Tumgik
#நுழைவுச்சீட்டு
tamilansjob · 2 years
Text
TNUSRB கான்ஸ்டபிள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கவும்
TNUSRB கான்ஸ்டபிள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கவும்
TNUSRB Constable Exam Hall Ticket 2022 Download (www.tnusrb.tn.gov.in) | TNUSRB கான்ஸ்டபிள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் (தாலுகா & ஏஆர்) காலியிடங்களுக்கான நுழைவுச் சீட்டு/ஹால் டிக்கெட்டை ஆன்லைன் முறையில் வெளியிட உள்ளது. தமிழ்நாடு சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் அட்மிட் கார்டு 2022க்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இங்கே நிலையைப்…
Tumblr media
View On WordPress
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
சட்டப்பேரவை செயலக பிரிவு அலுவலர் முரளி காலமானார் தமிழக சட்டப்பேரவை செயலக பிரிவு அலுவலர் முரளி மாரடைப்பால் காலமானார். தமிழக தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை செயலகப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தவர் முரளி. வயது 46. சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது செய்தியாளர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்குதல், தேவையான கையேடு மற்றும் உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளி, நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ளஅவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. Source: The Hindu
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
tamilnewstamil · 6 years
Text
நாளை குரூப்-2 முதன்மைத்தேர்வு
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த 11.11.2018 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் 17.12.2018 அன்றுவெளியிடப்பட்டன. முதன்மை எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (நாளை) 15 மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணை யதளத்தில் (www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது.
இதுநாள் வரையில் முதன்மை…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years
Photo
Tumblr media
20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு: 301 மையங்களில் நாளை நடக்கிறது 20½ லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு 301 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சென்னை: தேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 1¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த தேர்வு நடக்கிறது. மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 301 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வை கண்காணிக்க 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்பப்பாடம், தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள், தவறுகள் குறைவதுடன், தேர்வு முடிவுகள் வெளியிட தேவையான கால அவகாசமும் குறையும். நுழைவுச்சீட்டில் தெரிவித்துள்ளபடி தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடை செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்கு பிறகு 5 நிமிடம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடங்களில் இருந்து தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினருக்கு கலெக்டர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், நினைவக குறிப்பு, புத்தகங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள் போன்ற எந்த சாதனங்களும் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை. கைக்கெடிகாரம், மோதிரம் போன்றவையும் அணியக்கூடாது. இதனை மீறினால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. தேவை ஏற்பட்டால் தேர்வர்கள் முழுமையான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இத்தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews Source: Maalaimalar
0 notes