#தமிழக முதல்வர் இ.பி.எஸ்.
Explore tagged Tumblr posts
Text
அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான மனு ஜூலை 6ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான மனு ஜூலை 6ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
மூலம் PTI புதுடில்லி: அ.தி.மு.க., கூட்டத்தில் அறிவிக்கப்படாத தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (இ.பி.எஸ்.,) தாக்கல் செய்த மனு, ஜூலை, 6ல் விசாரிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கட்சியின் ஒற்றைத் தலைமைப் பிரச்சினை தொடர்பான பொது மற்றும் நிர்வாகக் குழுக்கள். நீதிபதிகள் இந்திரா பானர்ஜி…
View On WordPress
0 notes
Photo
தமிழக அரசுக்கு பங்குத்தொகை அளிப்பு சென்னை:தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தன் லாபத்தில், தமிழக அரசுக்குரிய, ஆதாய பங்குத் தொகையாக, 21.60 கோடி ரூபாயை அளித்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 2017 – 18ல் ஈட்டிய லாபத்தில், தமிழக அரசின் பங்குத் தொகை, 21.60 கோடி ரூபாயை வழங்க வேண்டும். இதன்படி, நேற்று முன்தினம், அரசின் பங்கு தொகைக்கான காசோலையை, தலைமைச் செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யமிஸ்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். Source: dinamalar
0 notes
Photo
தம்பிதுரைக்கு பதிலடி கொடுத்த மைத்ரேயன் அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து தான் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் தொண்டர்களின் உணர்வை தான் பிரதிபலித்து இருப்பதாகவும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்பிற்கு பின்னரும் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் இருந்து வந்ததாக அரசல் புரசலாக பேசப்பட்டது. இருவருக்குள்ளும் நாளுக்கு நாள் அதிகார மோதல் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ஒன்றாக இணைந்து அம்மா வழியில் ஆட்சியை நடத்துவதாகவும் இருவரும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் போட்ட பதிவால் ஓபிஎஸ் - இபிஎஸ் அதிகார மோதல் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகியும் மனங்கள் இன்னும் இணையவில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இடையேயான உறவு குறித்து தான் நேற்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வழக்கம் போல் மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மைத்ரேயன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்திருந்தார். தம்பிதுரைக்கு பதில் அளிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்" என கூறியுள்ளார். மைத்ரேயனின் இந்த பதிவால் ஓபிஎஸ் - இபிஎஸ் அணி இணைப்பிற்கு பிறகும் அவர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. மேலும், அணிகள் இணைப்பில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதையும் மைத்ரேயனின் பதிவு வெளிக்காட்டியுள்ளது.
0 notes
Text
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா... பள்ளிகளுக்கு இலக்கு வைத்த பழனிசாமி அரசு! #HallOfShameAdmk
தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது தமிழக அரசு. இந்த நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன. தினகரன் எதிர்ப்பை சமாளிக்க தங்கள் பலத்த��� நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் உள்ளன. இதற்கு பகடைக்காயாக மாணவர்கள் பயன்படுத்துவதுதான் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது பெற்றோர்கள் மத்தியில்.
வண்டலூரில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் மிக பிரம்மாண்டமாக விழாவைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் அரசுத்துறை மற்றும் தனியார்த் துறையை சேர்ந்தவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதையெங்கும் பேனர்கள், கட் - அவுட்கள் வைத்திருக்கிறார்கள். தாம்பரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் நம்மிடம் பேசினார். “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு இருபதாயிரம் மாணவர்களை அழைத்து வரவேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலருக்கு டார்கெட் வைத்துவிட்டார்கள். இதனால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 5 ஆயிரம் மாணவர்களும் வரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு போன் செய்து அதிகாரிகள், ' பள்ளிக்கு விடுமுறை அளித்து, பள்ளி வாகனங்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மாணவர்களையும் விழாவுக்கு அனுப்ப வேண்டும்” என நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு சில பள்ளிகளின் தாளாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் அனைத்தும் விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை ஐந்து மணிக்குள் அனைத்து வாகனங்களும் வரவேண்டும் என்ற உத்தரவால், தன���யார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் மறைமலைநகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனியார் பள்ளியின் டிரைவர், தாளாளர், முதல்வர் என அனைவரின் செல்போன் எண்களும் வாங்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்காத காரணத்தால் அந்த பள்ளிகள் இந்த டார்ச்சரில் இருந்து தப்பித்துவிட்டன. மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலமாகவே இந்த அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதால் அவர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாவட்ட அளவில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநருக்கு அழுத்தம் தரப்பட்டு, அவர் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்த��றை சார்பாக நேரடியாக தகவல் வராததால் அவர்கள் தப்பித்துவிட்டார்கள். குறிப்பாக தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் அதிக அளவு பள்ளிகள் பாதிப்படைந்துள்ளன.
காலையில் 6 மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இருக்கிறார்கள். காலை 7 மணிக்கு மேடைக்கு முன்புறமாக மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கே தண்ணீர் வசதி கிடையாது. அத்தனை மாணவர்கள் கூடும் அந்த இடத்தில் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது. தனியார் பள்ளி வாகனங்களுக்கு டீசல் செலவோ, டிரைவர் படித்தொகையோ எதுவும் அளிக்கப்படவில்லை. கல்வித்துறையின் சர்வாதிகாரப்போக்கைத்தான் இவை காட்டுகின்றன. வாகனங்கள் விபத்திற்குள்ளானாலோ, மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு உதவ எவ்வித முதலுதவி நடவடிக்கையும் அரசின் மூலமாக எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த தகவலை நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்திருப்பதால் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.” என்றார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இப்படி செய்யப்படவில்லை. எல்லா மாவட்டங்களிலும் செய்வது போலத்தான் இங்கேயும் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு எவ்வித நெருக்கடியும் நாங்கள் கொடுக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை விடுக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.” என்கிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடர்புகொண்ட சிறிது நேரத்தில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சீனுவாசன் நம்மை தொடர்புகொண்டு பேசினார்.
“ஆரம்பத்தில் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்தது உண்மைதான். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்பாகவே மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் 'மாணவர்களை நாங்கள் வற்புறுத்த முடியாது' என தெளிவாகச் சொன்னோம். அதன்பிறகு எங்களுக்கு எந்த நெருக்கடிகளும் அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை. விழாவைப் பார்க்க விருப்பப்பட்ட பள்ளிகள் மட்டுமே இதில் கலந்துகொள்கிறார்கள்” என்றார். “மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வரவேண்டும் என்பதற்காக சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுக்கவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடுகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள்.
அரசின் இந்தச் செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அது விழா மேடையில் எதிரொலிக்கலாம் என்கிறார்கள்.
#mgr-centenary-celebration#school students#edappadi palanisamy#எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழா#பள்ளி மாணவர்கள்
0 notes
Text
தமிழகத்தில் எஸ்.எம்.இ.,க்களுக்கு தனி தொழில் கொள்கை
தமிழகத்தில் எஸ்.எம்.இ.,க்களுக்கு தனி தொழில் கொள்கை
சென்னை: ‘தமிழகத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பிரத்யேகமான கொள்கை தேவை’ என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது, சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு. சி.ஐ.ஐ., தமிழகப் பிரிவின் தலைவர், எஸ்.சந்திரமோகன் தலைமையிலான குழு, சமீபத்தில் தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சை சந்தித்தது.
இது குறித்து இவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது: சந்திப்பில், தமிழக தொழில் துறைக்காக அரசு எடுத்து வரும்…
View On WordPress
0 notes
Photo
அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: அன்புமணி ராமதாஸ் தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு: ஈரோடு அருக�� உள்ள கங்காபுரம் டெக்ஸ்வேலியில் இன்று சர்வதேச சதுரங்க போட்டி தொடங்கியது. இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு போட்டியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழக மீனவர்களை இந்திய கடற்படையே துப்பாக்கியால் சுடும் சம்பவம் நடக்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எங்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அவர்களின் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கவர்னருக்கு என சில அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து விசாரிக்கலாம். ஆலோசிக்கலாம். அதை விட்டு நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல. மேலும் கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு செய்வேன் என்று கூறி உள்ளார். அவ்வாறு அவர் செய்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 18 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். கவர்னர் முதலில் இந்த மனுவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிட்டு அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு பதவி மட்டும்தான் முக்கியம். அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். இதன்மூலம் இந்த அரசு ஒவ்வொரு உரிமைகளையும் இழந்து வருகிறது. சசிகலா ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியது தாமதமான நடவடிக்கை. இந்த சமயத்தில் இன்னொன்றையும் கேட்டுக்கொள்கிறேன். சசிகலாவுக்கு பல்வேறு வகைகளில் பணம் பெற்றுக்கொடுத்த ஓ.பி.எஸ். (துணை முதல்வர்), இ.பி.எஸ். (முதல்வர்) வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வாக்குறுதிகளை கூறி இருந்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். Source: Maalaimalar
0 notes