#தலையங்கம்
Explore tagged Tumblr posts
ilakkuwebnews · 9 months ago
Text
0 notes
tamilnewspro · 2 years ago
Text
பிரபாஸின் ஆதிபுருஷ் புதிய ரிலீஸ் தேதி, படம் ஜூன் மாதம் வெளியாகும்
திரைப்படத் தயாரிப்பாளர் ஓம் ரவுத்தின் பிரம்மாண்டமான படைப்பு ஆதிபுருஷ் ஜூன் 16, 2023 அன்று 3டியில் திரையரங்குகளில் வரும் என்று தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். பாகுபலி நட்சத்திரம் பிரபாஸின் தலையங்கம் கொண்ட இப்படம், கடைசியாக ஜனவரி 2023 இல் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டது. முதலில் ஆகஸ்ட் 11, 2022 அன்று திரையரங்குகளுக்கு வரத் திட்டமிடப்பட்டது. டி-சீரிஸின் தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும்…
View On WordPress
0 notes
tamilpapernews · 8 years ago
Text
உத்தரப் பிரதேசக் கூட்டணிக் கணக்குகள் என்னவாகும்?
http://tamilpapernews.com/up-election-2017-with-akhilesh-rahul-show/
0 notes
khourpride · 5 years ago
Photo
Tumblr media
"சாதி ஒழிய வேண்டும் ➖ முடிந்தால் மதமும்... ஆனால் அது பெரிய கற்பனை... அது நடக்காது... இப்போதைக்கு சாதியை ஒழிப்பதை பற்றி சிந்திப்போம். நானும், நீயும் நண்பனே... நினைத்தால் முடியும்!" ➖ "தலையங்கம்" என்ற தலைப்பில் #கமல்ஹாசன் எழுதியது! #KamalHaasan the writer ✊🙏👌 https://www.instagram.com/p/B1iWPJpA_I8/?igshid=1f33woc0c98tc
1 note · View note
tntamilnews · 2 years ago
Text
ஆம் ஆத்மியின் முதல் பஞ்சாப் பட்ஜெட்டில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் | இந்தியா செய்திகள்
ஆம் ஆத்மியின் முதல் பஞ்சாப் பட்ஜெட்டில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் | இந்தியா செய்திகள்
சண்டிகர்: பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் திங்களன்று தனது முதல் பட்ஜெட்டை “புதியதாக” தாக்கல் செய்தது பஞ்சாப்“ஜூலை 1 முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 இலவச யூனிட் மின்சாரம், புதிய வரிகள் இல்லை மற்றும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு என்ற தேர்தலுக்கு முந்தைய தலையங்கம். ஆம் ஆத்மியின் மற்றொரு பெரிய வாக்குறுதி ��� ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ 1,000 – நிதியமைச்சர் ரூ 1.5 லட்சம்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years ago
Text
📰 சனாதன தர்மம் குறித்து ஆளுநரின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தி.மு.க
📰 சனாதன தர்மம் குறித்து ஆளுநரின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தி.மு.க
முரசொலி தலையங்கம் மதுரை ஆதீனம் அறிக்கைகளை வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறது முரசொலி தலையங்கம் மதுரை ஆதீனம் அறிக்கைகளை வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறது சந்தான தர்மம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது. திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த…
View On WordPress
0 notes
pooma-tamilchannel · 3 years ago
Text
ஆசிரியர் இன்றைய நிலை...?
தினமணியின் தலையங்கம்...
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.
தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவ���ம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத��துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.
நன்றி : தினமணி
Tumblr media
0 notes
internationaltradesideas · 4 years ago
Photo
Tumblr media
வெங்காய ஏற்றுமதிக்கான தடை குறித்து ஒரு பத்திரிகையில் வந்த தலையங்கம்.... http://coolbizidea.blogspot.com/2020/09/blog-post_56.html https://www.instagram.com/p/CFYxfA4hZ8q/?igshid=tglgegrqnalt
0 notes
velraam · 7 years ago
Text
பெரியாரின் சுய சாதிப் பாசம் - உண்மையா?
பெரியாரின் சுய சாதிப் பாசம் – உண்மையா?
Tumblr media
அண்மையில் ஒரு வலைப்பதிவைப் படித்தேன். அதில், பெரியார் (ஆந்திர/தெலுங்கு) நாயக்கர்களுக்கு – தம் சாதி மக்களுக்காகக் குரல் கொடுத்தார் (சுய சாதிப் பற்று காரணமாக என்பது குற்றச்சாட்டு ). அந்த வலைப்பதிவின் சுட்டி – http://vaettoli.blogspot.in/2017/04/blog-post_1.html மேற்கூறிய வலைப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட தலையங்கம் :👇 “நாயக்கம்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்” குடிஅரசு துணைத் தலையங்கம் – 15.11.1936…
View On WordPress
0 notes
ilakkuwebnews · 9 months ago
Text
0 notes
dailyanjal · 4 years ago
Text
சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார் பட்னாவிஸ்- சிவசேனா கட்சி பாராட்டு | sivasena praises fadnavis
சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார் பட்னாவிஸ்- சிவசேனா கட்சி பாராட்டு | sivasena praises fadnavis
[ad_1]
Tumblr media
மும்பை
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசுமேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, தேவேந்திர பட்னாவிஸ்கடந்த ஒரு மாத காலமாக…
View On WordPress
0 notes
tamilpapernews · 8 years ago
Text
ஜல்லிக்கட்டு போராட்டமும் தமிழக காவல்துறையும்
http://tamilpapernews.com/%e0%ae%9c%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/
0 notes
khourpride · 5 years ago
Photo
Tumblr media
#தலையங்கம் என்ற தலைப்பில் #கமல்ஹாசன் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது! "இதை நான் பேசிப் பார்த்துக் கொள்வதின் முலம் - இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் முலம் உண்மைகள் எனக்கு இன்னும் தெளிவாக புரிகிறது" 👉 #KamalHaasan #Flashback https://www.instagram.com/p/B0fNT-WgbO6/?igshid=gr1mhlt3014z
1 note · View note
totamil3 · 3 years ago
Text
📰 Pompeii dig அடிமைப்படுத்தப்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கையில் அரிய சாளரத்தை அளிக்கிறது | உலக செய்திகள்
📰 Pompeii dig அடிமைப்படுத்தப்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கையில் அரிய சாளரத்தை அளிக்கிறது | உலக செய்திகள்
HT தலையங்கம் மூலம், இந்துஸ்தான் டைம்ஸ், புது தில்லி ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மவுண்ட் வெசுவியஸ் வெடித்ததால் அழிக்கப்பட்ட ரோமானிய வில்லாவில் விதிவிலக்காக அரிதான ஒரு “அடிமை அறை”யின் எச்சங்களை அவர்கள் சனிக்கிழமை கண்டுபிடித்ததாக பாம்பீ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மூன்று படுக்கைகள், ஒரு பீங்கான் பானை மற்றும் ஒரு மர மார்பு கொண்ட சிறிய அறை, பண்டைய நகரத்தின் மற்ற…
View On WordPress
0 notes
bharathiputhakalayam · 5 years ago
Text
கோவிட்-19 மீது நாம் அடையப் போகும் வெற்றி அனைவருக்கும் சொந்தமானது! (மலையாள மனோரமா தலையங்கம்) | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு https://bookday.co.in/the-victory-we-are-going-to-achieve-on-covid-19-belongs-to-everyone-malayala-manorama-editorial/
#covid19 #coronavirus #bookday #bookreview #malayalamanorama #bharathiputhakalayam #ReadingExperience
0 notes
sigappurojakal · 5 years ago
Text
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது. தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா? இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்? அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு. மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது? மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும். தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது? ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது. அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிம���ளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும். திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை. ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும். நன்றி : தினமணி
0 notes