேண்டும். உலக வட்டி விகிதங்கள் அதிகம் உயரக் கூடாது. கச்சா எண்ணெய் விலை விரைவில் வீழ்ச்சி அடைய வேண்டும். பங்கு லாபம் தொடர்ந்து வரிச் சலுகைகள் பெற வேண்டும்.இத்தனையும் ஒருங்கேற நடக்காது என்பது நாம் அறிந்ததே. 2017ம் ஆண்டிலும் இதை நம் நன்கு அறிந்து இருந்தோம். இருந்தும், சந்தைக்குள் அதிக பணம் புழங்கி, இந்த உயர்வு ஏற்பட நாமே காரணம் ஆனோம். இந்த புத்தாண்டிலும், இதே போல அடிப்படை பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லாமல் போனாலும், நம்மால் இது போன்ற முதலீடுகளை வெற்றி பெற செய்ய முடியுமா? அதில் வெற்றி காண்போமா?முதலீட்டில், வருங்காலத்தை பற்றிய ஆருடங்கள் பெரும்பாலும் பலிப்பதில்லை என்பதை மனதில் கொண்டு என் பதிவை தொடருகிறேன். சென்ற ஆண்டு துவக்கத்தில், பங்குகள் சார்ந்து உள்நாட்டு முதலீடுகளின் அபரிமித நகர்வு அமையும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மாறாக, பலரும் சற்று எச்சரிக்கையான அறிவுரைகளைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால், நடந்ததோ வரலாறு காணாத முதலீட்டு மாற்றமும், பங்குகளில் பணவரத்தும். இப்போது நிலைமை அதற்கு ந��ர் எதிர்மறை. எல்லோரும், 2018ல் எந்தெந்த பங்குகள் பன்மடங்கு உயரும் என்று ஆளுக்கொரு பத்து நிறுவன பெயர்களை எடுத்து நம்மை நோக்கி எறிகின்றனர். இதுவே நமக்கு சற்று சுதாரித்துக்கொள்ள ஓர் சிறந்த அறிகுறி என்றே தோன்றுகிறது.சந்தையில், அடுத்த ஆண்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று யாராலும் முன்கூட்டியே சொல்ல இயலாது. அதுவும், லாபத்தை அள்ளித்தந்த ஆண்டிற்கு பின் வரும் காலங்களை கடப்பதில் அதிக கவனம் அவசியம். கவனச் சிதறல்கள் நாம் எடுக்கும் முடிவுகளை பாதித்து, நஷ்டத்தில் முடியும் அபாயம் அதிகம். ஆகவே, லாப ஆருடங்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு, சற்று நிதானித்துக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.சில ஆண்டுகள் பங்கு லாபத்தை அள்ளி தரும் காலகட்டங்கள்... சில ஆண்டுகள் தேக்கநிலை காலங்கள். பொருளாதாரத்தின் வேகம் சார்ந்து மட்டுமே இவை தொடர்வதும் மாறுவதும். ‘அடுத்த ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சி பெருக்கம் காணும்’ என்ற எதிர்பார்ப்பு, 2017ல் சந்தை பெருக உதவியது. இப்போது, அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டிய ஆண்டாகவே, 2018 துவங்கி உள்ளது. பொருளாதாரம் எங்கு போகிறது என்பதில் முழு கவனம் செலுத்துவோம். முதலீடுகளை நிதானமாக முடிவெடுத்து முன்நடத்துவோம். வாருங்கள் பயணிப்போம்; ஒரு வரலாறு காணாத பொருளாதார காலகட்டத்தில். Source: dinamalar
0 notes