#எம். சஹ்ரின் அஹமட்
Explore tagged Tumblr posts
youthceylon · 5 years ago
Photo
Tumblr media
இனம் அறியாச் சுனாமி அனர்த்தங்கள் அனைவரும் சமம் - என்ற அர்த்தமுள்ள தத்துவத்தை உணர்த்தும். இனம், மதம், நிறம் பணம், பட்டம், பதவி கண்டம், நாடு, கட்சி சுனாமி அலைகள் இனங்கண்டு கொள்ளவில்லை. வெறிகொண்டு அலையும் வெடிகுண்டர்கள் இனத்தால் மதத்தால் இஸ்லாமிய முஸ்லிமானவனை பினாமிகள் போல் பின் துரத்தி துன்புறுத்தி அழிக்க துடிக்கின்றனர். நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
0 notes
youthceylon · 5 years ago
Photo
Tumblr media
உன்னால் முடியும் கடின உழைப்பு நேரிய சிந்தனை அர்ப்பணிப்பு வாழ்க்கையை படியுர்த்தும். அடி சறுக்கினும் - உன் பிடிவிடாதே பிடிவாதம் பிடி வெற்றியின் கடிவாளம் கைகளில் மடி மீது எதுவும் தானாக விழுவதில்லை திடமாக பாதையில் நில் தடைகளை தகர்த்தெறியவே வலிகளை வேதனைகளையும் துடைத்தெறிந்து உள்ளத்தில் உறுதி கொள் உன்னால் முடியும் நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
0 notes
youthceylon · 5 years ago
Photo
Tumblr media
மனிதம் மனிதம் மரணித்துப்போய் மானிடத்தில் இனவாதம் வீரியமாக வியாபித்து பிணந்தின்னிகளாக சுயநலத்திற்காக அலைகிறார்கள் மனிதர்கள் நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
0 notes
youthceylon · 4 years ago
Text
நிர்வாணமாய் வெள்ளை மாளிகை
உலகமே அமைதியாய் மெல்ல மெல்ல மீளச்சுழல இன்னுமொரு உயிர் கதரக் கதர பிரிகின்றது மானிடத்தில். உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு.
வெள்ளையனின் கறுப்புப் பாதணி கறுப்பனின் தலைமீது நசுக்க வெள்ளை மாளிகையின் கோமணம் அவிழ்ந்து உயிருடன் இழந்து நின்றது நிர்வாணமாய்.
மானிடமெங்கும் மனித உயிர்களை கொன்று குவித்து புனித நகரங்களை போர்க்களமாக்கி போலியாய் மனிதாபிமானம் என்ற பெயரில் லீலிக் கண்ணீர் விட்டு வளங்களை சுரண்டி…
View On WordPress
0 notes
youthceylon · 4 years ago
Text
உம்மாவின் நினைவுகள்
ஆராத காயங்கள் தீராத சோகங்கள் நீங்காத நினைவுகள் உம்மா
மௌத்து ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீரும் உண்மை அறிந்தும் நெஞ்சம் உங்கள் பிரிவின் துயரங்களை மறக்க மறுக்குதே
ரமழான் தலைபிறை பார்த்துமே தலைநோன்பு பிடிக்கவா என்பீங்க புதுச்சாரம் தச்சிவைச்சி முன் வரிசையில தாராவீகு தொழச்சொல்லி நீங்களும் முழுமையாக தொழுதீங்க
முப்பது ஜூசு ஓதி முழுசா முடிப்பீங்க தஹஜ்ஜது தொழுது விட்டு சுடச்சுட சஹர் சமைச்சி தந்திங்க
பெருநா…
View On WordPress
0 notes
youthceylon · 4 years ago
Text
கடைசிச் சொட்டு ஒட்சிசன்
கடைசிச் சொட்டு ஒட்சிசன் மனிதாபினத்தை மரணிக்கச் செய்தது மாயிக்கத் துடிதுடித்தஉயிருக்கு வாழ்க்கை வரம் கொடுத்தது
மனித நேயம் இறைவனின் தீர்ப்பு வாழ்வதற்கே வாழ்க்கை ஆயுள் முடிந்தால் இறப்பு நிச்சயம் விதிவரைந்த பாதையில் சிங்களம் தமிழ் முஸ்லிம் இங்கில்லை பிரிவினைகள்.
நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
View On WordPress
0 notes
youthceylon · 4 years ago
Text
கொடிய வறுமையின் கோரமான மறுமுகம்
கொடிய வறுமையின் கோரமான மறுமுகம்
பிரிந்த உயிர்கள் அறியத்தந்த செய்தி என்ன கொடிய வறுமையின் கோரமான மறுமுகமே
கொரோனாவின் கோரத்தாண்டவம் எங்கள் தன்மானத்தையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர் வாழ்தலுக்கான உரிமையும் பறித்துக் கொண்டது பரிதாபமாக.
சேர்த்து வைத்திருந்த சில்லறைகள் தீர்ந்து போக ஒரு வேளை சோறுதானே இந்த கதைகளின் சாராம்சம்.
அன்றாடம் கூலிக்குள் வாழ்க்கை திண்டாட்டம் ஊரடங்கி கிடக்கிறது நாங்கள் ஒருவேளை சோற்றுக்கு மன்றாட்டம் இனவாதிகளு…
View On WordPress
0 notes
youthceylon · 4 years ago
Text
GCE O/L பெறுபேறுகளின் பின் மக்கள் சிந்தனைக்கு
GCE O/L பெறுபேறுகளின் பின் மக்கள் சிந்தனைக்கு
பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றார்களும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உயர்தரத்தில் என்ன துறையில் கற்பது, எந்தப் பாடசாலையில் கற்பது என்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சகல வசதிகளும் உள்ள பெரிய பாடசாலைகளில் கல்வி கற்ற, நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாரிய பிரச்சனை அல்ல அவர்களது பாடசாலையில்…
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
நல்ல நட்பு
அவரவரின் அறிவு மட்டத்திற்கு ஏற்பவே புரிதல். புரிதலுக்கு ஏற்பவே நடவடிக்கைகள். நடவடிக்கைக்கு ஒப்பவே நண்பர்கள்
நண்பர்கள்தான் எம்மில் பிரதிபலிக்கும் பி��்பங்கள் அறிவு பெருகிட புரிதல் மட்டம் உயர்ந்திடும். புரிதலுக்கு தகுந்த செயற்பாடுகள் நல்லவையாவே இருக்கும்.
நல்ல செயற்பாடுகள் நல்ல நட்பைத் தரும். நல்ல நட்பை பெற்றவன் அனைத்தையும் பெற்றவன்.
நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
ரமழானே
எங்கள் பாவங்களை சுட்டெரிக்க வந்த ரமழானே! பொல்லாத நோயான கொரோனாவை இல்லாமல் ஒழித்திட வல்லவன் அல்லாவிடம் மன்றாடிடு எமக்கா
அருளாளன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற அல்லாஹ்வே! புனித ரமழானின் பொருட்டாளே எம்மை காத்தருள்வாய் நாயனே!
இதயத்தில் பாரம் இமயத்தின் உயரம் கூட்டான அமல்களெல்லாம் அடைபட்டு போச்சு பாவிகள் எங்களை மன்னித்திடு ரஹ்மானே!
பூட்டோடு பள்ளி வீட்டோடு நாங்கள் சாட்டோடு சாட்டாக நரகிற்கு ஆகின்றோம் கொள்ளி.
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
எமக்கான நேரத்தில்
“கோரோனா” போராட்டத்தின் கோரமுகம் சாதாரண மனிதாபிமான கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்டு வீண்பழி சுமத்தப்பட்ட வீரியமான பரம்பல் காரணிகளாய் அடையாளப் படுத்தப்பட்டோம்.
அள்ளி அள்ளி அளவில்லாமல் கொடுத்தோம் நல்ல பல சேவைகள் செய்தோம். கண்டுகொள்ளாத ஊடகங்கள் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் ஊதி பெருப்பித்து ஊடரங்கு சட்டத்திற்கு அடங்காதவர்கள் என்று முத்திரை குத்தினார்கள் ஒன்றாய் போராடவேண்டிய போர் களத்தில் ஓரங்கட்டி என…
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
COVID - 19 எண்ணப் பதிவுகள் - 01
COVID – 19 எண்ணப் பதிவுகள் – 01
முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி வைரஸ் “கொரோனா” உலகத்தை அப்படியே ஸ்தம்பிதமடையச் செய்து உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் ஏற்கனவே உலகம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியாது திண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அவற்றை எல்லாம் பின்தள்ளி இன்று முழு உலகிற்கும் ஒரு பாரிய சவாலாக மாறி இருக்கிறது இந்த “கொரோனா.” ஏலவே நாம் வாழுகின்ற இந்த பூமியில் எல்லாம் நாடுகளும் சந்தித்த…
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
கொரோனா
“கொரோனா” கோரப்பிடியில் சிக்கித்தவிக்குது வையகம் கொடுமை கொடுமை! மரணபயம் மானிடரை கொல்லாமல் கொல்கின்றது.
உலகமயமாக்கல் சுக்குநூறாகி தனிமைப்படுத்தல் தாண்டவமாடுகின்றது.
விந்தைகள் புரிந்து வியக்க வைக்கும் விஞ்ஞானமும் வைத்தியமும் வியந்து பார்க்கும்.
ஆட்கொல்லி நோயாமே, காத்துல பரவுதாமே, பாம்புக்கறி செஞ்ச வேலயாமே, அமெரிக்கா காரன்தான் பரப்புறானாம்.
அப்பாவி மக்களது அங்கலாய்ப்பு.. அதுக்குள்ள அரசியல் வேற.
“கெம்…
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
துணிவுடன் பணிவு
துணிந்து எழுந்து நில் கனிந்து வரும் இழந்தவைகள்
பணிந்து உன் பணி செய் அணிவகுத்து வரும் கழுத்திற்கு மாலை
குனிந்து செல் வாசல் பணிந்தவிடம் உம் பணிசிறக்கும்
மனிதம் காப்பது புனிதமாகும் இனிதாய் சிரிப்பதும் மனிதநேயமாகும்
நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
View On WordPress
0 notes
youthceylon · 5 years ago
Text
இறை நியதி
ஆழ் துளையில் உயிர் தொலைத்த அன்புச் செல்வமே ! எங்கள் துயில் தொலைத்தோம் உன் துயர் துடைக்க எம்மால் முடியலையே
தொழிநுட்ப யுகமென்று மார்தட்டிக் கொண்டோம் விழி பிதுங்கி அகம் வெதும்பி முகம் புதைத்து நிற்கின்றோம் தோற்றுப்போய
இறை நியதி இறையடி சேர்ந்தாய் கறைபடிந்த கரங்களுடன் தலைகுனிந்து நிற்கின்றோம்.
நாச்சியாதீவு எம் .சஹ்ரின் அஹமட்
View On WordPress
0 notes