#நட��ளன
Explore tagged Tumblr posts
Video
youtube
இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா-இலங்கை தீர்மானம் இராணுவத்துக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் இலங்கையும் இணங்கியுள்ளன. வொஷிங்டனில் நடந்த உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இரண்டு நாடுகளும் இதனைத் தெரிவித்துள்ளன. “ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்கா-இலங்கை பங்குடமை கலந்துரையாடல் மே 6 ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும், இரண்டு அரசாங்கங்களும் மீள உறுதிப்படுத்தின. பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையுடன் இணைந்து நிற்பதை வெளிப்படுத்தி அமெரிக்க ஜனாத��பதி வெளியிட்ட அறிக்கை மற்றும் இலங்கைக்கு உதவி வழங்குவதாக எடுக்க��்பட்ட முடிவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவின் இந்த உதவியை இலங்கை மதிக்கிறது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பன்முக உதவிகள், எவ்.பி.ஐ. புலனாய்வாளர்களின் விசாரணை உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமாகக் கூடிய உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அனைத்துலக சட்டங்களை மதிக்கும் வகையில் இந்தோ -பசுபிக் சமுத்திரங்களில், பாதுகாப்பான கடல் பயணங்களை உறுதிப்படுத்துவதற்கு, அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து பணியாற்றும். கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அமெரிக்க ஆதரவு, கூட்டு இராணுவ செயற்பாடுகள், இலங்கையின் அமைதி காப்பு நடவடிக்கைகள், இலங்கை அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் பயிற்சி அளிப்பது அமெரிக்க கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகைகள், உள்ளிட்ட தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் வரவேற்றன. இராணுவ- ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கான, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. காணாமல் போனோர் பணியகம், இழப்பீடுகளுக்கான பணியகம், மற்றும் படையினர் வசமிருந்த நிலங்களை மீளளிப்பது தொடர்பான விடயங்களில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஊக்கமளிக்கும்.” என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனையும் வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார். @ஊர்குருவி by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
Photo
வலைதள உணவு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; நுகர்வோர் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு புதுடில்லி : நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு வகைகள் கிடைக்க வேண்டும் என்ற ந��க்கத்தில், வலைதள உணவு சேவை நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. ‘குரோபர்ஸ், பிக்பேஸ்கட்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை, நுகர்வோர் வீட்டிற்கே சென்று கொடுக்கின்றன. அதுபோல, ‘ஸ்விக்கி, ஸொமாடோ’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், உணவு வகைகளை சப்ளை செய்கின்றன. கண்காணிப்பு :இந்த வலைதள சந்தை நிறுவனங்கள், உணவகங்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, குறிப்பிட்ட கட்டணத்தை பெறுகின்றன. இது போன்ற நிறுவனங்களின் சேவை குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, உணவுப் பொருட்கள் வினியோகம் தொடர்பான விதிமுறைகளை, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் கடுமையாக்கியுள்ளது. இது குறித்து, ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் கூறியதாவது: நுகர்வோர், வலைதள சந்தை நிறுவனங்கள் மூலம் உணவு வகைகளை வாங்குவது அதிகரித்து உள்ளது. அதனால், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வலைதள சந்தை நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வழியில், எங்கு வேண்டுமென்றாலும், உணவின் மாதிரியை சோதனை இடலாம். நிறுவனங்கள், நுகர்வோர் குறிப்பிடும் உணவுகள் குறித்த படங்களை, அவற்றின் வலைதளத்தில் வெளியிட வேண்டும் காலாவதி காலம் :உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சட்ட விதிமுறைகளை, வலைதள சந்தை நிறுவனங்கள், நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனங்கள், புதிய உணவுகளையே, நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என, விதிமுறை கூறுகிறது. உணவுப் பொருட்கள் சப்ளை செய்யப்படும் போது, அப்பொருட்களின் எஞ்சிய காலாவதி காலம், 30 சதவீதமாகவோ அல்லது, 45 நாட்களுக்கு முன்னதாகவோ இருக்க வேண்டும். அதாவது, ஒரு உணவுப் பொருளின் காலாவதி காலம், 60 நாட்கள் என வைத்துக் கொண்டால், அதன் சப்ளை, 15 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை, வலைதள சந்தை நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விதிமுறைகள்:* உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சோதனை* வலைதளத்தில், ‘��ர்டர்’ செய்யும் உணவின் படம் இருக்க வேண்டும்* உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்ட விதிகளை, நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்.* புத்தம் புதிய உணவுப் பொருட்கள் மட்டுமே நுகர்வோருக்கு வழங்க வேண்டும்* உணவுப் பொருட்களை, காலாவதி ஆவதற்கு, 45 நாட்களுக்கு முன் சப்ளை செய்ய வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு முக்கியம்:நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை வரவேற்கிறோம். உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உணவகங்களில் இருந்து, நுகர்வோருக்கு உணவு சப்ளை செய்வது வரையில், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். தரமற்ற உணவு வகைகள் சப்ளை செய்த, 1,000த்திற்கும் அதிகமான உணவகங்களை, வலைதளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கியுள்ளோம்.-ஸொமாடோ நிறுவனம் Source: dinamalar
0 notes
Photo
செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது புதுடில்லி: இரண்டு ஆண்டுகளாக செயல்படாது, பெயரளவில் உள்ள, 3- – 4 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.பலர், பெயரளவில் நிறுவனங்களை பதிவு செய்து, அவற்றின் மூலம், சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய போலி நிறுவனங்களை களையெடுக்க, மத்திய அரசு, சிறப்பு குழுவை அமைத்துஉள்ளது. இக்குழு, 16 ஆயிரம் நிறுவனங்கள் போலியானவை என, அடையாளம் கண்டுள்ளது; 80 ஆயிரம் நிறுவனங்களை, சந்தேக பட்டியலில் சேர்த்துள்ளது. இத்துடன், பொது இயக்குனர்களைக் கொண்ட, 17 ஆயிரம் போலி நிறுவனங்களை கண்டுபிடித்துள்ளது.இந்நிலையில், நிறுவனச்சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமலும், எவ்விதமான வர்த்தகம் புரியாமலும் உள்ள நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, 17 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், மத்திய நிறுவனங்���ள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன; இவற்றில், 11.4௦ லட்சம் நிறுவனங்கள், செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் செயல்படாத நிறுவனங்களும் அடங்கி உள்ளன. இந்நிலையில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம் புரியாமல், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள, 25 – -30 சதவீத நிறுவனங்கள் களையெடுக்கப்படும் என, தெரிகிறது.அவை, மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இந்த வகையில், 3 -– 4 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, இதுபோன்ற காரணங்களுக்காக, 2.25 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பாயும் நடவடிக்கை : l இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகம் புரியாமல் அல்லது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்l அதற்கு முன், அந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு, 30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும்l மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஓராண்டுக்குள் தொழில் துவங்காமல் அல்லது, 180 நாட்களுக்குள் பங்கு மூலதனம் மேற்கொள்ளாத நிறுவனங்களின் பதிவு ரத்தாகும்l தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வர்த்தகம்செய்யாமல், நிதி நிலை அறிக்கை வழங்காத நிறுவனங்கள், நிறுவன பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்l பினாமி நிறுவனங்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்l குறைந்த பங்கு மூலதனத்தில், சிறிய அளவில் வர்த்தகம் புரிந்து, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்l கறுப்பு பணப் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்களை, களையெடுக்கும் பணியை தீவிரப்படுத்த திட்டம் Source: dinamalar
0 notes