Don't wanna be here? Send us removal request.
Text
இந்து வேதங்களில் இஸ்லாம் 1
http://www.islam-hinduism.com/ta/596-2/
இந்து வேதங்களில் இஸ்லாம் 1
இந்து வேதங்களில் இஸ்லாம் 1
இந்து வேதங்களில் இஸ்லாம் 1.அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான்.இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்ன���டைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.
குரான் கூறுவதை கேளுங்கள்:-
என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)
பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)
இதேபோல் பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)
சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)
குரான் கூறுகிறது; இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)
பகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)
திருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)
பகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)
ஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.
பகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
1 note
·
View note
Text
விண்ணுலகப் பயணம் 2
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-2/
விண்ணுலகப் பயணம் 2
விண்ணுலகப் பயணம் 2….
விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்��ுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மூஸா நபி, ஈசா நபி ஆகிய இரு தூதர்கள் அனுப்பப்பட்ட இரு வாய்ப்புகளையும் நீங்கள் முறையோடு பயன்படுத்திக் கொள்ளாமல் இறைவனின் சினத்திற்கு ஆளாகி இரண்டு முறை மாபெரும் தண்டனைகளுக்கு ஆளாவீர்கள். இப்போது மூன்றாவதும் கடைசியுமான வாய்ப்பு அண்ணலாரின் வடிவத்தில் நீங்கள் பெருவாரியாக வாழும் மதீனா நகர் நோக்கி வரவிருக்கிறது. இந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், உங்களுக்கு வேறொரு வாய்ப்போ, வழியோ பிறக்கப் பேவதில்லை என்றும், இறைவனின் மிகப் பெரும் தண்டனைக்கு ஆளாவீர்கள் என்றும் இஸ்ரவேலர்களுக்கு இந்த வசனங்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த விரிவுரையின் மற்றொரு பிரிவில் மனித இனத்தின்; பண்பாடுகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் புடம்போட்டு அவர்களைப் புனிதர்களாக மாற்றும் பதினான்கு அடிப்படைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இக்கருத்தினை அல்குர்ஆனின் 17ம் அத்தியாயத்தின் 23 முதல் 37 வரை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
1.பெற்றோர்களிடம் நன்றியாக நடந்து கொள்ளுதல்!
என்னைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக. (17:23,24)
2.கூட்டுவாழ்க்கையில் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாயிருத்தல்!
3.ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உதவியாயிருத்தல்!
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர் (17:26)
4.இறைவன் வழங்கிய செல்வத்தை வீண்விரயம் செய்யாதிருத்தல்!
விரயம் செய்வோர் ஷைத்தான்தளின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (17:27)
5.செல்வத்தை செலவிடுதலில் கஞ்சத்தனமோ, ஊதாரித்தனமோ இல்லாமல் நடுநிலைமையை கையாளுதல்!
உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்த��ல்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்! (17:29)
6.இறைவன் செய்திருக்கும் இயற்கையான வழிமுறைகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்!
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
7.வாழ்க்கைச் சிரமங்களுக்கு அஞ்சி மக்கள் தம் குழந்தைகளைக் கொல்லாதிருத்தல்!
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (17:31)
8.விபச்சாரம் மற்றும் அதனைத் தூண்டும் காரியங்களுக்கு அருகிலும் செல்லாதிருத்தல்!
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.(17:32)
9.ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது. ஆதலால் நியாமின்றி அதனைக் கொல்லாதிருத்தல்!
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார். (17:33)
10.அனாதைக் குழந்தைகளின் பொருளை பாதுகாத்தல் அநாதைக் குழந்தைகள் பருவம் அடைந்து தம்மைத் தாமே சுயபரிபாலனம் செய்து கொள்ளும் வரை அவர்களின் பொருளுக்குப் பாதுகாவலாயிருத்தல்!
அநாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! (17:34)
11.வாக்குறுதிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் மிகக் கவனாமாயிருத்தல்!
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (17:34)
12.அளவை நிறுத்தல்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல்!
அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. (17:35)
13.தீர்க்கமாக தெரியாதவரையில் சந்தேகமான விஷயங்ளின் அடிப்படையில் செயல்படாதிருத்தல்!
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.(17:36)
14.ஆணவமோ, மமதையோ, கர்வமோ கொள்ளாதிருத்தல்!
பூமியில் கர்வத்துடன் நடக்காத���! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (17:37)
இந்தப் 14 அறிவுரைகளும் அண்ணலாரின் பிரச்சாரக் கட்டத்தைக் கடந்து அரசியல்-ஆட்சி அதிகாரம் என்ற கட்டத்தை அடைவதற்காக அடியெடுத்து வைக்கப் போகும் தருணத்தில் அதற்கான அடிப்படைகளாகத் திகழ்கின்றன. எனவேதான் இப்போதனைகள் அண்ணலார் காணப் போகும் சமூக அமைப்புக்கான ‘மினி அமைப்பு நிர்ணயச் சட்டம்” போன்று அமைந்து விட்டிருக்கின்றன. இவைகளுடன் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது, முஸ்லிம்கள் அனைவருக்கும் ஐங்காலத் தொழுகைகள��யும் இறைவன் கட்டாயக் கடமையாக்கினான்.
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப் படுவதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:78)
எவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை உருவாக்கப் புறப்பட்டு விட்டனரோ அவர்கள், தமது செயல், எண்ணங்களுக்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதை தினமும் ஐந்து தடவை (தொழுகையில்) மறந்து விடாமல் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட இறையச்சமுடைய மனிதர்களால் தான் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது அருளப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்கிட முடியும். வல்ல அல்லாஹ் அத்தகைய இறையச்சத்தையும், மனத்துணிவையும், உளத் தூய்மையையும் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
அஜ்மல்
1 note
·
View note
Text
இறைவன் பார்க்கின்றானே..!
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%87/
இறைவன் பார்க்கின்றானே..!
இறைவன் பார்க்கின்றானே..!
இறைவன் பார்க்கின்றானே..!
அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள்இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள். மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவ��வும் அவனுக்கு மறைந்திருக்காது; ��கசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற இவ்விடயங்களை ஒருவன் சரியாக அறிந்துகொண்டால் அவனுக்கு இவை, நாவையும் ஏனைய உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளும் நல்ல பலாபலனைக் கொடுக்கும்!.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?” (அல்குர்ஆன், 96:14)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்” (அல்குர்ஆன், 49:01)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன், 02:235)
இரவு வேளையில், பாலைவனத்தில் வைத்து ஒரு பெண்மீது ஒருவன் மோகம் கொண்டு பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொள்ள அவளை அவன் அழைத்தான். அவளோ அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டாள்!. அப்போது அவன் அவளிடம், ‘நட்சத்திரங்களைத் தவிர வேறு யாரும் எம்மைப் பார்க்கவில்லையே!’ என்றான். அதற்கவள், ‘அந்நட்சத்திரங்களைப் படைத்தவன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றானே!’ என்று விடையளித்தாள்.
இந்த சம்பவத்தை, அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது ‘தம்முல் ஹவா’ என்ற நூலில், பக்கம் 272-ல் குறிப்பிடுவதாக அல்லாமா இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்.
ஆதார நூல்: ‘பிfக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா’, பக்கம்: 26,27
1 note
·
View note
Text
விண்ணுலகப் பயணம் 1
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-1/
விண்ணுலகப் பயணம் 1
விண்ணுலகப் பயணம் 1
கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 17:1)
விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்ப���ர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். ‘மிஃராஜ்’ என்ற பயணம் வல்ல நாயன் அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாகும்.
அதில் என்ன மாதிரியான படிப்பினைகளெல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு இஸ்லாமிய சமுதாய அமைப்பு எப்படிப்பட்ட அடையாளங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அற்புத படிப்பினை மிஃராஜில் அடங்கியிருப்பதை நாம் காணலாம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.
ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத சில அரசின் உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிப்பதென்பது வியக்கத்தக்கதல்ல. இதற்குச் சான்றாக நபி இபுராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆகுவதற்காக வானம் மற்றும் பூமியின் சான்றுகளை அல்லாஹ் காட்டியதாக அல்குர்ஆனில் (6:75) இல் கூறப்படும் விஷயத்தையும், இறந்தபின் எவ்வாறு எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய்’ என்று நபி இபுராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, பறவைகளை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வைத்து அதனை அவர்களிடம் அழைக்குமாறு கூறி உயிர்ப்பித்துக் காட்டியதாக கூறும் அல்குர்ஆனின் (2:260)வது வசனமும் இறைவனின் அற்புதங்களுக்கு சான்றாகக் கொள்ளலாம்.
மிகச்சிறந்த இறைத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களை இறைவன் தூர் மலைக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியதாக கூறப்படும் அல்குர்ஆனின் (28:29,30)வது வசனமும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு தனது விருப்பத்திற்கேற்ப இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு சில பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்பதை தனது அடியார்களில் ஒருவர் மூலம் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் அல்குர்ஆனின்(18: 65,66) வது வசனங்களும்கூட இவைகளுக்குச் சான்றுகளாகும்.
அண்ணலாரின் வாழ்விலும் இதே போன்று சில விந்தையான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை இறைவனுக்கு மிக நெருக்கமான வானவர் ஒருவரை அவரது உண்மையான வடிவத்தில் அடிவானத்தில் கண்டார்கள்.
இது மரியாதைக்குரிய தூதரின்(ஜிப்ரீலின்) சொல்லாகும். (அவர்) வலிமை மிக்கவர். அர்ஷ¬_க்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர், அங்கே நம்பிக்கைக்குரியவர். உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவரை(ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.(அல்குர்ஆன் 81:19-23)
மேலும் அதே வானவரை ஆன்மீக உலகின் துவக்கமான ஸிதரத்துல் முன்;தஹா எனும் இடத்திலும் அவரது இயல்��ான வடிவத்தில் இன்னொரு முறை வெகு அருகில் கண்டார்கள். அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸிதரத்துல் முன்;தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவ்வானவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:12,13,14)
அண்ணலாரின் விண்ணேற்றப் பயணமும் அவர்களுக்கு நிகழ்ந்த இது போன்ற அதிசயிக்கத்தக்க அனுபவங்களில் ஒன்றுதான்! இந்த பயணம் அண்ணலாருக்குச் சில விந்தைகளையும், அற்புதங் களையும் காண்பிப்பதற்காக மாத்திரமில்லாமல், அவர்களிடம் சில முக்கியமான பணிகளை ஒப்படைக்கப் படுவதற்காகவும் சில வழிகாட்டுதல்களை அருளப் படுவதற்காகவும் நிகழ்ந்தது.
நபி மூஸா(அலை) அவர்களை ‘தூர்” மலைக்கு அழைக்கப்பட்டு ‘பத்து கட்டளைகள்” தரப்பட்டதுடன், ஃபிர்அவ்னிடம் ‘இறைவனின் விருப்பத்திற்கேற்ப உனது ஆட்சியை சீர்படுத்திக்கொள்” என்று கோரிக்கை விடவும் கட்டளையிடப்பட்டது.
….1
1 note
·
View note
Text
http://www.islam-hinduism.com/ta/569-2/
-மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான் -தமிழில்:இளவேனில்
அரபியர் வசித்த நிலப்பரப்புக்கள்
நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் துவங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸினாய் மலையும், கிழக்கே அரபியவளைகுடாவும் ஈராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப் பெருங்கடல் வரை தொடர்கிறது),வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் ஈராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன. அரபிய தீபகற்பத்துக்கு புவிஇயல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு இப்புவிஇயல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்தரமானவர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களுக்கு அருகாமையில் மாபெரும் இரு வல்லரசுகள் (ரோம்-பாரசீகம்) இருந்தும் அவை இப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போனதற்கு இந்த இயற்கையான புவியியல் அமைப்பே காரணம்! அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில்அமைந்திருக்கின்றன. அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் ,ணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப் பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது. அவ்வாறே, ஒவ்வொருகண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன. இப்புவிஇயல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும், வணிகம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்தன.
அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்
நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் துவங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.
1.முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெற்ரிருக்கவில்லை.மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2.குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர். முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: எமன், கஸ்ஸான் மற்றும் ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர இருந்த வேறு சில அரசர்கள் எவரும் முறையாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை. அரபு தீபகற்பம் பல்வேறு குலங்கள் மற்றும் கோத்திரத்தாரைக் கொண்டிருந்தது.இவர்களின் தலைவர் அந்த கோத்திரத்தார் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்ட்டு ஒரு குட்டி அரசாகச் செயல்பட்டனர்.அவை கோத்திரத்தின் கூட்டுப் பொறுப்புணர்வு மற்றம் நிலம்,இராணுவம் ஆகியவற்றில் சொதுவான விருப்பங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன.இந்தத் தலைவர்கள் முடிசூட்டப்பட்ட மன்னர்களைப் போன்ற ஏதேச்சதிகார இலாபங்களைப் பெற்றிருந்தனர். சமாதானம் மற்றும் போர் ஆகிய இருவேறுபட்ட சூழல்களிலும் முழு கீழ்ப்படிதலுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டனர். எனினும் ஹிஜாஸ் எனும் பிரதேச ஆட்சியாளர்கள், அரபியர்களின் மத்தில் மிகவும் மரியாதைக்குரியவர்களாகவும் கண்ணியத்துக்குரியவர்களாகவும் மதிக்கப்பட்டனர்.மேலும் சமயக் கேந்திரத்தின் புரவலர்களாகவும், பணியாளர்களாகவும் கருதப்பட்டனர்.ஹிஜாஸ் பிரதேச ஆட்சியாளர்கள் அரசாங்க ரீதியான மற்றும் மார்க்க ரீதியிலான பிரதிநிதித்துவக் கலவையாக இருந்தனர். புனித கஅபா-வை தரிசிப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும், இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறைகளை செயற்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.
1 note
·
View note
Text
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
அஷ்ஷெயக் அல்முனஜ்ஜித்
ஸெய்யித் இஸ்மாஈல் இமாம் இப்னு யஹ்யா மெளலானா
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!
இந்து வேதத்தில் முஹம்மத் நபி
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி
“நான் இந்து சமுத்திரத்தில் உள்ள மொரீஷஸ் நாட்டைச் சேர்ந்தவன். இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது? அது ஏன்? என்பது பற்றி தயை கூர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள்.” என்று இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு அஷ்ஷைக் அல்முனஜ்ஜித் அவர்கள் பின் வருமாறு பதில் தருகின்றார்.
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ் ஏற்றுக் கொண்ட மதம் இஸ்லாம் ஒன்றுதான். எனவே இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியையும், மறு உலகில் பாதுகாப்பையும், வெற்றியையும் தரும் படியான ஒளி மயமான அல் குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தான். இவ்வாதத்தை உறுத��ப் படுத்தும் ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் இஸ்லாம் வேதம் தன்னகத்தே வைத்துள்ளது.
வேதத்தின் ஆதாரமும், அதன் அத்தாட்சியும் மனிதனுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு விளக்கமாகவும், தெளிவாகவும் இருப்பதுடன், இது போன்ற ஒன்றை யாராலும் கொண்டு வர இயலாமல் இருப்பதும் அவசியம். அல்லாஹ்வின் வேதத்தை பொய்ப்பிப்பதற்காக மந்திர வாதிகள் கொண்டு வந்த வளுவற்ற பொய்யான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் என்ன என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனவேதான் தன் வஹீயை – வேதவாக்குகளைப் பெற்ற தூதர்களின் உண்மை நிலையை மக்களுக்கு உறுதி படுத்துவதன் மூலம், அவர்களின் மீது மக்கள் விசுவாசம் கொள்ளவும், அவர்களைப் பின்பற்றவும் ஏதுவாக, அவர்ளுக்குப் பக்க பலமாக முஃஜிஸாத்துக்கள் எனும் அற்புதங்களையும், இன்னும் பல அத்தாட்சிகளையும் அல்லாஹ் வழங்கினான்.
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி
இதன்படி இஸ்லாம் மார்க்கத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பல அற்புதங்களை வழங்கினான். நபியவர்கள் பெற்ற முஃஜிஸாத்துக்கள்- அற்புதங்கள் ஏராளம். இவை பற்றிப் பாரிய ஏடுகள் பல எழுதப்பட்டுள்ளன. எனினும் இந்த எல்லா அற்புதங்களிலும் மிகவும் மேலானது கண்ணியமிகு அல்குர்ஆனாகும். அவர்களால் இயலு மென்றால் சகல கோணத்திலும் இது போன்று பரிபூரணமான ஒன்றைக் கொண்டு வருமாறு அல்குர்ஆன் அறபு மக்களிடம் சவால் விட்டது. ஆனால் சொல் வளம் மிகு அற்புதமான அல்குர்ஆன் போன்ற ஒன்றை சொல் வளத்திலும், இலக்கியத்திலும் உச்ச நிலையைப் பெற்றவர்கள் என்று வரலாற்றாசிரியர்களால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட குரைஷிக்குல அறபு இலக்கிய மேதைகளால் கூட கொண்டு வர இயலவில்லை.
மேலும் அல்குர்ஆனிலும், நபியின் வாக்குகளிலும் விஞ்ஞான கருத்துக்கள் பலவும் அடங்கியுள்ளன. எந்தவொரு மனிதனாலும் விஞ்ஞான கருத்தொன்றை முன் வைக்க வாய்ப்பில்லாத அந்த யுகத்தில், இத்தகைய விஞ்ஞான கருத்துக்கள் பலவற்றை அல்குர்ஆனும், நபியின் வாக்குகளும் முன்வைத்துள்ளன என்றால், அவை அல்லாஹ்வின் வேத வாக்கல்லாதிருக்க இயலாது. இது அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். மேலும் அல்குர்ஆனில் மறைவான விடயங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. முன்னர், நபியவர்கள் சித்திர வரலாறு பற்றிய அறிவை பெற்றிருக்க வில்லை. அவ்வாறே அன்னார் வாழ்ந்த அந்நாட்டில், ஒரு சில கிறீஸ்தவ வேதக்காரர்களை, யூதர்களைத் தவிர வேறு எவரிடமும் இது பற்றிய அறிவு இருக்கவும் இல்லை. அவ்வாறான சூழ் நிலையில் அல்குர்ஆனும், நபியவர்களின் வாக்குகளும் பண்டைய காலத்தில் நடைபெற்ற சில மறைவான சம்பவங்கள் பற்றியும், பிற் காலத்தில் நடக்கவிருக்கும் மறைவான இன்னும் சில சம்வங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளன என்றால், அதுவும் அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்தான்.
மேலும், பின்பற்றுவதற்கு ஏற்றவாறு அற்புதமான அமைப்பில் சட்டங்களை அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. அதில் தனி மனிதனுடனும், குடும்பத்துடனும் சம்பந்தப்பட்ட சட்டங்களும், சர்வதேச உறவுகளும், சமூக நீதியும் எவ்வாறு அமையப் பெற வேண்டும் என்பதற்கு அவசியமான அடிப்படைகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி இருலோகத்தையும், மற்றும் மறைவான விடயங்கள், பாக்கியம், அபாக்கியம் பற்றிய விடயங்கள் பற்றிய தெளிவையும் அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. இத்தகைய அற்புதமான செய்திகள் யாவும் ஒரு உம்மி – எழுத, வாசிக்கத் தெரியாத நபியின் – தூதரின் வாயிலாக வெளி வந்துள்ளன. ஆகையால் இவை அவரின் வாய்மைக்கும், நம்பகத் தன்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். மேலும் அன்னாரின் இத்தகைய பண்புகளுக்கு அன்னாரின் தோழர்கள் மாத்திரமின்றி அன்னாரின் பகைவர்களும் கூட சாட்சி பகர்ந்தனர். இத்தகைய மாமனிதர் பதினான்கு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இஸ்லாமிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்குர்ஆனைத் தாங்கி வந்தார். …………2
0 notes
Text
நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
http://www.islam-hinduism.com/ta/560-2/
நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (���ன்பதைப் பாருங்கள்). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!
ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்”(அல்-குர்ஆன் 6:82)
மேற்கண்ட இறைவசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
‘இறைநம்பிக்கைகொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(இந்த வசனம் குறிப்பிடுவது) ��துவல்ல! அது இணைவைப்பையே குறிக்கிறது. ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’ என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் (6:82), ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு, தங்களுடைய ஈமானில், இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது. மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும், மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
ஈமானில் உயர்வானது ஏகத்துவமே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான – அல்லது – அறுபதுக்கும் அதிகமான உட்பிரிவுகளைக் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்ந்தது, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை என்ற கூற்றாகும். அவற்றில் ஆகத் தாழ்ந்தது, நடைபாதையில் கிடக்கும் (முள் போன்ற) தொல்லை தருவதைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பிரிவே” அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
ஏகத்துவவாதிகளுக்கு சுவர்க்கம்!
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்க மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
“அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (மரணித்து) அவனை (மறுமையில்) சந்திப்பவர் சொர்க்கம் செல்வார்; அவனுக்கு இணை வைத்தவராக அவனைச் சந்திப்பவர் நரகம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி); புகாரி)
‘லாஇலாஹ இல்லல்லாஹ்’என்று மனதார கூறியவர் சொர்க்கம் செல்வார்:
‘யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று கூறிய அதே வாயினால், அவுலியாக்களையும், இறை நேசர்களையும் அழைத்து, அவர்களிடம் உதவி தேடி அவர்களைப் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களையும் வேறு ‘இலாஹ்களாக’ ஆக்கிக்கொள்ளாமல் அல்லாஹ்விடமே அழைத்தல், பிரார்த்தனைகள், உதவி தேடுதல், மன்றாடுதல், நேர்ச்சை செய்தல், குர்பானி கொடுத்தல் போன்ற அனைத்துவிதமான வணங்கங்களையும் செய்கின்றவர் தான் உண்மையிலேயே ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருளை உணர்ந்தவராவார்.
ஏகத்துவத்தின் மகத்துவம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் கூறுகிறான்: மனிதனே! நீ பூமியின் அளவு பிழைகளைச் செய்து, எனக்கு இணை வைக்காமல் நீ என்னைச் சந்தித்தாலும் நான் உனக்கு பூமியின் அளவு மன்னிப்புத்தந்து உன்னை மன்னிப்பேன்’ (ஆதாரம் : திர்மிதி)
ஒருவர் பூமியின் அளவிற்கு பாவம் செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று! ஆனால் அந்த அளவிற்கு ஒருவன் பாவங்கள் செய்திருப்பினும் அவற்றையாவும் மன்னித்துவிடுவதாக அல்லாஹ் கூறுகின்றான் ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்! அது தான் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்தில் உறுதியாக இருக்கின்ற தன்மை! இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இறைவனுக்கு இணை கற்பிப்பது என்பது பூமியின் அளவு பாவங்களை விட மகாகொடியது என்பதை அறியலாம்.
அல்லாஹ் நம்மனைவர்களுக்கும் நேர்வழியைக்காட்டி, ஏகத்துவத்தில் உறுதிமிக்கவர்களாக இவ்வுலகில் வாழச்செய்து மறுமையில் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவன் ஏகத்துவத்தைப் பேணி நடப்பவர்களுக்காக வாக்களித்த சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும். ஆமீன்
0 notes
Text
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! - 3
http://www.islam-hinduism.com/ta/know-thy-lord/
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! - 3
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?
மனித உருவில் இறைவனை அவதாரம் எடுப்பவனாக ஆக்கி, பூஜிப்பதையும் இஸ்லாம் தடுக்கின்றது. இறைவனுக்கு “அல்லாஹ்” எனும் பெயரைச் சூட்டியிருப்பதே இறைவனுக்கு இணையானதாக எந்தவொரு படைப்பினத்தையும் ஆக்காமல் இருப்பதற்காகத்தான். ‘அல்லாஹ்’ எனும் சொல்லுக்கு பால் வேறுபாடோ, பன்மைத் தன்மையோ (புநனெநச ழச Pடரசயடவைல) இல்லை. எப்பொருளையும் இறைவனுக்கு இணையாக்குவதை (ஷிர்க்) எனும் இiணைவத்தல் என்று இஸ்லாம் வருணிப்பது மட்டுமின்றி, அதனை மன்னிப்பே இல்லாத பெரும்பாவம் என்று சொல்கின்றது. இறைவன் தன் படைப்புகள் போன்றவனல்லன். படைப்புகள் அழியக்கூடியவை. ஆனால் இறைவனோ நித்திய ஜீவன். (நுவநசயெட). அவன் நித்திய ஜீவனாக இருப்பதால் அவனை யாரும் உருவாக்கவோ, அல்லது அவனுக்கு துவக்கமோ இல்லை. எனவே அவன் என்றென்றும் நிலைத்திருப்பவனாக (நுஎநசடயளவiபெ ) இருக்கின்றான். ஆதியும் அவனே! அந்தமும் அவனே! மேலும் எல்லாப் பொருளையும் படைத்து பரிபாலனம் செய்யக்கூடியவனாகவும் இருக்கின்றான். “அல்லாஹ் அனைத்து பொருள்களையும் படைத்தலனாக ஆவான். அவனே எவ்வேறு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். வானங்கள் மற்றும் பூமியுடைய கருவூலங்கள் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் இழப்புக்குரியவர்கள் (திருக் குர்ஆன் 39:62,63) “உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும் சென்று சேரும் இடத்தையும் இறைவன் நன்கறிவான்….” (திருக் குர்ஆன் 11:06)
இறைவனின் பண்புகள் : அழிவில்லாத ஒரு நித்திய ஜீவனாக படைப்பாளன் இருக்கும்பொழுது அவனுடைய பண்புகளும் நிரந்தரமாகத்தான் இருக்கும். அதனை விடுத்து நிலையான குறையில்லா ஆற்றலும் உடைய இறைவனுக்கு புதிய சக்திகளும், ஆற்றல்களும் தேவையே இல்லை. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட சம ஆற்றல், சக்தி உள்ள படைப்பாளனை நினைக்கும்போதே அதன் அவசியமின்மை நமக்குத் புரிகின்றது. திருக் குர்ஆன் இந்த வாதத்தை இவ்வாறு முன் வைக்கின்றது “அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தன் படைப்புக்களை அழைத்துக்கொண்டு தனிய��� சென்றிருப்பர். மேலும் ஒருவர் மற்றொருவரை மேலோங்க முனைந்து கொண்டிருப்பர்…..” (திருக் குர்ஆன் 23:91) “வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத்தவிர மற்ற கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுக்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் (திருக் குர்ஆன் 21:22)
#believe#Bible#Christian#Comparison of Christian Denominations#denomination#Jesus#Jews#Mary#Orthodox#Protestant#Roman Catholic#இறைவனின் பண்புகள்#திருக் குர்ஆன்
0 notes
Text
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf-2/
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2
திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தைத் தவிர 113 அத்தியாயங்களும் அளவிலாக்கருணையும் இணையலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று தான் தொடங்குகின்றன. இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், “ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தையும் பரிவையும்விட, இறைவன், தன் அடியார்களிடம் அதிக அன்பும், பாசமும் உடையவனாக இருக்கின்றான்” என்று சொல்கிறார். அன்பும் கருணையும் உள்ள இறைவன் நீதி மிக்கவனாகவும் இருக்கின்றான். இதனால், குற்றவாளிகளும், இறைச்சட்டத்தை மீறுபவர்களும் தண்டனை பெறமுடியும், மேலும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் நற்கூலியையும் வெகுமதிகளையும் பெறமுடியும். ஒருபுறம் தமது வாழ்நாள் முழுவதும், இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மறுபுறம், இறைச்சட்டத்தை மீறியும், பிற மனிதர்களை சுரண்டி கொடுமை இழைத்தும் வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இந்த இரு வகையினரும், ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்களா என்ன? இல்லையே..! இருவரும் சமமான முறையில் இறைவனிடம் நடத்தப்பட்டால், திண்ணமாக, மனிதன் தன்னுடைய செயல்களுக்கு இறைவனிடம் கணக்கு கொடுக்க வேண்டும் எனும் மறுமை கோட்பாடு தேவையில்லாத-கவைக்குதவாத ஒன்றாக ஆகிவிடும் அல்லவா..? மறுமை நாள் (தமது செயல்களுக்கு ஏற்ப மரணத்திற்குப் பின்பு கூலி வழங்கப்படும் நாள்) தீர்ப்பு நாள் என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமும், சட்டமும் சீர்கெட்டு அமைதியின்மையே மேலோங்கும். இதைத் திருக்குர்ஆன், திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன?உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?(68:34-36) என்று வருணிக்கின்றது. இறைவனை, மனிதப்பண்புகளில் உருவகப்படுத்தி அடைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது. மேலும் ஒரு சில தனிநபர்கள், அவர்களுடைய இனத்தாலோ, செ��்வத்தாலோ, இன-நாட்டின் அடிப்படையிலோ இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று சித்தரிப்பதையும் இஸ்லாம் தடை செய்கின்றது.
0 notes
Text
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! - 1
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf/
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! - 1
பிரபஞ்சம்..!
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!
அதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்களேன்..!
எத்துணை கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இத்யாதி.., இத்யாதி..!
மனிதர்களாகிய நாம் இந்த பூமிப்பந்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லை. நம் பூமிப் பந்தோ சூரிய குடும்பத்தில் (ளுழடயச ளுலளவநஅ) ஒரு சிறு பகுதி. சூரிய குடும்பமோ பால்வெளியில் (ஆடைமலறயல) ஒரு சிறு புள்ளி. பால்வெளியோ இப்பிரபஞ்ச பேரண்டத்தில (ருniஎநசளந) ஒரு சிறு புள்ளிக்கு சமமான அளவிலும் இல்லை.
இப்பொழுது கூறுங்கள்: இவைற்றையெல்லாம் படைத்தவன் எத்துணை உயர்வானவன், மகத்தானவன்.
அவன்தான் ஏக இறைவனாகிய அல்லாஹ். அவன் யாராலும் பெறப்படவில்லை அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை. அவன் தன்னுடைய பண்புகளால் முழு நிறைவு பெற்றவன். குறைகள் ஏதுமற்ற மாட்சிமை மிக்கவன். அவன் தன் படைப்புகளில் எவரையுமே உருவத்தில் ஓத்திருக்கவில்லை. அவன் இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலித்து நிர்வகித்தும் வருகிறான். புவியிலோ அல்லது வானங்களிலோ எதுவும் அவனுக்கு மறைந்திருக்கவில்லை! அவனை அறியாமல் ஒரு அணுவும் அசைவதில்லை. அல்லாஹ் தன் அடிமைகளாகிய மனிதகுலத்தின் மீது அளவு கடந்த இரக்கமும் பரிவும் கொண்டவனாக இருக்கிறான்.
இறைவன் தன்னை “திருக்குர்ஆனில்” இவ்வாறு விவரிக்கிறான் – (112:1-4)
கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
மேலும் திருக்குர்ஆனில் தன்னைப்பற்றி கூறும் பொழுது (2:255)
அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை. மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை. வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள���, பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்.
தன்னை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும் என்று இஸ்லாம் கூறும் இத்தகைய இறைவனைமிகவும் கடுமையானவன் இரக்கமற்றவன் என்று சிலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.
ஆனால் உண்மையோ வேறுவிதமாக இருக்கின்றது….. 2
0 notes
Text
இஸ்லாத்தின் அடிப்படைகள்! 2
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3-2/
இஸ்லாத்தின் அடிப்படைகள்! 2
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? – 2
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?
உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக இறைவனுக்கு அர்பணித்தல்’ மற்றும் அமைதி என்று பொருளாகும்.
இஸ்லாம் என்பது பின்வரும் அடிப்படை விஷயங்களில் அமைந்ததாகும்.
1) வணங்கப்படுவதற்கு தகுதியுடைய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் முஸம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் என்றும் மனதால் நம்பிக்கைக் கொண்டு வாயால் உறுதி மொழிவதாகும். 2) குறிப்பிட்ட நேரங்களில் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றுதல் 3)ரமலானில் நோன்பு நோற்பது 4) வருடாந்திர ஜக்காத் செலுத்துவுது 5) வசதியுள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது
எனவே,
ஈமான் என்பது: – ஒருவர் உள்ளத்தால் மேலே குறிப்படப்பட்ட ஆறு விஷயங்களில் நம்பிக்கைக் கொள்வதும்
இஸ்லாம் என்பது: –அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக ஒருவரின் சொல் செயல்கள் அமைந்து அதன்படி ஐந்து கடமைகளை நிறைவேற்றுதலாகும்.
0 notes
Text
இஸ்லாத்தின் அடிப்படைகள்! 1
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இஸ்லாத்தின் அடிப்படைகள்! 1
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? – 1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். இறுதித் த��ர்ப்பு நாளின் அதிபதி��ாகவும் இருக்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி)
இஸ்லாம் என்றால் என்ன?
நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்கஇ நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ {ஹரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
ஈமான் என்றால் என்ன?
1) அல்லாஹ் (இறைவன்) ஒருவனே என்றும் அவனே அல்லாஹ் ஸ_ப்ஹானத்த்ஆலா 2) அல்லாஹ்வின் ��டைப்பினங்களான மலக்குள் மீதும் 3) அல்லாஹ்வின் தூதர்கள் மீதும் 4) அந்த தூதர்களுக்கு இறைவன் வேதங்களை அருளினான் என்றும் 5)மறுமையை நம்புவதும் (அதாவது நியயத்தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் இவற்றை நம்புதல்) 6) இறைவன் விதித்திருக்கின்ற விதியின் மீதும்
ஆகியவைகளை நம்பிக்கைக் கொள்வதற்கு ‘ஈமான்’ என்று பெயர்.
மேலே குறிப்பிடப்பற்றுள்ளவைகளில் எதில் ஒன்றிலாவது யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர் முழுமையாக ஈமான் கொண்டவராக மாட்டார்.
0 notes
Text
ஜகாத்
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%9c%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/
ஜகாத்
ஜகாத்
ஜகாத்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.அடிப்படைக் கடமை:
‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது. (1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல். (2) தொழுகையை நிலைநாட்டுதல். (3) ஸகாத்தைக் கொடுத்தல். (4) ஹஜ் செய்தல். (5) ரமழானில் நோன்பு நோற்றல். என்பனவே அவை யாகும் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்’ (புகாரி).
இந்தக் கருத்தில் வரக்கூடிய ஏராள மான அல்குர்ஆன் வசனங்களும்; ஹதீஸ்களும் ஸகாத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துகின்றன.
ஜகாத் தூய்மைப்படுத்தும்:
ஜகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.
‘இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும், (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக்கூடிய ஒரு மகனை, அவ்விருவருடைய இறைவன் கொலை யுண்டவனுக்குப் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்’ (18:81).
இங்கே ‘சகாதன்’ என்ற சொல் பரிசுத்தமான என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அவர்களின் செல்வங்களிலிருந்து, ஸகாத்தை நீர் எடுத்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக’ (9:103)
என்ற வசனமும் ஸகாத் தூய்மையை வழங்கும் ��ன்று கூறுகின்றது.
ஜகாத் வழங்கும் தூய்மை
‘ஜகாத்’ அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1- பொருள்வெறி நீங்கல் மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடராக ஸகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும்.
2- கஞ்சத்தனம் நீங்கல் தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.
‘அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும் படி தூண்டி அல்லாஹ்
ஜகாத்தின் முக்கியத்துவம்!
தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம் ‘ (4:37).
‘நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).
இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை நீக்கும் மருந்தாக ஸகாத் அமைந்துள்ளது.
3- பொறாமை நீங்குதல் ‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும். ஸகாத் கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் எடுபட்டு விடுகின்றது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஸகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஸகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
4- கர்வம் அற்றுப்போதல் சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஸகாத் நடைமுறை செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும்.
5- சமூக உணர்வு அதிகரித்தல்: செல்வந்தர்களில் அதிகமானோர் சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஸகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் விடயத்தில் கரிசனை காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் விடயத் தில் அக்கறை செலுத்தும் போது, இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஸகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ஜகாத் – தனியாகவா ? கூட்டாகவா ?
Share
0 notes
Text
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87-2/
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2
தோப்பில் முஹம்மது மீரான்
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2
இந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான்.
இந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். இந்திய மக்கள் முதன் முதலில் சமத்துவ காற்றை சுவாசித்தது முஸ்லிம்களின் ஆட்சியில் தான்.
இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.
இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.
தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான ந��து வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.
ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.
சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.
அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.
இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.
வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.
கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்
சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.
இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் கா��ப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.
நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு?
இந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.
இந்தியாவுக்குள் இஸ���லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.
மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.
ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.
முஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.
சில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் ப��னளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.
சமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.
இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.
சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும்? நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.
தொடரும்..
நன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்
Share
0 notes
Text
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 1
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 1
தோப்பில் முஹம்மது மீரான்
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம்!
இந்த வரலாற்றை பார்க்கும் போது இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாம் மிக தொன்மை வாய்ந்தது.
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம்!
நாயகம் இவுலகத்தை விட்டு கிபி 632 ல் மரணமடைந்தார்கள். கிபி 634 ல் இந்தியாவில் முதல் பள்ளிவாசல் கட்டிவிட்ட���ர்கள். ஒரு பள்ளிவாசல் தேவை படும் அளவு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.
தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் வடிவமை��்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் ‘மக்கள் உரிமை’ இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.
இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.
– பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்
Share
0 notes
Text
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 3
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87-3/
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 3
தோப்பில் முஹம்மது மீரான்
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 3
இஸ்லாமிய சட்ட விளக்கம்
இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
சோழநாட்டு அரசன், முதல் ராஜராஜன் காலத்தில் குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரில் ஒரு பாறை மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கீழ்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:-
5 ��…………” செழியரை தேசுகொள்கோ இராசராச –
6 கேசரின் மர்க்குயாண்டு பதினைஞ்சு இவ்வாண்டு கன்னி நாயிற்று
முப்பதாந் (தேதி) செவ்வாய்கிழமை ……….” என்று காணப்படுகிறது. இங்கு எந்த ஆண்டு பொறிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவர்(அரசர்) ஆட்சிபீடம் ஏறிய பதினைந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று மட்டுமே காணப்படுகிறது.
“வுhளை னயவந hயள டிநநn ஊயடஉரடயவநன யனெ ஏநசகைநைன டில Pசழக.முநைடாழசn யனெ வாந சநளரடவ pரடிடiளாநன in வாந நுpபைசயிhயை iனெiஉய, ஏழடரஅந 5வா P.48, யள வுரநளனயல 29வா யுரபரளவ 999 யு.னு.”
அந்த கல்வெட்டில் காணப்படும் வாசகத்தை பேராசிரியர் கீல்ஹான் என்பவர் கணித்து கி.பி.999 ஆகஸ்டு கன்னி மாதம் 29 தேதி செவ்வாய்க்கிழமை என்ற முடிவுக்கு வந்ததாக திரு. டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.
ஜோதிட முறையிலும், அல்லாமலும் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளே வரலாற்றில் நாம் வாசிக்கும் ஆண்டுகள். இவை உண்மையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் உண்மை என்று நம்பித்தான் தீரவேண்டும்.
ஜோதிட மூலமும் அல்லாமலும் கணித்து எழுதிய ஆண்டுகளில் எவ்வளவோ தவறுகள் நடந்ததுண்டு. கேரளாவில் ‘திருவல்லம்’ என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படும் ஆண்டின் நடுவிலுள்ள எண் தெளிவில்லாமல் இருந்தது. இதை 319வது ஆண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். 399 என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அதை திருத்தம் செய்தார்.
இதில் எது சரி? எது தவறு? 80 ஆண்டுகளுடை இடைவெளி. பிறகு அக்கல்வெட்டில் உள்ள வாசகம் ஒன்றை எடுத்து சோதிட அடிப்படையில் கணக்கிட்டனர். “விருச்சிகத்தில் வியாழன் நின்றயாண்டு மகர ஞாயிற்று செய்த காரியமிது” என்று சொல்லில் வரும் வியாழனுடைய நிலையை கணக்கிட்டு 399 என்ற முடிவுக்கு வந்தனர். (பேராசிரியர் இளம்குளம் குஞ்சன் பிள்ளை – ‘கேரள வரலாற்றின் இருள் சூழ்ந்த ஏடுகள்’ பக்கம்-139.)
இப்படி பெரும்பான்மையான ஆண்டுகள் எல்லாம் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளேயன்றி உண்மையான ஆண்டுகள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று சில ஊர் பெயர்களும் சில மன்னர்களுடைய பெயர்களும் திட்டவட்டமாக உறுதி செய்யப்படாதவை.
ஒரே மன்னரை பல பெயர்களில் குறிப்பிடுவதையும் அதே மன்னர் வேறுபட்ட காலங்களில் ஆட்சி புரிந்து வந்ததாகக் குறிப்பிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளை உண்மை என நம்பி நாம் வரலாறுகளை அணுகுவது சரியாகப்படவில்லை.
கொல்லம் ஆண்டு (யு.னு.825) துவங்குவதற்கு முன்னும் ஓர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான ஓர் ஆண்டு பண்டைய தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாமல���ருந்ததுதான் இந்தக் குழப்ப நிலைகளுக்கு அடிப்படைக் காரணம்.
கிறிஸ்தவ ஆண்டையோ, அதற்குப் பின் வந்த கொல்லம் ஆண்டையோ எந்த அரசரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேனும் அரசர் பதவி ஏற்றது முதல் அவர் பதவி விட்டு இறங்கியது வரையிலான வருடங்களை நடைமுறைப்படுத்தினர். இதனால்தான் 10-வது நூற்றாண்டு முன் உள்ள ஆண்டுகளை சரியான முறையில் குறிப்பிட்டு எழுத முடியாமல் போய் விட்டது.
“யுகவநச னழiபெ யடட வாளை வாந pநசரஅயட டநகவ வாந ளயனெல ளைடயனெ ழக வுசைரயெஎயலi றiவா வாந pநழிடந ழக வாந எநனய யனெ னநளஉநனெநன கசழஅ ய ளாip யவ மழனரபெயடடரச hயசடிழரச யனெ நவெநசநன வாந pயடயஉந ழக மழனரபெயடடரச றiவா ய எநைற வழ pசழஉநநன வழ ஆநஉஉய (ஊhநசயஅசயn நஅடியசமநன கழச ஆநஉஉய றiவா வாந pநழிடந ழக எநனய) வை றயள in வாந முயடi லுநயச(யு.னு.355) (ஆயடயடியச அயரெநட டில றடைடயைn டுழபயn, P.279, யு.னு.355)
இவ்வாறு ‘கேரள உற்பத்தி’ என்ற பண்டைக்கால கேரள வரலாற்று நூலில் குறிப்பிட்டிருப்பதாக லோகன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலி ஆண்டை கணக்கிட்டு ‘கேரளா உற்பத்தி’ நூலாசிரியர் ஏ.டி.355-ல் சேரமான் பெருமாள் என்ற சேரநாட்டு அரசர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக கொடுங்கல்லூர் துறைமுகத்திலிருந்து கப்பலேறி பயணமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலி ஆண்டிற்கு சமமான கி.பி.ஆண்டை கணக்கிட்டபோது தவறு நடந்ததாகத் தெரிகிறது. கி.பி.579-ல் தானே பெருமானார்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி பெருமானார்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கும் 224 ஆண்டுகளுக்கு முன் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக மக்கா பயணமானார் என்று குறிப்பிடும் ஆண்டில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது என்று புலனாகிறது அல்லவா.
இதே போன்றுதான் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த பள்ளி பாண பெருமாள் என்று சேரமன்னர் முதற்கொண்டு முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளான சேரமான் பெருமாள் நாயனார் வரையிலான நீண்ட இரண்டு நூற்றாண்டுகளில் வருடங்களில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தொடர்ச்சியான ஒரு ஆண்டை பின்பற்றி வராததும், இந்த நூற்றாண்டுகளை இருண்ட காலமென உதாசீனப்டுத்தியதுமேயாகும்.
ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.
எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை ��ொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.
ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.
இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.
“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.
ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.
ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்க��டையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.
தொடரும்..
நன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்
Share
0 notes
Text
இஸ்லாமிய சட்ட விளக்கம் 4
http://www.islam-hinduism.com/ta/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/
இஸ்லாமிய சட்ட விளக்கம் 4
– நாதியா – தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
ஃபிக்ஹ் – சட்டங்களின் மூலாதாரங்கள்
இஸ்லாமிய சட்ட விளக்கம் 4
தூய்மையும் தொழுகையும் – 5
1.4 ஃபிக்ஹ் – சட்டங்களின் மூலாதாரங்கள்
1. அடிப்படை, ஆரம்ப மூலாதாரங்கள்: திருக் குர்ஆன் மற்றும் சுன்னா எனும் நபிவழி. 2. அடுத்த நிலை மூலாதாரங்கள்: பொதுக் கருத்துக்கள் (இஜ்மா), ஒத்தக் கருத்துக்கள் (கியாஸ்)
1.5 ஃபிக்ஹ் – சட்டங்களின் கிளைகள்
ஃபிக்ஹ் நூல்கள் (திருக்குர்ஆன்,நபிவழி, பொதுக் கருத்துக்கள் (இஜ்மா), ஒத்தக் கருத்துக்கள் (கியாஸ்) ஆகியவற்றில் தெளிவாகவும்,நுணுக்கமாகவும் பெறப்பட்ட சட்டதிட்டங்கள் அடங்கியது) பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:-
எண் கிளை பொருள் உதாரணங்கள்
1. அல்-இபாதா (வணக்க வழிபாடுகள்) வணக்க,வழிபாடுகளை நிறைவேற்றுவது எப்படி என்பதற்கான சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. தஹாரா-ஸலாத்-ஜகாத்-ஸியாம்.
2. அல்-அஹ்வால் இஷ-ஷக்ஸியாஹ் (தனிப்பட்ட உறவுகள்) குடும்பவியல் குறித்த சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. திருமணம்-விவாகவிலக்கு-பாதுகாப்புக்கான பொறுப்புக்கள்.. முதலியன.
3. அல்-மு’அமலாத் (பொருளாதாரம்) மக்களுக்கிடையிலான பரஸ்பர உறவுமுறைகள் குறித்த சட்டதிட்டங்கள். வணிகம்,வட்டி,முதல்,வாங்குதல் மற்றும் வாடகை,தயாரிப்புக்கள்,தரகு,ஊழடடயவநசயடள,குழரனெ,கடன்கள்-வெகுமதிகள்,முதலீடுகள்,பங்குடைமை,சொத்துக்கள்,வேளாண்மை
4. அஹ்காம் ஸல்தானியா (அரசாங்க நீதித்துறை சட்டதிட்டங்கள்) ஆட்சியாளர்-ஆளுநருக்குரிய விதி��ுறைகள் மற்றும் கடமைகள் ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்புகள் நீதியை நிலைநாட்டுதல்,சட்டங்களை அமல்படுத்துதல் அல்லது ரத்து செய்தல். ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்.. அவர்கள் அல்லாஹ்வின் வாக்குக்கு அல்லது மார்க்கத்துக்கு மாறு செய்யயாத வரை..!
5. அல்-‘ஒகோபாத் (குற்றவியல் சட்டங்கள்) குற்றவாளிகளைத் தண்டித்தல்,பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுதல் திருட்டு,கொலை,கொள்ளை,அவதூறு,வழிப்பறி,மது, உறுதிமொழிகள் மற்றும் பரிகாரங்கள்,தீர்ப்புக்கள்,சாட்சிகள்!
6. சர்வதேச உறவுகள் போர்,சமாதானம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான சட்டதிட்டங்கள்
7. நடத்தை-நெறிமுறைகள் அழகிய குணநலன்களைப் பேணுதல்,அடக்கம் வெறுக்கத்தக்க மற்றும் தீய நடத்தைகளுக்கு எதிரான எச்சரிக்கைகள்.
Share
#Babi and Baha'i faiths#Buddhism#Christianity#Confucianism#Hinduism#islam#Jainism#Judaism#Major Branches#Major Branches of Religions#Major Religions#Shinto#Sikhism#Taoism#Zoroastrianism#இஸ்லாமிய#சட்ட#விளக்கம்
0 notes