Tumgik
#தமிழ்நாடு நாள்
thenewsoutlook · 2 days
Text
மிராக்கல் மருத்துவ மையம் சார்பில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கு
பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் மத்திய அரசின் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு,கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்…
0 notes
bharathidasanprabhu · 13 days
Text
Tumblr media
SOCIAL ♎⚖️ JUSTICE DAY (THANTHAI PERIYAAR BIRTH ANNIVERSARY) - TAMILNADU - INDIA - 17 SEPTEMBER 2024 - சமூக நீதி நாள் (தந்தை பெரியார் பிறந்த தினம்) - தமிழ்நாடு - இந்தியா - 17 செப்டம்பர் 2024.
0 notes
Text
தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு
நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுவதும் தெரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் இது முக்கியமான நாள் என்றும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது…
0 notes
gopitnpsc · 2 months
Text
தமிழ்நாடு நாள் - ஜூலை 18
Tumblr media
0 notes
yourfarm · 5 months
Text
மாம்பழக் கழிவுகளில் சைலேஜ் செய்வது எப்படி?
மாம்பழ சைலேஜ்:
மாம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன்
100 கிலோவுக்கு 1.0 கிலோ சமையல் உப்பை சேர்த்து கலந்து வழக்கம் போல சைலேஜ் செய்யலாம் அல்லது மாம்பழத்துடன் சமையல் உப்பு, சிறிது மொலாசஸ் மற்றும் யூரியா கலந்து அதை மக்காச்சோள தட்டையுடன் கலந்து 
4-5 வாரங்கள் காற்று புகாமல் சேமித்து வைத்து சைலேஜ் செய்யலாம்.  அஸ்பெரிஜில்��ஸ் நைகர் ( Asperigillus niger ) என்ற நுண்ணுயிரை மாம்பழத் தோலுடன் கலந்தால் தரமான சைலேஜ் கிடைக்கும்.
மாம்பழத்தோல்:
கோடை காலம் மாம்பழ சீசன் பருவம். மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகள் மாம்பழத்தை வாங்கி பதப்படுத்துகின்றன. மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மாம்பழத்திலிருந்து சதை பகுதியை பிரித்தெடுத்த பின், அதன் தோல் மற்றும் கொட்டைகள் கழிவாக கிடைக்கின்றன.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இந்த கழிவுகளில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். நாள்பட்ட இந்த கழிவுகளில் சில அமிலங்கள் உற்பத்தியாகி சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இதை அந்தப்பகுதியில் மேயும் மாடுகள் உட்கொண்டால் மாடுகளில் அமிலத்தன்மை ஏற்படும்.
மாம்பழத்தோலில் சுமார் 10-14 % வரை சதை பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதால் அதில் சர்க்கரை சத்து அதிகம் இருக்கும். எரிச்சத்து மிகுந்த இந்த சர்க்கரை சத்து மற்றும் தோலில் இருக்கும் நார்ச்சத்துக்களை உபயோகப்படுத்தும் வகையில் கால்நடை தீவனமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை நன்கு உலரவைத்து அரைத்து வைத்துக் கொண்டால் கலப்பு தீவனத்தில் சேர்தளிக்கலாம்.
மாம்பழத்தோலில் உலர்நிலையில் புரதம் 4.6%, நார்12.6% ,NDF நார் 35.5% , ADF நார் 17.3% , கொழுப்பு 3.8% , சுண்ணாம்புச்சத்து 8.1% மற்றும் பாஸ்பரஸ் சத்து 2.8% உள்ளது. இதன் தோல் மாடுகளில் சுமார் 74% வரை செரிமானம் ஆகிறது.
மாம்பழத்தோலில் சுண்ணாம்பு சத்து மிக அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளதால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மாம்பழத் தோலை தீவனமாக அளித்தால், மறக்காமல் கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.
மாம்பழத்தோலில் ஈரப்பதம் 70-75% இருப்பதால் மாடுகள் இதை உட்கொள்ளாது. அதனால் ஈரப்பதம் மிக குறைவாக உள்ள பிற தீவனங்களை இத்துடன் சேர்க்க வேண்டும். இதை தவிர புரதச்சத்து மிக குறைவாகவும் இருப்பதால் புரதச்சத்தை அதிகரிக்க யூரியாவை சேர்த்து சைலேஜ் செய்ய வேண்டும்.
மாம்பழத்தோலுடன் ஈரப்பதம் குறைந்த தீவனங்களை உதாரணமாக குச்சிக்கிழங்குதிப்பி, தவிடு போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
சுமார் 60 கிலோ மாம்பழத்தோலுடன் 40 கிலோ குச்சிக்கிழங்கு திப்பியை நன்கு கலந்தால், இந்த கலவையின் ஈரப்பதம் மாடுகள் உட்கொள்ள ஏற்ற அளவுக்கு குறைந்துவிடும். இந்த கலவையில் செரிக்கக் கூடிய புரதம் 2.0%மும், மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 57%மும் இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள மாம்பழத் தோலை மட்டும் உட்கொள்வதால் ஏற்படும் அமிலத் தன்மையை குச்சிக்கிழங்கு திப்பியை சேர்ப்பதால் தவிர்த்து விடலாம்.
மாம்பழத் தோல் சைலேஜ்:
மாம்பழத் தோலை முதலில் பிளாஸ்டிக் விரிப்பின் மேல் நன்கு பரப்பி ஒரு நாள் முழுவதும் உலர வைத்து, அதில் இருக்கும் 78% ஈரப்பதத்தை 30%மாக குறைக்க வேண்டும். இத்துடன் சமையல் உப்பை மட்டும் சேர்த்து வழக்கம் போல காற்று
புகாமல் 42 நாட்கள் மூடி வைத்து தரமான சைலேஜ் செய்ய முடியும். இத்துடன் யூரியாவை சேர்த்தோ அல்லது சேர்க்காமாலோ சைலேஜ் செய்யலாம். யூரியா சேர்க்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் புரதச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
கம்பு –நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோல் சைலேஜ்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் மாம்பழத் தோலை சைலேஜ் செய்யும் முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பு- நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோலை 10% சேர்த்து சுவைக்காக சமையல் உப்பு 1% கலந்த�� 5 -6 வாரங்கள் காற்று புகாமல் மூடிவைத்து சைலேஜ் செய்யலாம். இதில் சர்க்கரைச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டியதில்லை.
இந்த சைலேஜில் செரிக்கக்கூடிய புரதம் 3.9% வரையும் மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 52.7% வரையும் இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இதை நார்ச்சத்து கொண்ட தீவனமாக வழக்கமாக அளிக்கப்படும் தீவனத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபொழுது, ஆடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவிலோ, ஆடுகளின் வளர்ச்சியிலோ எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. இந்த தீவனம் ஆடுகளில் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம் ஆடுகளுக்கு அளிக்கப்பட பசும்புல் 10% வரை சேமிக்கப்பட்டது.
ஒரு ஆய்வில் மாம்பழத்தோல் ஒரு நாள் வரை வெயிலில் உலர வைக்கப்பட்டு யூரியாவுடன் சேர்த்து சைலேஜ் செய்யப்பட்டது. இந்த சைலேஜை வளர்ந்த கிடாரிகளுக்கு தீவனமாக அளித்த பொழுது தீவனம் உட்கொண்ட அளவும் கிடேரிகளில் வளர்ச்சியும் அதிகரித்தன.
கிடேரிகளின் மொத்த தீவனத்தில் 30% மாம்பழத்தோல் சைலேஜ் சேர்த்த பொழுது மொத்த தீவன தரம் மற்றும் தீவனத்தில் இருந்த மொத்த நார்ச்சத்தின் தரம் சுமார் 5.5% அதிகரித்தது.
ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட ஆடுகளின் தீவனத்தில் மாம்பழத் தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழ கொட்டை பருப்புடன் யூரியாவை சேர்த்தளித்த பொழுது செம்மறி ஆடுகள் தினசரி 50 கிராம் வளர்ச்சி அடைந்தன என்று அறியப்பட்டது. யூரியாவுக்கு பதில் யூரியா மொலாஸஸ் தீவன கட்டியை அளிக்கலாம்.
சைலேஜ் செய்ய வெல்லப்பாகுக்கு மாற்றாக மாம்பழத்தோலை பயன்படுத்த முடியும். ஒரு ஆய்வில் வாழைப்பழத் தோலை சைலேஜ் செய்ய மொலாசஸ் அல்லது அதற்கு மாற்றாக மாம்பழத்தோல் பயன்படுத்தப்பட்டது. இந்த சைலேஜுகள் மேயும் செம்மறி ஆடுகளுக்கு அளித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில் வாழைப்பழத் தோலுடன் மாம்பழத்தோல் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சி வாழைப்பழத் தோலுடன் மொலாசஸ் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சிக்கு இணையாக இருந்தது.
பின்னொரு ஆய்வில் மாம்பழத்தோல் கழிவுடன் கூடுதல் எரிச்சத்திற்காக தீவனத்தில் தானியங்கள் 10 % சேர்த்து அளிக்கப்பட்டது. இதை வைக்கோல் மற்றும் யூரியா கலந்த தீவனமாக உட்கொண்ட செம்மறி ஆடுகளில் வளர்ச்சி கூடுதலாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-may15-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
0 notes
rajeshmiki · 7 months
Text
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சுற்றுலா பயணம்
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர். இதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர்…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 7 months
Text
Check out this post… "கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா.!".
0 notes
pycpim · 1 year
Text
விடியலை நோக்கி 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா 76ம் ஆண்டு துவக்க விழா கலை விழா பொதுக்கூட்டம், உரைவீச்சு
நாள்: 14.08.2023, திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு
இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி
அனைவரும் வருக
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பிஜேபி அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து சுதந்திரத்தின் மாண்புகளை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மாண்புகளின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் நூ��்றாண்டுகளாக போராடி பெற்ற உரிமைகள் இன்று பறிக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவுட்சோர்சிங் என்ற முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதன் மூலம் அவர்களின் பதவி நிரந்தரம் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர்.
தொழிற்சாலைகளிலும் உற்பத்தி சார்ந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என சட்டம் இருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களை 240 நாட்கள் பணி முடித்தால் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டம் இருந்தாலும் அது அமல்படுத்தப்படுவது கிடையாது.
பத்து ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமில்லை. பென்ஷன் உரிமைகள் பறிக்கப்படுகின்றன குறைந்தபட்ச சம்பளம் கூட கிடையாது.
விவசாயிகள் நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக விவசாயிகள் கொரானா கொடும் தொற்று அபாயத்திலும் வெயில், மழை பாராமல் டெல்லியில் கூடி போராட்டம் நடத்தி உயிர் தியாகங்கள் செய்து அந்த சட்டத்தை நிறுத்தினார்கள். விவசாய தொழிலாளர்கள் மற்றும் சாதாரண கிராம புற மக்கள் வேலையின்றி தவிக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகள் ஆதரவோடு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. அந்த வேலை திட்டம் தற்போதைய பிஜேபி ஆட்சியாளர்களால் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய புதிய வரிகளை GST என்ற பெயரில் போட்டு அனைத்து தரப்பு மக்களையும் வதைத்து வருகிறது ஒன்றிய அரசு. மேலும் பாராளுமன்ற ஜனநாயக மாண்புகளை கூட மதியாத ஒரு அரசாங்கமாக இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று கூடி புதியதோர் இந்தியாவை படைப்போம்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுவோம் என உறுதி ஏற்று 76வது சுதந்திர தின கொடியை நள்ளிரவு ஏற்றி விழாவை கொண்டாடுவோம்.
அனைத்து பகுதி தொழிலாளர்களும் விவசாய பெருமக்களும் விவசாயத் தொழிலாளர்களும் 100 நாள் திட்ட பயனாளிகளும் தங்களது குடும்பங்களோடு இந்த விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இன்னும் பல பல நிகழ்ச்சிக்களுடன் கலை இரவு.
புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு.
புதுக்கோட்டை பூபாலம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி,
உரை வீச்சு
தோழர். களப்பிரன் Kalapiran Kalam
துணைத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தோழர். S.G. ரமேஷ்பாபு Ramesh Babu தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர், மனிதம்
இந்திய தொழிற்சங்க மையம் (CITU) அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (AIAWU)
#SocialismIsFuture #CITU #Puducherry #india #v4india #AIKS #AIAWU
Tumblr media
0 notes
topskynews · 1 year
Text
திராவிடர் தொழிலாளரணி மாநாட்டில் முதலமைச்சருக்குப் பாராட்டு - கி.வீரமணி அறிவிப்பு
மே நாள் பரிசாக, 12 மணி நேர வேலைச் சட்டத்தை முற்றிலும் திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர் பணி நேரத்தை – சில தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டவரைவைத்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
தொழிற்சாலை வேலை நேரத்தை நீட்டிக்கும் புதிய மசோதா: தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது தமிழக அரசு
ஒரு நாள் கழித்து தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தம்) மசோதா, 2023ஐ நிறைவேற்றியதுதொழிற்சாலை ஊழியர்களின் தினசரி ஷிப்ட்களை 12 மணிநேரமாக நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – ஏற்கனவே உள்ள எட்டு மணி நேரத்திலிருந்து – அவர்கள் நான்கு நாள் வேலை வாரத்தைத் தேர்வுசெய்தால், மாநில அரசு சனிக்கிழமையன்று தொழிற்சங்கங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
dearmaayavi · 1 year
Text
தமிழ் சினிமா மாற்றத்தின் முன்னோடி: கருத்தரங்கில் கார்த்தி பேச்சு
தமிழ் சினிமா மாற்றத்தின் முன்னோடி: கருத்தரங்கில் கார்த்தி பேச்சு 20 ஏப்ரல், 2023 – 16:54 IST எழுத்துரு அளவு: இந்திய பொழுதுபோக்கு துறையின் வணிக மேம்பாட்டு அமைப்பின் தென்னிந்தியப் பிரிவான சிஐஐ தக்ஷினின் இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது, நடிகர் கார்த்தி கூறியதாவது: தமிழ்நாடு வரலாற்று ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக…
Tumblr media
View On WordPress
0 notes
bharathidasanprabhu · 1 month
Text
Tumblr media
THE LEGEND ONDIVEERAN (ONDIVEERAN PAGADAI) 253 TH DEATH ANNIVERSARY - FIRST FREEDOM STRUGGLE FIGHTER OF INDIA - TAMILNADU - INDIA - 20 AUGUST 2024 - மாவீரன் ஒண்டிவீரன் (ஒண்டிவீரன் பகடை) 253 வது நினைவு நாள் - இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப் போராளி - தமிழ்நாடு - இந்தியா - 20 ஆகஸ்ட் 2024.
0 notes
Text
நாளை தவெகவின் கொடி மட்டும் அறிமுகமில்ல.. இன்னொரு விஷயமும் காத்திருக்கு.. விஜய் முக்கிய அறிவிப்பு!
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கொடி அறிமுக விழா தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனும், இயற்கையும் தங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் கொடி அறிமுக விழா நடைபெறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டின் அடையாளமாக மாறப்போகும் வீரக்கொடி, வெற்றிக் கொடியை நாளை…
0 notes
todaytamilnews · 1 year
Text
அறிவிப்பு: ஏப். 09, தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, சீமான் தலைமையில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
க.எண்: 2023040146 நாள்: 05.04.2023 அறிவிப்பு: தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன…
Tumblr media
View On WordPress
0 notes
governmentjobsworld · 2 years
Text
தமிழ்நாடு ரேஷன் கடை சேர்க்கை அட்டை 2022 - 6427 விற்பனை நபர் போஸ்ட் | இப்போது பதிவிறக்கவும்
தமிழ்நாடு ரேஷன் கடை சேர்க்கை அட்டை 2022 - 6427 விற்பனை நபர் போஸ்ட் | இப்போது பதிவிறக்கவும் #govtjobs #upsc #ssc #currentaffairs #gk #ssccgl #ias #jobs #governmentjobs
தமிழக அரசு கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2022 பல்வேறு விற்பனையாளர் மற்றும் பேக்கர்ஸ் பணிகளுக்கான அறிவிப்பை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டிருந்தது தற்போது அதற்கான தேர்வு நாள் மற்றும் நுழைவு சீட்டுகள் வெளியிடப்பட்டது 15/12/2022 முதல் 31/12/2022க்குல் தேர்வில் கலந்து கொள்ளவும். நுழைவு சீட்டுகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   தமிழக அரசு மாவட்ட…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 8 months
Text
Check out this post… "காந்தியின் நினைவு தினத்தை அனுசரித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மத நல்லிணக்க நாள் கடைபிடிப்பு.!".
0 notes